உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Yesterday at 9:28 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
2 posters
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?

-
காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில்,
ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால்
காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள்.
என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் 'ராதே ஷ்யாம்' படத்தின்
ஒன்லைன்.
1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று,
அவரின் கை ரேகையை பார்த்து 'நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்
போகிறீர்கள்' என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு
செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற
ஆதித்யா. ஒருவரின் கை ரேகையை வைத்து, அவர் ஆணா பெண்ணா,
எப்படி இறந்திருப்பார், இறக்கும் பொழுது கர்ப்பமா இருந்திருக்கக்கூடுமா,
அவர் வீட்டு ரேஷனில் எத்தனை கிலோ சர்க்கரை வாங்கியிருப்பார்
என்பது வரை சொல்லும் பலே கில்லாடி.
-

-
பரமஹம்ஸாவின் சீடரான ஆதித்யாவுக்கு காதல் ரேகை இல்லாததால்,
கல்யாணம் செய்யாமல், ரிலேசன்ஷிப்புக்குள் செல்லாமல் தவிர்த்து
வருகிறார். மருத்துவரான பிரேர்னாவுக்கு இன்னும் சில மாதங்களில் இறந்து
போகக்கூடிய குணப்படுத்த முடியாத நோய். இவர்கள் இருவருக்குள்ளும்
காதல் எட்டிப்பார்த்தாலும், காதல் ரேகை தனக்கு இல்லாததால் பிரிய முடிவு
செய்கிறார் ஆதித்யா.
மருத்துவரான பிரேர்னாவுக்கும் நிறைய சிக்கல்கள். ஆனால், ஆதித்யா பிரிய
நினைப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இறுதியில் என்ன ஆகிறது?
காதல் காலத்தை வென்றதா என்பதை பிரமாண்டமாய், 300 கோடிக்கும்
அதிகமான பட்ஜெட்டில் காசை வாரி இறைத்து சொல்கிறது 'ராதே ஷ்யாம்'.
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?

-
படத்தின் பெரும் பலம் அதன் டெக்னிக்கல் டீம். ஜஸ்டின் பிரபாகரனின்
இசையில் எல்லா பாடல்களும் ஏற்கெனவே ஹிட். யுவனின் குரலில் வரும்
'யாரோ யார் இவளோ'; சித் ஸ்ரீராமின் குரலில் 'திரையோடு தூரிகை' இரண்டும்
ஆத்மார்த்தமான மெலடிகள்.
மதன் கார்க்கியின் வரிகளும் ஜஸ்டினின் இசையும், பின்னணி பாடகர்களின்
குரலும் என எல்லாமே பொருந்தி வந்திருக்கின்றன. அயல்நாட்டில் நடக்கும்
பீரியட் பிலிம் என்பதால் நிறைய காட்சிகள் ஓவியம் போல இருக்கின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ரவிந்தரின் கலை அமைப்பும்
படத்தை இன்னும் அழகாக்கியிருக்கின்றன.
க்ளைமேக்ஸில் வரும் கப்பல் சாகசக் காட்சிகளின் மேக்கிங் சிறப்பு!
செய்ரோ என்னும் கை ரேகை ஜோதிடரின் வாழ்க்கையை அடிப்படையாக
வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராதா கிருஷ்ணா குமார்.
டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கும் ஒரு படம், சுவாரஸ்யமற்ற
திரைக்கதையாலும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளாலும் நம்மை ஈர்க்க
மறுக்கின்றன.
ஆதித்யாவாக பாகுபலி பிரபாஸும், பிரேர்னாவாக பூஜா ஹெக்டேவும்
நடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகள் கொட்டிக்கிடக்கும் படத்தில்
பிரபாஸுக்குப் போடப்பட்டிருக்கும் மேக்கப்பே அவ்வளவு அந்நியப்பட்டுப்
போய் நிற்கிறது.
கை ரேகை ஜோதிடமே 100% உண்மை என நம்பும் மனிதர் ஆதித்யா.
அது 99% தான், மீதி ஒரு சதவிகிதம் மனித சிந்தனை என நம்பும் அவரின்
குரு பரமஹம்சாவாக சத்யராஜ். பிரியதர்ஷி இருந்தாலும் அவரை ஓரங்கட்டி
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஜெயராம்.
பயங்கர வில்லன் பில்டப்புடன் அறிமுகமாகும் ஜகபதி பாபு படத்தில்
எதற்கென்று யாருக்குமே தெரியவில்லை.
ஜோசியம், ஜாதகம் எல்லாம் 100% சரி, தவறு என்னும் வாதத்துக்குக்குள்
எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அதை அறிவியல் என்று
நிறுவுவதும், ரேகைதான் எல்லாம், மத்ததெல்லாம் சும்மா என நிறுவவதும்
உள்ளபடியே ஆபத்தானது.
ஆந்த ஆபத்தான அபத்தத்தை படம் முழுவதும் தூவிச் செல்கிறார் இயக்குநர்.
ரயிலில் இருக்கும் எல்லோருக்கும் ஆயுள் ரேகை இன்றுடன் முடிகிறது, அதனால்
அது விபத்தில் சிக்கும் என்பதில் ஆரம்பித்து அத்தனை பெரும் பிழைகள்.
Last edited by ayyasamy ram on Sat Apr 02, 2022 10:24 pm; edited 1 time in total
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?

-
மறுஜென்மம் முதல் பல ஃபேன்டஸி கதைகளைத் திரையில் பார்த்து ர
சிக்கவே செய்திருக்கிறோம். ஆனால், இருக்கும் ஒன்றை (ஜோசியம்) எடுத்துக்
கொண்டு அதை நூறு சதவிகிதம் உண்மை என ஓர் அறிவியலாக நிறுவ
முயல்வதுதான் பிரச்னையே!
அப்படிச் செய்வதை விவாதம் செய்து அரை மனதாக ஏற்றுக் கொண்டாலும்,
அது நம்பும்படியாகவும் இல்லை என்பதுதான் அதைவிட பிரச்னை.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா, சுவாரஸ்யமில்லாத
நம்பமுடியாத காட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் அதில் ஆர்வம் எழாதவாறு
பார்த்துக்கொள்கிறது.
Eternal Sunshine of the Spotless Mind, La La Land படங்களை
நினைவூட்டும் மீட்டுருவாக்கக் காட்சி அமைப்புகள் வேறு அடிக்கடி வந்து
போகின்றன.
டெக்னிக்கலாக நன்றாக இருக்கும் படத்துக்கு, இன்னும் கொஞ்சமேனும்
சுவாரஸ்யமான கதையை எழுதி இயக்கியிருந்தால் ராதே ஷ்யாமின் ஆயுள்
ரேகை நிச்சயம் நன்றாக இருந்திருக்கும்.
அதன் பயணமும் எந்தப் பார்வையாளரும் கணிக்க முடியாத சாகசமாக
இருந்திருக்கும்.
-கார்த்தி
நன்றி-விகடன்
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
-
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தீ இன்றியே உண்டாகும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும் போது
கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும் போது
கிளை இலை மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ
எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
பாதத்தை நதியென தொடுவேன் காலோடு கயலென படுவேன்
தொடை மீது தூறலாகி இடை மீது ஈரமாகி
மலர்கள் மயங்கும் மார்போடு உலருமாடையாய் ஆவேன்
தழுவ தயங்கும் தோளோடு நிலவின் பாலென வீழ்வேன்
கரம் கோர்த்து பொன்முகம் பார்த்து நான் பாட
கருங்கூந்தல் காற்றினில் ஆட வானமே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)
தலையோடு பாதிகை (பாதிகை)
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)
Last edited by ayyasamy ram on Sat Apr 02, 2022 10:35 pm; edited 1 time in total
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
எதற்காக பிரபாஸ் இந்த படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை.
நடிகர்களிடம் எந்த திறமையும் இல்லை, அவர்களை ஜொலிக்க வைப்பவர்கள் இயக்குனர்கள் என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார்.
இராஜமௌலி படத்தில் நடிக்கும் "ஈ" கூட பேரும் புகழும் வாங்குகிறது.
RRR படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ₹800 கோடி பட்ஜெட்டில் அடுத்த படைத்தை தயாரிக்க உள்ளாராம்.
இவரது படத்தின் சாதனைகளை உடைப்பது இவரது படங்கள் தான் என்பதில் மிகையில்லை.
நடிகர்களிடம் எந்த திறமையும் இல்லை, அவர்களை ஜொலிக்க வைப்பவர்கள் இயக்குனர்கள் என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார்.
இராஜமௌலி படத்தில் நடிக்கும் "ஈ" கூட பேரும் புகழும் வாங்குகிறது.
RRR படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ₹800 கோடி பட்ஜெட்டில் அடுத்த படைத்தை தயாரிக்க உள்ளாராம்.
இவரது படத்தின் சாதனைகளை உடைப்பது இவரது படங்கள் தான் என்பதில் மிகையில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|