ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Today at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_lcapபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Voting_barபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_rcap 
Rajana3480
பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_lcapபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Voting_barபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_rcap 
heezulia
பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_lcapபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Voting_barபாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி

3 posters

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Empty பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி

Post by ayyasamy ram Fri May 13, 2022 7:07 am

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி 202205071637465884_Reflexology-that-calms-the-mind-through-the-feet_SECVPF
-
ரிப்ளெக்சாலஜி என்பது மாற்று சிகிச்சையாகும்.
கால் பாதங்கள் முழுவதையும் படிப்படியாக, மென்மையாக
அழுத்தி மசாஜ் செய்து உடலை புத்துணர்ச்சியாக்கும் சிகிச்சை
முறையே ‘ரிப்ளெக்சாலஜி’.

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகள்
பாதத்தின் வழியாகவே செல்கின்றன. எனவே பாதத்தில் மசாஜ்
செய்வதன் மூலம், உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை
நீக்க முடியும்.

‘ரிப்ளெக்சாலஜி’ சிகிச்சை முறையில் அழுத்த புள்ளிகளைத்
தூண்டுவதன் மூலம் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கி
ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கண்களின் ஆரோக்கியமும், பார்வைத்திறனும் மேம்படும்.
பாதத்தில் உள்ள மென்மையான திசுக்கள் வலுப்பெறும்.
முதுகுவலி, கழுத்துவலி, கழுத்து விறைப்பு, தோள்பட்டை வலி,
பதற்றம், தலைவலி, பல்வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.
செரிமானம் சீராகும். அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல், வாயு
தொடர்பான பிரச்சினைகள் குறையும். மனச்சோர்வு, குமட்டல்
மற்றும் பிற மனநலக் கோளாறுகள் நீங்கும்.

ரிப்ளெக்சாலஜி செய்முறை

முதலில் பாதங்களை கழுவுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில்
10 முதல் 20 நிமிடங்கள் பாதங்களை வையுங்கள். தண்ணீரில்
கால்களைக் கழுவுவது பாதங்களைத் தளர்த்த உதவும்.

அடுத்து உங்களுக்கு பிடித்த லோஷன் அல்லது மசாஜ் எண்ணெய்யை
சிறிதளவு பயன்படுத்தி, கால்களின் மேல் பகுதி மற்றும் உள்ளங்கால்
முழுவதும் தேய்க்கவும்.

பாதத்தின் மேற்புறத்தை உங்கள் கை விரல்களால், கால் விரல்களுக்கு
இடையில் பிடித்து, கால்களை மெதுவாக ஒரு வட்டத்தில் நகர்த்தவும்.
கடிகார திசையில் 3 முறை மற்றும் எதிர் கடிகார திசையில் 3 முறை,
கணுக்காலைத் தளர்த்துங்கள்.

மூன்றாவதாக பாதத்தின் மேற்பகுதியைச் சுற்றி கட்டை விரலால்
மெதுவாகவும், உறுதியாகவும் பாதத்தின் மேல் மையத்தில் அழுத்தவும்.
அதே இடத்தில் 2 முதல் 3 முறை அழுத்தவும். பின்னர் அந்த இடத்திற்கு
கீழே நகர்த்தி செயல்முறையை மீண்டும் செய்யவும்.

பின்னர் தலை மற்றும் மூளையின் ரிப்ளெக்ஸ் புள்ளிகளை செயல்படுத்த
காலின் பெருவிரலை மசாஜ் செய்யவும். பிட்யூட்டரி சுரப்பிக்கான
ரிப்ளெக்ஸ் புள்ளியை செயல்படுத்த உங்கள் கட்டை விரலால், கால்களில்
பெருவிரலின் நடுவில் அழுத்தவும்.

பின்னர், கழுத்து, தொண்டை மற்றும் தைராய்டு சுரப்பிக்கான ரிப்ளெக்ஸ்
புள்ளிகளை செயல்படுத்த பெருவிரலின் அடிப்பகுதிக்கு கீழே செல்லவும்.

மற்ற 4 கால் விரல்களின் கீழ் உள்ள பகுதி நுரையீரலுக்கானது.
இந்தப் பகுதிகளையும், காலின் நடு பகுதியையும் மசாஜ் செய்ய அதே
கட்டைவிரல் அழுத்த நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.

குதிகாலில் இரண்டு கைகளாலும் கட்டைவிரலில் மசாஜ் செய்யுங்கள்.
குதிகாலில் உள்ள ரிப்ளெக்ஸ் புள்ளிகள் முதுகுத்தண்டு பதற்றத்தை நீக்கி,
முதுகுவலியைக் குறைக்க உதவும். கடைசியாக லோஷன் அல்லது
எண்ணெய் கொண்டு லேசான மசாஜ் செய்யுங்கள்.
இதனால் பாதங்கள் ரிலாக்ஸ் ஆகும்.

இந்த பாத மசாஜை எப்பொழுது வேண்டு மானாலும் செய்யலாம்.
மாலை மற்றும் இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு செய்வது
நல்லது.

நன்றி: தினத்தந்தி-தேவதை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Empty Re: பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி

Post by Dr.S.Soundarapandian Fri May 13, 2022 12:52 pm

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Empty Re: பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி

Post by T.N.Balasubramanian Fri May 13, 2022 2:57 pm

அந்த காலத்திலேயே இரவு தூங்கப் போகுமுன்
4/5 சொட்டு நல்லெண்ணெய் கையில் எடுத்து
பாதங்களில் மேல் /நடு /கீழ் பக்கங்களில் 3/4 நிமிடங்கள்
தேய்க்கச்சொன்னார்கள்.
கண்ணுக்கு குளிர்ச்சி /தேகம் ஆரோக்கியமானதாக இருக்கும்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

ayyasamy ram likes this post

Back to top Go down

பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி Empty Re: பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை