புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மஹா பெரியவா  Poll_c10காஞ்சி மஹா பெரியவா  Poll_m10காஞ்சி மஹா பெரியவா  Poll_c10 
6 Posts - 60%
heezulia
காஞ்சி மஹா பெரியவா  Poll_c10காஞ்சி மஹா பெரியவா  Poll_m10காஞ்சி மஹா பெரியவா  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காஞ்சி மஹா பெரியவா  Poll_c10காஞ்சி மஹா பெரியவா  Poll_m10காஞ்சி மஹா பெரியவா  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மஹா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 31, 2021 8:14 pm

மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள சாஸ்திரிகள் குடும்பம் ஒண்ணு சென்னையில இருந்தது. அந்தக் குடும்பத்துல ஒருத்தரான அவர் தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிடுத்து.
அவசர அவசரமா ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தா. ரெண்டு மூணுநாள் என்னென்னவோ பரிசோதனையெல்லாம் பண்ணிட்டு,இனி இவர் எழுந்து உட்கார்றதே சந்தேகம். அநேகமா ஒருவாரமோ, பத்துநாளோதான் இருப்பார். அப்படின்னு சொல்லிட்டா டாக்டர்கள்.
இடியே விழுந்தமாதிரி இருந்தது அந்தக் குடும்பத்துக்கு. அதுலயும் அந்த நோயாளியோட அண்ணா ரொம்பவே தவிச்சுட்டார். ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, தன்னோட தம்பி பொழைச்சு எழுந்துட மாட்டானான்னு அவருக்குள்ளே ஒரு மனப்போராட்டமே நடந்தது. "என்ன செலவானாலும் பரவாயில்லை என் தம்பியைக் காப்பாத்துங்கோ!"ன்னு டாக்டர்கள் கிட்டேயெல்லாம் கெஞ்சினார். எந்தெந்த தெய்வமெல்லாம் நினைவுக்கு வந்துதோ, அந்தந்த தெய்வத்துக்கிட்டேயெல்லாம் மனசுக்குள்ளே வேண்டினார்.
அந்த சமயத்துல தற்செயலா யாரோ ஒருத்தர், மகாபெரியவா யாத்திரை முடிஞ்சு வந்து இப்போ காஞ்சிபுரத்துலதான் இருக்காளாம்!" அப்படின்னு சொன்னது அவரோட காதுல விழுந்திருக்கு. உடனே அவரோட மனசுக்குள்ளே ஒரு பொறிதட்டியிருக்கு.
'ஆபத்பாந்தவனையே பக்கத்துல வைச்சுண்டு இப்படிக் கலங்கிண்டு இருக்கோமே! நேரா அந்த நடமாடும் தெய்வத்துக் கிட்டேயே தம்பியைக் கூட்டிண்டு போவோம். அவர் என்ன சொன்னாலும் சரி!' அப்படின்னு நினைச்சவர் உடனடியா புறப்படத் தயாரானார்.ஆனா, டாக்டர்களும் குடும்பத்துல மத்தவாளும் பாதிக்கப்பட்டவரோட உடல் நிலை அதுக்கு ஏத்த மாதிரி இல்லைன்னு சொல்லித் தடுத்துட்டா.
"சரி, தம்பியைத்தானே கூட்டிண்டு போகக் கூடாது? நான் மட்டும் போய் பெரியவாளைப் பார்க்கிறேன்!" -அண்ணா.
அவர் புறப்பட்டுட்டாரே தவிர, அவ்வளவு சீக்கிரமா அவரால காஞ்சிபுரத்துக்குப் பயணப்பட முடியலை. ஏன்னா, இப்போ மாதிரி அப்போ வாடகைக் கார் மாதிரியான வசதியெல்லாம் சட்டுனு கிடைச்சுடாது. போக்குவரத்துக்கான பஸ் வசதியும் குறிப்பிட்ட நேரத்துல மட்டும்தான் உண்டு. அதனால ரொம்ப நேரம் காத்துண்டு இருந்தவர்,கிட்டத்தட்ட சாயந்திரம்
நெருங்கற சமயத்துல தன்னோட நண்பர்கள்கிட்டே உதவி கேட்டார்.அவா எப்படியோ ஒரு காரை ஏற்பாடு செஞ்சு அனுப்பிவைச்சா. அதுல ஏறி காஞ்சிபுரத்துக்குப் புறப்படறச்சே கிட்டத்தட்ட ஆறேழு மணி ஆயிடுத்து.
பரபரன்னு புறப்பட்டார் சாஸ்திரிகள். கார் வேகமா காஞ்சிபுரத்தை நோக்கி போக ஆரம்பிச்சுது.அதே சமயம் அங்கே ஸ்ரீமடத்துல ஒரு அற்புதம் நடந்தது. ஆசார்யாளோட தரிசன நேரம் முடியறதுக்கு அன்னிக்கி கிட்டத்தட்ட ஒன்பதரை மணி ஆயிடுத்து. அதுக்கப்புறம் மடத்துல தங்கறவாளைத் தவிர மத்தவா எல்லாரும் புறப்பட்டுட்டா. வழக்கம்போல மடத்தோட வாசக் கதவைச் சாத்திட்டு பூட்டுப் போடப் போனார், வாசல் காவல்காரர்.
அந்த சமயத்துல "கதவை சாத்த வேண்டாம். பரமாசார்யா ஒன்னைக் கூப்பிடறார்!" தொண்டர் ஒருத்தர் வாட்ச்மேன் கிட்ட சொல்ல, அவர் வேகமா உள்ளே போய்,ஆசார்யா முன்னால பவ்யமா நின்னார்.
"இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கதவைச் சாத்த வேண்டாம். மெட்ராஸ்லேர்ந்து ஒருத்தர் இங்கே வந்துண்டு இருக்கார். அவர் வந்ததும் சாத்திக்கலாம்" சொன்னார் மகாபெரியவா.
சரின்னுட்டு வாசலுக்குப் போனார் காவற்காரர். சுமார் அரைமணி நேரம் ஆகியிருக்கும்.வேகவேகமா மடத்து வாசல்ல வந்து நின்னது சாஸ்திரிகள் வந்த கார்.
அதுலேர்ந்து பரபரப்பா கீழே இறங்கினார் சாஸ்திரிகள். வழியில ஏதோ ஊர்வலம் போனதால வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிடுத்து.பரமாசார்யாளை பார்க்கப் போறப்போ வழியிலயே இப்படித் தடை வருதே. ஸ்ரீமடத்தை சாத்திடுவாளே மகாபெரியவாளை தரிசிக்க முடியாதோன்னு மனசுக்குள்ளே நினைச்சு பதட்டத்தோட வந்திருந்தார் அவர்.
"வாங்கய்யா..மெட்ராஸ்லேர்ந்து வரீங்களா?" வாட்ச்மேன் அவரிடம் கேட்க, "ஆமா ஏன் கேட்கறே" அப்படின்னார்.
"இல்லை நீங்க வருவீங்கன்னும், நீங்க வந்தப்புறம்தான் கதவை சாத்தணுனும் சுவாமி சொன்னார்! வாட்ச்மேன் சொல்ல அப்படியே அதிர்ந்து போனார்.
"என்ன நான் வருவேன்னு ஆசார்யா சொன்னாரா? நான் இங்கே வர்றதை முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லலையே.அப்புறம் எப்படித் தெரிஞ்சுது? ஆச்சரியமாக் கேட்டு,காவலர் சொல்ல சிலிர்த்துப் போனார். சாஸ்திரிகள்.

தொடருகிறது

நன்றி முகநூல்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 31, 2021 8:17 pm

தொடர்ச்சி ----2-----

காஞ்சி மஹா பெரியவா  270245570_4765947690109840_2973992957891870897_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=dNIHMjCI-DMAX8DBPJz&_nc_ht=scontent.fmaa2-3


"வாங்கோ வாங்கோ..நீங்க வந்ததும் ஒடனே கூட்டிண்டு வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கா பெரியவா!" உள்ளே நுழைஞ்ச அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருவர்.
பரவசத்தோட உச்சத்துக்கே போன அந்த சாஸ்திரிகள் அவசர அவசரமா கையைக்காலை அலம்பிட்டு,நெத்திக்கு இட்டுண்டு பெரியவா முன்னால போய் நின்றார்.
இருந்த பதட்டத்துல கொஞ்சம் புஷ்பத்தைத் தவிர எதுவும் வாங்கிண்டு வராததால அதை மட்டும் பெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினார் சாஸ்திரிகள்.
"என்ன எல்லாரும் சாப்டுட்டேளா? இல்லை பதட்டுத்துல உபவாசமாவே இருக்கேளா? அரிசி உப்மா எதுவும் பண்ணித் தரச் சொல்லட்டுமா?" அன்பா கேட்டார் ஆசார்யா.
இருந்த மனநிலையில சாஸ்திரிகளுக்குப் பசிக்கவே இல்லை. தம்பியோட உடம்பு குணமானாப் போதும். அது மட்டும்தான் அவரோட மனசுல இருந்தது. அதனால "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பெரியவா. என்னோட தம்பி ஒடம்புக்கு..!" சாஸ்திரிகள் வார்த்தையை முடிக்க முடியாம தழுதழுத்தார்.
"ஏன் பயப்படறே? அவனுக்கு ஒண்ணும் ஆகாது. ஆமா,அவனை மட்டும் தனியா விட்டுட்டு வந்திருக்கியே.யார் பார்த்துப்பா?" கேட்டார் மகாபெரியவா. ஒண்ணும் சொல்லத் தெரியாம
கையைப் பிசைஞ்சுண்டு நின்னார் சாஸ்திரிகள்.
"இப்பவே ராத்திரி ரொம்ப நேரமாயிடுத்து. அதனால இங்கேயே தங்கிக்கோ.கார்த்தால பலபலன்னு விடியறச்சே பொறப்படு. இதோ இந்தப் பிரசாத மெல்லாம் காமாட்சி கோயில்லேர்ந்து வந்தது. எல்லாத்தையும் எடுத்துண்டுபோய் ஒன் தம்பிட்ட குடு!" பெரியவா கைநீட்டிய பக்கத்துல அஞ்சாறு மூங்கில் தட்டுகள் நிறைய பழங்களும் புஷ்பங்களும் இருந்தது. எல்லாத்தையும் எடுத்துண்ட சாஸ்திரிகள், 'தம்பி தனியா இருப்பான்.அதனால இப்பவே!" அப்படின்னு இழுத்தார்!.
"நான்தான் சொன்னேனே.கார்த்தால பொறப்பட்டா போதும். அவனுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு.அப்புறம் ஏன் அவசரப்படறே?' அதை மீறமுடியாத சாஸ்திரிகள் விடியற்காலை விறுவிறுன்னு எழுந்திருந்து அங்கேர்ந்து கிளம்பிட்டார்,
வழி நெடுக பகவானை வேண்டிண்டே வந்தவர்.தம்பி இருந்த ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் இருந்த அறைக்கதவைத் திறந்தார். அவ்வளவுதான் அப்படியே அதிர்ச்சியில் உறைஞ்சு போய் நின்றார்.
உள்ளே அவரோட தம்பி இனிமே எழுந்து உட்கார்றதே சந்தேகம்னு மொதநாள் டாக்டர்கள் கையை விரிச்சாளே அதே தம்பி தான் படுத்துண்ட இருந்த கட்டில்ல சம்மணம்கட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்தா ஒடம்புக்கு முடியாம படுத்த படுக்கையில இருந்தவர் இவராங்கற சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு தெளிவா இருந்தார்.
சாஸ்திரிகளால தன்னோட கண்ணையே நம்ப முடியலை. அப்படியே டமால்னு நுழைஞ்சவர் தம்பியை பேர் சொல்லிக் கூப்பிட்டார். "ஏண்டா உனக்கு எப்படி குணமாச்சு.டாக்டர் என்ன மாத்திரை மருந்து கொடுத்தார். ஜம்முன்னு இப்படி எழுந்து உட்கார்ந்துட்டியே. இது எப்படிடா நடந்தது?" படபடப்பா கேள்விகளை அடுக்கிண்டே போனார்.
அமைதியா அவரைப் பார்த்த தம்பி பேச ஆரம்பிச்சார்;
"அண்ணா நேத்து ராத்திரி நினைவே இல்லாம கிடந்த சமயத்துல எனக்குப் பக்கத்துல பரமாசார்யா வந்து உட்கார்ந்துண்டு, "என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே. எழுந்திருந்து உட்காரு!" அப்படின்னு சொல்றாப்புல இருந்தது. நான் ஏதோ என்னோட மனபிரமைன்னு நினைச்சுண்டு
படுத்துண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப எழுந்திருந்து உட்காருன்னு ஆசார்யா சொல்றாப்புல இருக்கவும் ஏதோ ஒரு கட்டத்துல என்னை அறியாமலே எழுந்திருந்து உட்கார்ந்துட்டேன்
.
கொஞ்சம் முன்னால டாக்டர் வந்து பார்த்தார். "உடம்பு பூரணமா குணமாயிடுத்தே.ஒரே ராத்திரியில எப்படி இந்த அதிசயம் நடந்தது? நீங்க இப்பவே டிஸ்சார்ஜ் ஆகலாம்!" அப்படின்னு சொல்லிவிட்டுப் போனார் டாக்டர். நீங்க யாராவது வரட்டும்னுதான் நான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்.
அப்படியே சிலிர்த்துப் போய் கண்ணீர் சிந்திய சாஸ்திரிகள் பெரியவா குடுத்தனுப்பின பிரசாதத்துல இருந்த விபூதி குங்குமத்தை தம்பியோட நெத்தியில் இட்டுவிட்டார். ஒரு ஆரஞ்சு பழம் உரிச்சுக் குடுத்து சாப்பிடச் சொன்னார்.

காஞ்சிபுரத்துல ஸ்ரீமடத்துலதான் ஆசார்யா இருந்தார். நாங்கள் அங்கே இருந்தோம். அதேசமயம் அவரே சூட்சும ரூபத்துல இங்கே வந்து தனியா இருந்த தன்னோட தம்பிக்கு துணையா வந்து இருந்து அவனைப் பூரணமா குணப்படுத்திட்டு போயிருக்கார்னா மகாபெரியவா சாட்சாத் மகேஸ்வரனோட அம்சமாகத்தானே இருக்கணும்! நினைச்ச சாஸ்திரிகள் மகான் இருக்கிற திசை நோக்கி சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

நன்றி முகநூல்
===============




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 01, 2022 7:58 pm

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக