புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
3 Posts - 5%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
2 Posts - 13%
Rutu
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 14, 2022 4:10 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (12)

பெண் குழந்தையின் வீரம் !

ஒரு பாட்டியும் பேரன் பேத்திகளும் விளையாடிக்கொண்டிருந்தனர்!

அப்போது, யானை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது! அதைப் பார்த்த பேத்தி, அஞ்சி நடுங்கியபடி பாட்டியிடம் வந்து ஒட்டிக்கொண்டது!

பாட்டி, “நீ ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? தூதுமோ எப்படி வீரப் பெண்? அதுபோல நீயும் இருக்க வேண்டாமா?” என்றாள்.

“யார் தூதுமோ?” – பேரன் பேத்தியர் கேட்டனர்.

அப்போது பாட்டி ஒரு கதை சொன்னாள்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜாவாவில் தூதுமோ , ஒரு சிறுமி. அவளது அம்மா மூலிகை பறித்து விற்றுவந்தாள்.

ஒருசமயம், அவ்வூரில் அரக்கன் ஒருவன் வந்து, “தூதுமோவைத் தின்றுவிடுவேன்! தூதுமோவைத் தின்னக்கூடாது என்றால், நீ எனக்குத் தினமும் சாப்பிட உணவு கொடு!” எனக் கர்ஜிக்கவே, தூதுமோவின் அம்மாவும் ஒத்துக்கொண்டாள்! தினமும் ஒரு அண்டாவில் உணவு செய்து, அரக்கனுக்கு வைத்துவிட்டு , மூலிகை விற்கப் போய்விடுவாள்!

ஒருநாள் தூதுமோவுக்குப் பசி அதிகமாகவே, அரக்கனுக்குச் சமைத்துவைத்த உணவில் கால் பகுதியைத் தின்றுவிட்டாள்!

அரக்கன் வந்து பார்த்தபோது, அண்டாவில் உணவு குறைவாக இருந்ததால், அண்டாவை உடைத்துவிட்டுத், தூதுமோவை விழுங்கிவிட்டுப் போய்விட்டான்!
அரக்கன் வயிற்றுக்குள் என்ன செய்தாள் தூதுமோ?
தன் தலையில் செருகியிருந்த பின்னை எடுத்து, அரக்கன் வயிற்றைக் குத்தினாள்! அரக்கன் அலறிக்கொண்டு விழுந்து செத்தான்!

தூதுமோ பிறகு வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தாள்!

“பார்த்தாயா?எப்படி வீரம் காட்டினாள் தூதுமோ? நீ என்னம்மா என்றால் யானையைப் பார்த்தே நடுங்குகிறாய்!” எனப் பாட்டி கதையை முடித்தாள்!

சிறுவர் சிறுமிகளுக்கு வீரம் விளைய வேண்டும்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –KooKooTV)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 15, 2022 3:24 pm


கன்னடச் சிறுவர் கதைகள் (13)


பிறருக்கு உதவி செய் !

ஒரு காட்டில் பல விலங்குகள் ஒற்றுமையாக வாழ்ந்துவந்தன! ஆனால், கரடி வகையைச் சேர்ந்த அழகான பாண்டா மட்டும் ஒற்றுமையாக இல்லை!

“இந்தப் பாண்டாவுக்கு என்ன கொழுப்பு? நம்மிடம் சேர்வதே இல்லையே?” என்றன மற்ற விலங்குகள். “பாண்டாவுக்குத், தான் அழகாக இருப்பதால் கொழுப்பு!” என்றது ஒரு விலங்கு!

ஒரு நாள், ஒரு மரத்திலிருந்த கூட்டிலிருந்து குஞ்சு ஒன்று கீழே விழுந்துவிட்டது! அருகில் படுத்திருந்த பாண்டா அதற்கு உதவி செய்ய வரவில்லை!

கொஞ்ச நேரத்தில், மரத்திற்கு வந்த தாய்ப் பறவை , தன் குஞ்சு கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்துக் கோபப் பட்டு, குஞ்சைத் தூக்கிக் கூண்டில் வைத்துவிட்டு, நேரே பாண்டாவிடம் போய், “பாண்டா அண்ணா! நீ ஏன் குஞ்சைத் தூக்கிவிடவில்லை?” என்று கேட்டது. அதற்குப் பாண்டா , “நீதான் வந்துவிடுவாயே! அதுதான் சும்மா இருந்தேன்! நான் ஏன் என் அழகான நிறத்தை அழுக்காக்கிக் கொள்ளவேண்டும்?” என்றது.

மற்றொரு நாள், குரங்கு இனத்தைச் சேர்ந்த லெமூர் வந்து, “பாண்டா அண்ணா ! நாளை என் மகள் பிறந்த நாள்! நீ என் வீட்டுக்கு வரவேண்டும்!” என அழைத்தது. அதற்குப் பாண்டா , “சே! நீங்கள் கூப்பிட்டால் நான் வருவேனா? மாட்டேன்! போய்விடு!” எனக்கூறி விரட்டிவிட்டது! தான் அழகாக இருப்பதால் பாண்டாவுக்கு அப்படி ஒரு கர்வம்!

சில நாட்கள் சென்ற பின் ஒரு நாள், பாண்டாவின் இருப்பிடப் பகுதி, தீப்பிடித்துக் கொண்டது! சுர்றிலும் தீ! பாண்டாவால் தப்பிக்க முடியவில்லை! அப்போது மற்ற விலங்குகள் அங்கு வந்தன!

“பாண்டா சாகட்டும்! அதனைக் காப்பாற்றக் கூடாது!” என்றன மற்ற விலங்குகள்.
“வேண்டாம்! நாம் பாண்டாவுக்கு உதவுவோம்!” என்று அதில் ஒரு விலங்கு கூறவே , எல்லா விலங்குகளும் சேர்ந்து, நீரைத் தீயின் மீது ஊற்றலாயின! யானை தன் துதிக்கையால் நீரைப் பீச்சியது! தீ ஒருவாறு அணைந்தது!

“அப்பாடா! நான் காப்பாற்றப்பட்டேன்! நன்றி, பிராணி நண்பர்களே! நான் கர்வத்துடன் தப்பா நடந்துகொண்டேன்! இருந்தபோதும் என்னை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள்! இல்லையானால், நான் செத்திருப்பேன்!” என்றது பாண்டா.

இதற்கே , முடிந்தபோதெல்லாம் பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –KooKooTV)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 16, 2022 2:49 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (14)

தாய்ப் பாசம் !

பேரன் பேத்தி இருவரிடையே சண்டை! “இது என்னுடைய பென்சில்” என்றாள் பேத்தி; ‘இது என்னது’ என்றான் பேரன்! சண்டை ஓயவில்லை!

பாட்டி வந்தாள்! சண்டை பற்றி அறிந்தாள்! பென்சிலை உற்றுப் பார்த்த பாட்டி, “இது பேத்தி பென்சில்தான்!” என்று தீர்ப்பளித்தாள்!

“எப்படிக் கூறுகிறாய் பாட்டி?” – கேட்டான் பேரன்.

“பென்சிலின் மரு நுனியைப் பார்! அது நைந்துபோய் உள்ளதல்லவா? இப்படி, வாயில் வைத்துக் கடிக்கும் பழக்கம் உனக்கு இல்லை! பேத்திக்குத்தான் இருக்கு!” என்று விளக்கினாள் பாட்டி!

“பாட்டி அதி புத்திசாலி நீ!” என்று இருவரும் பாட்டியைப் பாராட்டினார்கள்!

“நான் புத்தனைப் போலப் புத்திசாலி இல்லை!” என்றாள் பாட்டி!

“அப்படியா? புத்தன் எப்படிப்பட்ட புத்திசாலி?” – இருவரும் கேட்டனர்!

“சொல்கிறேன்! அதற்கு ஒரு கதை இருக்கிறது!” என்று கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி!

ஓர் ஊரில் , ஒரு பெண் தன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வேளையில், ஒரு நாள் திருட்டுப் பெண் ஒருத்தி, அவளின் குழந்தையைத் தூக்கிச் செல்ல முயன்றாள்! உடனே அதைத் தடுத்த தாய், “ஏய்! என்ன? ஏன் என் குழந்தையைத் திருடுகிறாய்?” என அதட்டினாள்!

“இது என் குழந்தை! நான் எடுத்துக் கொண்டுதான் போவேன்!” என்றாள் திருட்டுப் பெண்!

ஊரார் கூடிவிட்டனர்!

இருவரையும் , “என் குழந்தை மீது ஆணையாக இது என் குழந்தைதான்” என்று சத்தியம் செய்யச் சொன்னார்கள்!

இருவரும் சத்தியம் செய்தனர்!

ஊராருக்கு வேறு வழி தெரியவில்லை! நேரே புத்தனிடம் அனுப்பிவிட்டனர்!
கௌதம புத்தனிடம் வழக்கு சென்றது!

தாய், திருட்டுப் பெண் இருவரையும் நிற்க வைத்து, அவர்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டார் புத்தர்!

“குழந்தையின் கால்களைஒருவரும் , கைகளை மற்றவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு வட்டத்திற்குள் நிற்கவேண்டும்; இருவருமே தங்கள் தங்கள் பக்கம் குழந்தையை இழுங்கள்! யார் குழந்தையைப் பலமாக இழுத்துக் கொண்டு , குழந்தையுடன் வட்டத்திற்கு வெளியில் வருகிறாரோ அவரதே குழந்தை!” என்றார் புத்தர்.
“சரி! ” என்று இருவரும் ஆளுக்கொரு பக்கமாக நின்றுகொண்டு, குழந்தையை இழுத்தனர்!

சிறிது நேரத்தில்வலி தாங்காமல் குழந்தை கத்தியது!

தாய்க்கு மனம் கேட்காமல், பிடியை விட்டுவிட்டாள்! சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே போனாள் திருட்டுப் பெண்! புத்தனிடம் , “நான்தான் உண்மைத் தாய்!” என்று கூறினாள் அவள்.

கௌதம புத்தர் , “அல்ல! அல்ல! குழந்தை உன்னதல்ல! அதோ அவளுடையது!” என்றார் உண்மைத் தாயைச் சுட்டிக்காட்டி.


“குழந்தையுடன் வட்டத்துக்கு வெளியே வருபவரே உண்மைத் தாய் என்று நீர்தானே கூறினீர்?’’என்று கேட்டாள் திருட்டுப் பெண்.

“ஆமாம்! கூறினேன்! குழந்தை வலியால் அவதிப்படுவதை உண்மைத் தாயால் தாங்க முடியாது! நீ திருட்டுப் பெண்; அதனால் குழந்தையைப் பற்றி உனக்கு அக்கறை இல்லை! உண்மையைத் தாயைக் கண்டறிய நான் செய்த சோதனை இது!” என்றார் கௌதம புத்தர்!

இந்தக் கதையைக் கேட்ட பேரனும் பேத்தியும், கௌதம புத்தரின் மதியூகத்தைப் பாராட்டினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –KooKooTV)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 17, 2022 11:52 am

கன்னடச் சிறுவர் கதைகள் (15)

இரண்டு தவளைகள் !

இரு தவளைகள் ஒரு குளத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன!

கோடைக் காலம் வரவே, குளம் வற்றத் தொடங்கியது! ஏறக்குறையக் குளம் முழுதும் வற்றிப்போன நிலையில், “சரி! நாம் இனி இங்கு இருக்க முடியாது! வேறு குளம் தேடவேண்டும்!” என்று இரண்டும் புறப்பட்டன!

வழியில் ஒரு கிணறு தென்பட்டது! அதைப் பார்த்த தவளைகள் மகிழ்ச்சியில் துள்ளின!

“கிணற்றுக்குள் குதிக்கலாம்”என்று ஒரு தவளை சொன்னது. “நில்! அவசரப் படாதே! யோசித்துச் செய்ய வேண்டும்!” என்று அடுத்த தவளை சொன்னது.

“வா! குதிக்கலாம்! நிறைய நீர் உள்ளது! வாழ்க்கை பூரா இதிலே வாழ்ந்துவிடலாம்!” என முதல் தவளை கூறியது. “அவசரப் படாதே! இதிலே குதித்துவிடலாம்! ஆனால், கிணற்றில் நீர் வற்றிவிட்டால், நாம் எப்படி மேலே ஏறுவது?”- இரண்டாம் தவளை கெட்டது?

“சரி! அப்படியானால் வேறு குளம் தேடுவோம்!” என்று இரண்டும் வேறு குளத்தைத் தேடலாயின!

கொஞ்ச தூரத்தில், இன்னொரு பெரிய குளம் இருந்தது; நிறைய நீரும் இருந்தது! அப் புதுக் குளத்திற்குள் இரு தவளைகளும் குதித்தன! ஆனந்தமாக விளையாடின!

அதனால்தான் எந்தக் காரியத்தையும் செய்யும் முன்னர் , நன்கு ஆலோசித்துச் செய்யவேண்டும் என்பார்கள்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 17, 2022 1:49 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (16)

தொப்பி வியாபாரி!

ஒரு தொப்பி வியாபாரி ,கூடை நிறையத் தொப்பிகளை வைத்துக்கொண்டு விற்றுவந்தான்!

மரங்களுள்ள ஒரு வழியே போகும்போது,களைப்பாக இருந்ததால், ஒரு மரத்து நிழலில் உட்கார்ந்தான்; தூக்கம் வந்ததால், சிறிது கண்ணயர்ந்தான்!

அப்போது, மரத்து மேலிருந்த குரங்குகள் கீழே வந்து, தொப்பிகளை எடுத்துத் தம் தலையில் மாட்டிக்கொண்டு, மரக் கிளைகளில் உட்கார்ந்துகொண்டன!

கண் விழித்த தொப்பி வியாபாரி, “ஐயோ! என் தொப்பிகள் எங்கே?” என அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினான்!

கடைசியாக மரத்தைப் பார்த்தால், அதில் தொப்பிகளை மாட்டிக்கொண்டு குரங்குகள் வரிசையாக உட்கார்ந்திருந்தன!

“எப்படித் தொப்பிகளைக் குரங்குகளிடமிருந்து வாங்குவது?” என ஆலோசித்தான் வியாபாரி! அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது!

தன் தலையில் இருந்த தொப்பியை எடுத்துச், சற்று தூக்கி மேலே போட்டு, மீண்டும் தலையில் வந்து உட்கார்வது போலச் செய்தான்! அதனைப் பார்த்த குரங்குகளும் தம்தம் தொப்பிகளை மேலே போட்டு , மீண்டும் தலையில் வந்து அமர்வதுபோலச் செய்தன! பிறகு வியாபாரி, தன் தொப்பியை எடுத்துக் கீழே போட்டான்!குரங்குகளும் தம் தொப்பிகளைக் கீழே போட்டன!

மளமளவென்று தொப்பிகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கூடையில்வைத்துத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் வியாபாரி

இதற்குத்தான் சொல்வார்கள்- சக்தியை விடப் புத்தியே மேல் என்று!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 17, 2022 2:47 pm

தொப்பி வியாபாரி கதை


-
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 Eo4HhhW

இந்தக் கதை பின்னர் நகைச்சுவையாக வந்தது:-
-
இம்முறை குல்லா வியாபாரியின் மகன்...
அவனது அப்பா தனக்கு நேர்ந்த குரங்கு தொல்லை கதையையும்
சமாளிக்கும் விதத்தையும் சொல்லி அனுப்புகிறார்...
-
அதே மரத்தடியில் இவன் தூங்க குரங்குகள் குல்லாய்களை எடுத்துச்
சென்று குல்லாயை தலையில் அணிந்து மரத்தில் அமர்ந்திருக்கின்றன.
-
...தன் தொப்பியை எடுத்துக் கீழே போட்டான்
ஆனால் குரங்குகள் அவ்வாறு செய்யவில்லை...
எங்களுக்கும் எங்கள் முன்னோர் கதை சொல்லி இருக்கிறார்கள்.
ஏமாற மாட்டோம் என்றன!
-
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 18, 2022 1:18 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (17)

குரூர மரம் !

ஒரு காட்டில் பல மரங்கள் , நன்றாக வளர்ந்து, செழித்துக் காணப்பட்டன!

ஆனால் ஒரே ஒரு மரம் மட்டும் பார்ப்பதற்கு மோசமான தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது! அதன் அடிப்புறம் நெளிந்து வளைந்தும், சில இடங்களில் பருத்தும்,சில இடங்களில் மெலிந்தும் இருந்தன! கிளைகள் வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கில்லாமல் காணப்பட்டன!

இதனால் அக் குரூர மரம் வருத்தப்பட்டது! “மற்ற மரங்கள் போல நான் இல்லையே! அவை போல நானும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என நினைத்து நினைத்து வருந்தியது!

ஒரு நாள் மரம் வெட்டி ஒருவன்,அங்கு வந்தான்! நல்ல , வளர்ந்த , உயரமான மரங்களை முதலில் வெட்டலானான்! கடைசியில், குரூர மரத்தின் அருகே வந்தான்! “ம்ஹூம்! சரியில்லை! இது ஒழுங்கற்ற மரம்! இதை வெட்டிப் பயனில்லை!” என்று சொல்லி, வேறு மரத்தைத் தேடிப் போகலானான்!

“அப்பாடா! தப்பித்தோம்! நல்ல வேளை நான் அழகாக இல்லை! அதனால் தப்பித்தோம்! குரூரமாக இருக்கிறோம் என்று நான் வருத்தப்பட்டது சரியில்லை!” என்று அக் குரூர மரம் நினைத்தது!

ஒவ்வொருவரும் அவரிடம் உள்ள பண்புகளைத் தாழ்வாக நினைக்கக் கூடாது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 18, 2022 2:18 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 1571444738 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 3 3838410834



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 18, 2022 5:22 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 18, 2022 5:24 pm

நன்றி ஐயாசாமி அவர்களே! அருமையான படம் தங்களது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக