புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:04 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் -01

- வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  JgC8k2j

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  E2G5cTe


இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து க்ஷேமங்களும் கிடைப்பதற்கு, பகவான் நாராயணனை மனதாரப் பிரார்த்திக்கிறேன். சகல புண்ணியங்களையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மிகப் பெரிய வேள்வி நடத்த வேண்டுமா? கங்கை, காவிரி முதலான புனித நதிகளில் நீராடவேண்டுமா? நித்யானுஷ்டானங்களைச் சரிவரச் செய்து, எங்கேனும் மலையுச்சியிலோ அடர்ந்த வனத்திலோ கடும் தவம் இருக்கவேண்டுமா? தினமும் ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் அனுஷ்டித்தால் சகல புண்ணியங்களும் கிடைத்துவிடுமா? வேறு என்னதான் செய்யவேண்டும்?

மிகவும் எளிதான காரியம்தான்.

சகல புண்ணியங்களும் பெறவேண்டும் என்றால், பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள்!

மகாபாரதம், மிகப் பிரமாண்டமானது. அதில் உள்ள எண்ணற்ற அத்தியாயங்களில், சகஸ்ரநாம அத்தியாயம் என்பதும் ஒன்று. பகவானின் நாமங்களைச் சொல்வதால் விளையும் நன்மைகளைச் சொல்கிற அத்தியாயம். அத்தனைப் பிரம்மாண்ட மகாபாரதத்தில், அத்தியாயம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னதுதான்!

ஆனால் என்ன... ஒரு சின்ன விதையில் இருந்துதானே மிகப் பெரிய ஆலமரம் உருவாகிறது?! ஒரு சின்ன கருத்தில் இருந்துதானே, பலப்பல அர்த்தங்கள் உண்டாகின்றன. இறைவனின் திருநாமங்களுக்கு, அதுவும் ஸ்ரீகண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு!

ஒரு குழந்தைக்கு என்ன தரவேண்டும் என இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நல்ல, சத்தான உணவில் இருந்துதான் நாம் கொடுக்கத் துவங்குகிறோம். 'சுவர் இருந்தால் தான் சித்திரம்’ என்பது போல், உடம்பு தெம்பாக இருந்தால்தானே ஓடியாடி விளையாட முடியும்!

அடுத்து, அந்தக் குழந்தைக்கு கல்வியைத் தருகிறோம்; இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும்; இன்ன படிப்பைப் படிக்க வேண்டும்; பெரியவனானதும் இப்படிப்பட்ட பதவியில் அந்தக் குழந்தை அமர வேண்டும் என யோசித்து யோசித்து, அனைத்தையும் செய்கிறோம்.

ஆக, உடம்பைக் கவனித்துக் காப்பாற்றுகிறோம்; கல்வியை வழங்குகிறோம்; குறிப்பாக, கை நிறைய சம்பளம் வாங்குவதற்கு உண்டான கல்வியை அளிக்கத் தயாராக இருக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்தால் போதுமா? மூன்றாவதாக ஒன்று இருப்பதையே நம்மில் பலர் கவனிக்கத் தவறுகிறோம்.

என்ன அது? ஆத்மா! அந்தக் குழந்தையின் ஆத்மா நல்லவிதமாக வளர்வதற்கு, நல்ல விஷயங்களைச் சிந்திப்பதற்கு, நல்ல காரியங்களில் ஈடுபடுவதற்கு நாம் ஏதாவது செய்கிறோமா? எதுவுமே செய்வதில்லையே?!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:13 pm

உடல் நன்றாக இருந்தால்தான் ஆத்மா ஒழுங்காக வேலை செய்யமுடியும் என்பது சரிதான். ஆனால், உடல் நன்றாக இருக்கிற அதேநேரத்தில் ஆத்மாவும் நன்றாக இருக்கவேண்டுமே! இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தானே ஓசை! ஆகவே, ஆத்மாவைக் கவனிப்பது மிகவும் அவசியம்.

சரி... கர்மயோகமும் ஞானயோகமும் கைகூட வேண்டும் என்றால், இன்றைக்கு விதையாக இருக்கிற குழந்தை, நாளைக்கு நிழல் தரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்க வேண்டுமெனில், வேதங்களையும் சாஸ்திரங்களையும், புராணங்களையும் இதிகாசங்களையும் சிறுவயதிலேயே சொல்லித் தரவேண்டும்; முக்கியமாக பகவத் விஷய ஞானம் என்பது சிறுவயதிலேயே ஏற்பட்டால்தான், பின்னாளில் அவர்களால் அவர்களுக்கும் இந்தச் சமூகத்துக்கும் நன்மைகள் விளையும்!

வேதங்கள் சகல உயிர்கள் மீதும் பிரியம் கொண்டவை. தராசின் தட்டுகளில், தாய்-தந்தையரையும் வேதங்களையும் வைத்தால், குழந்தைகள் மீது பெற்றோர் செலுத்துகிற அன்பைவிட ஒரு சதவிகிதமேனும் கூடுதலான அன்பையும் அக்கறையையும், வேதங்கள் காட்டுகின்றன என்பது சத்தியம்! அதாவது, வேதங்களைப் பயில்வது ஆத்மாவுக்கு நல்லது!

ஆனால், வேதங்களைக் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சம்ஸ்கிருதத்தை சரிவர உச்சரிக்கவேண்டும். அதன் அர்த்தங்களை ஆழப் புரிந்து கொள்ளவேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும், அர்த்தங்களைப் புரிந்து கொள்ளமுடியாத நிலை வந்தாலும் குழந்தைகள் ஆடிப்போவார்கள்; அயர்ந்துவிடுவார்கள்!

அப்படியெனில் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆத்மாக்களின் நலனுக்கு, எதைப் பயிற்றுவிக்க வேண்டும்?! அப்படிப் பயிற்றுவிப்பது எளிமையானதாக இருக்க வேண்டுமே?!

ஆமாம். எளிமையானதும் இனிமையானதுமான ஒன்று இருக்கிறது; சக்தி வாய்ந்ததும் சத்து மிகுந்ததுமான அதை எவரும் புரிந்துகொள்ளலாம். அது, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம். அதாவது, பகவானின் திருநாமங்கள் உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்; அந்தப் பூரிப்பு, அகத்திலும் முகத்திலுமாக சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்; இத்தனை சத்காரியங்களும் நிகழும்போது, ஆத்மாவானது எத்தனை குதூகலத்துடன் இருக்கும் என சற்றே நினைத்துப் பாருங்கள்!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:14 pm

'பிரம்ம சூத்திரம்’ படைத்தார் வேதவியாசர். வித்வான்களுக்கும் பண்டிதர்களுக்குமான விஷயமாக இதைப் படைத்திருக்கிறோமே, கொஞ்சம் எளிமையாக இருந்தால், சகல மனிதர்களும் புரிந்து, அறிந்து, உணர்ந்து, பலன் பெறுவார்களே... என வருந்தினாராம்! இந்த வருத்தத்திலும் ஏக்கத்திலும் பிறந்ததுதான், சகஸ்ரநாம அத்தியாயம்!

வாழ்க்கையில் சங்கடமும் சந்தோஷமும் மாறி மாறித்தான் வரும்! சங்கடத்தில் மட்டுமே சிக்கித் தவிப்பவர்களும் இல்லை; சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பவர்களும் கிடையாது! ஆனால் ஒன்று... சங்கடம் - சந்தோஷம் என எந்தச் சூழ்நிலையிலும், நம்மில் பலரும் இறைவனின் திவ்விய நாமங்களைச் சொல்லி வருகிறோம். 'கிருஷ்ணா... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுடாப்பா’என்றோ, 'ராமா... நீதான்டாப்பா பாத்துக்கணும்’ என்றோ பலரும் சொல்கிறோம், அல்லவா?! அதுதான் திவ்விய நாமத்தின் மகிமை!

மகாபாரதத்தில்... யுதிஷ்டிரருக்கு ஒரு சந்தேகம். அந்தச் சந்தேகத்தை யாரால் தீர்த்து வைக்க முடியும்? நல்ல ஆச்சார்யர் ஒருவரால்தான் சந்தேகத்தைத் தீர்க்கமுடியும்.

ஒவ்வொருவருக்கும் ஆச்சார்யர் எனப்படும் குரு மிகவும் அவசியம்! அதேபோல், ஆச்சார்யர்களுக்கு சிஷ்யர்கள் தேவை. ஒரு ஆச்சார்யர் என்பவர், மடி கனத்துக் கிடக்கிற பசுவுக்குச் சமமானவராம்! அதாவது, மடி கனத்த நிலையில், பசுவானது, கன்று பால் குடித்ததா இல்லையா என்று பார்க்காமல், கனத்த மடியிலிருந்து பாலைப் பீய்ச்சி விடும்.

அதேபோல், ஆச்சார்யர் எந்த எதிர்பார்ப்புமின்றி, தனக்குத் தெரிந்தவை அனைத்தையும் தனது சிஷ்யர்களுக்கு போதித்து விடுவார்!

பீஷ்மர், அப்படிப்பட்ட ஆச்சார்யர்தான்! அவரிடம் யுதிஷ்டிரர் சென்று, 'என்னுடைய சந்தேகத்தை தாங்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும் குரு!’என்றார். பீஷ்மரும் சந்தோஷத்துடன் பதில் சொல்லத் தயாரானார்.

''குருவே! பிறவியின் நோக்கம் நிறைவேற, அதாவது மோட்ச லாபம் கிடைப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?’' என்று கேட்டார் யுதிஷ்டிரர்.

மெள்ளப் புன்னகைத்த பீஷ்மர் சொன்னார்... ''நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடு; மோட்ச லாபம் நிச்சயம்!'' என்றார்.

இறைவனது திருநாமங்களுக்குத்தான் எத்தனை வலிமை, பாருங்கள்!

- இன்னும் வளரும்...☔☔☔நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:23 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  U4rgXuA

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - 02

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக்கிறது. அந்தக் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும்.

அது என்ன என்கிறீர்களா?

நம் சந்ததிகளுக்கு, அதாவது அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருவது! அந்தச் சொத்துக்களைக் கொண்டு, நம் குழந்தைகள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும், குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ்வார்கள் என்பது உறுதி!

ஒரு நிமிஷம்... இங்கே சொத்து என்று நான் காசு - பணத்தையோ, வீடு - வாசலையோ சொல்லவில்லை; நிலங்களையும் தோப்புகளையும் சொத்து என்று நினைத்துவிடாதீர்கள். வாகனங்களையும் நகைகளையும் சேர்த்து வைத்தால், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.

நான் சொல்கிற சொத்து இவையல்ல! அந்தச் சொத்து அளவிடற்கரியது; நாம் நன்றாக இருக்கவேண்டும், அடுத்தடுத்த சந்ததிகளும் குறைவின்றி நிறைவுடன் வாழவேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசை ஆசையாக வைத்துவிட்டுப்போன அற்புதமான சொத்து. நமது பூர்வீகச் சொத்து!

அந்தச் சொத்து... மகாபாரதம்! வேதவியாசர், பீஷ்மர் போன்றோர் நமக்கு அருளிய மிக உயர்ந்த சொத்து இது.

இதில் நம் கடமை என்ன என்கிறீர்களா?

முதலில், வேதவியாசருக்கும் பீஷ்மருக்கும் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவர்களுக்கு நன்றியை எவ்விதம் தெரிவிக்கப் போகிறோம்? ஆளுயரத்துக்கு மாலை சார்த்தி வணங்கலாமா? சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாமா? ஏதேனும் ஒருநாளில் விரதமிருந்தால், இவர்கள் மனம் குளிர்வார்களா? இப்படியெல்லாம் செய்தால், அவர்களுக்கு நன்றி செலுத்தியதாக ஆகிவிடுமா, என்ன?

இவை எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியினரும் மகாபாரதத்தைப் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, உய்யவேண்டும்; இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்! அவர்கள் கொடுத்திருக்கிற அளப்பரிய சொத்தான மகாபாரதத்தை, பகவத்கீதையை, இறைவனின் சகஸ்ர நாமங்களைச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமது முக்கியமான கடமை! இதுதான் வேதவியாசர், பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களுக்கு நாம் செய்கிற பிரதியுபகாரம்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:24 pm

அதேநேரத்தில், வாழையடி வாழையாக வளரக்கூடிய நம் சந்ததிக்கு இதனைச் சரியாகவும் முறையாகவும் எடுத்துச் சென்றோம் என்றால், அவர்கள் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்!

'என்னதான் சொன்னாலும், மகாபாரதம் படிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே..! அவ்வளவு சுலபத்துல புரியாதே!’ என்று மலைக்கத் தேவையே இல்லை.

இன்றைய காலகட்டத்தில், வேதங்கள் தெரிந்த நல்ல அறிஞர்கள் பலர், மகாபாரதத்தைச் சுவையாகவும் எளிமையாகவும் அழகுறத் தந்துள்ளனர். அவை அனைத்துமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம் தாத்தாக்களும் அப்பாக்களும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து, கீதையின் சாரத்தையும் ஸ்ரீகிருஷ்ண நாமங்களையும் தெளிவுறத் தெரிந்து வைத்துள்ளனர். கொஞ்சம் நம் வீட்டு அலமாரிகளிலும் பரணிலும் தேடினாலே, அந்தப் புத்தகங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது, கடைகளில் இருந்து அந்தப் புத்தகங்களை வாங்கி, நம் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கலாம்.

இன்னொரு விஷயம்... ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில், நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து, ஸ்ரீபகவத் கீதையையும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.

இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!

பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி. அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான். கடைக்காரரிடம் 'ஒரு வாழைப்பழம் வேண்டும்’என்று கேட்க, உடனே கடைக்காரர், 'கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’என்றார். உடனே பழம் வாங்க வந்தவர், 'அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’என்று சோகத்துடன் கேட்டாராம்! அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!

சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!

'என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு... கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’என்று குழப்பமாக இருக்கிறதா?

கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!

ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.

பிறகு, யார் சொன்னார்கள்?

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:25 pm

அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான். ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி. அதாவது பரமாத்மா! 'நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ... ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள். ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!

அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ''பீஷ்மர் என்பவர் ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்'' என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.

இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர். 'நான் சொன்ன கீதையே போதும்; அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள். மாறாக, 'ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான். அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!

இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!

அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... மனசு, தாமரையாய் பூரிக்கும்; பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில், ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!

- இன்னும் வளரும்☔☔☔நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:27 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  FHQqxTA

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - 03

- வேளுக்குடி கிருஷ்ணன்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பத்து அவதாரங்களைக் கடந்தும் பலப்பல அவதாரங்களை எடுத்துள்ளான் பரந்தாமன். இருப்பினும், பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் போற்றி வருகிறோம். அதிலும் குறிப்பாக, இரண்டு அவதாரங்களை மட்டுமே பூர்ணாவதாரம் எனக் கொண்டாடுகிறோம். ஒன்று... ராமாவதாரம்; மற்றொன்று, கிருஷ்ணாவதாரம்.

இந்த இரண்டு அவதாரங்களும் மண்ணுலகில் இருந்த காலங்கள், அப்போது சேவை சாதித்தவை, அவதாரங்களின் அருளைப் பெற்ற கூட்டம், தரிசித்துச் சிலிர்த்த மக்கள் எனப் பல காரணங்களால், இவை பூரணத்துவம் பெற்றிருக்கின்றன.

இந்தப் பூவுலகில், ஸ்ரீராமபிரான் 11 ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து, ராஜபரிபாலனம் செய்து, எப்படி வாழவேண்டும் என்பதை உலகத்து மக்களுக்குக் காட்டியுள்ளார்; பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 125 சம்பத்சரங்கள் வாழ்ந்து, கண்ணில் பட்ட அனைவருக்கும் க்ஷேமங்களை அள்ளித் தந்தார் என விவரிக்கிறது சாஸ்திரம். ஆக, இந்த இரண்டு அவதாரங்களின் பூரணத்துவத்தை, அவர்கள் வாழ்ந்த காலங்களையும், அவர்களால் வாழ்ந்த பெருமக்களையும் நினைத்துப் பார்த்தாலே உணரமுடிகிறது, இல்லையா?!

ஸ்ரீராமாவதாரம் என்று சொன்னாலும், அதை முழுமை யாக விவரிப்பது 'ராமாயணம்’என்றபோதிலும், அது... சீதையின் பெருமையைத்தான் அதிகம் விவரிக்கிறது; அவளை மையப்படுத்தியே கதைகள் சொல்லப்பட்டுள்ளன; கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றித்தான் அதிகம் சொல்லப்பட்டுள்ளன. அதிலும், சகஸ்ரநாம அத்தியாயம் என்பது, பகவானின் லீலாவிநோதங்களையும், அவரின் அற்புதங்களையும் அழகுற விவரிக்கிறது.

அதுமட்டுமா? அதன் பாட்டுடைத் தலைவனே ஸ்ரீகிருஷ்ணன்தானே! காவிய நாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களையும், அந்தத் திருநாமத்துக்கான விளக்கங்களையும் அழகுறச் சொல்லும் அத்தியாயத்தைக் கேட்பதும் படிப்பதும் எத்தனை புண்ணியம் நிறைந்தவை, தெரியுமா?!

இன்னொரு விஷயம்... பேசுவதைவிடக் கேட்டலே நன்று! உபந்யாசம் செய்பவரைக் காட்டிலும், அதன் கருத்துக்களைக் கூர்ந்து, ஆழ்ந்து கேட்பவர்களுக்குத்தான் புண்ணியங்கள் சேருகின்றன; மனதுள் நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. ஆக, கேட்டல் என்பது மிகமிகச் சுகமானது; சுதந்திரமானதும்கூட!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:28 pm

சரி... அப்படி சகஸ்ரநாம அத்தியாயத்தை முதன்முதலில் கேட்டு, உள்ளம் பூரித்தது யார் தெரியுமா?

சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்? அதாவது, பகவான் கிருஷ்ணர் சொன்ன கீதோபதேசத்தைக்காட்டிலும், அவரின் திருநாமங்களைச் சொல்கிற அத்தியாயத்தை அவரே காது கொடுத்துக் கேட்டார்; கிறங்கினார். அதனால்தான், பாட்டுடைத் தலைவன் கேட்டதை, நாம் பாடினாலும் மனம் ஒன்றிக் கேட்டாலும் நமக்குள் சத்விஷயங்கள் அரங்கேறும் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றனர் ஆச்சார்யர்கள்.

சகஸ்ரநாம அத்தியாயத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

பகவானின் ஒவ்வொரு திருநாமமும் வெறும் பெயர்கள் அல்ல; அவனுடைய கல்யாண குணங்களை மிக எளிமை யாகச் சொல்பவை; கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், மிகப் பெரிய குணத்தை, ஒற்றைத் திருநாமத்தின் மூலமாக நமக்கு உணர்த்துபவை!

பகவானின் ரூபம் பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது. பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை; வியூக மூர்த்தம் என்பது திருப்பாற்கடலில் காரண- காரியத்துக்காக திருமால் கொண்ட திருக்கோலம்; விபவாதாரம் என்பது அவதாரக் கோலங்கள்; அந்தர்யாமி என்பது நமக்குள் இருக்கிற இறைத்தன்மையின் அரூப நிலை; அர்ச்சாவதாரம் என்பது இன்றைக்கு திருக்கோயில்களில் கருவறையில் குடிகொண்டிருக்கிற இறைத் திருமேனி! எத்தனைத் திருவுருவங்கள் இருந்தாலென்ன... பரந்தாமன் ஒருவனே! எத்தனைத் திவ்விய நாமங்கள் கொண்டால் என்ன... இறைவன் ஒருவனே!

இறைவன் போற்றுதற்கு உரியவன்; அவனை எப்படி வேண்டுமானாலும் போற்றலாம்; போற்றித் துதி பாடலாம்! அதன் முதல் கட்டமாக, அவனைப் போற்றுகிற முதல் திருநாமம்... வசுரேதாஹா!

அதாவது, இறைவன் தேஜஸ் கொண்டவன்; பளிச்சென்று காட்சி தருபவன்; கடவுள் என்பவரைத் தரிசிக்க ஆயிரம் கண்கள்கூடப் போதாது. ஏனெனில், ஒளிமயமானவன் அவன். ஜோதி வடிவமே பகவான். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து புறப்பட்ட சுடரொளியானது, தேவகியின் வயிற்றில் சென்று கர்ப்பமாகத் தரித்தது என்கின்றனர். தேவர்களையும் உலகத்தையும் கம்சனிடம் இருந்து காப்பதற்காக, கடவுள் தாமே ஜோதியாக வந்து, தேவகியின் கர்ப்பப்பைக்குள் புகுந்துகொண்டார் என்றால், இந்த உலகைக் காப்பதில் பகவானுக்கு இருக்கிற கடமையையும் கருணையையும் நாம் உணரவேண்டும்.

ஆக, பகவானின் திருநாமங்களைக் கேட்டாலோ சொன்னாலோ புண்ணியம்தான்! ஆனால்... அது ஒன்று மட்டுமே நமக்கு மோட்சத்தைக் கொடுக்கும் என நினைத்துவிடக்கூடாது.

பிற உயிர்களிடத்தில் கருணை, இறைவனிடத்தில் பக்தி இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். கடவுளின் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... உள்ளே நம் மனதுள் பேரமைதி மெள்ள மெள்ளப் பரவும். அமைதி இருக்கிற இடத்தில், ஆரவாரத்துக்கு வேலையில்லை; அலட்டல் அங்கே இருக்காது. அலட்டலும் கர்வமும் இல்லையெனில், அங்கே அடுத்தவர் பற்றிக் கருணையுடன் சிந்திக்கத் துவங்கிவிடுவோம்.
தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:28 pm

பிற உயிர்களிடம் காட்டுகிற கருணையும், அமைதியான உள்ளமும் கொண்டிருக்க... அங்கே கடவுள் குறித்த சிந்தனை, அவன் மீதான அளப்பரிய பக்தி நம்மையும் அறியாமல் அதிகரிக்கும். பக்தி அதிகரிக்க, அதிகரிக்க... கடவுளுக்கும் நமக்குமான தொலைவு சுருங்கிக்கொண்டே வரும். அந்த அண்மை, ஆண்டவனிடம் இன்னும் இன்னும் என்று மனம் ஒன்றச் செய்யும். 'நீயே கதி’என்று பகவானது திருவடியைப் பற்றிக் கொள்ளத் தூண்டும். ஒருகட்டத்தில், ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக்கொண்டே திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டே, வேறு எதையும் சிந்திக்காத நிலை ஏற்படும். அதன் பெயர்... சரணாகதி! இறைவனின் திருவடியில் சரணடைந்துவிட்டால், நமக்கு மோட்சம் என்பது நிச்சயம்!

இவை அத்தனைக்கும் ஆரம்பமாக இருப்பது, பகவானின் திவ்விய நாமங்கள்! அவனது நாமங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால், மனதில் படர்ந்திருக்கிற இருள் மறைந்துவிடும்; மெள்ள மெள்ள ஒளி ஊடுருவி, உள்ளுக்குள் வியாபிக்கத் துவங்கிவிடும்.

ஏனெனில், ஜோதி வடிவானவர் ஸ்ரீகிருஷ்ணர்!

- இன்னும் வளரும்🔥🔥🔥 நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:32 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  OTYS3hI

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 4

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!’ என்பார்கள். ஆனால், அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர் களாகும்போது, அதே குணங்கள் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்!
நமக்கெல்லாம் ஆத்மா என்பது இருக்கிறது. ஆனாலும், சரீர சம்பந்தத்துடன் உயிர் வாழ்கிறோம். அந்தச் சரீரத்தின் தேவைகளுக்குத் தக்கபடி, நம்முடைய குணங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது, சுபாவங்கள் இன்னதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லமுடியாமல், சட்சட்டென்று மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏனெனில், சரீரமானது, சுக-துக்கங்களுடன் தொடர்பு கொண்டது; நன்மை- தீமைகளுடன் பிணைந்திருப்பது.
ஆனால், நம்மைப் போலவே, சரீரத்தால் அவதாரம் எடுத்தவர்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால், அவருடைய எந்தக் குணங்களும், எப்போதும் மாறாமல் அப்படியே இருந்தன. சொரூபம் என்பதும், சுபாவம் என்பதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு மாறவே மாறாத ஒன்று. ஏனெனில், அவர்... பரமாத்மா!
இன்னும் ஆழ்ந்து பார்த்தால், மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்கிறது வேதம். சத்திய விரதம், சத்திய பரம், த்ரிசத்தியம் ஆகிய மூன்று சத்தியங்களுடன் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அதாவது, பரமபதத்தில் நிலையாகக் காட்சி தருகிற அதே ஸ்ரீமந் நாராயணன்தான், சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார். 'அங்கு வைத்தாற்போன்றே...’ எனும் வாக்கியத்துக்கு ஏற்ப, அதே குணங்களுடனும் சுபாவங்களுடனும் தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். ஜோதிர்மயமாகவும் அவதரித்தார். நித்திய சூரிகள் தீப - தூப ஆராதனை செய்து பரம்பொருளை வழிபடும் வேளையில், அந்தப் புகை பரவி, அந்தப் பகுதியையே மறைக்க... சந்திர - சூரியர்களை தன்னுடைய கண்களாகக் கொண்ட பரம்பொருள், அப்போது தனது கிருஷ்ணாவதாரத்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.
ஆகவே, தன் நிலையில் இருந்து பரம்பொருள் என்றைக்கும் நழுவவே மாட்டார் என்பதை அறிந்து உணர்வது அவசியம்.
வாழ்க்கையில், எவருக்குத்தான் ஆசை இல்லை?! நல்லவை அனைத்தும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றும், கெட்டவை எதுவும் நம்மை அண்டக்கூடாது என்றும் வேண்டுவதே நம் அனைவரின் பிரார்த்தனை! நம்முடைய ஆசைகள்தானே, பகவானிடம் பிரார்த்தனையாக வெளிப்படுகின்றன.
அதாவது, நல்லவை என நாம் நினைக்கிற விஷயங்கள், நமக்குக் கிடைக்கவேண்டும்; துன்பம் விளைவிக்கக் கூடியதாக நாம் நினைத்துப் பதறுகிற விஷயங்கள், நம்மை விட்டு விலகிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன... ஒருவருக்கு இருக்கிற ஆசை வேறொருவருக்கு இருக்காது.
அதாவது, நீங்கள் விரும்புகிற விஷயத்தை இன்னொருவர் விரும்பமாட்டார்; வேறு ஏதேனும் ஒன்றை நாடுபவராக இருக்கலாம். அதேமாதிரி, நீங்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கிற விஷயத்தை அவரும் புறக்கணிப்பார் என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் கெட்டது என்று நினைத்து நடுங்குகிற ஒரு விஷயம், அவருக்குச் சாதாரணமாகப் படலாம். மாறாக, 'இந்த விஷயம் மட்டும் என்னை நெருங்கவே கூடாது ஸ்வாமி!’ என்று வேறு ஏதேனும் ஒன்றைக் கெட்டதாக நினைத்து, பிரார்த்திப்பார்.
அவ்வளவு ஏன்... நாமேகூட, சின்ன வயதில் நல்லதையும் கெட்டதையும் பட்டியல் போட்டு வைத்திருப்போம். பிறகு இளைஞனாகும் தருணத்தில், நமது 'தேவைப் பட்டியலில்’வேறு சில விஷயங்கள் இடம்பெற்றுவிடும்; 'தேவையற்றவை’ என வேறு வேறு விஷயங்களைக் குறித்து வைத்திருப்போம். வயதுக்குத் தக்கபடி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும்!

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக