புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
423 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
29 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 51 of 60 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 55 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 27, 2023 1:42 am

27.07.2023

24.07.2023 - ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி பிறந்த நாள்   1975

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 XJNHREk                                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 JgEIsm8

சொந்த பேர் ப்ரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகர், சினிமா டைரக்ட்டர், பட தொகுப்பாளர், பாடலாசிரியர் & நடிகர். மொதல்ல சவுண்ட் என்ஜினியராக இருந்தார். இவர் படிச்சு முடிச்ச பிறகு ஆடியோஃபைல்ஸ்னு சவுண்ட் ஸ்டூடியோவை ஏற்படுத்தி, TVக்கும், ஆவண படங்களுக்கும் ஜிங்கிள்ஸ் அமைத்தார். படிக்க பிடிக்காம சென்னைக்கு வந்து வேல தேடினபோ, அவர் பேரை அக்னினு சட்டபூர்வமா மாத்திட்டார். சினிமா உலகத்தில இப்பவும் அவரை அக்னினு சொல்றவங்க இருக்காங்க.

2005ல டிஷ்யூம் படத்துக்கு ம்யூஸிக் போட கூப்பிட்டாங்க. ஆனா இவர் ம்யூஸிக் போட்ட சுக்ரன் படம் முதல்ல ரிலீஸ் ஆச்சு. ரெண்டு பாட்டும் எழுதியிருக்கார். சுக்ரன் படத்தின் டைரக்ட்டர் SA சந்திரசேகர் இந்த படத்தில அக்னியை விஜய் ஆன்டனியாக மாத்திட்டார். டிஷ்யூம் ரிலீஸ் ஆனது 2006ல. விளம்பரங்களுக்கும், சீரியல்களுக்கும் ம்யூஸிக் போட்டார். 2012ல நான் படத்தில நடிகரானார். இவரோட தயாரிப்பு நிறுவனம் பேர் விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்.

டைரக்ட்டர் சசி டைரக்ட்டின பிச்சைக்காரன் முதல் பாகம் வெற்றிக்கு அப்புறம், 2023ல நடிச்ச பிச்சைக்காரன்2 படத்தை இவரே முதல் முதலா டைரக்ட்டினார். மலேசியால இந்த பட ஷூட்டிங்கின்போது அவருக்கு தாடைலயும், மூக்குலயும் பலத்த காயம் ஏற்பட்டுச்சு. அங்கேயே முதல் உதவி செஞ்சுட்டு சென்னைக்கு வந்தார். சென்னைல ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டார். எல்லாம் சரியான பிறகு "நா இப்பத்தான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்"னு ஆண்டனி சொன்னார். இப்போ வள்ளி மயில் என்கிற படத்தில நடிச்சிட்ருக்கார். படம் முடியுற ஸ்டேஜ்ல இருக்கு. இதுகூட இன்னும் ரெண்டு படங்களும் பெண்டிங்ல இருக்கு.

இவர் நடிக்கிற பெரும்பாலான படங்கள் இவரோட மனைவியின் தயாரிப்பு. புது பாடகர்களுக்கு சான்ஸ் கொடுக்கிறவர் ஆண்டனி. இவருக்கு கார்னா ரொம்ப பிடிக்கும். காஸ்ட்லீ காரா வாங்கி போட்ருக்கார்.

விருதுகள் :
2009ல  பிரான்சில் நடந்த கான் கோல்டன் லயன் விருதை சிறந்த ம்யூஸிக்காக  டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா"  விளம்பர படத்துக்காக வாங்கினார்.


விஜய் ஆன்டனி இந்த பாட்டுக்கு மட்டும் வாராரு.
ஆத்திச்சூ இது ஆத்திச்சூ இது ந்யூ ஏஜ் ஆத்திச்சூடி - விஜய் ஆன்டனி & தினேஷ்

TN 07 AL 4777   2009 / விஜய் ஆன்டனி      

அட்ரா அட்ரா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க - சின்னப்பொண்ணு

காதலில் விழுந்தேன்   2008 \ விஜய் ஆன்டனி \ PV பிரசாத்  

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 27, 2023 5:51 pm

27.07.2023

24.07.2023 \ பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் அவர்கள் பிறந்த நாள் / [1924 - 1989]         

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Qd7HKd2

காமெடி நடிகை CT ராஜகாந்தத்தின் மகள் ராஜலட்சுமி இவரோட மனைவி. பின்னணி பாடகர்கள் TL மகராஜன், தீபன் சக்கரவர்த்தி, TL தியாகராஜன் லோகநாதனின் பிள்ளைங்க. அப்போ  இங்கிலீஷ்காரங்க மேல இருந்த வெறுப்புல, அப்பா பேர இனிஷியலா வைக்காம, ஊர் பேர முதல்ல வச்சுக்கிட்டார் திருச்சி லோகநாதன். அப்பாவின் நகை செய்ற வேலமேல  லோகநாதனுக்கு ஈடுபாடே இல்ல. ம்யூஸிக் பித்தாகி மிதந்தாரு. 

நடிகர்களே பாடிட்டு இருந்த அந்த காலத்தில தமிழ் சினிமால முதல் பின்னணி பாடகர் லோகநாதன். முறையா ம்யூஸிக் கத்துக்கிட்டார். சினிமால முதல்ல பாடிய பாட்டு 1947ல ராஜகுமாரி படத்தில "காட்டினிலே நாங்கள் வாழ்வது சுகவாழ்வுதான்". நம்பியாருக்கு பாடினார். 

சின்ன வயசில ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் பாட்டுக்களை விருப்பப்பட்டு பாடினார். அப்டி பாடினதே பாட்டு பாட்றதுக்கு  ப்ராக்ட்டிஸ் செஞ்ச மாதிரி இருந்துச்சு. G ராமநாதனின்  மியூஸிக்ல  1950ல மந்திரிகுமாரி படத்தில "வாராய் நீ வாராய்" என்ற ப்ரபல பாட்டு. இவரோட பாட்டு  கேக்குறதுக்காகவே  ஒவ்வொரு தடவையும் ஜனங்கள் தியேட்டருக்கு வந்த மாதிரி, பாட்றதுக்கு சான்ஸும் தேடி வந்துச்சு. 

கல்யாண வீடுகள்ல தவறாம ஒலிக்கும் பாட்டு "புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே" பாட்டு. 1958ல பானை பிடித்தவள் பாக்கியசாலி பட பாட்டு. பிற்காலத்துல திண்டுக்கல் லியோனி இந்த பாட்டின் பெருமையை விளக்கி பட்டிமன்றம் நடத்துற அளவுக்கு புகழ் வாங்கிய பாட்டு. 

சம்பளம் வாங்குறதுல லோகநாதன் ரொம்ப கராறா இருந்தார். தூக்குதூக்கி படத்தில எட்டு பாட்டு பாட்றதுக்கு கூப்ட்டாங்க. ஒரு பாட்டுக்கு 500 ரூபாய் கேட்டார் லோகநாதன். சம்பளத்த கொறச்சுக்க அவங்க கேட்டப்போ "அதெல்லாம் முடியாது. மதுரைல இருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்காரு. வேணுன்னா அவர பாட சொல்லிக்கோங்க"னு சொல்லிட்டார். அவர் வேற யாருமில்ல, TMSதான். அவர்தான் தூக்குதூக்கி படத்தில 8 பாட்டு பாடினார். 

லோக்நாதன்கூட அதிகமா டூயட் பாடினவங்க லீலாவும், ஜிக்கியும்தான். இவரோட குரல் அப்போ சிவாஜிக்கும், SSRக்கும் ரொம்ப நல்லா பொருந்துதுன்னு பேசிகிட்டாங்க. கஞ்சன், வேலைக்காரி போன்ற படங்கள்ல சின்ன சின்னதா நடிக்கவும் செஞ்சார். நடிக்க ஆசை இருந்துச்சு. ஆனா சான்ஸ் கிடைக்கல. பாட்றதுக்குத்தான் கூப்ட்டாங்க. 

சிவாஜி கணேசனுக்கும், MGRக்கும் பாட அவ்ளவா சான்ஸ் கிடைக்கல. சிவாஜிக்கு கள்வனின் காதலி படத்தில  மட்டும் பாடினார். "தெற்கத்தி கள்ளனடா நான் தெற்கத்தி கள்ளனடா". சீர்காழியார்கூட  பாடினார். MGRக்கு மர்மயோகி, சர்வாதிகாரி படங்கள்ல பாடினார்.

ஒரு தடவ காமெடி நடிகர் தங்கவேலு வீட்ல வச்சிருந்த நவராத்திரி கொலுவுக்கு மதுரை சோமுவும், லோகநாதனும் போயிருந்தாங்க. அங்க சோமு பாடிய பாடலை கேட்டு ரசிச்சு, தன் கைல வச்சிருந்த வெள்ளி வெத்தல பெட்டிய சோமுவுக்கு கொடுத்தார் லோகநாதன். 
  

காட்டினிலே நாங்கள் வாழ்வதே சுகவாழ்வுதான் கவலையில்லாமல் மனம் கலங்காமல் - KV ஜானகி & திருச்சி லோகநாதன்

ராஜகுமாரி  1947 / SM சுப்பையா நாயுடு \ உடுமலையார்  

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை வாராய் நீ வாராய் - ஜிக்கி & திருச்சி லோகநாதன்
மந்திரிகுமாரி  1950 / G ராமநாதன் \ மருதகாசி 

தெற்கத்தி கள்ளனடா நா தென்மதுரை பாண்டியண்டா பாண்டியண்டா பாண்டியண்டா வடகத்தி கள்ளர்களையே நான் வணங்க வைக்கும் குள்ளனடா - திருச்சி லோகநாதன் & சீர்காழியார்

கள்வனின் காதலி   1955 \ கோவிந்தராஜுலு நாயுடு \ கண்டசாலா  

புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள சொல்லுறேன் கேளு முன்னே - திருச்சி லோகநாதன்

பானை பிடித்தவள் பாக்கியசாலி  1958 \ SV வெங்கட்ராமன் & S ராஜேஸ்வராவ் / சுந்தர வாத்தியார் 

சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளி போங்க டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க டணால் டணால்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க - LR ஈஸ்வரி & திருச்சி லோகநாதன்
நீலாவுக்கு நெறஞ்ச மனசு    1958 \ KV மகாதேவன் \ மருதகாசி 

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவ ப்ரசாதம் இதுவே எனக்கு போதும் - திருச்சி லோகநாதன்

மாயா பஜார்   1957 \ கண்டசாலா / தஞ்சையார் 

 பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 28, 2023 1:47 am

28.07.2023

25.07.2023 \ டைரக்ட்டர் J மகேந்திரன் அவர்கள் பிறந்த நாள் / [1939 - 2019]         

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 VY58lCp                                               பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 ZczaJvv

                                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Pqxi81t

J அலெக்ஸ்சாண்டர். டைரக்ட்டர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர் & நடிகர். 

சிறந்த டைரக்ட்டர்கள்ல ஒருத்தர். இவரோட படங்கள்ல ஆழமான கதைகள்ல இழையோட்ற  மென்மையான உணர்வுகளும், அழகான காட்சியமைப்புகளும் இருக்கும். MGRஐ ஹீரோவா வச்சு பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமா எடுக்க, திரைக்கதை, வசனம் ரெடி செஞ்சார். ஆனா ஏதேதோ காரணங்களால எடுக்க முடியாம போச்சு. கல்கி இதழில் வந்த முள்ளும் மலரும் தொடர்கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி முதல் முதலா அதே பேர்ல 1978ல டைரக்ட்டினார். 2004கப்புறம் நாலு படங்களின் கடேசில வந்து நடிச்சார். 

காலேஜ் படிக்கும்போது மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். பட்டப்படிப்பு முடிச்ச பிறகு சட்டம் படிக்க போனார். காலேஜ் டேல  MGR தலைமை விருந்தினராக வந்தார். அப்போ மகேந்திரன் பேசினதை கேட்ட MGR  அவர் ஒரு சிறந்த விமர்சகராவதற்கு  சான்ஸ் இருக்குன்னு புகழ்ந்தார் MGR. பணகஷ்ட்டம். அதனால சட்ட படிப்பு தொடர்ந்து படிக்க முடீல. ஏழு மாசம்தான் பிடிச்சார். சொந்த ஊர்  இளையான்குடிக்கு போக முடிவு செஞ்சார். காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பன் வற்புறுத்தினதால பத்திரிகையாளரானார். அந்த சமயத்தில இன்னொரு தடவை MGRஐ சந்தித்தார் மகேந்திரன். 

மகேந்திரன்கிட்ட தனது நாடக குழுவுக்கு ஒரு கதை எழுத சொன்னார் MGR. மகேந்திரன் அனாதைகள்னு ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி செஞ்சார். அதை படமாக தயாரிக்க MGR முடிவு செஞ்சார். வாழ்வே வா னு படத்துக்கு பேர் வச்சு சாவித்திரிகூட நடிச்சார். ஆனா மூணே நாள்தான். படப்பிடிப்பு நின்னுபோச்சு. 1963ல காஞ்சித் தலைவன் படத்தில நடிச்சபோது, அந்த படத்தின்  டைரக்ட்டர் காசிலிங்கத்திடம், மகேந்திரனை உதவியாளராக சேத்துவிட்டார் MGR. 

மகேந்திரன் முதல் முதலா கதை எழுதிய படம் 1966ல நாம் மூவர் படம். சாவி பத்திரிகைல  மகேந்திரன் எழுதிய மெட்டி தொடர்கதை அதே பேர்ல 1982ல படமா வந்துச்சு. 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
முள்ளும் மலரும் 1978 - சிறந்த தமிழ் படம் 
உதிரிப் பூக்கள் 1979 - சிறந்த டைரக்ட்டர் 
தேசிய சினிமா விருது - நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980 - சிறந்த தமிழ் படம் 
சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது - சிறந்த வில்லன் நடிகர் - தெறி 2016
 

உதிரிப்பூக்கள் - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மகேந்திரன்அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என்  சேயல்ல தாய் நீ - ஜானகி

உதிரிப் பூக்கள்   1979 / இளையராஜா / கண்ணதாசன்   

நெஞ்சத்தைக் கிள்ளாதே - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மகேந்திரன்
மம்மி பேரு மாரி  ஏஊரும் வேளச்சேரி அடிக்கடி என்ன வந்து கடிக்கும் அந்த சங்கீதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் - ஜானகி & வெண்ணிற ஆடை மூர்த்தி

நெஞ்சத்தைக் கிள்ளாதே  1980 / இளையராஜா / கங்கை அமரன் /    

 மெட்டி - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மகேந்திரன்
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட மேனி ஒரு பூவாக - ஜானகி & இளையராஜா

மெட்டி  1982 \ இளையராஜா \ கங்கை அமரன்

நண்டு - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மகேந்திரன்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம் - உமா ரமணன்
நண்டு  1981 / இளையராஜா / கங்கை அமரன்   

கை கொடுக்கும் கை - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மகேந்திரன்
தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சி பேசு - ஜானகி & SPB

கை கொடுக்கும் கை 1984 \ இளையராஜா / புலமைப்பித்தன்    

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 29, 2023 12:54 pm

29.07.2023

26.07.2023 -  டைரக்ட்டர் BR பந்துலு அவர்கள் பிறந்த நாள்            
[1910 - 1974]


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 IW8Zqj9                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 ZnfRi9R

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 AP6Dqm0                                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 5gE4NVm

டைரக்ட்டர், தயாரிப்பாளர் & நடிகர். கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். இந்தியால உள்ள முக்கிய டைரக்ட்டர்கள்ல ஒருத்தர். வரலாற்று காதாநாயர்களை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். கட்டபொம்மன், வ உ சி, கிருஷ்ண தேவராயர், கப்பலோட்டிய தமிழன் போன்ற வரலாறுல  முக்கியமானவங்களையும், கர்ணன் போன்ற புராண நபர்களையும் உருவாக்கி கண்முன் காட்டியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள் எடுத்தார். 

பணத்துக்கு குறைவில்லாத குடும்பம். அதனால வேலைக்கு போய் சம்பாதிச்சுதான்  சாப்பிடணும்ங்கிற நெலம இல்ல. அதனால சின்ன வயசிலிருந்து சினிமால ஆர்வமும், விருப்பமும் இருந்துச்சு. 

1937ல ராஜபக்தி படத்தில சின்ன ரோல்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. இவரோட நடிப்பை எல்லாரும் பாராட்டி  பேசினாங்க. படம் எடுக்கும்போது என்னென்ன நடக்குதுன்னு கூர்ந்து கவனிச்சார். ஒரு படத்தை ஆரம்பிச்சு  முழு தயாரிப்பும் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் A TO Z எல்லாத்தையும் கத்துக்கிட்டார். இந்த சமயத்தில கன்னட படங்கள்லயும் சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 

1952ல சிவாஜி நடிச்ச பணம் படத்தில பந்துலுவும் சின்ன ரோல்ல நடிச்சார். அந்த சமயத்துலதான் ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சாங்க. 1954ல பந்துலுவின் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்துலயும் ரெண்டு பேரும் நடிச்சாங்க. இப்படியே பந்துலு படங்களை தயாரிச்சு, டைரக்ட்டி, நடிக்க, இவர் படங்கள்ல சிவாஜியும் அவர்கூட கை கோத்து நடிக்க ஆரம்பிச்சார். 

பந்துலு ஒரு தடவ சிவாஜிகிட்ட அவர் எடுக்கப்போற படத்தின் டைரக் ஷன், தயாரிப்பு பற்றி பேசினார். சிவாஜி கேட்டார், "அண்ணே நா என்ன செய்யணும்?". பந்துலு சொன்னார், "நீங்கதான் என் படத்தில நடிக்கணும். டேட் சொல்லுங்க".

சிவாஜி சொன்னார், "அதுக்கு ஏண்ணே தயங்குறீங்க. நடிச்சிரலாம்". அவ்ளோதான், ரெண்டு பேரும் ஷேக் ஹாண்ட் செஞ்சுக்கிட்டாங்க. 

பத்மினி பிக்ச்சர்ஸ் பேனர் பந்துலு ஆரம்பிச்சார். 1957ல தங்கமலை ரகசியம் படம் உருவாச்சு. படம் ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷா ஓடுச்சு. அதுக்கப்புறம் பந்துலுவும், சிவாஜியும் கை கோத்து சேந்த படங்கள் வெற்றி படங்கள் ஆச்சு. பந்துலு சிவாஜியை வச்சு 1959ல முதல் டெக்னிக் கலர் படம் வீரபாண்டிய பொம்மன் எடுத்தார். கட்டபொம்மன்னாலே சிவாஜி ஞாபகம்தானே வருது. பந்துலு சிவாஜியை ரசிச்சு ரசிச்சு இந்த படம் எடுத்தார். முக்கியமான விஷயம் என்னான்னா, இந்த படம் சர்வதேச அரங்கத்துல போட்டு காட்டப்பட்டுச்சு. பந்துலுவுக்கு  எவ்ளோ பெருமை இல்ல!!! அநேகமா வருஷத்துக்கு ஒரு பந்துலு படம்னு சிவாஜி நடிச்சார். 

1961ல பந்துலு சிவாஜியை வந்து பாத்தார். சிவாஜி சொன்னார், "என்னை கட்டபொம்மனாக்கினீங்க. இப்போ என்ன உத்தேசத்துல வந்திருக்கீங்க?" பந்துலு சொன்னார், "அதுவா, வ உ சி ஆக்க போறேன்". அவ்ளோதான், சிவாஜிக்கு உதறல் எடுத்துச்சு. "கட்டபொம்மனை பாத்தவங்க இப்போ யாருமில்ல. நம்ம இஷ்டத்துக்கு நடிக்கலாம். வ உ சியை பாத்தவங்க, குடும்பத்தார் இருக்காங்களே. தப்பாயிரப்போவுது".னு சிவாஜி சொன்னார். "சின்ன புள்ள மாதிரி அடம் புடிக்காதீங்க. உங்களால நிச்சயமா முடியும்". னு பந்துலு சொல்லி நடிக்கவும் வச்சுட்டார். கப்பலோட்டிய தமிழன். 

வீரபாண்டிய கட்டபொம்மனாக சிங்கம்போல கர்ஜித்து நடிச்சவர், இந்த படத்தில சாந்த சொரூபியா, அமைதியா நடிச்சு பேர் வாங்கினார். நடிகர் திலகமாச்சே. பல படங்கள்ல சிவாஜியின் நடிப்பை பாத்த பந்துலு, ஓடி வந்து, ஓடி வந்து சிவாஜியை கட்டி புடிச்சு, முத்தம் கொடுத்து அழுதார். படத்தில சிவாஜியை பாத்த வ உ சியின் குடும்பத்தார், "அப்டியே  அப்பாவை பாக்கிறமாதிரியே இருந்துச்சு"னு சிவாஜியின் கால்ல விழுந்து வணங்கினாங்க. 

ஒரு படத்த எப்படீல்லாம் எடுக்கணும், சிவாஜியை எப்டி காட்டினா ரசிகர்களுக்கு பிடிக்கும்னு  நல்லாவே தெரிஞ்சிக்கிட்டார் பந்துலு. மற்ற டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள் பந்துலுகிட்ட ஆலோசனை கேட்டதும் உண்டு. 

இப்டி பந்துலு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது, AP நாகராஜன் 1964ல நவராத்திரி கதைய எடுத்துட்டு சிவாஜிய வந்து பாத்தார். சிவாஜிக்கு அந்த கதை பிடிச்சதால ஓக்கே சொல்லிட்டார். அவ்ளோதான், பந்துலுவும்  சிவாஜியும் பிரிஞ்சுட்டாங்க. இதை கேள்விப்பட்ட MGR பந்துலுவை கூப்ட்டார்.  அவர் MGRஐ வச்சு படங்களை எடுக்க ஆரம்பிச்சார். 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்துல MGR ஐ நடிக்க வச்சார். மத்தவங்களை வச்சும் படங்கள் எடுத்தார். 

தயாரிச்சு, டைரக்ட்டி  படங்களை காவியமாக்கினவர்னு கன்னட சினிமால பந்துலுவை கொண்டாடினாங்க. கன்னட அரசு இவரோட நூற்றாண்டை ரொம்ப பெரூசா கொண்டாடி மரியாதை செஞ்சுது. 

விருதுகள் :
சர்வதேச சினிமா விருது    - வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு 1959
BR பந்துலு - சிறந்த படம் 
சிவாஜி கணேசன் - சிறந்த நடிகர் 
G ராமநாதன் - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் 

தேசிய சினிமா விருதுகள்
அகில இந்திய தகுதி சான்றிதழ் - ஸ்கூல் மாஸ்டர் 1958 - மூணாவது சிறந்த படம் 
தகுதி சான்றிதழ் - வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 - சிறந்த தமிழ் படம் 
ஜனாதிபதி வெள்ளி பதக்கம் - கப்பலோட்டிய தமிழன் 1961 - சிறந்த தமிழ் படம் 

கர்நாடக மாநில சினிமா விருது & தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - கன்னட படத்துக்கு 

பந்துலு சினிமால செஞ்சதை பற்றி கன்னடத்தில ஒரு புத்தகம் எழுதப்பட்டுச்சு. 
 

கர்ணன் - தயாரிப்பு & டைரக் ஷன் - பந்துலு
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே - சுசீலா & TMS
கர்ணன்  1964 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன் 
      
குழந்தைகள் கண்ட குடியரசு - தயாரிப்பு & டைரக் ஷன் - பந்துலு
சிரிக்க தெரியுமா சிரிக்க தெரியுமா சிங்கார ரோஜா நீ சிணுங்காமலே - ஜானகி

குழந்தைகள் கண்ட குடியரசு    1960 / TG லிங்கப்பா / கு மா பாலசுப்பிரமணியம் 
      
தேடி வந்த மாப்பிள்ளை - தயாரிப்பு & டைரக் ஷன் - பந்துலு
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அது வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் - SPB

தேடி வந்த மாப்பிள்ளை   1970 / MS விஸ்வநாதன் \ வாலி        

நம்ம வீட்டு லட்சுமி - தயாரிப்பு & டைரக் ஷன் - பந்துலு
வழியே வழியே வந்த தமிழ் பண்பாடு அதில் விழி வழியே குலமகளே பண் பாடு - சுசீலா

நம்ம வீட்டு லட்சுமி  1966 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்         

கப்பலோட்டிய தமிழன் - தயாரிப்பு & டைரக் ஷன் - பந்துலு
காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் - சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்

கப்பலோட்டிய தமிழன்   1961 \ G ராமநாதன் \ பாரதியார்   
    
 பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 29, 2023 6:28 pm

29.07.2023

26.07.2023 -    நடிகர்  AVM ராஜன் அவர்கள் பிறந்த நாள்    [1935]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 LpAYH7I                                             பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 OnJ7ry6

 இன்றும் அன்றும் - புஷ்பலதா & AVM ராஜன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 H2NlqPP          

ஜெமினி கணேசன் சாயல்ல சிவாஜி கணேசனைபோல நடிச்சா? அப்டி நடிச்சவர்தான் AVM ராஜன். பட்டதாரி நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். ஒரு சில தெலுங்கு, மலையாள படங்கள்லயும் நடிச்சார். 

சொந்த பேர் சண்முகசுந்தரம். ஸ்கூல் படிக்கும்போது, 14 வயசில இடது கை ஒடஞ்சுபோச்சு. பரீட்ச எழுத முடியல. அப்டீ இப்டீன்னு எப்டியோ பட்ட படிப்பு முடிச்சிட்டு சினிமால சேரணும்னு நெனைச்சார். ஆனா அவரோட அம்மா அப்பா அவரை போலீஸாக்கணும் ஆசப்பட்டாங்க. 

படிச்சு முடிச்சிட்டு சென்னை கவர்னர் மாளிகைல வேல செஞ்சார். சம்பளம் போதல. அதே சமயத்தில சினிமா கம்பெனிகளின் கதவையும் தட்டிட்டு இருந்தார். அப்பாவின் நண்பர் பாடலாசிரியர் கு சா கிருஷ்ணமூர்த்தியை போய் பாத்தார். சினிமால நடிக்க சான்ஸும்  கெடச்சுது. 1959ல சிவகங்கை சீமை படத்தில சில ஸீன்ல நடிச்சார். ஆனா படத்தின் நீளம் காரணமா, அவரோட ஸீன்லாம் கட். 

1963ல AVMமின் நானும் ஒரு பெண் படத்துல  நடிக்க ஆரம்பிச்சார். டைட்டில்ல 'திரைஉலகிற்கு  ஏவிஎம் அளிக்கும் புதுமுகம் ராஜன் B.A.' னு போட்டாங்க. அந்த படம் ஓஹோன்னு ஓடினதால அதனால AVM ராஜன் ஆயிட்டார். ஆனா அதுக்கப்புறமா அதே வருஷம் நடிச்ச ஆயிரங்காலத்து பயிரு  மொதல்ல ரிலீஸ் ஆச்சு. இந்த பட டைட்டில்ல இவர் பேர் Raja B.A.னு போட்டிருந்தாங்க. நானும் ஒரு பெண் படத்துல   இவருக்கு  ஜோடியா நடிச்ச புஷ்பலதாவையே ரெண்டாந்தாரமாக கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவங்க ரெண்டு பேரும் சேந்தும் நடிச்சாங்க. அதுல சில படங்கள் இவங்களே தயாரிச்சாங்க. தயாரிப்பாளராக பெரும் நஷ்டம் ஏற்பட்டுச்சு. 

1965ல என்னதான் முடிவு படத்தில நடிச்சதுக்காக 'நடிப்பு சுடர்'னு பட்டம் கெடச்சுது. திருமகள் படத்தில ராஜன்கூட சிவகுமார் நடிச்சார். அந்த அனுபவத்தில் சிவகுமார் 2013ல குமுதம் வார புத்தகத்தில் ராஜனை பற்றி 'நடிப்பு கடல்'னு சொல்லியிருந்தார். 

விருதுகள்
தேசிய விருது - சிறந்த நடிகர் - கற்பூரம் 1967
 

ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி - ஜிக்கி & AM ராஜா

வீட்டு மாப்பிள்ளை 1973 \ AM ராஜா \ வாலி   

சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம் தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம் - TMS

அன்னையும் பிதாவும் 1969 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்   

திருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் - வசந்தா & SPB

இருளும் ஒளியும்   1971 / KV மகாதேவன் \ கண்ணதாசன்  

அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல் - TMS

பதிலுக்கு பதில் 1972 \ SM சுப்பையா நாயுடு \ வாலி  
 
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே - சுசீலா & TMS

சித்ராங்கி  1964 / வேதா \ கு மா பாலசுப்ரமணியம்   

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 29, 2023 9:36 pm

29.07.2023

26.07.2023 -  GM குமார் பிறந்த நாள்    [1957]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 F6GmXTb                                        பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 ARzCyNa

நடிகர், எழுத்தாளர் & டைரக்ட்டர். நடிகை பல்லவியின் கணவர். சின்ன வயசிலேயே நிறைய சினிமா பாத்தார். வளந்த பிறகு பாக்யராஜ்கிட்ட  அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். 1985ல காக்கி சட்டை, கன்னிராசி  படங்கள்ல லிவிங்ஸ்டன்கூட வேல செஞ்சார். 

1986ல அறுவடை நாள் படத்தை   முதல்முதலா    டைரக்ட்டினார். இளையராஜா ம்யூஸிக்கை  விரும்பாத தயாரிப்பாளர்களுக்கு படங்களை டைரக்ட்ட மாட்டேன்னுட்டார் குமார். அதனால  டைரெக்ட்டும் சான்ஸ் இவருக்கு வரல. மூணே படம்தான் டைரக்ட்டினார். 1992ல கேப்டன் மகள் படத்தில  வில்லனா நடிக்க ஆரம்பிச்சார்.  2006ல வெயில் படத்தின் மூலமா பட்டி தொட்டீல்லாம் ப்ரபலமானார். பாலா டைரக்ட்டின எல்லா படங்கள்லயுமே முக்கிய கேரக்ட்டர்ல நடிச்சார். பல படங்கள்ல உதவி டைரக்ட்டராவும், கதாசிரியராவும் இருந்தார். பல படங்கள்ல குணசித்திர நடிகரா நடிச்சார். 

குமார் டைரக்ட்டின பிக்பாக்கெட், உருவம் ரெண்டு படங்களும் டமால்னு படுத்துருச்சு. ஆமாங்க, படு தோல்வி. பயங்கரமா திவால் ஆனார். அதனால் சினிமாவ விட்டுட்டு ஆவண படங்கள எடுக்க ஆரம்பிச்சார். டீவி சீரியல்கள்ல நடிக்கிறார். வெப் சீரீஸ்ல நடிச்சார். 
விருதுகள் :நந்தி விருது - தெலுங்கு படம் - சிறந்த கதாசிரியர் - ரெண்டாவது இடம்
 

அறுவடை நாள் - திரைக்கதை டைரக் ஷன் - GM குமார்
ஓல குருத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது வாழ இலவாழ வாசலில் ஆடுது - ஜானகி

அறுவடை நாள்  1986 \ இளையராஜா \ கங்கை அமரன்  

இரும்பு பூக்கள் - திரைக்கதை டைரக் ஷன் - GM குமார்
ஏழை உனக்கொரு காலம் இருக்குது சூழ்நிலை கைதியே - AR ஷேக் முகம்மது 

இரும்பு பூக்கள் 1991 \ MS விஸ்வநாதன் \ காமகோடியன்      

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 30, 2023 12:09 pm

30.07.2023

  26.07.2023    - நடிகை அபிராமி பிறந்த நாள்  [1983]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 T4XxXlh                                             பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 DIdece8

நிஜ பேர் திவ்யா கோபிகுமார். நடிகை, டப்பிங் கலைஞி & டீவி நிகழ்ச்சி தொகுப்பாளினி. கேரளால பிறந்தார். திருவனந்தபுரத்தில் படிச்சு முடிச்ச பிறகு அமெரிக்கால வேல கெடச்சு, குடும்பம் அங்க போயிருச்சு. 

Zee தமிழ் சேனல்ல பாட்டு போட்டி ரியாலிட்டி ஷோல ஜட்ஜா இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் வானவில் 2001. முதல்ல மலையாள படத்தில 1995ல நடிக்க ஆரம்பிச்சார். மலையாள சீரியல்ல நடிச்சார். கமல் நடிச்ச குணா படத்த அபிராமி பேர்ல ரோஷினி நடிச்சார். படத்தில அவரோட கேரக்ட்டரும், பேரும் அபிராமிக்கு பிடிச்சதால சொந்த பேர் திவ்யாவை அபிராமின்னு மாத்திக்கிட்டார். 

ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவர 15 வருஷமா லவ்வி 2009ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.  சினிமாத்துறைல  யாருக்கும் சொல்லாமலே சைலண்ட்டா பெங்களூர்ல கல்யாணம் நடந்துச்சு. 2004ல விருமாண்டி படத்துக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டு அமெரிக்காவுக்கு படிக்க போய்ட்டார். 2014லதான் மறுபடியும் நடிக்க வந்தார். துணை நடிகையா நடிச்சார்.
 

வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ புரியாத பூக்கள் தலையாட்டுதே - ஹரிணி & ஹரிஹரன்

வானவில்  2001 \ தேவா \ வைரமுத்து       

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேலே ஒண்டியில நிக்கிறேனே - ஷ்ரேயா கோஷல்

விருமாண்டி  2004 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா   

ஹம்மா ஹம்மா ஆரம்பமாச்சு மோகம் ஹையோ ஹையோ அதுதான் இப்போ - ஹரிணி & ஸ்ரீனிவாஸ் 

மிடில் கிளாஸ் மாதவன்  2001 / தினா \ வாலி   

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 30, 2023 3:22 pm

30.07.2023

26.07.2023 -  நடிகர் சின்னி ஜெயந்த் பிறந்த நாள்    1960

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 T7wOsUQ                        பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 BnuJaD1

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 F5oDgae

கிருஷ்ணமூர்த்தி நாராயணன். காமெடி நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர், பல குரல்ல பேசும் கலைஞர். பட்ட படிப்பு முடிச்சிட்டு சென்னை தரமணியில் டிப்ளமா இன் ஃபிலிம் டெக்னாலஜி படிச்சார். படிச்சு முடிச்சிட்டு சினிமால சான்ஸ் தேடிய போது சினிமா கலைஞர்களுக்கு டச்சப் செய்ற வேல  கெடச்சுது. அப்புறமா கை கொடுக்கும் கை படம் கை கொடுத்துச்சு. 

அஷ்ட்டலக்ஷ்மி கிரியேட்டர்ஸ் இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம்  தயாரான முதல் படம் 1994ல சின்ன புள்ள. சின்னி இதுல மனநிலை சரியில்லாதவரா  நடிச்சிருந்தார்.  டைரக்ட்டின முதல் படம் 2000ல உனக்காக மட்டும் படம். மூணு படங்களை டைரக்ட்டினார். ஒரு வெப் சீரியல்ல நடிச்சார். ஒரு ஹிந்தி படத்துல  ரஜினிகாந்துக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.  TV காமெடி ஷோக்களை நடத்தினார். 

1984ல கை கொடுக்கும் கை படத்தில துணை நடிகராக நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்தின் டைரக்ட்டர் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி நாராயணன் என்ற இவர் ஒரிஜினல் பேரை சின்னி ஜெயந்தனு மாத்திட்டார். ஒவ்வொரு காமெடி ஆக்டருக்கும் இருக்கிறமாதிரி, சின்னிக்கும் ஸ்பெஷல் காமெடி ட்ராக் உண்டு. கில்பான்ஸு, சில்பான்சு, இது மாதிரி. இப்போ டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்ல கௌரவ ரோல்ல நடிக்கிறார். காலேஜ் ஸ்டூடண்ட்டா ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கார். இப்டி 1991ல இதயம் படத்தில நடிச்சு ப்ரபலமானார். 

பலக்குரல் ஆராய்ச்சி செய்றத்துக்காக 2013ல கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கினார். சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் கொடுத்துச்சு. 

இன்னொண்ணு படிச்சு எனக்கு ஆச்சரியமா போச்சு. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தங்கவேலு கூட நடிக்கும்போது, சில விஷயங்கள்ல தங்கவேலுகிட்ட  ஆலோசனை கேட்டு நடிச்சார். அவருக்கு பிறகு சின்னிகிட்ட ஆலோசனை கேட்டார். "இந்த ஸீன்ல நீ நடிச்சா எப்டி நடிப்பே, நடிச்சு காட்டு"னு கேட்டார். அவர் நடிச்சு காட்டியபடி ஷூட்டிங்க்ல நடிச்சார். [சினிமாபேட்டை] எப்பூடி? 

விருதுகள் :
கலைமாமணி விருது 2009
 

உனக்காக மட்டும் - டைரக் ஷன் & நடிப்பு - சின்னி ஜெயந்த்
அம்மாடி நீ என்ன பெண்தானா அன்பான உன் நெஞ்சம் பொன்தானா தாய் என்பதா சேய்தானா - உன்னிமேனன்

உனக்காக மட்டும்  2000 / பாபி சங்கர்    
    

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 30, 2023 11:52 pm

30.07.2023

27.07.2023    -  சின்னக்குயில் சித்ரா பிறந்த நாள்  [1963]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Giaj4rG                          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 P3QBNPZ  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 JdX4b2y

பின்னணி பாடகி. இசைக்குயில், சின்ன குயில் சித்ரா, மெலடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி, புன்னகை அரசி

அம்மா வீணை கலைஞர். ஸ்கூல்ல ம்யூஸிக் டீச்சர். அப்பா ரேடியோ பாடகர்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியான்னு பல இந்திய மொழிகள்லயும், லத்தீன், சிங்களம் போன்ற வேற மொழிகள்லயும்  சித்ரா பாடுறார். சின்ன வயசிலியே  பாட்டெல்லாம் ஞாபகத்துல வச்சு பாடினார். இவர் அப்பா தேசிய அளவில திறமை இருக்கிறவங்களுக்கான உதவித்தொகைக்காக சித்ரா பேர்ல ரெஜிஸ்டர் செஞ்சார். 13 வயசுல தோடி ராகத்தில் சிக்கலான ஸ்வரங்களை பாடி பேர் வாங்கினார். உதவி தொகையும் கெடச்சுது. மியூஸிக்ல  பல்கலைக்கழகத்தில முதல் இடத்தில தேர்ச்சி பெற்றார். 

பேராசிரியர் ஓமனகுட்டிக்கிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டார். ஆரம்பத்தில சித்ரா பின்னணி பாடகி ஆவார்னு அவரே நெனச்சு பாக்கல. ஸ்கூல் படிப்பு முடியுற சமயத்தில ஜேசுதாஸ்கூட பாட்ற  சான்ஸ் கெடச்சுது. இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் ரெண்டு பேரும் சேந்து பல மேடை நிகழ்ச்சிகள்ல பாடினாங்க. தரங்கிணி பதிப்புகள்ல பாடிய சித்ராவின் குரல் அங்க வந்திருந்த ம்யூஸிக் டைரக்ட்டர்களுக்கு பிடிச்சிருந்துச்சு. திருவனந்தபுரத்திலேயிருந்து சென்னைக்கு வந்தா சினிமால பாடும் சான்ஸ் நெறைய கிடைக்கும்னு ம்யூஸிக் டைரக்ட்டர் ரவீந்திரன் சித்ராட்ட சொல்லிட்டே இருந்தார். ஆனா தெரியாத ஊருக்கு போக சித்ராவுக்கு பிடிக்கல. நிறைய ஆல்பங்கள்ல பாடினார். இதுக்கு நிறைய ரசிகர்களின் வரவேற்பு கெடச்சுது. AIRலயும், TVலயும் முன்னணி கலைஞராக இருந்தார். உலகம் முழுசும் SPB கச்சேரிகள்ல ஷைலஜா, சரண் கூட பாடினார். 

ஒரு மலையாள படத்தில சித்ரா பாடின பாட்டை இளையராஜா கேட்டார். உடனே சித்ராவ  சென்னைக்கு வர சொன்னார். சித்ராவும் வந்து 1984ல நீதானா அந்த குயில் படத்தில ரெண்டு பாட்டு பாட ஆரம்பிச்சதுதான். ஓஹோன்னு வந்துட்டார். தமிழ் பட பாட்டுக்களின்  சின்னகுயிலாக ஜொலிக்கிறார். இப்டி ஜொலிக்கிறதுக்கு காரணமாயிருந்த இசைஞானிக்கு "ஓ போடலாமா"?  ஓ................ஹோ. 

சில ம்யூஸிக் டைரக்ட்டர்கள் சித்ராவுக்காக வெயிட் செஞ்சு பாட்டுக்களை ரெக்காட் செஞ்சும் இருக்காங்க. தெலுங்குல சான்ஸ் கொடுத்தது திரை இசை திலகம் KV மகாதேவன். தெலுங்கு தெரியாட்டாலும் ஆரம்பத்தில தடுமாறினாலும், SPBகிட்ட பாட கத்துக்கிட்டு, தெலுங்கு இவருக்கு தாய் மொழின்னு நெனைக்கிற அளவுக்கு அட்டகாசமா பாடுறார். ஹிந்தியிலயும் பாட ஆரம்பிச்சார். ஹிந்தி பாட்டுக்களின் குயில் லதா மங்கேஷ்கரின் 75வது பிறந்த நாள் விழா மும்பைல நடந்தபோது, லதா மங்கேஷ்கர் அங்க போயிருந்த சித்ராகிட்ட ஒரு ஹிந்தி பாட்டை சொல்லி பாட சொன்னார். சித்ரா அந்த பாட்டை பாடி விழாவை துவக்கி வச்சார். 

நலிந்த பாடகி, பாடகர்களுக்கு நிறைய பண உதவி செய்றார். 2011ல ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடத்தி, ஒரு நிதி திரட்டும் அமைப்பை திருவனந்தபுரத்துல ஆரம்பிச்சார். ஏழு தடவ சர்வதேச அளவுல இவர் செஞ்ச நல்ல விஷயங்களுக்காக கௌரவிக்கப்பட்டிருக்கார். 12 வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியிருக்கார். 

"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" னு சித்ரா சொல்லியிருக்கார். 

இன்னும் இவரை பற்றி நிறைய இருக்கு. 

விருதுகள்
தேசிய விருதுகள்
சிறப்பு விருது 2001 - Limca Book Records கொடுத்துச்சு. 
பத்மஸ்ரீ - 2005
ராஷ்ட்ரபதி விருது 2018 
பத்மபூஷண் 2021

தமிழ்நாடு மாநில விருதுகள்
கலைமாமணி 1997
பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் விருது 2011 - ஆந்திர அரசு கொடுத்துச்சு 
PB ஸ்ரீனிவாஸ் விருது 2013 - கர்நாடக அரசு கொடுத்துச்சு. 
கேரள சமஸ்தான வனிதா ரத்னம் 2014 & ஹரிவராசனம் விருது 2018 - கேரள அரசு கொடுத்துச்சு 

தேசிய சினிமா விருது
1986 - சிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன், நானொரு சிந்து காவடி சிந்து 
1987 & 1989 - மலையாள படம் 
1997 - மின்சார கனவு - மானா மதுர மாமர கிளையிலே 
1997 - ஹிந்தி படம் 
2004 - ஆட்டோகிராஃப் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே 

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்
தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு 

கேரள மாநில விருதுகள் - 16

கர்நாடக மாநில விருதுகள் - 3

தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள்
சேதுபதி 2017 - கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி 
மலையாளம் 2 & தெலுங்கு 2
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
 

பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது அட பூத்தத யாரது பாத்தது - சித்ரா & கங்கை அமரன்

நீதானா அந்த குயில்     

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன் - சித்ரா

சிந்து பைரவி  1985 / இளையராஜா \ வைரமுத்து   

மானாமதுர மாமர கிளையிலே பச்சகிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வி என்ன - சித்ரா, உன்னிமேனன் & ஸ்ரீனிவாஸ்

மின்சார கனவு  1997 \ AR ரஹ்மான் \ வைரமுத்து   

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே  இரவானால் பகல் ஒன்று வந்திடுமே - சித்ரா

ஆட்டோகிராஃப்  2004 \ பரத்வாஜ் \ பா விஜய்   

கொஞ்சி பேசிட வேணாம் ஓங்கண்ணே பேசுதடி கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணு ஓமுகமே கேட்குதடி - சித்ரா & ஸ்ரீராம் பார்த்தசாரதி 

சேதுபதி  2016 / நிவாஸ் கே ப்ரசன்னா \ நா முத்துகுமார்   

இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்க்குது சுகம் சுகம் எனும்சுவை தரும் சங்கீதம் பாட - சித்ரா 

டிசம்பர் பூக்கள்  1986 \ இளையராஜா \ முத்துலிங்கம்        

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 01, 2023 3:14 pm

01.08.2023

27.07.2023    நடிகை ரஜனி சசிகலா பிறந்த நாள்  1965

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 JbeWsTO             பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 7tIXOLj

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். சீரியல்கள்லயும் நடிச்சார். தமிழ் பட டைட்டில்ல, ரஜனி, ரஜினி, சசிகலா ஒவ்வொரு மாதிரி போட்டாங்க. அப்பா சினிமா பட விநியோகஸ்தர். 
சொந்த பேர் ஜெயலட்சுமி. இந்த பேர்ல வேற நடிகைகள் இருந்ததால, ஒரு தெலுங்கு படத்தில  ரஜினிங்கற  கேரக்டர்ல நடிக்கும்போது டைரக்ட்டர் ரஜினின்னு பேர் வச்சுட்டார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். 

சினிமா விகடன் இதழ்ல வந்த இவரோட ஒரு பேட்டி. "என்ன கேள்வினாலும் கேளுங்க. ஆனா என்னோட வயசு, முதல் படம் இதை பற்றியெல்லாம் கேட்டா செல்லமா கோவிச்சுக்குவேன்"னு சொன்னார். அப்பா விநியோகஸ்தரா இருந்ததால அம்மாவும் கூடவே போனார். அப்போ சசிகலா அஞ்சு மாச கொழந்த. அங்க  தேவிகா நடிச்ச படம் ஷூட்டிங். சசிகலாவை  தேவிகாவின்  குழந்தையா நடிக்க வச்சுட்டாங்க. என்ன படம்னு சசிகலாவுக்கு ஞாபகம் இல்ல. வெவரம் தெரியாத வயசில நெறைய நடிச்சார். 

டான்ஸ் இவருக்கு ரொம்ப பிடிக்கும். டான்ஸ் மாஸ்ட்டர்கூட அசிஸ்டண்டா சேந்து படங்கள்ல வேல செஞ்சார். தெலுங்குல டாப் ஹீரோயின்களுக்கு ஷூட்டிங்க்லயும், வீட்டுக்கே போயும்கூட டான்ஸ் சொல்லி கொடுத்தார். அந்த அனுபவமெல்லாம் மறக்க முடியலன்னு சொன்னார். அதனால் அந்த ஹீரோயின்கள் கூடலாம் பழக்கம் இருந்துச்சு. இவர் நடிச்ச படங்கள்ல அவரே டான்ஸ் மாஸ்ட்டர்.   
 

இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் - ஜானகி & SPB

இளமை காலங்கள்  1983 \ இளையராஜா \ கங்கை அமரன்     

பொல்லாத ஆசை வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள் - வாணி ஜெயராம் & SPB

குவா குவா வாத்துக்கள் 1984 \ இளையராஜா \ பஞ்சு அருணாசலம்


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 51 of 60 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 55 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக