புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2022 9:00 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’

1 . பழைய வறட்டுக் கௌரவம், வீராப்பு பார்க்கும் குடிகள் அன்றும் தமிழகத்தில் இருந்தன; இன்றும் தமிழகத்தில் இருக்கின்றன! அந்தப் ‘பழம் பெருமை’ , மனிதனுள் எப்போதும் இருந்துகொண்டு, அவ்வப்போது தலை தூக்குவதைச் ‘சுயரூபம்’ என்று காட்டுவது மட்டுமல்லாது, வெளிப்படையாகப் பேசுவது ஒன்று, உள்ளுக்குள் தன் ‘சுயரூபம்’ களையாமல் நினைப்பது வேறு என்றும் காட்டுகிறார் ஆசிரியர் கு.அழகிரிசாமி!

2 . கோவில்பட்டி- கயத்தாறு வட்டாரத்து வேப்பங்குளம் என்ற ஊரே கதை நிகழ்விடம். வேப்பங்குளத்து மாடசாமித் தேவரே, குறிப்பாகச், சுயரூபம் காட்டித் தோற்றவர்!

3 . ‘காலேயரைக்கால் காசு’ கடனைத் திருப்பித் தரக் கேட்டார் முத்தையாத் தேவர், மாடசாமித் தேவரிடம்; அப்படிக் கேட்டதில் , பெரிய அவமானம் என்னவென்றால் , அதை வேற்று ஜதிக்காரன் முன்னிலையில் கேட்டாராம்! :

கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த ஒரு வேற்று ஜாதிக்காரனின் முன்னிலையில் தம்மை இப்படியெல்லாம் பேசி பாக்கியைக் கேட்கும் முத்தையாத் தேவருக்குச் சரியான புத்தி புகட்டவேண்டுமென்று நினைத்த மாடசாமித் தேவர்..

4 . வேப்பங்குளம் செல்லும் பாதையில் ஒரு பலகாரக் கடை வைத்திருப்பவர் முருகேசம் பிள்ளை. அவரிடம் கடனுக்கு நாலு இட்லியாவது வாங்கிச் சாப்பிட்டு அன்றைய பசியைப் போக்கிக்கொள்ள மாடசாமித் தேவர் நினைத்தார்; நினைத்தவர், முருகேசம் பிள்ளையை எப்படிப் புகழ்ந்து பேசுகிறார், என்னென்ன ‘உபாயங்களை’’க் கையாள்கிறார் என்பது படிப்பதற்குப் படுசுவை! அதேநேரத்தில் , ‘ஏன் மாடசாமித் தேவர்தான் பழம்பெருமைக் குடும்பத்தவராயிற்றே? அந்தக் கித்தாப்பு என்னாயிற்று?’ என்று படிப்பவர்கள் மனதுக்குள் கேட்டுப் புன்முறுவல் பூக்கும் மாயத்தை நிகழ்த்துபவர் கு.அழகிரிசாமி!

5 . கடைக்காரர் முருகேசம் பிள்ளை , மாடசாமித் தேவரைக் கண்டுகொள்ளவே இல்லை!
மற்ற வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக் கொடுப்பதையும் தன்னைக் கண்டுகொள்ளாததைப் பற்றியும் மாடசாமித் தேவர் மனதுக்குள் என்ன சொல்கிறாராம்?:

நாலு காசு சேர்ந்துட்டதுன்னா கழுதை களவாணிப் பயல்களைக்கூட முருகேசம் பிள்ளை தாங்குவாரு!’

அவரிடம்தான் கடன் கேட்க வந்துள்ளார்; ஆனால் அவரைப்பற்றி என்ன நினைக்கிறார் பாருங்கள்! யாருடைய மன ஓட்டமும் அழகிரிசாமி பேனாவுக்குத் தப்ப முடியாது!

6 . பேருந்திலிருந்து இறங்கிய ஒரு பயணியைத் தன் கடைக்குக் கூட்டிவருவதற்காக, அப் பயணியின் கையைப் பிடித்து இழுக்கிறார் முருகேசம் பிள்ளை! பிறகு நடந்தவற்றை ஆசிரியர் கூறக் கேளுங்கள்!:

“கையை விடுமையா! பசிச்சா வரமாட்டான், மனுஷன்? கடன்காரன் மாதிரி வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறீரே!” என்று கோபமாகச் சொல்லி, கையையும் உதறிவிட்டு அவன் ஊரைப் பார்த்து நடந்தான்.
முருகேசம் பிள்ளைக்கு இது அவமானமாக இருந்தது. அதை மறைப்பதற்காக மாடசாமித் தேவரிடம் வலிய வந்து பேச்சுக் கொடுத்தார். தப்பி ஓடியவனைத் தமக்கு மிகவும் வேண்டியவனைப் போலக் குறிப்பிட்டுப் பேசினார். வேண்டியவன் இப்படியெல்லாம் முகத்தை முறித்தாற்போல் பேசுவது அவமானப்படத்தக்க விஷயமல்ல என்று தேவர் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட தந்திரம் அது.

மாடசாமித் தேவரை மதிக்காதவர் முருகேசம் பிள்ளை; ஆனாலும் , அவர் முன்னால் அவமானப்பட முருகேசம் பிள்ளை தயாராக இல்லை! அதற்கு அவர் கையாண்ட தந்திரத்தைப் போட்டு உடைத்தார் ஆசிரியர்! எந்தத் தந்திரமும் அழகிரிசாமியிடம் எடுபடாது!

7 . எதிரும் புதிருமான கருத்துகள் மோதுவது சிறுகதைக்குச் சுவையூட்டும்!
மாடசாமித் தேவர், முருகேசம் பிள்ளையிடம் நான்கு இட்லி அப்போதைக்குக் கடனாகக் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்! ஆனால், முருகேசம் பிள்ளை என்ன சொல்கிறார் மாடசாமித் தேவரிடம்? “என் மகளுக்கு நாலு வடம் சங்கிலிக்கு இன்னும் இரண்டு பவுன் தங்கம் சேர்க்க வேண்டியிருக்கிறது” என்று ‘வெகு கவலையாக’ விவரிக்கிறார்!

அப்போது , ஒப்புக்கு , ‘ஆமாமாம்! நம்ப குழந்தைக்குத்தானே செய்யறோம்! நல்லாச் செய்யணும்!’ என்று ஒரு அனுதாபத்தை உதிர்த்தார் மாடசாமித் தேவர்!

8 . இந்தக் கட்டத்தில் மாடசாமித் தேவரின் மனமும், முருகேசம் பிள்ளையிம் மனமும் ஓசையின்றித் துடித்ததைப் படம்பிடிக்கிறார் ஆசிரியர்!:

‘ஐயாவுக்கு ரொம்பக் கவலை!’ என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் பிள்ளை.

அப்போது தேவர் தமக்குள் சொல்லிக் கொண்டது பின்வருமாறு:

‘இவன் மகளுக்குச் சங்கிலி போடலேன்னுதான் இந்த வீரப்பத் தேவர் பேரனுக்குக் கவலை! நம்ம தலையெழுத்து, இப்படிப்பட்ட அற்பப் பயல்களுக்கெல்லாம் எரக்கம் காட்டிப் பேச வச்சிருக்கு. அவனவன் அரைவயித்துக் கூழுக்கு அலையிறான்; இந்தப் பய மகளுக்கு என்னடான்னா, முத்து மாலைப் பண்ணிப் போடணுமாம், நாலு வடத்திலே! கும்பி கூளுக்கு அழுததாம்; கொண்டை பூவுக்கு அளுததாம்!”

’அற்பப் பய’லுக்கு அனுதாபம் காட்டுவது தேவருக்கும், ‘வெறும் பயல்’ அனுதாபம் காட்டுவது பிள்ளைக்கும் அடியோடு பிடிக்கவில்லை.


பார்த்தீர்களா? இரண்டுபேர்களின் ‘சுயரூபம்’ இது! வெளியே சொல்வது வேறு! உள்ளே நினைப்பது இன்னொன்று!

9 . முருகேசம் பிள்ளை காலை உணவுக்காக உட்கார்ந்து சாப்பிடலானார்; அப்போது மாடசாமித் தேவரின் நிலையைப் பாருங்கள்!:

“நமக்கும் நாலு இட்டிலி வையுங்க, அண்ணாச்சி” என்று தம்மை மறந்த நிலையில் கேட்டுவிடுவதற்குத் தேவர் வாயைத் திறந்துவிட்டார். நல்ல வேளையாக, திறந்த வாயில் பேச்சு வெளிவராமல், மற்றொரு பசியேப்பமே வந்தது. கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? முருகேசம் பிள்ளை கடன் கொடுக்கக் கண்டிப்பாக மறுத்திருப்பார். அத்துடன் தேவரின் நம்பிக்கையும் தகர்ந்திருக்கும். கேட்காமல் இருந்தாலோ, சாயங்காலம் வரையிலாவது நம்பிக்கையை நீட்டலாம். இதை உணர்ந்து பிள்ளையவர்களை மெள்ள மெள்ள வசப்படுத்தி, கடைசியில் தமது காரியத்தைச் சாதிப்பதற்கான உபாயங்களையும் மார்க்கங்களையுமே தேடலானார், தேவர்.

பிள்ளையிடம் கடன் கேட்காமல் இருந்தாலாவது நம்பிக்கையை நீட்டலாமாம்!
இங்கேதான் அழகிரிசாமியின் முத்திரை நிற்கிறது! என்னா ஒரு மனப்படிப்பு!

10 . இருவரது பாசாங்கு நடத்தைக்கு இன்னொரு காட்சி!:
மத்தியானம் ஆயிற்று. வயிற்றுச் சோற்றுக்கு முருகேசம் பிள்ளை வீட்டில் எடுபிடி வேலை செய்து உயிரைப் பேணிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் வீட்டிலிருந்து அவருக்கு மத்தியானச் சாப்பாடு கொண்டுவந்தான். காரணம் இல்லாமலே, நித்திய வழக்கப்படி அவன்மீது ஒரு வசை புராணம் பாடி முடித்தார் பிள்ளை. பிள்ளையவர்களைச் ‘சண்டாளன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு, அதே சமயத்தில் அவருடைய கட்சியிலேயே சேர்ந்துகொண்டு, அந்தச் சிறுவனை மாடசாமித் தேவரும் கடிந்துகொண்டார். இது பிள்ளையவர்களுக்குப் பிடிக்கவில்லை.
“தேவரே, இவன் என்ன, அனாதைப் பயல்னு பார்த்தீரா? நான் தான் திட்டுறேன்னா, நீரும் எதுக்குப் பின் பாட்டுப்பாடுறீரு?” என்று ஒரு போடு போட்டார்.
தேவருக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. பல்லைப் பல்லைக் காட்டிக்கொண்டு, “நான் அப்படி என்ன சொன்னேன்…? அவனுக்குப் புத்திதானே சொன்னேன்?” என்று பரிதாபகரமாகச் சொன்னார்.
பிள்ளையைச் சண்டாளன் என்று திட்டுகிறார்; ஆனால் அவர்கட்சியில் சேர்கிறார்! ‘சண்டாளன்’ என்று திட்டும்போது ‘சுயரூபம்’!
இங்கே நான் ஒன்றை எழுத வேண்டும்!
அஃதாவது கு.அழகிரிசாமி பாத்திரங்களின் மன நுட்பங்களை நாமே அறிந்துகொள்ளுமாறு விடுவது ஒன்று; அவரே வெளிப்படையாக வந்து சுழன்று அடிப்பது மற்றொன்று! இரண்டுமே ஒரு சிறுகதைக்குத் தேவைதான்! நல்ல சிறுகதை உத்தி இது ! “பிள்ளையவர்களைச் ‘சண்டாளன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு, அதே சமயத்தில் அவருடைய கட்சியிலேயே சேர்ந்துகொண்டு, அந்தச் சிறுவனை மாடசாமித் தேவரும் கடிந்துகொண்டார்.” என்பதில் நாம் ஆய்ந்து உணர்வதற்கு எதையும் வைக்கவில்லை; அவரே வெளிப்படையாக எல்லா மனப் பின்னல்களையும் தந்து சுழன்று அடித்துவிட்டார் !

11. முருகேசம் பிள்ளை, மிச்சமான காப்பியை என்ன செய்வார் என விளக்கி, அதிலும் ஒரு உணவுக் கடைக்காரரின் சுயரூபத்தைத் தோலுரிக்கிறார் ஆசிரியர்!:
அரைப்பானை காபியும் மிஞ்சியது என்றாலும் பிள்ளையவர்கள் அதற்காகக் கவலைப்படவில்லை. எப்போதும் அவர் அதற்காகக் கவலைப்பட்டது இல்லை. அந்தப் பானை ஒரு வற்றாத ‘சமுத்திரம்’. காலையில் அடுப்பில் வைத்துக் கொஞ்சம் கருப்பட்டியையும் காபித்தூளையும் உள்ளே போட்டுக் கொதிக்க வைத்தால், அப்புறம் அது விற்பனை ஆக ஆகப் பானையில் தண்ணீரை விட்டே நிரப்பிக் காபியாக மாற்றிக்கொண்டிருப்பார், பிள்ளை.

12 . முருகேசம் பிள்ளை மிஞ்சிய இட்லி சகிதமாக வீட்டுக்குப் போகும் வழியில், மாடசாமித் தேவர் , “மிஞ்சிய இட்லியைக் கடனாகத் தாரும்; நாளை காசு குடுத்துடறேன்” என்று கேட்க, அதற்கு பிள்ளை மறுக்கவே, அதைதொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்:
“கோவிச்சுக்காதீங்க. நான் இப்படியெல்லாம் கேக்கிறவனில்லே, ஏதோ இண்ணைக்குக் கேக்கிறேன். என் பாட்டன் பூட்டன் காலத்திலே கூட இப்படி எங்க குடும்பத்திலே யாரும் கெஞ்சினது கிடையாது. எங்க பாட்டனாரு, ஒரு கோவத்திலே சொந்தத் தங்கச்சி வீட்டிலே கூடச் சாப்பிடமாட்டேன்னு வந்தவரு…”
“ஐயா நீர் பொழைச்ச பொழைப்பும், ஒம்ம பாட்டன் பொழைச்ச பொழைப்பும் எனக்குத் தெரியும். சும்மா ஆளைப் போட்டு பிடுங்காதீங்க.”
பாட்டன்மாரைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அந்த வார்த்தைகளுக்காகவே தேவரின் எரிமலை வெடிப்பதற்குக் காத்திருந்தது போலும்! “என்னடா சொன்னே?” என்று இடிமுழக்கம்போல் குரலெழுப்பிக்கொண்டு முருகேசம் பிள்ளை மீது புலிப் பாய்ச்சலாகப் பாய்ந்தார், மாடசாமித் தேவர். இந்தத் தாக்குதலால், பிள்ளையின் தலையில் இருந்த தளவாடங்கள் கீழே விழுந்து சிதறின. உடனே இருவரும் கைகலந்துவிட்டார்கள்.
பிள்ளையின் கடையில் இருவரின் சுயரூபங்களும் வெளிப்பட்டிருந்தாலும் , இப்போது அந்தச் சுயரூபம் முற்றிலுமாக வெடித்துவிட்டது – மிக வெளிப்படையாக!

13 . சண்டையில் மாடசாமித் தேவர்தான் தோற்றார் ; சுருண்டு விழுந்தார் கீழே!
14 . அப்போதும் பசி தாளாமல், மாடசாமித்தேவர்,
“அண்ணாச்சி, இன்னுங் கூட ஒங்க மனசு எரங்கலையா? வயத்துப் பசியிலே புத்தியைப் பறி கொடுத்திட்டேன், அண்ணாச்சி” என்று மன்னிப்பையும் இட்டிலியையும் ஏக காலத்தில் கேட்டார்.
அதற்கு முருகேசம் பிள்ளை,
“இந்தா, திண்ணுத் தொலை. இப்படி மானங்கெட்ட தீனி திண்ணு உடம்பை வளக்கலேன்னா என்னவாம்?” என்று சொல்லிக்கொண்டே கூடையின் வாய்க்கட்டை அவிழ்த்து இட்டிலியை எடுத்துக் கொடுக்கப்போனார்.
“இந்தப் பயகிட்ட நான் பிச்சை வாங்கித் திங்கவா?” என்று வீறாப்புடன் சொல்லிக்கொண்டு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்துப் பிள்ளைமீது மறுமுறையும் மறுமுறையும் பாய்ந்தார், தேவர். பாய்ந்த வேகத்திலேயே அடி வயிற்றில் ஒரு பலமான குத்து வாங்கிக்கொண்டு கீழே விழுந்தார்.
இம் முறையும் தோற்றவர் மாடசாமித் தேவரே!

15 . ஒரு பயம் வந்துவிட்டது தேவருக்கு! பிள்ளையால், போலீஸ் நம்மைப் பிடிக்குமோ? என்றெல்லாம் அச்சம் வந்ததாம்; ஆனால் அந்த அச்சம் வெகுநேரம் கழித்தே அகன்றதாம்!
மனமானது அலைபாயும் தன்மையது என்பதை அழகாக எழுதுகிறார் அழகிரியார்!

16 . பிறகு தேவருக்கு ஆறுதல் தந்தது எதுவாம்? அவரின் வீறாப்புப் பேச்சாம்!:
’இனி என்ன கஷ்ட வந்தாலும் வரட்டும். என்னதான் வந்துவிடும்? தலைக்கு மிஞ்சின ஆக்கினையா? கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமா? இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் – அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் தேடிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்து வந்தார் மாடசாமித் தேவர்.

17 . மாடசாமித் தேவர் உழைத்துப் பிழைக்க முயலாமல், அவரின் முன்னோர்தம் பழம் பெருமையிலேயே உழல்கிறார்! அவருக்கு உள்ளில் இருக்கும் ‘சுயரூபம்’தான் அவரை அழிக்கிறது!
முருகேசம் பிள்ளையும் சற்று இரக்கமுள்ள இயல்பான மனிதனாக இருந்திருக்கலாம்! அவருக்கு உள்ளேயும் ஒரு மட்டமான ‘சுயரூபம்’ இருந்து அவரை ஆட்டுவிக்கிறது!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக