புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
284 Posts - 45%
heezulia
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
19 Posts - 3%
prajai
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_m10திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 21, 2022 6:33 pm

திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’

1 . சாரங்கன் என்ற சிறுவன், தன் சக நண்பர்களுக்கு , அன்புக்குரியவரும் நடுத்தர வயதுக்காரருமான பத்திரிகை ஆசிரியர் கொடுத்தது போல ஒரு டைரியத் தனக்கும் தரவில்லை என ஏங்குகிறான்! ஒரு நாள் , அவனே சக நண்பர்களுக்குக் கொடுத்த அதே கம்பெனி அதே வண்ண டைரி ஒன்றை வாங்கி, ஆசிரியரிம் வீட்டுக்காரரிடம் கொடுத்து, “ என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்.” என்று கூறுகிறான்! இதுதான் ‘அன்பளிப்பு’ கதையின் முடிவுக் காட்சி!
2. கதை நடுத்தர வயதுக்காரரான ஒரு பத்திரிகை ஆசிரியர் கூற்றாக முழுதும் அமைகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியர் வேறு யாருமல்ல , கு.அழகிரிசாமியேதான்!
3. ஆனால், கதையின் சிறப்பானது சிறார்களோடு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கொள்ளும் தூய அன்பும், அவர், அச் சிறுவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தூய அன்பைச் செலுத்துவதிலும் இவற்றைச் சித்திரிப்பதிலும்தான் உள்ளது!
4. கதையின் ஓட்டமானது, விறைப்பான எந்தக் கருத்தை நோக்கியும் செல்லவில்லை! அக்கம் பக்கத்தில் உள்ள சிறார்களின் அப்பழுக்கற்ற இதயங்களின் பலகோணப் படப்பிடிப்பே இந்தக் கதை!
‘சிறுகதையானது, ஒரு மையக் கருவை நோக்கித்தான் செல்லவேண்டும் ’ என்ற ‘பண்டிதர் இலக்கணத்தை’த் தகர்த்துவிட்டார் கு.அழகிரிசாமி!
5. சிறார்களின் நடவடிக்கைகளை நாம் இவ்வளவு துல்லியமாகப் பார்த்திருக்கவே மாட்டோம்! பார்த்திருந்தாலும் நமக்கு இவ்வளவு துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கவே முடியாது! ‘சாகித்திய அகாதெமி பரிசு கொடுத்தது முற்றிலும் பொருந்தும்’ என நம் வாய்க்குள் ஓசையில்லா , கனத்த, ஒலி கேட்கிறது!
ஒன்றுமில்லை! சிறுவர்கள் தூங்கும் நடுத்தர வயதுக்காரரான தம் நண்பரை எழுப்புகின்றன; சிறார்கள் கைகளால் தட்டுவதை வெகு நுட்பமாக , இப்படி எழுதுகிறார் அழகிரிசாமி!:
முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது!
நாமும்தான் தூங்கியிருக்கிறோம்; நம்மையும்தான் சிறார்கள் தட்டி எழுப்பியிருக்கிறார்கள்; என்றைக்காவது இந்த நுட்பத்தைக் கவனித்துள்ளோமா?இந்த நுட்பம்தான், அழகிரிசாமியை, ‘எழுத்தாளன்’ ஆக்குகிறது!
நாம் ஒருவரின் வீட்டிலிருந்து ‘போய் வருகிறேன்’ என ஒருவரிடத்தில் சொல்வதானால் , ஏறத்தாழ வாசல் அருகே நின்றபடியே கூறிவிட்டு வருவோம்; ஆனால் சிறுவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்! இது கதாசிரியர் கூறித்தான் எனக்குத் தெரிய வந்தது! :
என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
பாருங்கள்! தான் பேசிக்கொடிருந்தவர் பின்னாலே போய்ப், பிறகு சட்டென்று திரும்பி , அதன்பிறகுதான் ‘போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்கிறான்! இதுதான் அழகிரிசாமி! இதற்குத்தான் சாகித்திய அகாதெமி விருது! வாழ்க்கையில்தான் எவ்வளவு நுணுக்கங்கள்? நுட்பங்கள்? நாம் நிதானமாகச் சிந்தித்தால்,’ஆமாமாம்! சிறுவர்கள் இப்படித்தான் செய்வார்கள்! இவர் எழுதிய பிறகுதான் தெரியவருகிறது!’ என்று மகிழ்வு கலந்த வியப்பை அனுபவிக்கத் தொடங்குவோம்!
6. சிறுவர்களோடு பெரியவர்கள் விளையாடுவதை நாம் அறிவோம்தான்! ஆனால், அப்போது, இரு தரப்பாரின் நிலைகளையும் கு.அழகிரிசாமி வரைந்துள்ளது போல யாரும் சொன்னதில்லை! :
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன்.

7. ‘அழுதுகொண்டிருந்த சிறுவன் , அழுகைநிறுத்தினான்’ என்றுதான் நமக்கு எழுதத் தெரியும்! ஆனால் அழகிரிசாமி எப்படித் தீட்டுகிறார் பாருங்கள்-
அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது.
அழுகையை நிறுத்தும் சிறுவனின் வயிற்றை இனிமேலாவது நாம் கவனிப்போமே!
8. சிறுவன், சிறுமி நம் வீட்டுக்குள் வருவதை நாம் கண்டிருக்கிறோம்; ஆனால் சிறுவன் நுழைவதற்கும் சிறுமி நுழைவதற்கும் உள்ள வேறுபாட்டை எந்த ஆங்கிலக் கதாசிரியனும் வேறு எந்தமொழிக் கதாசிரியனும் எழுதியதே இல்லை! அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.
9. நமக்கு நம் தெருவிலுள்ள பையனோடு பழக்கம் இருக்கும் ;ஆனால், அவனின் தந்தையோடு பழக்கம் இருக்காது! இந்த நிலையை எப்படி அழகிரிசாமி நவில்கிறார் பாருங்கள்-
இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?

பையனின் வீட்டுக்குப் போவது தனக்குத் தயக்கமாக இருக்கிறது எனக்கூற வந்தவர் அதனை எப்படி தீட்டிக் காட்டுகிறார் பாருங்கள்!

10. ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறிக் கூடவே, நண்பரான ஆசிரியருடன் சேர்ந்து சென்ற சிறுவன் , வீடு வந்ததும் என்ன செய்தான்? அழகிரிசாமி வடிக்கிறார் பாருங்கள்!:
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான்.

கூடவே வந்தானாம்; வீடு வந்ததும் சடக்கென்று கையை உதறிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினானாம்! தொடர்ந்து, ‘வாருங்கள் வாருங்கள்’ என்று மெதுவாகக் கூறவில்லையாம்! படபடப்பாகவும் இரைந்தும் கூறினானாம்! இதுதான் காட்சிச் சித்திரிப்பு என்பது! இதுதான் ஒரு நிகழ்வை உரைநடையில் கூறுவதற்கும், சிறுகதையில் தீட்டுவதற்கும் உள்ள வேறுபாடு!
11. சாரங்கன் என்ற அச் சிறுவனால் அழைக்கப்பட்டுச் சாரங்கன் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தபோது, உள்ளே சாரங்கணின் தந்தை எட்டிப்பார்த்து என்ன செய்தார்? இங்கே ஒரு நுட்பம்! அழகிரிசாமி தூரிகை ஓட்டம் :
அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.

சாரங்கனின் தந்தை ஆசிரியரைப் பார்த்து ‘எதற்கு வந்தீர்கள்? ’ என்றெல்லாம் கேட்கவில்லையாம்! அப்படிக் கேட்டிருந்தால், வளைந்து நெளிந்து, ‘பையன் ஆசையாகக் கூப்பிட்டான்’ என்றோ, ’சும்மாதான் என்றோ ’ எதுஎதையோ கூறவேண்டி வந்திருக்கும்! அது எதுவுமில்லாமக் ‘வாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது ஆசிரியருக்கு ’ராஜமரியாதை’ செய்தது போல இருந்ததாம்!உண்மையில் இப்படியெல்லாம் கு.அழகிரிசாமி எழுதிக்காட்டுவது, நமக்கு ‘ராஜமரியாதை’ செய்வதுபோல இல்லை?
முற்றிலும் சிறார்களை மையப்படுத்திக் கதை இருந்தாலும், உலகில் ‘அன்பு’ என்றால் என்ன? என்கிற பெரிய வினாவை நம் மண்டையில் போடுகிறது ‘அன்பளிப்பு’ச் சிறுகதை!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக