புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
79 Posts - 68%
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
Barushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%
nahoor
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
133 Posts - 75%
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Wed Dec 08, 2021 1:23 pm

*🌴இன்றைய சிந்தனை🌴*
*நாள்-08-12-2021*
*🥥மனிதனின் உணவு எது ?🍑*

*🍎நம் உடல், உள ஆரோக்கியத்தில் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. அடிப்படையே உணவுதான். எனவே, நாம் நம் உடல் நலனுக்குப் பொருந்திய உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்🍎*
*🥥இயற்கை வாழ்வியல் அறிஞர் ம.கி.பாண்டுரங்கனார் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஆதாரமான கருத்துக்களை ஆராய்ந்து கண்டுபிடித்து இவ்வுலகுக்கு வழங்கியுள்ளார்.🥥*

*🌳சோலை வாழ்வே சுகமானது🌴*

*🥥மாசில்லாத தூய காற்று, புத்தம்புதிய ஊற்றுநீர், பச்சயம் சூழ்ந்த அமைதியான சோலையே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சுழல் ஆகும். மனிதன் தன் உணவை நேரிடையாகப் பெறுவதற்காகச் செய்யும் உடல் உழைப்பு மனிதனின் வெளி உறுப்புஅளையும், உள்ளுறுப்புகளையும் இயக்கக்கூடியது. நல்ல உடல் கட்டுமானத்துக்கு உதவக்கூடிய- சமைக்காமல் சாப்பிடக்கூடிய தேங்காயும், பழங்களுமே மனிதனுக்குரிய உணவாகும் என்பது பாண்டுரங்கனாரின் கருத்து.🥥*

*🍎மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது இல்லை. இந்த உண்மையை நாம் விலங்குகளிடமும், பறவைகளிடமும் கண்கூடாகக் காண்கிறோம். பகுத்தவு உள்ள மனிதன் மட்டுமே ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அவன் ஆரோக்கியமாக இல்லை என்பதையும் நாம் நேரில் காண்கிறோம்; உணர்கிறோம். அதற்கு அடிப்படையான காரணம், மனிதன் அவனுக்கேற்ற இயற்கை சூழலில்- இயற்கை உழைப்பில்- இயற்கை உணவில் வாழவில்லை. இயற்கையோடு இசைந்து வாழ்ந்த காலத்தில் மனிதன் சாகவில்லை.100 நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தும் சாகாமல்- ஆனால் இயக்கமின்றி இருந்த மக்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய மனிதன் சாவு விரைவில் வருவதற்கான, நோய்கள் வருவதற்கான காரணிகளை தானே உருவாக்கிக் கொண்டு, தனக்கு சாவு விரைவில் வரக்கூடாது என்றும், வந்த நோய்கள் தன்னை விட்டு விலக வேண்டும் என்றும் நினைக்கிறான்🍎*

*🌴மனித உணவின் இலக்கணம்🌳*
*🌴நமது உடல் செல்களால் ஆனது. செல் இரத்தத்திலிருந்து உற்பத்தி ஆகிறது. இரத்தம் நாம் உண்ணும் உணவிலிருந்து உற்பத்தி ஆகிறது. எனவே, நாம் உண்ணும் உணவின் தரம் நமது தரம் ஆகும்🌴*

*🥥உடலில் எது இரத்தமாக மாறக்கூடியதோ அதுதான் உணவாகும். மற்றவையெல்லாம் உடலுக்கு அன்னியப் பொருட்களே. நாக்கை திருப்திப்படுத்துவதற்காக உப்பு, புளி, மிளகாய், மிளகு, சீரகம், கடுகு போன்றவற்றை உணவில் சுவையூட்டிகளாக சேர்க்கிறோமே, இவற்றில் எதுவுமே இரத்தமாக மாறுவதில்லை. மாறாக, இவை நமது இரத்தத்தை உறுத்துகின்ற- துன்பத்தை ஏற்படுத்துகின்ற அன்னியப் பொருட்களே. ஆடு, மாடுகள் தன் உணவை முகர்ந்து பார்த்து, உண்ணுகின்றன. அவை ஆடு மாடுகளுக்கு இசைவான உணவுகளாகும். அதேபோன்று எது எளிதாகவும் விரைவாகவும் செரிக்கிறதோ அதுவே உன்னதமான உணவாகும். உணவில் சத்து கூடுதலாகவும்,சக்கை குறைவாகவும் இருக்க வேண்டும். சுலபமாக சத்தை உறிஞ்சவும், சக்கையை வெளியேற்றவும் கூடியதாக, நமது உணவு இருக்க வேண்டும். சக்கையில் துர்நாற்றம் இருக்கக் கூடாது. இயற்கை எப்படி தருகிறதோ அப்படியே எந்தச் சுவையையும் சேர்க்காமல் உன்ன கூடியதாகவே நமது உணவு இருக்க வேண்டும் நமது உணவுக்கு ஆதாரம் தாவரங்களே. "தாவரத்தின் கழிவு மனிதனின் உணவு; மனிதனின் கழிவு தாவரத்தின் உணவு!" என்பது பாண்டுரங்கனாரின் கூற்று.🥥*

*🥥உணவுக்கேற்ற ஆயுள்🥥*
*🌴இயற்கையின் படைப்பில் ஒவ்வோர் உயிரினத்துக்கும் ஒவ்வோர் உணவு படைக்கப்பட்டிருக்கிறது. அந்த உணவின் தரத்துக்கேற்ப அந்த உயிரினத்தின் ஆயுளும், ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.🌴*

*🌿புல்லின் வயது 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும். இதை உணவாகக் கொள்ளும் பசு, குதிரை, மான் போன்ற விலங்குகளின் வயதும் 25 ஆண்டுகளுக்குள் முடிந்து விடுகிறது. உயர்ந்து வளரும் மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும். அவற்றின் தழைகளை உணவாக உண்ணும் யானைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. கம்பு, கேழ்வரகு, நெல், பயறு போன்ற சிறு தானியங்களின் வயது 4 முதல் 6 மாதங்கள் ஆகும். இத்தானியங்களை உணவாகக் கொள்ளும் எலி, சுண்டெலி, கரையான், எறும்பு போன்ற உயிரினங்கள் 6 மாத காலத்தில் இறந்து விடுகின்றன🍎.*

*🌴மனிதனின் உணவுகள்🌴*
*🌴தென்னை 60 முதல் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், அதனிடத்தில் இன்னொரு சிறப்பு உள்ளது. 60-70 ஆண்டுகள் முதிர்ந்த தென்னையின் குருத்துப் பகுதிக்குக் கீழ் ஒரு மீட்டர் இடைவெளியில் மரத்தைச் சுற்றி அரை அங்குல ஆழத்திற்குச் செதுக்கி சத்தான மண்ணையும் எருவையும் கலந்து ஓர் உறுதியான துணியைச் சுற்றி வைத்து கட்டிவிட வேண்டும். அதில் அன்றாடம் தண்ணீர் விட்டு வந்தால், சுமார் 6 மாத காலத்தில் செதுக்கப்பட்ட பகுதியில் வேறு விடத் தொடங்கும். இவ்வாறு நன்கு வேர் விட்ட பிறகு வேர்விட்ட பகுதிக்கும் கீழ் துண்டாடி, இறக்கி, நிலத்தில் நட்டு வைத்தால், அடுத்த ஆண்டிலிருந்து நிறைய காய்கள் காய்க்க தொடங்கும்🌳*

*🌴வாழை 10 மாதங்களில் குலை தந்து பயனளித்து, பின் அழிந்து விட்டாலும், அதன் அடிக்கிழங்கிலிருந்து இருந்து பல கன்றுகள் தானே முளைத்து வரும். அதனால்தான் "வாழையடி வாழை" என்ற சொற்றொடர் வழங்கப்பட்டு வருகிறது. ஆக தென்னைக்கும் வாழைக்கும் அழிவென்பதே இல்லை🌴*

*🍎மனிதக்கரு தாயின் வயிற்றில் 10 மாதங்கள் வளர்ச்சி பெறுகிறது. அதே போன்று, தென்னையும் பாளைப் பூவிலிருந்து பிஞ்சு, காய், கனி என முதிர்ந்து கீழே விழுவதற்கு 10 மாதங்கள் ஆகின்றன.வாழைக் கனியின் வளர்ச்சியும் அவ்வாறே உள்ளது. அதனால் தான் தேங்கனியும், வாழைக்கனியும் மனிதனுக்குப் பொருந்திய. உணவுகள் என்று பாண்டுரங்கனார் தம் ஆய்வில் கண்டுபிடித்து அதன் படி உண்டு 40 ஆண்டுக் காலம் வாழ்ந்தும் காட்டினார்🥥*

*🌴தென்னை ஆண்டு முழுவதும் பயனளிக்கக் கூடியது. எனவே தென்னையைக் கற்பகத்தரு என்று குறிப்பிடலாம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வாறு முழு உணவாகிறதோ, அவ்வாறு தேங்கனியும், கனிகளும் இணைந்த உணவு வளர்ந்த மனிதனுக்கு உகந்த உணவாகிறது🌴.*

*🥥உணவைப் பக்குவப்படுத்த வேண்டுமா ?🥥*
*🌳மனித உணவுகளான தேங்காயையும், கனிகளையும் உண்டு நாம் ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம். இவற்றை உண்பதற்கு பக்குவப்படுத்த வேண்டியதில்லை. மற்ற உயிரினங்களின் உணவை மனிதன் உண்ண நேரும் போதுதான் அதைப் பக்குவப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பக்குவப்படுத்தில் இருவகைகள் உண்டு. காய்கறி போன்ற உணவுகளை துண்டுகளாக நறுக்கி, தானியங்களை மாவாக அரைத்து, சுவையூட்டிகளைச் சேர்ப்பது ஒரு வகை. இதனாலும் உணவின் தரம் குறையும். இன்னொருவகை அடுப்பில் வைத்து சமைப்பது🌳*
*🌴அடுப்பில் வைத்துச் சமைப்பதால் உணவில் நார்ச்சத்து அழிந்து விடுகிறது. ஒட்டும் தன்மை ஏற்படுகிறது. அதனால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படுகிறது. சமைத்து உண்பதால் செரிமானமும் தாமதமாகிறது. உதாரணமாக, பச்சைக் காரட் செரிப்பதற்கு இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகும்; சமைத்த காரட் செரிமானம் ஆக 4 மணி நேரம் ஆகும்🌴*

*☘மென்று உண்ணல் வேண்டும்☘*

*🌿உணவை மென்றுதான் சாப்பிட வேண்டும். சமைக்காத உணவை மென்றால்தான் சாப்பிட முடியும். நாம் உண்ணும் ஒவ்வொரு துகளிலும் உமிழ்நீர் சேரவேண்டும். மென்றால் தான் உமிழ்நீர் சேரும். உமிழ்நீரே நம் உடம்புக்கு உகந்த ஊட்டச்சத்து. மெல்லுவதால் வாயில் மாவு பொருட்கள் செரிக்கத் தகுந்த நிலையைப் பெற்றுவிடும். இந்தத் தன்மையை உடலில் வேறு எங்கும் அடைய முடியாது🌿*
*🌴"முன் உண்ட உணவு செரிமானமாகி அற்றுப் போன பிறகு, உண்டு வந்தால், உடம்புக்கு மருந்தே தேவைப்படாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உணவு செரிமானம் ஆன பிறகு ஏற்படும் உணர்வே பசி. அவ்வாறு பசித்த பிறகு உட்கொள்ளும் உணவை நன்றாக மென்று நீண்டநேரம் உண்டால், மிகக் குறைந்த அளவு உணவே நமக்குப் போதுமானதாக இருக்கும். இவ்வாறு நமக்கு நாமே உணர்ந்து கடைப்பிடிப்பதே உணவு நெறியாகும்". என்கிறார் இயற்கை உணவாளர்🌴*

*🌹திரு- என்.கே. ஸ்ரீராமுலு.🌹*

*☘உடம்பில் அவ்வப்போது தேங்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற, பிராண சக்தி செய்யும் முயற்சியே நோய் ஆகும். அதனால்தான் நோய் நமக்கு நண்பன் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது. இயந்திரம் பழுதானால் அதை சரி செய்ய வேண்டும். ஆனால் நம் உடம்புக்கு நோய் வந்தால் நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்; சும்மா இருந்தாலே போதும்; நோய் நீங்கிவிடும்☘*
*🌴உதாரணமாக, பேதி வந்தால் அஞ்சவோ, பதறவோ வேண்டாம். உடம்பில் உள்ள உயிராற்றல் கழிவுகளை வெளியேற்றும் செயலை பேதி ஆகும். நம் வீட்டை தண்ணீர் விட்டுக் கழுவுவது போன்ற செயலே அது. பேதி ஆகும்போது தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டிருந்தால் போதும்; கழிவுகள் வெளியேறி, உடம்பு இயல்பான நிலைக்கு வந்துவிடும்🌴*
*🧎‍�உழைப்பு குறைந்த இக்காலத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழ இயற்கை உணவுகளுடன் யோகாசனப் பயிற்சியையும் அவசியம் செய்ய வேண்டும்🧎‍�*
**************************
*🌴ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்🌳*
*⭕மருந்தாகும் இயற்கை உணவுகள்*
*என்ற புத்தகத்திலிருந்து⭕*
*🥥ஆசிரியர் குழுத் தலைவர்🥥* *🌴இயற்கை. இர-இராமலிங்கம். MA.,BEd.,M.sc.,(Yoga) செயலர். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் தியாகராஜபுரம்- நரசிங்கன்பேட்டை (PO)பின்-609802. திருவிடைமருதூர்(TK) தஞ்சாவூர்மாவட்டம் செல்- 9486768930. 0435-2472816🌴*

Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Wed Dec 08, 2021 4:23 pm

[8/12, பிற்பகல் 4:19] இக: *சர்க்கரை நோயிலிருந்து விடுபட :-*

*சர்க்கரை நோய் முற்றினால், பல நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இதனால் ராஜ உருப்புகளும் பாதிப்பு அடையும். இதனை தவிர்க்க இந்த மருந்துகளை தயார் செய்து பயன்படுத்த குணம் காணலாம்.*

*தேவையான பொருட்கள்:*
*1. கீழாநெல்லி இலை – 100 கிராம்.*
*2. மஞ்சள் கரிசாலை – 100 கிராம்.*
*3. ஜாதிக்காய் – 50 கிராம்.*
*4. ஜாதிபத்திரி – 50 கிராம்.*
*5. வால் மிளகு – 50 கிராம்.*
*6. ஏலக்காய் – 50 கிராம்.*
*7. கிராம்பு – 50 கிராம்.*
*8. மாசிக்காய் – 50 கிராம்.*
*9. தாளிசபத்திரி – 50 கிராம்.*
*10. கசகசா – 50 கிராம்.*

*இவைகளை ஒன்றாக கலந்து நன்கு அரைத்து சலித்துக் கொண்டு வேளைக்கு 2 கிராம் வீதம் காலை, மதியம் இருவேளை உணவுக்குப்பின் 3 மாதம் காலம் சாப்பிட நீரிழிவு நீங்கும்.*
*அன்புடன் PKS...*
[8/12, பிற்பகல் 4:19] இக: *வெற்றிலை...*

*வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்...*

இவர் இந்திய ஊட்டச்சத்து சொசைட்டியின் தலைவர்.
மேலும் இவர், வெற்றிலையிலிருந்து கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.
இது நம்மை குடல் பூச்சிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல; “கர்ப்பப்பை வெப்ப இலை” என்பது மருவி(பேச்சு வழக்கில் மாறி) கருவேப்பிலை என்று மாறியதுபோல், இதுவும் வெற்றுஇலை என்று பரப்பப்படுகிறது.

ஆனால், வெற்றிலை பல அரிய மருத்துவகுணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும். சமஸ்க்ருதத்தில் ‘நாகவல்லி’ எனப்படும் இது ஆயுர்வேதத்தில் பலவாறாக உபயோகமாகிறது.

மலேஷியாவில் தலைவலி, மூட்டுவலி இவற்றுக்கு வெற்றிலையை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

சீனாவில் இதன் வேரை அரைத்து, உப்பைச் சேர்த்து பல்தேய்க்கிறார்கள். பல்வலி பறந்து போகிறதாம். பல் தொடர்பான தொல்லைகள் வருவதில்லையாம்.



இந்தோனேஷியாவில் இருமல்,ஆஸ்த்மா இவற்றை சரி செய்ய வெற்றிலை போடுகிறார்கள். வெற்றிலையை டீயாகவும் குடிக்கிறார்கள்.

வெற்றிலை டீயை குடிப்பதால், உடல் துர்நாற்றம் போய்விடுகிறதாம். சிலர் வெற்றிலைச் சாறு எடுத்து, எலுமிச்சம்பழச் சாற்றுடன் சேர்த்து உடலில் சொட்டு தடவிக்கொள்கிறார்கள்.

இது ஒரு இயற்கையான ‘ஆண்டி பயோடிக்”ஆகும். இது இந்தோனோஷியப் பெண்மணி ஒருவர் வெற்றிலைத் தோட்டத்திற்கு செடி வாங்க வந்த போது பகிர்ந்து கொண்ட தகவல்!!!

கொல்கொத்தா பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் வெற்றிலை ‘செல் டேமேஜ்’ ஆவதைத் தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

வயது வந்தவர்களுக்கு உடலில் கால்சியம் குறைவதால், பற்கள், எலும்புகள் வலுவிழக்கின்றன. அவர்களுக்கு கால்சியம் தேவை. அதனால் அவர்கள் வெற்றிலை போடுவது நல்லது.

மகளிர்க்கு 50 வது வயதில் ஏற்படும் மாறுதல்களில் நிறைய கால்சியம் விரயமாகிறது. அதை ஈடுசெய்ய இது அரிய வரப்பிரசாதம்.

மருத்துவர் மாத்திரை எழுதிக்கொடுக்கிறார்.

ஆனால், அது வெற்றிலைக்கு ஈடாகாது. அதனால், அவர்கள் தினம் மூன்று முறை வெற்றிலை போட சிபாரிசு செய்கிறார்கள்.

இல்லாவிடில் ரத்தத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய எலும்புகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

‘போன் மினரல் டென்சிடி’ குறைந்து எலும்புகள் பலம் குன்றி அநேக பிரச்னைகள்.

இது இருமலுக்கு நல்ல மருந்து. வெற்றிலைச் சாற்றில் வெல்லத்தைப் போட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் இருமல் போய்விடும்.

துளசிச்சாற்றையும் கலந்து குடித்தால் இன்னும் நல்லது. வெற்றிலைச் சாற்றைப் பிழிந்து அதனால் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை போய்விடும்.

சீனா, ஜப்பன் போன்ற நாடுகளில் வெற்றிலையை வாயில் போட்டு மென்று விட்டுச் சக்கையைத் துப்பி விடுகிறார்கள்.

இதனால் வாய்துர்நாற்றமும் போய்விடுகிறது.

இதில் உள்ள ‘செவிகால்’ என்கிற ரசாயனம் இயற்கையான ஆண்டிசெப்டிக். அது புண், தீப்புண்களை ஆற்றுகிறது.
வெற்றிலையை அரைத்து, மஞ்சள் கலந்து பற்றுபோட்டபின், வெற்றிலையால் மூடி ‘பேண்டேஜ்’ கட்டிவிட்டால் குணமாகிவிடும்.



வெற்றிலைகளை வாட்டி, கடுகு எண்ணெயில் தேய்த்து, படுக்கும் முன் கொப்புளத்தின் மேல் சுற்றி துணியைக் கட்டிவிட்டால் மறுநாள் காலை நீர் வடிந்து குணமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக