ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Today at 1:09 pm

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Today at 1:05 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Today at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Today at 9:46 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 9:44 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Today at 9:42 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Today at 8:40 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Today at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Today at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Today at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Yesterday at 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Yesterday at 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Yesterday at 8:18 pm

» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Yesterday at 8:02 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 12:08 pm

» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 10:15 am

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Yesterday at 10:13 am

» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Yesterday at 10:12 am

» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Yesterday at 9:59 am

» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Yesterday at 9:01 am

» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Yesterday at 5:19 am

» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm

» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm

» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm

» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm

» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm

» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்த வார சினிமா செய்திகள்

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Feb 18, 2022 5:29 pm

புது கார் வாங்கிய இளம் நடிகை


-


96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடிப்பில் கவர்ந்த நடிகை
கெளரி ஜி கிஷான், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர்
படத்திலும் மாணவியாக நடித்து கலக்கி இருந்தார்.

இவர், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மகிழினி என்ற ஆல்பம்
பாடலிலும் நடனமாடி இருந்தார்.

இந்நிலையில், இவரது நெடுநாள் கனவான கார் வாங்கும் கனவை
நிறைவேற்றியுள்ளார்.

ஜெர்மனி தயாரிப்பான வோல்க்வேகன் காரை அவர் வாங்கியுள்ளார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலை ஒலிக்கவிட்டு அவர்
கார் ஓட்டும் வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்
பதிவேற்றியுள்ளார்.

-இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Feb 18, 2022 5:34 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Feb 18, 2022 5:36 pm

நடிப்பில் மிரட்டிய அக்ஷய் குமார்:



புதிய படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் அக்ஷய் குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு
செய்து நடித்து வருபவர். இவரது நடிப்பில்
பச்சன் பாண்டே படம் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் இன்று
வெளியானது.

இந்தப் படம் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய
ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

ஜிகர்தண்டாவில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில்
பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Feb 18, 2022 5:50 pm

அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி!


-
இந்த வார சினிமா செய்திகள் Copy-of-Senthil-Balaji-ANnamalai-2022-02-18T133803.680-16451717273x2
-
தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’,
'கூழாங்கல்', ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ மற்றும்
’ஊர்க்குருவி’ ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறது.

இதில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் படத்தை அறிமுக
இயக்குநர் விநாயக் இயக்கியுள்ளார். இதில் சூரரைப்போற்று
திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கேகே என்கிற
கிருஷ்ணகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஜோனிடா காந்தி.
கனடாவில் வளர்ந்த பஞ்சாபி பெண்ணான இவரை இசைப்புயல்
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகப்படுத்தினார்.

2016-ல் சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தில்
’மெய் நிகரா மெல்லிடையே’ என்ற பாடல் தான் ஜோனிடாவுக்கு
முதல் தமிழ் பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியிருக்கிறார்.

குறிப்பாக அனிருத் இசையில், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா
செல்லம்மா’ என்ற பாடலும், பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’ பாடலும்
பட்டி தொட்டியெங்கும் ஒலித்து தெறி ஹிட்டாகின.

தற்போது நடிகையாகவும் புதிய அவதாரம் எடுக்கும் ஜோனிடா காந்தி
மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

இந்தியன் எக்ஸ்பிஸ்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sat Feb 19, 2022 1:52 pm

ஜோடியில்லாத பிரபுதேவா படம்


-
இந்த வார சினிமா செய்திகள் Main-qimg-a4a868531ef40a94c8019d3cb1a3b9c3-pjlq

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு
‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்
வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும்
முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில்
தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா
கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு
இந்த படத்தில் ஜோடியில்லை.

ஜப்பானில் புகழ்பெற்ற போர்வீரர் ஒருவரின் பெயர் ‘முசாசி’
-
நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 3:53 pm

ஏ. ஆர். ரஹ்மானின் புது முயற்சி!


-
இந்த வார சினிமா செய்திகள் A-R-Rahman
மணிரத்னம் இயக்கியுள்ள, பொன்னியின் செல்வன் படத்தில்,
வந்தியத்தேவன், குதிரையில் வருவது போன்ற காட்சியில்,
'ஓப்பனிங்' பாடல் ஒன்று இடம்பெறுகிறது.

நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம் பெற்ற,
'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்ற பாடல் வரிகளை இந்த
பாடலிலும் பயன்படுத்தியிருக்கும், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை தன்
குரலிலேயே பின்னணியும் பாடியிருக்கிறார்.

மேலும், பழமையான, புழக்கத்தில் அதிகம் இல்லாத பல இசைக்
கருவிகளை தேடிப்பிடித்து, இந்த படத்தின் பின்னணி இசையில்
பயன்படுத்தியுள்ளார்.

சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Mon Feb 21, 2022 6:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 3:56 pm

அதிர விட்ட, ரம்யா பாண்டியன்!


-
இந்த வார சினிமா செய்திகள் 8CIf9Ag

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழ், மலையாள படங்களில் நடிக்க
துவங்கியுள்ள, ரம்யா பாண்டியன், முன்பெல்லாம்,
'ஊறுகாய் அளவு கவர்ச்சி...' என்று, இயக்குனர்கள் கேட்டாலே,
'செம காண்டாகி' விடுவார்.

இப்போது, 'எலுமிச்சை, நார்த்தங்காய் என, எந்த ஊறுகாய் போடவும்
நான் தயார்...' என்று அசைவ பட இயக்குனர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.

'மெகா ஹீரோகளுடன், 'டூயட்' பாட வைத்தால், சமந்தா, ரெஜினா
போன்ற நடிகையரை எல்லாம் துாக்கி சாப்பிடும் நடிகையாகவும்
நான் தயார்...' என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

ரம்யா பாண்டியனின் இந்த அதிரடி அறிவிப்பு, சில புது வரவு
நடிகையரை, அதிர வைத்துள்ளது.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 3:58 pm

இந்த வார சினிமா செய்திகள் 201905221910068009_Amalapaul-surprised-fans_SECVPF

நட்பை மதிக்கும், அமலாபால்!


-


எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தின், 'ஹீரோ'களுடன்
இணைத்து கிசு கிசுக்கப்பட்டார், நடிகை அமலாபால்.
ஆனபோதும், அதை காரணம் காட்டி அந்த நடிகர்கள் உடனான
நட்பை முறித்துக் கொள்ளவில்லை.

இப்போது வரை, 'மாஜி ஹீரோ'கள் அனைவருடனும் நட்பு பாராட்டி
வருகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், 'சினிமாவில், நடிகர்களுடன்
இணைத்து கிசு கிசு வெளியாவது, சகஜமானது. அதற்கெல்லாம்
பயந்து, உண்மையான நட்பை முறித்துக் கொண்டால், அந்த
நட்புக்கே மரியாதை இல்லை.

அதனால்தான், எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும், நட்பை,
கற்பு போன்று பாதுகாத்து வருகிறேன்...' என்கிறார்.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 3:59 pm


தயாரிப்பாளர்களை ஓட விடும், சமந்தா!


-
இந்த வார சினிமா செய்திகள் 202109270417031063_Actress-Samantha-in-controversy-again_SECVPF
கணவரை விவாகரத்து செய்து, மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி'
கொடுத்தபோது, இனிமேல், சமந்தாவின் படக்கூலி தடாலடியாக
இறங்கி விடும் என்று தான், அனைவரும் கருதினர்.

ஆனால், புஷ்பா படத்தில், 'அயிட்டம்' பாடலுக்கு அதிரடி நடனமாடி,
ஒன்றரை கோடியை சொல்லி அடித்தார், சமந்தா.

அதோடு, புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் பண்ண வந்த
தயாரிப்பாளர்களிடமும், 'ஒத்த பாட்டுக்கே ஒன்றரை கோடின்னா,
ஒரு படம் முழுக்க நடிக்க எவ்வளவுன்னு நீங்களே கூட்டிக்கழிச்சி
பார்த்துட்டு முடிவு சொல்லுங்க.

கூடவே, ஹிந்தியிலும் இப்ப, 'என்ட்ரி' கொடுத்திருக்கிறேன்...' என்று,
இன்னொரு, 'அட்ராசிட்டி'யும் காட்டுகிறார்.

இதனால், சமந்தாவின் சம்பளத்தை பாதியாக குறைத்து விடலாம்
என்று நம்பி சென்ற தயாரிப்பாளர்கள், அவர் போட்டுத் தாக்குவதைப்
பார்த்து, 'பெரிய சம்பளம் கொடுக்க வேண்டும் போலிருக்கே...'
என்று, தெறித்து ஓடுகின்றனர்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 4:04 pm

சினி துளிகள்!


-
இந்த வார சினிமா செய்திகள் Guru-Somasundaram
-
* இந்தியன் - 2 படத்தில் நடித்து வந்த, நடிகர் விவேக் மரணம்
அடைந்ததால், அந்த வேடத்தில் இப்போது, ஜோக்கர் மற்றும்
ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ள, குரு சோமசுந்தரம்
நடிக்கப் போகிறார்.
--
* கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என, சில படங்களுக்கு
பாடல் எழுதியுள்ள, சிவகார்த்திகேயன், தற்போது,
விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படத்திலும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
அந்த பாடலை விஜயே பின்னணி பாடியுள்ளார்.
--
இந்த வார சினிமா செய்திகள் NTLRG_20220107155837534271
--
* விஜய்சேதுபதியுடன், கருப்பன் படத்தில் நடித்த, மறைந்த நடிகர்
ரவிச்சந்திரனின் பேத்தியான, தன்யா ரவிச்சந்திரன், தற்போது,
ஜெயம் ரவியின், 28வது படத்தில் அவருடன் இணைந்துள்ளார்.
--
இந்த வார சினிமா செய்திகள் NTLRG_20210601114715005003
-
* கார்த்தி தமிழில் நடித்த, கைதி படத்தின், ஹிந்தி, 'ரீ - மேக்'கில்,
அஜய்தேவ்கன் நடிக்கிறார். இப்படத்தில் கடவுள் பக்தி கொண்ட
வேடத்தில் நடிப்பதால், அய்யப்பனுக்கு மாலை போட்டு
சபரிமலைக்கு சென்று திரும்பிய பிறகு, அதே பக்தி பரவசத்துடன்
நடிக்கத் துவங்கியுள்ளார், அஜய்தேவ்கன்.
-
-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 9:30 am

இந்த வார சினிமா செய்திகள் 621345fe26b77
-
இந்த வார சினிமா செய்திகள் Samantha-oozes-with-grace-in-shakuntalam-movie-first-look-poster-photos-pictures-stills
-

சமந்தாவின் சகுந்தலம் படம்


சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம்
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சகுந்தலம்”
திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது.
பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி,
தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில்
உருவாகிறது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சகுந்தலம் படத்தில்
சமந்தாவின்  தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் சமந்தா நேர்த்தியான தோற்றத்தில் பறவைகள்
மற்றும் விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார்.
சமந்தா எங்கோ ஆர்வமாகப் பார்க்கிறார், காட்டில் அவருடன்
இருக்கும் தோழமைகள் அவரை  பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.
இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி
அமைந்துள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி
இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க,
சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா
வசனம் எழுதுகிறார்.

பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா  அறிமுகம்
ஆகும் இப்படத்தில்,  மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர்,
கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய
பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை