புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 5 of 60 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 32 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 07, 2022 3:18 pm

07.01.2022

05.01.2022 - நடிகர் பாண்டியன் பிறந்த நாள் [1959 - 2008]

டைரக்ட்டர் பாரதிராஜா மதுரைக்கு ஷூட்டிங்க்கு போயிருந்தபோது அவர் கண்ல பட்டுதான் முதல் முதலா மண்வாசனை [1983] படத்ல நடிக்க பாண்டியனுக்கு சான்ஸ் கெடச்சுது. பாரதிராஜாவே பாண்டியனை அடுத்த ரஜினின்னு சொன்னாராமே. 

சேர்க்க சரியில்லாம குடிப்பழக்கம் வந்து, கதையை சரியா செலெக்ட்  செய்யாம, நட்புக்காக நடிச்சு சினிமா சான்ஸ் வரவர கொறஞ்சுபோச்சு. அதுக்கப்புறமா  TV சீரியல்ல நடிச்சார். 

பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்தவிட்டு பேசிப் பேசி ராசியானதே - S ஜானகி & SPB 

மண் வாசனை 1983 / இளையராஜா / வைரமுத்து 

குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே - KS சித்ரா & மலேசியா வாசுதேவன் 

ஆண்பாவம் 1985 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 11:49 am

09.01.2022

06.01.2022 - இசைப்புயல் AR ரஹ்மான் பிறந்த நாள் [1966]

சொந்த பேர் திலீப்குமார். முஸ்லிமா மாறி ரஹ்மான் ஆயிட்டார். அப்பாவும் ம்யூஸிக் டைரக்ட்டர், மலையாளத்துல.  

ரஹ்மான் பாடகரும்கூட. தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ் படங்களுக்கு ம்யூஸிக் போட்டு இசை புயல்னு பட்டபேர் கெடச்சுது.  க்ளாசிக்கல் ம்யூஸிக், அப்போதைய ட்ரெண்ட் ம்யூஸிக் ரெண்டையும் சேத்து போட்டு ம்யூஸிக்ல  புதுமையை செஞ்சவர் இவர். தமிழ் சினிமாக்கு அறிமுகமானது ரோஜா படத்துக்கு ம்யூஸிக் போட்டு. எல்லா பாட்டும் ஹிட். முதல் படத்திலியே முதல் தேசிய விருது வாங்கிட்டார். யார் அந்த இளைஞன்னு கேக்குற அளவுக்கு வளர்ந்தார். ஆல்பங்களும் வெளியிட்டார். 

வெஸ்டன் இசை கருவிகளை திறமையாக போடும் மாஸ்ட்டர் தன்ராஜ்கிட்ட  முறைப்படி ட்ரைனிங் எடுத்துகிட்டார் ரஹ்மான். 11வயசில இசைஞானி ட்ரூப்ல கீபோர்ட் வாசிப்பவராக சேந்தார். அதுக்கப்புறம் மெல்லிசை மன்னர், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவங்க குழுலயும் இருந்தார். ம்யூசிக்  காலேஜ்ல கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். சின்ன வயசில  விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டு தயாரிச்சார்.

2008ல Slumdog Millionaire படத்துக்கு ஆஸ்க்கார் விருது வாங்கினார். இந்த படத்ல ஜெய்ஹோ  பாட்டு ப்ரபலம். இதுக்கும் ஆஸ்க்கார் விருது வாங்கினார். ஒரே நேரத்ல ஒரே படத்துக்கு ரெண்டு ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே இந்தியர். ரெண்டு விருதுகளையும் ரெண்டு கைல பிடிச்சு "எல்லா புகழும் இறைவனுக்கே"னு சொன்னார். 

தாய் மண்ணே வணக்கம் வந்தே மாதரம் பாட்டும் ஓஹோதான். 1997ல இந்தியா சுதந்திரம் வாங்கிய பொன்விழாவுக்காக போட்ட ம்யூஸிக். சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுச்சு. செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டு சொல்லவே வேணாம். ஜனங்களை அவ்ளோ கவர்ந்த பாட்டு. இளைய தளபதி நடிச்ச பிகில் படத்ல சிங்க பெண்ணே பாட்ல   நேரடியா வந்திருப்பார். 

சூப்பர் ஸ்டார் நடிச்ச முத்து படம் ஜப்பான்ல ஓஹோன்னு ஓடி, உலகம் முழுசும் ரஹ்மான் புகழ்தான். இவரோட AM ஸ்டூடியோ ஆசியாலயே சிறந்த நவீன டெக்னாலஜி கொண்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோ. ராத்திரி நேரம் அமைதியா இருக்கிறதால அந்த நேரத்திலதான் ம்யூஸிக் போட பிடிக்கும்னு சுயசரிதைல  சொல்லியிருக்காராம். 

ரஹ்மானின் சுயசரிதை Notes Of A Dream ங்கிற பேர்ல புத்தகமா வந்திருக்கு. மத்தவங்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். பரோபகாரி. 2008ல சென்னை ரோட்டரி க்ளப்ல இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 2014ல பெர்க்லி ம்யூஸிக் காலேஜ் இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு. 

ம்யூஸிக் நிகழ்ச்சிகள் நடத்தினதுல கெடச்ச வருமானத்தில ஒரு தொகையை கஜா புயல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்து உதவினார். 

அநேகமா குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது ரஹ்மானுக்கு பிடிக்கும்னு சொல்லியிருக்கார். இலவசமா ம்யூஸிக் ஸ்கூல் நடத்துறார். அங்க  விலையுயர்ந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இருக்குனு சொல்றாங்க. வீடியோ கேம்ஸ் வெளையாட பிடிக்கும். இவருக்கு பிடிச்ச கார்கள்ல BMW ஒண்ணு. புதுசா ஏதாச்சும் இசை கருவிகள் வந்தா உடனே வாங்கிருவார். அவர் வீட்ல உள்ள ஸ்டூடியோலதான் ம்யூஸிக் போடுவார். இல்லேன்னா பாம்பே ஸ்டூடியோக்கு போவார்.  

இன்னும் இவரை பற்றி, இவரோட ம்யூஸிக்கை பற்றி எழுத ஏராளமா இருக்கு. 

இந்தியாலேயே அதிக தேசிய விருதுகள் வாங்கிய ம்யூசிக் டைரக்ட்டர் AR ரஹ்மான். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன், ஆஸ்க்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது, BAFTA விருது, தேசிய விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டங்கள், கோல்டன் க்ளோப் விருது இன்னும் ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கார். சர்வதேச அளவுல மியூஸிக்கு ஏராளமான விருது வாங்கிய ம்யூஸிக் டைரக்ட்டர். 

வந்தே மாதரம் தாய் மண்ணே வணக்கம் 


செம்மொழியான தமிழ் மொழியாம் 


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூசிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - SPB 

உழவன் 1993 / AR ரஹ்மான் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 11:56 am

09.01.2022

06.01.2022 - பழம்பெரும் நடிகை ஜெயந்தி அம்மா பிறந்த நாள்
[1945 - 2021]

சொந்த ஊர் கர்நாடகா. சொந்த பேர் கமலக்குமாரி. கன்னட டைரக்ட்டர் வச்ச பேர் ஜெயந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சார். முதல்ல நடிக்க ஆரம்பிச்சது கன்னட படங்கள்ல. கன்னட சினிமால இவருக்கு அபிநய சாரதேனு கௌரவ பேர். கன்னடத்திலதான் நெறைய நடிச்சார். 


ரொம்ப சின்ன வயசில அப்பா கூட ஷூட்டிங் பாக்க போயிருந்த போது, அங்க வந்திருந்து  தெலுங்கு சூப்பர் ஸ்டார் NTR மடிமேல ஏறி விளையாடினார். பின்னால NTR கூடவும் நடிச்சார். 

அம்மாவுக்கு ஜெயந்தி பரதநாட்டிய கலைஞர் ஆக்கணும்னு ஆச. அதனால பரதநாட்டியம் கத்துக்க அனுப்பினார். ஜெயந்தி குண்டா இருந்ததால டான்ஸ் கத்துக்க முடியல. அங்கதான் மனோரமாவை, கோபிசாந்தா பேர்ல சந்தித்தார். சின்ன வயசில சில தமிழ், தெலுங்கு படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 

1965ல கன்னட படம் மிஸ் லீலாவதி படத்தில நடிக்கும்போது, கன்னட சினிமால முதல் முறையா ஸ்கர்ட், டிஷர்ட், நைட்டி போட்டு நடிச்சார். வேற படங்கள்ல ஹீல்ஸ் வச்ச ஷூ, நீச்சல் உடைல  நடிச்சார். மிஸ் லீலாவதி படத்ல நடிச்சதுக்கு தேசிய விருது வாங்க டெல்லிக்கு போனார். அவருக்கு அப்போதைய ப்ரதமர் இந்திரா காந்தி அவர்கள்ட்ட இருந்து ஜெயந்தி விருது வாங்கிட்டு போனபிறகு, ப்ரதமர் ஜெயந்தியை கூப்ட்டு அவர் கன்னத்தில முத்தமிட்டு அனுப்பினார். 

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பிடித்தமான நடிகை ஜெயந்தி.  

கர்நாடக மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், டாக்ட்டர் சரோஜாதேவி தேசிய விருது வாங்கினார். 

நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் - P சுசீலா

கண்ணா நலமா 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

என்னம்மா பொன்னம்மா பக்கம் வாம்மா வாம்மா - P சுசீலா & TMS 

எதிர் நீச்சல் 1968 / V குமார் / வாலி 

கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - P சுசீலா & TMS 

நீர்க்குமிழி 1965 / V குமார் / ஆலங்குடி சோமு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 12:04 pm

09.01.2022

07.01.2022 - நடிகர் K பாக்யராஜ் அவர்கள் பிறந்த நாள் [1953]

நடிகர், டைரக்ட்டர், திரைக்கதை, வசன எழுத்தாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகர் இப்டி பல வேலைகளை சினிமால செஞ்சார். 

நடிகை பூர்ணிமா ஜெயராம் இவரோட மனைவி. சரண்யா, சாந்தனு இவரோட ரெண்டு பிள்ளைங்களும் சினிமால நடிக்கிறாங்க. மருமகள் TV நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி என்ற கிகி. 

இயக்குனர் இமயம் பாரதிராஜா கூட உதவி இயக்குனராக இருந்து சினிமாவை பற்றி கத்துக்கிட்டார். நடிக்க ஆரம்பிச்சது கிழக்கே போகும் ரயில் படத்ல சின்ன ரோல். இதே மாதிரி சிகப்பு  ரோஜாக்கள், 16 வயதினிலே படத்லயும். ஹீரோவா நடிச்ச முதல் படம் புதிய வார்ப்புகள். வசனமும் இவர்தான். டைரக்ட்டின முதல் படம் சுவர் இல்லாத சித்திரங்கள். கன்னிப் பருவத்திலே படத்ல வில்லனா நடிச்சார். 

1988ல இருந்து பாக்யானு வார இதழுக்கு எடிட்டரா இருந்து நடத்தினார். 

பாரதிராஜாவால இவர் டைரக்ட்டரா உருவான மாதிரி, இவராலயும் சில டைரக்டர்கள் உருவானாங்க. பாண்டியராஜன், பார்த்திபன், V சேகர் போலவங்க. நடிகை ஊர்வசியை முந்தானை முடிச்சு படத்துலயும், ஊர்வசியின் அக்கா கல்பனாவை சின்ன வீடு படத்துலயும் இன்ட்ரோ செஞ்சார். 

1977ல ஸ்ரீதர் டைரக்ட்டி மக்கள் திலகம் நடிச்சு பாதியில நின்னு போன படம் அண்ணா என் தெய்வம். இந்த படத்தின் காட்சிகளுக்குனே பாக்யராஜ் புதுசா ஒரு திரைக்கதை எழுதி, டைரக்ட்டி  அவரும் ரெட்டை வேஷத்ல நடிக்கவும் செஞ்சார். படம் பேர் அவசர போலீஸ் 100 [1990]. 1984ல நடிகர் திலகத்தை வச்சும் தாவணிக் கனவுகள் படத்தை எடுத்தார். 

அநேகமா இவரோட நிறைய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல அந்தந்த மொழி முன்னணி நடிகர்கள் நடிச்சு அவைகளும் இங்க மாதிரி போடு போடுன்னு ஓடுச்சு. ஹிந்தி படங்கள்ல பாக்கியராஜ் ரோல்ல அனில்கபூர் நடிச்சார். 

இவர் படங்கள்ல யதார்த்தமான காமெடி நிறைய இருக்கும். பெருஸ்ஸா தொழில் நுட்பங்கள் இருக்காது. அநேகமா வெளிநாட்டு ஷூட்டிங், ப்ரம்மாண்டமான காட்சிகள் இருக்காது. இப்போ எடுக்கப்போற படத்துக்கு பிரளயம்னு பேர் வச்சிருக்கார். த்ரில்லர் படம். பாக்யராஜ் ஸ்டைல்ல இல்லாம புதுமையா இருக்க போவுதாம். தனக்கு சினிமாவை தவிர வேற எதுவும் தெரியாதுன்னும், அதுவே அவருக்கு பலமும், பெருமையாவும் இருக்குன்னும்  சொல்லியிருக்கார். அவரே இந்து தமிழ் பத்திரிகைல  சொல்லியிருக்கார். மக்கள் திலகம் பாக்யராஜை தன்னோட கலை வாரிசுன்னு சொன்னார். 

பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர் இவங்களையெல்லாம் தன்னோட குரூன்னு சொன்னாலும், டெக்னிகலா சினிமாவை பற்றி கத்து கொடுத்த பாரதிராஜா மானசீக குருன்னு சொல்லியிருக்கார். 

வேட்டிய மடிச்சு கட்டு [1998] படம் தோல்விக்கு பிறகு நடிக்கிறதை விட்டுட்டார். முந்தானை முடிச்சு 2 இப்போ ரீமேக் செஞ்சு எடுத்துட்டு இருக்காங்க. இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி பாக்யராஜ் கொஞ்சம் மாத்தி கொடுத்திருக்கார். TV ஷோக்களை டைரக்ட்ட ஆரம்பிச்சார். போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். அப்புறமா 2006ல சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்ல நடிச்சார். 2010ல பையன் சாந்தனு நடிச்ச சித்து +2 படத்தை தயாரிச்சு, டைரக்ட்டினார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 

கிழக்கே போகும் ரயில் 1978

 
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் - S ஜானகி & மலேசியா வாசுதேவன் 

புதிய வார்ப்புகள் 1976 / இளையராஜா / கண்ணதாசன்

மதன மோக ரூபா சுந்தரி மதனாங்கி - SP ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 

இன்று போய் நாளை வா 1981 / இளையராஜா / கங்கை அமரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 1:00 pm

09.01.2022

07.01.2022 - அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் பிறந்த நாள் [1938]

இவரோட பட்டபேர்கள் : 

தமிழ் - கன்னடத்து பைங்கிளிஹிந்தி - அபிநய பாரதி கன்னடம் - அபிநய சரஸ்வதி, அபினன்டன் காஞ்சனமாலா தெலுங்கு - சல்லாப சுந்தரி 

நெஜ பேர் ராதாதேவி. டான்ஸ், நடிப்பு  கத்துக்க அப்பா உற்சாகப்படுத்தினார். அப்பாகூட அடிக்கடி ஸ்டூடியோவுக்கு போனார். கால்ல சலங்கை கட்டி ஆடி, அதனால கால் வீங்கிரும். அப்பா மசாஜ் செஞ்சார். நடிக்கும்போது போட்ட  ட்ரெஸ்ல அம்மா கண்டிப்பா இருந்தார். அரைகுறை டிரஸ், நீச்சல் ட்ரஸ்க்கு  நோ சொல்லிட்டார். அதையே சரோஜாதேவி பின்பற்றினார். 

ஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல்களுக்குள்ள நடந்த இசை போட்டீல, சரோஜாதேவி பாடினார். அங்க வந்திருந்த கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர் சரோஜாதேவி பாடியதை ரசிச்சு, அவரை பின்னணி பாடகி ஆக்கலாம்னு நெனச்சு ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டு போனார். வாய்ஸ் டெஸ்ட் செய்ற நேரத்துல, அவரை நடிகை ஆக்கணும்னு எண்ணம் வந்து 1955ல  தன்னோட மகாகவி காளிதாஸ் கன்னட படத்ல சின்ன ரோல்ல நடிக்க வச்சார். 

தமிழ்ல முதல் படம் மணாளனே மங்கையின் பாக்கியம் [1958]. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். அவர் நடிச்ச காலத்ல அதிக சம்பளம் வாங்கியவர். கன்னடத்தில சரோஜாதேவி என்ற பேர்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல புகழ் கெடச்சுது நாடோடி மன்னன் படத்தில. மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன்கூட பல படங்கள்ல நடிச்சார். 

கணவர் இறந்த பிறகும் சில படங்கள்ல நடிச்சார். அதுக்கப்புறமா  பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார். அங்க கணவர், அம்மா பேர்ல தொண்டு நிறுவனம் நடத்துறார். 

வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, Dr ராஜ்குமார் விருது, NTR தேசிய விருது, MGR விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார். கலைக்காக உழைத்தவர்களை கௌரவப்படுத்துவதற்காக 2010ல பாரதிய வித்யா பவன் 'பத்மபூஷன் B சரோஜாதேவி தேசிய விருது' ங்கிற பேர்ல வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிச்சது. 

சினிமால 25 வருஷத்துக்கு மேலா முன்னணி கதாநாயகியாக உலா வந்தவர் சரோஜாதேவி. ஆடை, அணிகலன்கள், ஹேர்ஸ்டைல், நடை, உடை பாவனை எல்லாத்துலயும் புதுமை, தனக்கென தனி அபிநயங்கள் இவர் நடிப்பில் இருக்கும். சினிமாவுக்கு கெடச்ச ஒரு பொக்கிஷம். 

யவ்வனமே என் யவ்வனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே - AP கோமளா & K ராணி 

தங்கமலை ரகசியம் 1957 / TG லிங்கப்பா / கு மா பா 

ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே - ஜிக்கி & TMS 

செங்கோட்டை சிங்கம் 1958 / KV மகாதேவன் / A மருதகாசி 

முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா - P சுசீலா & TMS 

அருணோதயம் 1971 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ் 

வாழ்க்கை வாழ்வதற்கே 1964 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

நான் பார்த்ததில் அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் - P சுசீலா & TMS 

அன்பே வா 1966 / MS விஸ்வநாதன் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 09, 2022 1:01 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 19a
-
பாக்யராஜ்:
-
சினிமாக்காரர்களில் ‘பாக்யா’ என்ற பெயரில் சொந்தமாக
பத்திரிகை ஒன்றைத் தொடங்கி, இன்றும் சோர்வடையாமல்
நடத்தி வருபவர்.

இப்போது ‘பாக்யா’விற்கு வயது டபுள் பதினாறு!


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 1:06 pm

09.01.2022

07.01.2022 - பின்னணி பாடகர் SPB சரண் பிறந்த நாள் [1972]

ப்ரபல பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம்  இவரோட அப்பா. சரணும் பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர். கேப்பிட்டல் ஃபிலிம் ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை  நடத்துறார். இந்த மூலம் முதல்ல தயாரிச்ச படம் உன்னை சரணடைந்தேன் [2003]. முதல் முதலா பாட ஆரம்பிச்சது 1997ல தேவதை படத்ல. 2010ல ஆடுகளம் படத்ல முதல் தடவையா அப்பா கூட ஒரு பாட்டு பாடினார். 

நடிகர் அஜீத்குமாரும், சரணும் ஸ்கூல் நண்பர்கள். ஆரம்பத்ல சரண் தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்ல நடிச்சார். சின்ன வயசிலிருந்தே ம்யூஸிக் டைரக்ட்டர் கங்கை அமரன் பிள்ளைங்க பிரேம்ஜி அமரனும், வெங்கட் ப்ரபுவும் நண்பர்கள். இந்த மூணு பேரும் சேந்து அடுத்த தலைமுறை னு ஒரு இசை குழுவை நடத்தினாங்க. 

சரண் முதல்ல கன்னட படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிப்புல பேர் வாங்கினது 2008ல சரோஜா தமிழ் படத்ல. பல இசை கச்சேரிகள்ல பாடினார். 

மஜா மஜா மஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஆடைக்கு ராஜா - ஷ்ரேயா கோஷல் & SPB சரண்

சில்லுனு ஒரு காதல் 2006 / AR ரஹ்மான் / வாலி 

கண்ணாடி நீ கண்ஜாடை நான் என் வீடு நீ உன் ஜன்னல் நான் - பவதாரிணி & SPB சரண்

மங்காத்தா 2011 / யுவன் சங்கர் ராஜா / நிரஞ்சன் பாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 1:15 pm

09.01.2022

07.01.2022 - பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பிறந்த நாள் [1976]

பாடகர், நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். தெலுங்கு படத்ல முதல்ல பாட ஆரம்பிச்சார். காலேஜ்ல படிக்கும்போதே பாட சான்ஸ் கெடச்சு பாடினார். ஆனா காலேஜ் படிப்பு முடிக்கணும்னு அதுக்கப்புறமா வந்த சான்ஸை விட்டுட்டார். படிக்கும்போது போலீஸ் அதிகாரியாகணும் ஆசை. ஆனா பாடகராயிட்டார். 

TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். வெளிநாடுகள்ல இசை கச்சேரிகள்ல பாடினார். 

வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி எனக்கு தெரியாமல் என்னை படித்த என் வாசகி - உமா ரமணன் & ஹரிஷ் ராகவேந்திரா

அரசியல் 1997 / வித்யாசாகர் / அருண்மொழி

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் - ஸ்ரீலேகா பார்த்தசாரதி & ஹரிஷ் ராகவேந்திரா

லேசா லேசா 2003 / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் - ஹரிஷ் ராகவேந்திரா

தாம் தூம் 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 1:20 pm

09.01.2022

08.01.2022 - நடிகர் தருண்குமார் பிறந்த நாள் [1981]

தெலுங்கு நடிகர். நடிகை ரோஜா ரமணியின் மகன். தமிழ், மலையாள படங்கள்லயும் நடிச்சார். மூணு நந்தி விருதுகள், தேசிய விருதுகள் வாங்கினார். அஞ்சலி படத்தில நடிச்சதுக்கும், மலையாள படத்ல நடிச்சதுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்த தேசிய விருதுகள்  வாங்கினார். 


எனக்கு 20 உனக்கு 18


ரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூறும் - உன்னிகிருஷ்ணன், ஹரிஷ் ராகவேந்திரா & ஸ்வர்ணலதா 

புன்னகை தேசம் 2002 / SA ராஜ்குமார் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 09, 2022 1:25 pm

09.01.2022

08.01.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள் [1975]

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். இவரோட அப்பாவுக்கு மகன் பின்னணி பாடகராக்கணும்னு ஆசை. ஜெயராஜுக்கு ம்யூஸிக் டைரக்ட்டராகணும்னு அப்டியே ஆயிட்டார். ஆறு வயசுலேயே ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். 

12 வயசில கிட்டார் வாசிப்பவராக இருந்து, கீபோர்ட் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க கத்துக்கிட்டார். தமிழ்ல முதல்ல ம்யூஸிக் போட்ட படம் மின்னலே [2001]. 2011ல ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் னு ஒரு இசை கச்சேரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியை டைரக்ட்டர் AL விஜய் டைரக்ட்டினார். TV விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

2000க்கு அப்புறம் பாட்டு நல்லா இருக்கே, ரஹ்மான் ம்யூசிக்கானு கேட்டால், இல்ல ஹாரிஸ் ஜெயராஜ்னு சொல்ற அளவுக்கு ம்யூஸிக் போட்டார். அந்த அளவுக்கு ரெண்டு பேர் ம்யூஸிக்கும் ஒத்துப்போகும். அநேகமா டைரக்ட்டர் சங்கர் படங்களுக்கு ரஹ்மான் ம்யூஸிக் போட்டார். ரஹ்மானுக்கு நிறைய ப்ராஜக்ட் இருந்ததால சங்கரின் அடுத்த தேர்வு ஹாரிஸாக இருந்தார். அந்நியன், நண்பன் படங்களை போல. 

2017ல ஸ்டூடியோ H னு நவீன டெக்னாலஜியுடன் கூடிய ரெக்கார்டிங் தியேட்டர் தொடங்கி நடத்திட்டு இருக்கார். கோ படத்தில அகனகனக பாட்டுக்கு நேரடியா வந்து நடிச்சார். 

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்

மின்னலே 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு லஸ்க்கா அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு - சின்மயி ய விஜயப்ரகாஷ்

நண்பன் 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி

மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் - எம்சி & கார்த்திக்

என்னை அறிந்தால் 2015 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 5 of 60 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 32 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக