புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
85 Posts - 79%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
250 Posts - 77%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 19, 2022 10:27 am

கன்னடச் சிறுவர் கதைகள் (18)

சாந்த டைனாசர் !

ஒரு நாள் யானைக் குட்டியும் முயலும் பிக்னிக் போயின! காரில் கூட்டிப்போனவர் அத்தையம்மா!

அவர்கள் மூவரும் குடுகுடு மலை என்ற அழகான இடத்துக்குப் போனார்கள்!
அத்தையம்மா தான் கொண்டுவந்த பலகாரங்களை யானைக் குட்டிக்கும் முயலுக்கும் கொடுத்தாள்!

மூவரும் மகிழ்வாக உண்டனர்! சிரித்துக்கொண்டு இன்புற்றனர்!

“இருங்கள்! உங்களுக்குச் சூடான டீ போட்டுத் தருகிறேன்!” என்றாள் அத்தையம்மாள்.
டீ போட அடுப்பு வேண்டுமே?

அதற்காகக் குச்சிகளைச் சேகரித்தனர்! நெருப்பூட்ட , யானை தன் துதிக்கையால் காற்றை ஊதிப்பார்த்தது! ஊஹூம்! தீ பற்றவில்லை!

அப்போது அங்கு வந்தது ஒரு டைனாசர்! அதைப் பார்த்து மூவரும் பயப்பட்டனர்!

“பயப்படாதீர்கள்! நான் உங்கள் நண்பன்!” எனக் கூறியபடி, வந்த அந்த டைனாசர், “உங்களுக்கு என்ன நெருப்புதானே வேண்டும்?” என்று கூறித், தன் வாயிலிருந்து நெருப்பைக் கக்கியது! குச்சிகள் பற்றி எரியலாயின!

அருமையான டீ தயாரானது!

அத்தையம்மா ,அந்த டைனாசருக்கும் பலகாரம்,டீ எல்லாம் கொடுத்தாள்!
மகிழ்ச்சியாக அந்த டைனாசரும் விடைபெற்றுச் சென்றது!

கொடூரமான ஆளாக இருந்தாலும் அவர் அன்பாகவும் நடந்துகொள்ள முடியும்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 19, 2022 3:00 pm

அருமையான சிறு(வர் ) கதை.
கிவ் அண்ட் டேக் பாலிசி.
ரசித்தேன்.

(ஆமாம் எந்த காரில் அத்தையம்மா யானை குட்டியை அழைத்துச்சென்றார் ? புன்னகை புன்னகை புன்னகை

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 19, 2022 5:45 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (19)

முயல் செய்த ஆர்ப்பாட்டம் !

ஒரு காட்டில், ஒரு முயல் இருந்தது!

ஒரு நாள் , மேக மூட்டத்துடன் வானம் கர்ஜித்தது!

மாமரத்திலிருந்து பெரிய மாங்காய்கள் மடார்மடார் என்று கீழே உதிர்ந்தன!
இந்தச் சத்தம் கேட்ட முயல் பயந்துபோய், “ஐயோ வானமே இடிந்து விழுந்துவிட்டதே! இனி அவ்வளவுதான்! ஓடுங்கள்! ஓடுங்கள்!” என அலறிக்கொண்டு ஓடியது!

அலறிக்கொண்டு முயல் ஓடுவதைப் பார்த்த நரி, குதிரை,கோழிகள்,மான் முதலிய பிற பிராணிகளும் முயலின் பின்னே ஓடின!

இதை அறிந்த சிங்கம், எழுந்து கம்பீரமாக நின்றது!

“என்னது? வானம் இடிந்துவிட்டதா?” எனக் கூறிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்தது!
நேரே ஓடும் முயல் மற்றும் விலங்குகளைக் கண்டு , “யார் சொன்னது? வானம் விழுந்துவிட்டதா? எங்கே காட்டுங்கள்?” எனக் கேட்டது!

முயல் , சிங்கத்தைக் கூட்டிப்போய் ,மாங்காய்கள் விழுந்த விழுந்த இடத்தைக் காட்டி, “இங்குதான் மடார் மடார் என்று சத்தம் கேட்டது!” என்றது!

“இதோ பார்! இவை பெரிய மாங்காய்கள்! வானம் எதுவும் விழவில்லை! இந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் அலறினாயா?” என்று சிரித்தபடி கேட்டது சிங்கம்!

அப்போதுதான் எல்லா விலங்குகளுக்கும் உண்மை புரிந்தது! எல்லாம் அவரவர் இருப்பிடம் சென்றன!

எதையும் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 20, 2022 1:45 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (20)

நரியும் காக்கையும் !

ஒரு காட்டில் ஒரு காக்கை இருந்தது!

ஒரு நாள், ஓரிடத்தில் வெண்ணெய்க் கட்டி ஒன்று கிடந்ததை அது பார்த்தது!
அதற்கு நாக்கில் எச்சில் ஊறியது!

சடக்கென்று அண்ட வெண்ணெய்க் கட்டியைக் கொத்திக்கொண்டு , பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் வைத்துத் தின்னத் தொடங்கியது!

அங்கு ஒரு நரி வந்தது! காக்கையின் வாயிலிருந்த வெண்ணெய்க் கட்டியைக் கண்டு நரியின் வயில் எச்சில் ஊறியது!

“ஆகா! எப்படியாவது தந்திரம் செய்து, அந்த வெண்ணெய்க் கட்டியைப் பறிக்க வேண்டுமே?” என யோசித்தது நரி!

“காக்கை அண்ணா! காக்கை அண்ணா!” என மரத்தைடியிலிருந்து கூப்பிட்டது நரி!
“என்ன/”எனக் கேட்டது காக்கை.

“காக்கை அண்ணா! நீதான் நன்றாகப் பாடுவாயே! இப்போது ஒரு பாட்டுப் பாடேன்!” என்றது நரி!

நரியின் தந்திரத்தை உணர்ந்துகொண்ட காக்கை,வெண்ணெய்க் கட்டியைக் காலடியில் வைத்துக்கொண்டு , “சரி! நரியாரே! நான் பாடுகிறேன் கேட்கிறாயா?” என்று பாடத் தொடங்கியது!

ஓட்டம் பிடித்தது நரி!

பிறர் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகிவிடக் கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 20, 2022 7:13 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (21)

ஓநாயும் கொக்கும் !

ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது! அது பசியுடன் வந்துகொண்டிருந்தபோது, ஒரு யானை இறந்து கிடந்ததைப் பார்த்தது!

“ஆகா! வயிறார உண்ணலாம்!” என்று யானை மீது ஏறி, அதன் இறைச்சியைத் தின்னத் தொடங்கியது! லபக் லபக் என்று வேகமாகச் சாப்பிட்டபோது, எலும்புத் துண்டு ஒன்று ஓநாயின் தொண்டையில் சிக்கிக்கொண்டது!

தொண்டையில் சிக்கிக்கொண்ட எலும்பை எடுக்கப் படாதபாடு பட்டது ஓநாய்!
ம்ஹூம்! எலும்பைத் தொண்டையிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை!
அப்படியே ஆற்றங் கரை வந்தது ஓநாய்! ஆற்றங் கரையில் ஒரு கொக்கு நின்று கொண்டிருந்தது!

அந்தக் கொக்கைப் பார்த்து , ஓநாய், வெகு நயமாக , “கொக்கே! கொக்கே! எனக்குச் சிறு உதவி செய்யேன்! உனக்குத் தக்க பரிசு தருகிறேன்! என்றது!”

அதை நம்பிய கொக்கும், தனது நீண்ட அலகால், ஓநாயின் தொண்டையிலிருந்த அந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது!

பேசியபடி, அந்த ஓநாயைப் பார்த்துக் கொக்கு, “ஓநாயே! அந்த எனக்கு நீ பரிசு தருகிறேன் என்றாயே, கொடு!” எனக் கேட்டது!

“பரிசா? நீ இப்போ வெளியே வந்து சுதந்திரமாக உலாவுகிறாயே, இந்த அளவுக்கு நான் உன்னை விட்டுவைத்துள்ளதே பெரிய காரியம்! இதில் உனக்குப் பரிசு வேறா?” என்று கூறி, ஓநாய் கொக்கைப் பார்த்துச் சிரித்தது!

“மோசக்காரா! உன்னை நம்பி உனக்கு உதவினேன் பார்!” என்று சொல்லிவிட்டுக் கொக்கு பறந்துவிட்டது!

உதவியை யாருக்குச் செய்கிறோம் என்று பார்த்துச் செய்யவேண்டும்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 21, 2022 10:02 am

கன்னடச் சிறுவர் கதைகள் (22)

பசுக்களும் புலியும் !

ஒரு காட்டில் ஐந்து பசுக்கள் இருந்தன! அந்த ஐந்தும் மிக ஒற்றுமையாக இருந்தன!
ஐந்து பசுக்களும் எங்கு சென்றாலுமொன்றாகவே செலும்;ஒன்றாகவே மேயும்;ஒன்றாகவே திரும்பும்! இதனால் பிற மிருகங்கள் இவற்றை நெருங்குவதில்லை!
ஒருநாள், ஒரு புலி, ஐந்து பசுக்களையும் பார்த்து, “கொழுகொழு என்று இருக்கும் இப் பசுக்களை நாம் உண்டால் எப்படி இருக்கும்?”என்று மனதுக்குள் நினைத்து ஏங்கியது!
ஐந்து பசுக்களைத் தாக்க முயன்றது!

ஆனால், ஐந்து பசுக்களும் ஒன்றாக இருந்ததால், ஆளுக்கொரு பக்கமாகத் தாக்கி, உதைத்துப் புலியை விரட்டிவிட்டன!

அடி வாங்கிய புலி ஓடிவிட்டது!

சில நாட்கள் கழிந்தன!

ஒருநாள், ஐந்து பசுக்களுக்கும் இடையே சண்டை வந்துவிட்டது! “என்னிடம் பேசாதே!”என்றும், “இனி நான் ஒன்றாக இருக்க வேண்டாம்” எனவும் ஆளுக்கொரு விதமாகப் பேசிப், பிரிந்து போயின!

இதற்காகக் காத்திருந்த புலி, தனித் தனியாகப் போன பசு ஒவ்வொன்றாகத் தாக்கி, ஐந்தையும் கொன்றுபோட்டது!

ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வே!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 21, 2022 10:17 am

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 103459460 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 4 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 21, 2022 6:17 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (23)

சிறுவனும் ஓநாயும் !

ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்!

அவனது உறவினர்கள் அருகில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்!
அந்தச் சிறுவன் ஒரு செய்ய நினைத்தான்!

உறவினரைப் பார்த்து, “ஓநாய்! ஓநாய்! காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” எனக் கத்தினான்!

பையனின் அலறல் கேட்டு,உறவினர் கடப்பாரை, கம்புகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்கள்!

வந்து பார்த்தால், ஓநாயும் இல்லை! ஒன்றும் இல்லை!

“ஏமாந்தீர்களா? நான் சும்மா சொன்னேன்!” என்று கூறியபடி, கைகொட்டிச் சிரித்தான்!
“டேய்! இப்படிச் செய்யாதே!” என்று கூறிவிட்டுத் திரும்பினர்!

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் ஒருமுறை, “ஓநாய்! ஓநாய்!”என்று கத்தினான் பையன்!
அப்போதும் உறவினர்கள் , “எங்கே? எங்கே?” என்று கேட்டு ஓடிவந்தனர்!
ஏமாந்தனர்!

“டேய்! இனிமேல் உண்மையில் ஓநாய் வந்து , நீ கத்தினாலும் நாங்கள் யாரும் வரமாட்டோம்!” எனக் கூறிவிட்டுத் திரும்பினர்!
இரண்டு நாட்கள் சென்ற பின், ஒருநாள்!

உண்மையாகவே ஓநாய் ஒன்று வந்துவிட்டது!

சிறுவன், “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ஓநாய்! ஓநாய்!” எனக் கத்தினான்!
உறவினர் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை!பேசாமல் விட்டுவிட்டனர்!
சிறுவன் மரத்து மீது ஏறி உட்கார்ந்துகொண்டான்!

வந்த ஓநாய், எல்லா ஆடுகளையும் கடித்துக் குதறிப்போட்டுச் சென்றுவிட்டது!

விளையாட்டாக எதையும் புத்தியில்லாமல் செய்யக் கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 22, 2022 10:03 am

கன்னடச் சிறுவர் கதைகள் (24)

மூன்று ஆட்டுக் குட்டிகளும் ஒரு ஓநாயும்!

ஒரு காட்டில் மூன்று ஆட்டுக் குட்டிகள் இருந்தன! முன்றும் ஒரு சிறிய குடிசை வீட்டினைக் கட்டி அதில் வசித்தன!

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் அவர்களின் வீட்டருகே , ஒரு ஓநாய் வந்து ஒரு குடிசை கட்டியது! அவ் வீட்டில் அந்த ஓநாயும் வசிக்கலாயிற்று!

மூன்று ஆட்டுக் குட்டிகளும் பயந்தன!

மூன்றில், பெரிய ஆட்டுக் குட்டி , “ஓநாய் நம்மருகே வீடு கட்டியுள்ளது நல்லதல்ல! ஆபத்து! சீக்கிரமே நாம் ஒரு வலுவான வீட்டைக் கட்டி அதில் இருந்துகொள்ள வேண்டும்!” என்றது.
அதன் படியே , மூன்று ஆட்டுக் குட்டிகளும் விரைந்து ஒரு வலுவான காரை வீட்டைக் கட்டி முடித்தன! அதில் குடியும் ஏறின!

இதனை அறிந்த ஓநாய், ஒரு நாள் , ஆட்டுக் குட்டிகளின் வீட்டுக் கதவைப் போய்த் தட்டியது ! அப்படியும் ஆட்டுக் குட்டிகள் கதவைத் திறக்கவில்லை!

ஓநாய் ஒரு வேலை செய்தது!

வீட்டின் புகை போக்கிக் குழாய் வழியே வீட்டுக்குள்ளே இறங்கிவிடலாம் என்று புகை போக்கியை நெருங்கியது !

புகை போக்கி வழியே ஓநாய் உள்ளே குதிக்கும் வேளையில் , கீழே விறகுகளை அடுக்கித் தீ வைத்திருந்தன மூன்று ஆட்டுக் குட்டிகளும்!

புகை போக்கி வழியே உள்ளே ஓநாய் கீழே குதிக்கவும் ஆட்டுக் குட்டிகள் மூட்டியிருந்த தீயில் அது விழவும் சரியாக இருந்தது!

தீயின் வேக்காடு தாங்காமல், தலை தெறிக்க ஓடியது ஓநாய்!

முன் யோசனையோடு செயற்பட்டால், துன்பப் பட வேண்டாம்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 22, 2022 6:18 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (25)

பூனையும் நரியும் !

ஒரு காட்டில் பூனை ஒன்றும் நரியும் பேசிக்கொண்டிருந்தன! அப்போது, இரு வேட்டை நாய்கள் சற்றுத் தூரத்தில் பேசிக்கொண்டிருந்தன!

“நான் மிகவும் தந்திரசாலி! எனக்குப் பல வித்தைகள் தெரியும்! வேட்டை நாய்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது!” எனப் பீற்றியது நரி!

பூனை, “அப்படியா? உனக்கு என்னென்ன தெரியும்?” எனக் கேட்டது.
“எனக்கு எத்தனையோ தெரியுமப்பா! ஒன்றா? இரண்டா? நாஅன் முள் புதர்களை எல்லாம் தாண்டித் தாண்டி ஓடுவேன்! புதர்களில் மறைந்துகொள்வேன்! ஆழக் குழிக்குள் ஒளிந்துகொள்வேன்!” என அடுக்கியது நரி!

“எனக்கு ஒரூ ஒரு வித்தைதானப்பா தெரியும்!” என்றது பூனை!

அந்த நேரத்தில், இரு வேட்டை நாய்களும் நரி, பூனை மீது பாய வந்தன!

அப்போது பூனை, “ஆ!ஆ! இந்த மரத்து மீது ஏறிக்கொள்கிறேன்! நரியே , நீ உனக்குத் தெரிந்த எந்த வித்தையைப் பயன்படுத்தித் தப்பிக்கிறாய் பார்ப்போம்!” என்று
கூறிவிட்டு, அருகே இருந்த மரத்தில் மளமளவென்று ஏறிக்கொண்டது!

நரி, வேட்டை நாய்களிடமிருந்து தப்பிக்க,ஓடியது!புதர்களில் மறைந்தது!

முட்புதர்களைத் தாண்டியது!குழிக்குள் ஒளிந்தது!.......ஒன்றும் நடக்கவில்லை!
வேட்டை நாய்களும் நரியை விடவில்லை!

கடைசியாக நரி, ஒரு ஆழக் கிணற்றுக்குள் குதித்தது! வேட்டை நாய்களும் தொடர்ந்து கிணற்றில் குதித்து, நரியைக் குதறிக் கொன்றது!

அரைகுறையாகப் பலவற்றை மேலோட்டமாகத் தெரிந்துகொள்வதை விட , உருப்படியாக ஒன்றையாவது கற்றுக்கொள்ள வேண்டும்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக