புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 31, 2022 6:42 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 31, 2022 6:44 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (41)

தைரியசாலி எறும்பு!

ஒரு சிறுவன், சிலருடன் கிரிக்கெட் விளையாடினான்!

ஆனால் ஒரு கட்டத்தில் ‘விளையாட முடியாது’ என ஒதுங்கினான்!
அவனது தாத்தா, “ஏன்? போ விளையாடு!” என்றார்.

“இல்லை தாத்தா! நான் தோற்றுவிடுவேன்! விளையாடிப் பயனில்லை!”என்றான் பேரன்.

“இல்லை,இன்னும் 11 ரன்கள்தானே எடுக்கவேண்டும்? நீ நிச்சயம் எடுப்பாய்! விளையாடு!” என்றார் தாத்தா.

பேரன் ‘முடியவே முடியாது!’ என்றான்.

“அப்படியானால் ஒரு கதை கேளு!” என்ற தாத்தா , பேரனுக்கு ஒரு கதையைக் கூறத் தொடங்கினார்.

ஓர் ஊரில், ஒரு எறும்புக் கூட்டம் இருந்தது; மகிழ்ச்சியாக ஒரு புற்றில் வாழ்ந்தன!
ஒரு நாள் காற்றும் மழையுமாக வந்து , புற்றுக்குள் நீர் புக ஆரம்பித்துவிட்டது!

அப்போது ஒரு எறும்பு, “வா எறும்பே! என்னோடு வா! மரத்து மீது ஏறித் தப்பிகலாம்!” என்று மற்றொரு எறும்பைக் கூப்பிட்டது!

ஆனால் அந்த எறும்பு போக மறுத்துவிட்டது! “ஐயோ! எனக்குப் பயமாக இருக்கு! நான் இங்கேயேதான் இருப்பேன்! மற்றவங்களும் இங்கேதான் இருக்காங்க!” என்றது அந்த எறும்பு.

“சரி! போ!” என்று அந்த எறும்பை விட்டுவிட்டுச் சென்று, அருகிலிருந்த மரத்துமீது ஏறித் தப்பித்தது கூப்பிட்ட அந்த எறும்பு.

மழை எல்லாம் விட்டதும், கீழே இறங்கி வந்து பார்த்தால், எல்லா எறும்புகளும் செத்துக் கிடக்கின்றன! தைரியசாலி எறும்பைப் பின்பற்றி இருந்தால், பல எறும்புகள் தப்பியிருக்கலாம்!

தைரியமும் புத்திசாலித் தனமும் வாழ்க்கையில் தேவை!
- என்று கதையை முடித்தார் தாத்தா.

“சாரி தாத்தா! புரிஞ்சுக்கிட்டேன் தாத்தா!’’ எனப் பேரனும் அங்கிருந்த சிறார்களும் மகிழ்ந்தனர்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 01, 2022 1:35 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (42)

ஓநாயும் மூன்று பன்றிகளும் !

ஓர் ஊரில் மூன்று பன்றிகள் ஒரு வீடு கட்டி,அதில் வாழ்ந்துவந்தன!

அவ் வீட்டு அருகே ஓர் ஓநாயும் ஒரு வீட்டைக் கட்டிக் குடியிருக்கத் தொடங்கிற்று!
அடிக்கடி அந்த ஓநாய் ,மூன்று பன்றிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தது!

அச்சத்தில் வாழ்ந்த அந்த மூன்று பன்றிகளும் ஒரு நாள் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஓநாய், அவர்களின் பின்புறமாக , அவர்களை நோக்கி வேகமாக வந்தது!   “ஐயோ நாம காலி!”என்ரு அந்த மூன்று பன்றிகளும் நினைத்திருந்தனர்! ஆனால், ஓநாய், அவர்களை விலக்கிவிட்டு, மேலும் முன்னேறிச் சென்று, ஒரு பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றது!

“அப்பாடா!” என்று மூச்சுவிட்ட அந்த மூன்று பன்றிகளும், “ஓநாய் ஊருக்குப் பேருந்தில் போகிறது போல! இப்போதைக்கு நமக்கு நிம்மதிதான்!” எனப் பேசிக்கொண்டன!
ஆனால், ஓநாய் பேருந்து எதிலும் ஏறவில்லை!

சற்று நேரத்தில்,பேருந்திலிருந்து ஓநாயின் அக்கா வந்து இறங்கினாள்!

ஓநாயும், ஓநாயின் அக்காவும் கைகுலுக்கிக் கொண்டனர்!

ஓநாய், பேருந்து நிறுத்தத்தில் நின்றது, அதன் அக்காவை வரவேற்க!

ஓநாயும் அக்காவும் இருவரும் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டனர்!

“ஓநாயோடு அதன் அக்காவும் வேறு சேர்ந்துகொண்டது! இனி நம் பாடு திண்டாட்டம்!” என்று மூன்று பன்றிகளும் கலங்கின!

அதில் ஒரு பன்றி, “நான் ஒரு உபாயம் சொல்கிறேன்!” என்று, அந்த உபாயத்தைக் கூறியது! மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்!

அந்த உபாயத்தின்படி, மூன்று பன்றிகளும் அடுத்த நாள், ஓநாய் வீட்டுக்குச் சென்றன!
“என்ன? ஏன் வதுள்ளீர்கள்?’’ என ஓநாய்  விசாரித்தது.

அப்போது வீட்டுக்குள் இருந்த ஓநாயின் அக்கா வெளியே வந்தது!

“அக்கா, வாங்க! நாங்க உங்களைத்தான் பார்க்க வந்துள்ளோம்!” என்றன மூன்று பன்றிகளும்.

“அப்படியா? வாங்க!வாங்க!”என வரவேற்றது ஓநாயின் அக்கா!

அப்போ , ஒரு பன்றி, ‘இந்தாங்க அக்கா பூங்கொத்து! வாங்கிக்கோங்க!’ என்று ஒரு பூங்கொத்தைக் கொடுத்தது!

“இந்தாங்க சாக்லேட்! பிடிங்க!’என்று ஒரு சாக்லேட் தட்டை நீட்டியது அடுத்த பன்றி!
“இந்தாங்க பழங்கள்! வாங்கிக்கங்க!”என்றது மூன்றாம் பன்றி!

மகிழ்ந்தது ஓநாயின் அக்கா!

அடுத்த நாள் , ஓநாயும் ஓநாயின்

அக்காவும் பன்றிகளின் வீட்டுக்குச் சென்றன!

அங்கே, மூன்று பன்றிகளுடனும் மகிழ்ச்சியாகப் பேசின!

பிறகு, பன்றி வீட்டுத் தோட்டத்திற்குள் சென்று, அதை ஒழுங்குபடுத்தின ஓநாய்கள் இரண்டும்! தூசு துடைத்துப் பெருக்கிச் சுத்த செய்தும் தந்தன!

புத்திசாலித் தனத்தாலும் அன்பாலும் மகிழ்ச்சியாய் வாழலாம்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells.com)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 01, 2022 6:55 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (43)

சிங்கமும் நரியும் !

“தாத்தா! நாங்க கிரிக்கெட்டில் தோற்றுவிட்டோம்!” என்று பேரன் வந்து தாத்தாவிடம் சொன்னான்.

“தாத்தா, “அதனாலென்னடா? அடுத்தது உனக்கு வெற்றிதான்!” என ஆறுதல் கூறினார் தாத்தா.

“இல்லை தாத்தா! எங்க கேப்டன் சரியில்லை! அவரை மாற்றினால்தான் ஜெயிக்கமுடியும்!” என்றான் பேரன்.

“அப்படியா? அப்படியென்றால் ஒரு கதை கூறுகிறேன் கேளு!” என்று , ஒரு கதையைக் கூறினார் தாத்தா!

ஒரு காட்டில் பல மிருகங்கள் இருந்தன; அவற்றுக்கு ராஜா சிங்கம்!


ஒரு நாள் , சிங்கம் மற்ற மிருகங்களை ஓரிடத்தில் கூட்டியது! கூட்டிச், சிங்கம் சொன்னது - “தோழர்களே! நான்தான் உங்க ராஜா! இதுவரை ஒழுங்காக இந்த வனத்தைப் பார்த்துக்கொண்டேன்! இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் வயது கூடிவிட்டது! அதனால் வேறு யாராவது ஒருவரை நீங்கள் தலைவரக ஆக்குவதானால் ஆக்கலாம்!”.

உடனே நரி, “ஆமாம்! சிங்கத்துக்கு வயதாகிவிட்டது! நான் இளமையானவன்! நான் உங்கள் தலைவராக வரவேண்டும்!” என்றது!

“சரி! அப்படியானால் நாம் ஒருவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கலாம்!” என்ற சிங்கம், தேர்தலுக்கான நாளையும் குறித்தது!

தேர்தல் நாளும் வந்தது!

“சரி! சிங்கத்துக்கு வயதாகிவிட்டது! ஆதலால் நரியையே நம் தலைவராக ஆக்கலாம்!” என்று எல்லா மிருகங்களும் நரியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தன!

நரி, “ஆமாம்! சரிதான்!நான் நன்றாகச் செயல்படுவேன்! நான் இளமையானவன்! உங்களை நான் நன்கு கவனித்துக் கொள்வேன்! நான் அனுபவசாலி!” எனக் கூறி மகிழ்ந்தது!

தொடர்ந்து நரி, “இனிமேல் சிறுவர்கள் அனைவரும் பயமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் செல்லுங்கள்!” என்றது.

அதன் பேச்சைக் கேட்டு, முயல் குட்டி,மான் குட்டி,யானைக் கன்று,பன்றிக் குட்டி முதலிய எல்லா மிருகங்களும் சறுக்கு விளையாட்டு, ஏற்று மரம் இறக்கு மரம் முதலிய எல்லா விளையாட்டுகளையும் விளையாடின!

அடுத்த நாள் , முயல் ஒன்று, நரியிடம் வந்து “தலைவரே! என் குட்டியைக் காணோம்!விளையாடப் போனதுதான் திரும்பவே இல்லை!” எனப் புகார் அளித்தது! நரி,

“அப்படியா?நான் கண்டிபிடித்துத் தருகிறேன்!” எனக் கூறி முயலை அனுப்பிவிட்டது!
ஆனால் முயல் குட்டி திரும்பவே இல்லை!

அடுத்த நாள், ஒரு மானும் இதே போன்று தன் குட்டியைக் காணவில்லை என்று நரியிடம் புகார் செய்தது!

இப்படித் தினமும் ஒவ்வொரு குட்டியாகக் காணாமற் போகவே, எல்லா வயதான மிருகங்களும் கூடி, , “இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது! நாம் குட்டிகள் விளையாடும் இடத்திற்கு அருகே ஒளிந்திருந்து கண்காணிப்போம்!” என முடிவு செய்து, அவ்வாறே கண்காணிக்கவும் தொடங்கின!

பார்த்தால்,அந்த அரசனாகிய நரி , பதுங்கி வந்து, கிடைத்த ஒரு குட்டியைத் தூக்கிச் சென்றது!

உடனே , ஒளிந்திருந்த வயதான மிருகங்கள் , “ஏய்! கள்ளா! நீதானா அது?”என்று நரியைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டன!

அப்போது, மிருகங்கள் எல்லாம், “இனி நமக்குச் சிங்கம்தான் ராஜா! நாம் நினைத்தது தவறு!” என்று தாம் செய்த தவற்றுக்கு வருந்தின!

“பார்த்தீர்களா குழந்தைகளே! வயதும் அனுபவமும் மதிக்கப்பட வேண்டும்! ஆராயாமல் மாற்றிவிட்டு ஏமாறக் கூடாது!” என்று பேரப் பிள்ளைகளுக்குப் புத்திமதி கூறினார் தாத்தா!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 01, 2022 8:55 pm

தற்காலத்திய  அரசியல்வாதியை நினைவில் வைத்து எழுதப்பட்ட கதை போலுள்ளது.

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 3838410834 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 103459460 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 7 1571444738

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 03, 2022 11:07 am

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 03, 2022 11:09 am

கன்னடச் சிறுவர் கதைகள் (44)

எருதும் சிங்கமும் !

ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தார்! அந்த விவசாயியிடம் இரு எருதுகள் இருந்தன! அவற்றைக் கொண்டுதான் அவர் உழுதுவந்தார்!

ஒரு நாள் உழும்போது, கறுப்பு நிற எருது ஏர் உழமாட்டாமல் தடுமாறியது! அப்போது விவசாயி, “ஆமா! இந்தக் கறுப்பு எருதுக்கு வயதாகிவிட்டது! இதற்கு நான் ஓய்வு தரவேண்டும்!” என்று நினைத்தார்.

நினைத்து, அந்த எருதிடம், “எருதே! நண்பா! எனக்காக உழைத்துள்ளாய்! மேலும் உன்னை வருத்த விரும்பவில்லை!” எனக் கூறி, அதை ஓட்டிக்கொண்டு காட்டுக்குச் சென்றான்!

காட்டில், “எருதே! இங்கு உன்னைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறேன்!” என்று எருதிடம் கூறிவிட்டு, அந்த எருதுக்கு விடை கொடுத்துத் திரும்பினார்!

காட்டில் விடப்பட்ட எருது, “இனி நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்” என்று நினைத்து அங்குமிங்கும் சென்றது!

ஓரிடத்தில் ஒரு குகை இருந்தது! அதற்குள்ளே சென்ற எருது, “இது நல்ல இடம்! நான் இங்கேயே தங்கலாம்! அருகே புல் இருக்கிறது, உண்ண! அருகே ஆறு! நமக்கு நீர்!” என்று மகிழ்ந்தது! அந்தக் குகையிலேயே தங்கிவிட்டது!

ஒரு நாள் , ஒரு சிங்கம் அந்தக் குகை வாசலில் வந்து நின்றது!

அதை உணர்ந்துகொண்ட எருது, “ஏய்! யாரது? உன் மாமிசமே நான் உண்பது!” என உரக்கப் பேசியது, குகைக்குள் இருந்தபடியே!

கேட்ட சிங்க அலறி ஓடியது!

சிங்கம் ஓடுவதைக் கண்ட நரி ஒன்று,சிங்கத்தின் பின்னே ஓடிப்போய், “நில்! சிங்கமே! நீ வன ராஜா! நீ ஏன் பயந்து ஓடுகிறாய்?” எனக் கேட்டது.

“யப்பா! அந்தக் குகையில் ஒரு வினோதப் பிராணி இருக்கிறதப்பா! பெரிய பெரிய கொம்புகள்! கறுப்பு நிறம்! அதைக் கண்டாலே பயமா இருக்குப்பா!”என்று கூறிவிட்டுச் சிங்கம் ஓடத் தொடங்கியது!

நரி தொடர்ந்து சென்று, “நில்! சிங்கமே! நீ ஏன் பயப்படுகிறாய்? உன்னைவிடப் பலசாலி யார் இருக்கா?” என்று தைரியம் சொல்லி, மேலும் சொன்னது, “சிங்கமே! என் கூட வா! நான் போய்ப் பார்க்கிறேன் குகைக்குள்!” என்றது.

சிங்கம் தயங்கியது! “நீ வருவாய்; அந்த மிருகம் என்னைத் தாக்க வரும்; நீ ஓடிவிடுவாய்! உன்னைத் தெரியாதா எனக்கு?” என்றது சிங்கம்!

நரி, “சரி! அப்படியானால் ஒன்று செய்வோம்! நம் இருவர் வால்களையும் ஒன்றாகக் கட்டிக்கொள்வோம்! உன்னை விட்டு நான் ஓடிவிட முடியாதல்லவா?”என்றது.
சிங்கம் ஒத்துக்கொண்டது!

சிங்கமும் நரியும் தம் வால்களின் நுனிகளைக் கட்டிக்கொண்டு, எருதின் குகையை நோக்கிச் சென்றன!

இவற்றைப் பார்த்த எர்து, “நரியே! வா! உன்னைத்தான் எதிர்பார்த்தேன்! நான் உன்னை இரண்டு சிங்கங்களைக் கொண்டுவரச் சொன்னேன்! நீ ஒரு சிங்கத்தைத்தானே கொண்டுவந்துள்ளாய்? இது எனக்குப் போதாதே!” என உரத்த குரலில் பேசியது!

இதனைக் கேட்ட சிங்கம் வெலவெலத்து ஓட ஆரம்பித்தது!

நரியின் வால் சிங்கத்தின் வாலோடு கட்டப்பட்டிருந்ததால், நரி தரையில் விழுந்து இழுபட்டது! சிங்கம் ஓட ஓட , நரி தரையில் இழுபட்டுக்கொண்டு துடித்தபடியே சென்றது!
மனத் தைரியத்தாலும் புத்திசாலித் தனத்தாலும் எருது வென்றது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 04, 2022 10:59 am

கன்னடச் சிறுவர் கதைகள் (45)

மானின் புத்திசாலித்தனம் !

ஒரு காட்டில் மான் ஒன்று இருந்தது!

ஒரு நாள் , ஒரு நீர் நிலைக்கு நீர் குடிக்க அந்த மான் வந்தது! நீரில் வாய் வைக்கும் முன் ஒரு நிமிடம் யோசித்தது! ‘முதலை இருக்குமோ?’ என்று நினைத்தது! அது நினைத்தது போன்றே , ஒரு முதலையும் , நீர் நிலைக்குள் மானைப் பிடிக்கக் காத்திருந்தது!

மான், ஒரு குச்சியை அந்த நீர் நிலைக்குள் போட்டது! உடனே அந்த முதலை, அதனை மானின் கால் என நினைத்து , வாயால் கவ்வியது!

அப்போது, மான் சொன்னது – “ஏய்! முதலை! நீ இருப்பாய் என்று நினைத்தேன்! சரியாகிவிட்டது!முட்டாள் நீ! மரக் குச்சிக்கும் என் காலுக்கும் வேறுபாடு தெரியாத ஆள் நீ!” . இப்படி, மான் முதலையைக் கேலி செய்தது!

“அப்படியா? இரு இரு! நான் உன்னை விரைவில் பிடிக்கிறேன்!”என்று கூறியது முதலை!
இரண்டு நாட்கள் கழிந்து, அந்த மான் அதே நீருக்கு வந்தது!

“மான் வருது! நாம் கல்லுப்போல இருந்துகொள்வோம்! அப்போது மானால் கண்டுபிடிக்க முடியாது! அதைப் பிடித்துவிடலாம்!” என்று திட்டம் போட்டது முதலை!

மான், அந்த ஏரிக் கரையில் நின்றபடி, “இது என்ன முதலையா? கல்லா? சரி! முதலையாக இருந்தால் பேசாமல் ஊமையாக நடிக்கும்! கல்லாக இருந்தால் நம்மோடு பேசும்!” எனச் சொல்லியது!

முதலை, அவசரம் அவசரமாக, “மானே! நான் ஒரு கல்லுதான்!” எனப் பேசிற்று!
உடனே மான் , “முட்டாள் முதலையே! கல் எங்கேயாவது பெசுமா? நீதான் பேசுகிறாய் என்று எப்படிக் கண்டுபிடித்தேன் பார்த்தாயா?”என்று கூறிச் சிரித்தது!

அப்போது முதலை, “சரி! நீ சரியான புத்திசாலியாக இருந்தால், பக்கத்திலுள்ள விவசாயியின் தோட்டத்திற்குப் போ பார்க்கலாம்! நீ அங்கு போய்த் திரும்பிவிட்டால், நீ புத்திசாலி என்று நான் ஒப்புக்கொள்கிறேன்!”என்றது முதலை!

“சரி!” என்று மானும், அடுத்தநாள் விவசாயியின் தோட்டத்திற்குச் சென்றது! “அட! காய்கறி! கீரைகள்! நான் இங்கு இவை இருப்பதைப் பார்க்கவே இல்லையே?” எனக் கூறியபடி, கீரைத் தளிர்களை ருசித்துச் சாப்பிட்டது!

உடனே, விவசாயி கிழே விரித்திருந்த வலையில் கால் சிக்கிக் கொண்டது! என்ன முயன்றும் மானால் விடுபடவே முடியவில்லை!

சற்று நேரத்தில் , விவசாயி வந்தான்! “மானே!மாட்டிக்கொண்டாயா?”என்று மானருகே போனான்!

மான் ஒரு தந்திரம் செய்தது!

இறந்தது போலவே நடித்தது!

விவசாயி , கம்பால் மானைத் தட்டிப் பார்த்தான்! அப்போடும் மான் இறந்தது போன்றே தொடர்ந்து நடித்தது!

“சரி! மான் இறந்துப்போய்விட்டது! தூரமாக வீசிவிட்டு வரலாம்!” என்று தோளில் சுமந்து சென்று, காட்டின் வேறு பகுதியில் இறக்கினான் தோளிலிருந்து!

விவசாயி தோளிலிருந்து இறங்கிய மான், துள்ளிக் குதித்துச் சிரித்துக்கொண்டே ஓடிவிட்டது!

விவசாயி ஏமாந்தான்!

இரண்டு நாட்கள் கழித்து, அந்த மான், அதே விவசாயியின் தோட்டத்திற்குச் சென்றது! தோட்டத்தில், ஒரு வைக்கோல் பொம்மையைக் கழி ஒன்றில் கட்டியிருந்தான் விவசாயி!
அதைப் பார்த்த மான், “ஓகோ! பொம்மையைக் கட்டிவிட்டால் நான் பயந்துவிடுவேனோ?”என்று , துணிச்சலாக அப் பொம்மையை எட்டி உதைத்தது!

அந்தக் கால், பொம்மையிலிருந்த வலையில் மாட்டிக்கொண்டது! இன்னொரு காலால் வலையை மிதித்தது மான்! அந்தக் காலும் மாட்டிக்கொண்டது!

இதற்கிடையில் , அந்த விவசாயி வந்துவிட்டான்!

“மாட்டினாயா?” என்று , அந்த மானைப் பிர்டித்துtஹ் தூக்கிச் சென்று, தன் வீட்டில், ஒரு கூண்டுக்குள் அடைத்துவிட்டான்!

மான் எப்படித் தப்புவது என்று ஆலோசித்தது!

அப்போது, அந்த விவசாயியின் நாய் ஒன்று , அந்தக் கூண்டருகே வந்தது! மானை உற்றுப் பார்த்தது!

மான் அப்போது ஒரு தந்திரம் செய்தது!

“நாயே! நான் இங்கு ஏன் இருக்கிறேன் தெரியுமா? நான் இந்த வீட்டு விருந்தாளி! நாளை இந்த வீட்டில் விசேஷம்! அதன் முக்கிய விருந்தாளியே நான்தான்! நாளை எனக்கு மரியாதை செய்வார்கள்! அதற்கே தனியாக இங்கு வைத்துள்ளார்கள்!” என்றது மான்!
நாய், “அட! இந்த வீட்டுக்கு நாம் எவ்வளவு உழைத்துள்ளோம்? நம்மை விட்டுவிட்டு மானைப் பெருமைப் படுத்துவதா?” என்று கோபப்பட்டது!

அப்போது மான், “சரி! நாயே! ஒரு காரியம் செய்! இந்தக் கூண்டுக்குள் வந்து நீ இருந்துகொள்! அப்படி இருந்தால் நாளை உனக்குத்தானே மரியாதை கிடைக்கும்?” என ஆசை வார்த்தை சொன்னது!

நாயும் நம்பி, மானிருந்த கூண்டைத் திறந்துவிட்டது!

மான் துள்ளிக் குதித்து வெளியே ஓடித் தப்பிவிட்டது!

புத்தி சாதுரியத்தால் பலவற்றைச் சாதிக்கலாம்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv) ***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 05, 2022 10:38 am

கன்னடச் சிறுவர் கதைகள் (46)

மூன்று பிராணிகள் !


ஒரு காட்டில் முயல், பாண்டாக் கரடி , நரி ஆகியன வழ்ந்தன!

அவை அன்பாகவே வழ்ந்தன!

ஒரு நாள் மூன்றும் ஓரிடத்தில் இருந்தபோது,பாண்டா சொன்னது , “அப்பா! நான் இனிப்புச் சாப்பிட வேண்டும் போல உள்ளது!”. அதற்கு முயல், “நம் காட்டில் தான் இனிப்புப் பழங்கள் உள்ளனவே?” என்றது. “இல்லை!இல்லை! எனக்கு இனிப்பாகத் தயாரித்த பண்டம் வேண்டும்!” என்றது பாண்டாக் கரடி!

“அப்படியானால் சரி! நாம் பாயசம் செய்யலாம்!” என்றது நரி.

“சரி!” என்று மூன்றும் பொருள்களைச் சேகரிக்கத் தொடங்கின!

நரி நேரே போய்ப் பால்காரன் வீட்டு முன் போய் நின்றது! பால்காரன் அங்கு இல்லை! “நல்லதாயிற்று!” என்று நரி, அங்கிருந்த பால் தூக்கை அப்படியே தூக்கி வந்துவிட்டது!

முயல் சர்க்கரை சேகரிக்க ஒரு கடைக்குள் போனது! கடைக்காரன் அயர்ந்த நேரத்தில் சர்க்கரைப் பாக்கெட் ஒன்றைத் தூக்கி வந்துவிட்டது!

பாண்டா ஒரு விவசாயியின் வயலுக்குச் சென்றது! அங்கு விளைந்திருந்த நெல்லை ஒரு பைக்குள் போட்டுக்கொண்டு வந்தது! மூவரும் நெல்லை அரிசியாகவும் ஆக்கின!
நரி அடுப்பு மூட்டி , ஒரு பானையை அதன் மேல் வைத்தது; முயல் இரு கற்களைத் தட்டித் தீ மூட்டியது!

நரி ஒரு கோலால் ,கிளறியது!

ஒரு வழியாகப் பாயசம் தயார்!

“சாப்பிடலாமா?” என்று மூன்றுபேரும் பேசிக்கொண்டன!
“சரி! மூவரும் அழுக்காக இருக்கிறோம்! குளித்துவிட்டு வந்து சாப்பிடலாமே?”என்றது நரி!
“சரி!” என்று மூவரும் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றன!

ஆற்றுக்குச் சென்றதும், நரி, “இங்கே மிகவும் குளிராக இருக்கிறது! தாங்க முடியவில்லை என்னால்! ஆகவே , நான் ஒரு கிணற்றுக்குச் சென்று குளித்து வருகிறேன் ” எனக் கூறிச் சென்றுவிட்டது!

மூவரும் பாயச அடுப்பருகே வந்தனர்!

பார்த்தால், பாயசப் பானை கீழே கிடந்தது! காலிப் பானை!

“என்னது? பாயசம் எங்கே? யார் சாப்பிட்டது?” என்று மூவரும் கேட்டுக்கொண்டன!

“சரி! ஏதோ பிராணி சாப்பிட்டுவிட்டது போல! நாம் வேறொரு நாளில் பாயசம் செய்துகொள்ளலாம்!” என்று மூவரும் சமாதானம் சொல்லிக்கொண்டன!

அடுத்த நாள் முயல், நரியையும் பாண்டாவையும் ஆற்றருகே கூட்டிச் சென்றது! ஆற்றில் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்துவிட்டு, “இதோ மிதக்கும் இந்தப் பானை மீது ஒருவர் அமரவேண்டும்! அப்போது பானை கவிழ்ந்தால், அவர்தான் பாயசம் தின்றவர்! சரியா? முதலில் நான் உட்காருகிறேன்!” என்று சொல்லிவிட்டு, முயல் முதலில் தாவி அப் பானை மீது உட்கார்ந்தது!

பானை கவிழவில்லை!
“அடுத்து நரியே நீதான்! வா!” என்று கூப்பிட்டது முயல்!
நரி, “நானா? அது ….வந்து…”எனத் தயங்கிற்று!

முயல், “அதெல்லாம் முடியாது! போய் உட்கார் பானை மேலே!” என்று அதட்டினர்!
வேறு வழியில்லாமல்,நரியும் பானை மீது ஏறி உட்கார்ந்தது!

பானை ஆட்டம் கண்டது! குப்புறக் கவிழ்வது போல் இருந்தது! நடுநடுங்கிய நரி, கரைக்குத் தாவியது! நரி, “வந்து ….நாந்தான் பாயசம் சாப்பி




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 05, 2022 7:56 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (47)

பாண்டாக் கரடி !

சீனா தேசத்தில் ஓர் அரண்மனை! அதில் ஒரு பாண்டாக் கரடி! வெகு அழகு!
அதை எப்படியாவது திருடிவிட வேண்டும் என்று பார்த்துக்கொண்டே வந்தான் ஒரு திருடன்!

ஒரு நாள் இரவு நேரத்தில், யாரும் அறியாமல் அரண்மனை உள்ளே புகுந்து அந்தக் கரடியைத் தூகிக்கொண்டு வந்து தன் வீட்டில் ஒரு கூண்டில் அடைத்து வைத்துவிட்டார்!
பாண்டாக் கரடி , “நான் சாப்பிடக் கரும்பு வேண்டும்!” என்று அடம்பிடித்தது!

“கரும்புக்கு நான் எங்கே போவேன்?” என்றான் திருடன்!

“தெரியாது! எனக்குக் கரும்பு வரவில்லையானால் கத்துவேன்! ஊரார் ஓடி வருவார்கள்!” என்று மிரட்டியது!

பயந்த திருடன், எங்கோ போய்க் கரும்பைக் கொண்டுவந்து தந்தான்!

அடுத்த நாள், “எனக்கு இனிப்புப் பண்டம் வேண்டும்! இல்லைனா கத்துவேன்! எதுவும் சாப்பிடாமல் உயிரை விடுவேன்! பிறகு உனக்குத்தான் ஆபத்து!” என்று திருடனை மிரட்டியது பாண்டா!

திருடன் தடுமாறினான்! “யாரும் இதை விலைக்கு வாங்க மாட்டேங்கிறாங்க! இதை வைத்துத் தீனியும் போட முடியவில்லை! என்ன செய்யறது?” என்று யோசித்தான் திருடன்!

அடுத்த நாள் , “என்னைக் காட்டுக்குள் கொண்டு போ! நான் பல இடங்களுக்கு சென்றுவர வேண்டும்; இங்கேயே அடைபட்டிருக்க முடியாது! ” என்று கரடி அடம்பிடிக்கவே , திருடன் காட்டுக்குள் கூட்டிச் சென்றான் பாண்டாவை!

இறுதியில், அரண்மனையிலேயே விட்டுவிட முடிவு செய்து, அவ்வாறே அரண்மனையில் பாண்டாக் கரடியை விட்டுவிட்டான்!

அதைப் பார்த்த ராஜா, திருடனுக்குத் தண்டனை கொடுக்குமுன் சொன்னான், “இதற்குத்தான் சொல்வது, யாருக்கு என்ன சக்தி உள்ளதோ அதற்குத் தகுந்தாற் போலக் காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று!”

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக