புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
59 Posts - 42%
heezulia
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
310 Posts - 50%
heezulia
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_m10கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Nov 30, 2021 11:54 am

"கானெக்கானெ” (மலையாளப் படம்) விமர்சனம் 6VM0ZKf
” (மலையாளப் படம்) விமர்சனம்

தாம் விரும்பிச் செய்யாத சில குற்றவுணர்வுகள், மலரும் மலர்களனைத்தின் மணத்தை மாற்றி விடுகிறது. எல்லா வெளியிலும் அதன் வண்ணம் தெரிவதைப் போல், எண்ணி எண்ணிப் பயந்து முழுதும் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையாகிப் போகிறது  வாழ்க்கை.

சில கணப்பொழுது நிகழ்வுகள், வாழ்வைப் புரட்டிப் போட்டு விடுகின்றன. சொல்லமுடியாத குற்றவுணர்வுகள் எங்கும் வியாபித்து, உலகின் வண்ணத்தையே மாற்றுகின்றன. சரியான பாதை தவிர்த்து, அதளபாதாளத்தை நோக்கியப் பயணமாகி, பாரங்களின் முழு வடிமையாகி விடுகின்றன.

               ஆசைகள் தூரங்களை விழுங்குகின்றன. இன்றே அனுபவித்து விட மனம் குதுகலமாகி நீளுகின்றது. எல்லாவற்றையும் அடைய முடியா ஏக்கம், சிற்சில காரியங்களுக்கு அடித்தளமாகி, பிரமாண்ட வீட்டைக் கட்டிவிடுகிறது.

               இவைதான் கானெக்கானெ படத்தின் உள்ளேயிருக்கும் உணர்வுகள். மொத்த உணர்வுகளின் தெறிப்புகள் தான் எங்கும் தாளமிட்டுக் கொண்டிருக்கின்றன. பயமும், குற்றவுணர்வும், பழிவாங்கலும் மும்முனை களிலிருந்து ஆட்டம் போடுகின்றன.

பார்க்கப் பார்க்க நமக்குள்ளிருக்கும் குற்றவுணர்வுகள்  தலைதூக்குகின்றன.

               படம் பார்க்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பேசும் போதும் அப்பாத்திரங்களின் வலி நம்மைப் பெரிதும் தாக்குகின்றன. எத்தனை வலி, கால் முறுக்கி உடல் முழுவதும் வியாபித்து மூச்சைத் திணறடிக்கும் வலி அது.

               ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் காட்சிகள் தானிவை. சிறு வட்டத்திலும் சிறுவட்டம். இங்கு நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களைப் போன்றது தான் உலகம் என்றால், உலகம் முழுவதும் எண்ணவே முடியாத இவை எதைச் சுற்றி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

               அடேயப்பா. உணர்வுகள் எத்தன்மையானது?

             

படத்தின் கதை:

ஐ.டி நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கின்றார் கதாநாயகன் ஆலன் (டோவினோ தாமஸ்). இவன் மனைவி விபத்து ஒன்றில் இறந்து விடுகிறாள். ஒரு மகன் இவர்களுக்கு. மகனுக்காக மறுமணம் செய்து கொள்கின்றான் மாமனாரின் சம்மதத்துடன்.

பேரனைப் பார்க்கச் செல்லும் தாத்தா, தன் மகள் இருந்த இடத்தில், இன்னொருத்தியைப் பார்க்கும் பொழுதெல்லாம், மகளின் நினைவுகள் வந்து வாட்டுகிறது.

மருமகன் எதார்த்தமாக இருக்கின்றான். இரண்டாவது மனைவியாக வந்த ஐஸ்வர்ய லட்சுமியையும், மருமகனையும் விட்டு விலகியே இருக்கிறார் மாமனார்  பால் மத்தை (சுராஜ் வெஞ்சாரமூடு).

               ஒரு சில ஆண்டுகள் கழிகிறது. மாமனார் பால் மத்தைக்குச் சந்தேகங்கள் வலுக்கின்றன. சில தகவல்கள் திடுக்கிட வைக்கிறது. தன் மகளின் விபத்து இயல்பானதா? அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என ஆராய ஆரம்பிக்கிறார்.

               தாசில்தாரராக இருக்கும் அவர், பத்து நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியில் தங்கி ஆராய்கிறார். இவரின் நடவடிக்கைகள், மருமகன் டோவினோக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மிகுந்த மன உலைச்சலில் இருக்கிறார். இதனால், கர்ப்பமுற்று இருக்கிற தன் இரண்டாவது மனைவியிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்ததைப் போல் வாழ்கிறார்.

               கொஞ்சம், கொஞ்சமாக விபத்தில் இறந்த மகளின் சாவு எப்படிப்பட்டது எனத் தெரிகிறது சுராஜ்க்கு.  ஒரு சமயத்தில், மருமகன் உண்மையைக் கூறிகிறான் ”மனைவியின் சாவுக்கு நானும் ஒருவிதத்தில் காரணம்தான்” என்கிறான். அதற்குப் பிறகுப் பழிதீர்க்கும் படலம்  ஆரம்பிக்கின்றது.

               'பேரனைப் பத்து நாளில் என்னிடம் கொடுத்துவிடு. உன்னை வாழவிட மாட்டேன்.' என்கிறார் சுராஜ். பேரனோடு இருப்பதற்காக மருமகன் வீட்டில் தங்குகிறார்.  இது மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

               இரண்டாவது மனைவி சினேகா (ஐஸ்வர்யா லெட்சுமி), தன் கணவனுக்கும், அவரது மாமனாருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து, குழந்தை பெற்றவுடன் தன் தந்தை வீட்டுக்கே செல்லுவதாக முடிவெடுக்கிறாள்.

படத்தின் நுணுக்கம்:    

இப்படியாக, மூன்று பேரின் உணர்வோட்டங்களே படம் முழுவதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தன் நிலை சரியானதே என்பதாக அவரரவர்கள் அதை நியாயப்படுத்துவதற்கு முயல்கின்றனர்.

               உண்மையில், மூன்று கதாபாத்திரங்களும் உலகிலுள்ள அனைவருக்கு மான குறியீடுகளேயாவர். பெரும்பான்மை மக்கள், தாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கும் குணமுண்டு. அதிலிருந்து வெகுவாக யாரும் பின் வாங்கிடுவதில்லை.

               இங்குதான், பிரச்சனை விஸ்வருபம் முழுக்க ஆரம்பிக்கும் முரண்பாடுகளும். மேலெழுந்த தன்முனைப்பும் வேறுவேறு தளங்களிலிருந்து பன்முனைப் போட்டிகளை மிகுந்த ஆளுமையுடன் நடத்துவிக்கும்.

அதை இப்படத்தில் முறியடித்து மூன்றுபேரும், தான் செய்தது தவறாக இருக்கலாம் எனத் தன்னளவில் குற்றவுணர்வு மேலிட, விலகிக் கொள்கின்றனர். தனக்கு அதற்காகத் தண்டனையைத் தாங்களாகவே கொடுத்துக் கொள்கின்றனர்.

               குற்றவுணர்வைப் பொருத்தவரை 'இதுவரை மனிதனை ஆட்டிப்படைத்த நோய்களில் படு மோசமானது குற்றவுணர்வே' என்கிறார் ஜெர்மானிய தத்துவ ஞானி ஃபிரிட்ரிக் நிக்.

               கிறிஸ்துவப் புனித நூலான பைபிளிலும் குற்றவுணர்வை நீக்குதல் குறித்துப் பல வசனங்கள் உள்ளன. அதில் ஒன்று 'குற்றத்தை ஒட்டிக் கொள்வது பாதிக்கப்பட்டவரும் பயனடைய உதவலாம். ஏனெனில் அது, அவ்வளவு துன்பத்தை ஏற்படுத்தி விட்டோமே என வருத்தப்படுமளவிற்குக் குற்றம் செய்தவர் தன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் பாதிக்கப்பட்டவருக்கு உணர்த்துகிறது' எனச் சாமுவேல் 11:2-15 வசனம் கூறுகிறது.

படத்தின் முடிவு:

குற்றம் புரிந்தோம் எனும் டோவினோவும், இரண்டாவது மனைவியும் சுராஜ்ஜிடம் மண்டியடுகின்றனர். மன்னித்தாரா சுராஜ் என்பது தான் படத்தின் முடிவு.

               அவசரகதியில், காதலியால் நிர்பந்தப்படுத்தப்பட்ட டோவினோ, தன் மனைவி அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தும், பார்க்காததைப் போல் விரைந்து சென்று விடுகிறான். ஆனால், பாதித் தூரம் சென்று திரும்பி வந்து பார்க்கின்றான். அனைவரும் அடிபட்டவளை வண்டியில் எடுத்துச் செல்கின்றனர். நேரம் கடந்ததால் இறந்து விடுகிறாள். தான் முன்பே தூக்கிச் சென்றிருந்தால் இவளைக் காப்பாற்றி இருக்கலாம் என வருத்தப்டுகிறான்.

               முதல் மனைவி இருக்கும் பொழுதே, நான் ஏன் டோவினோவைக் காதலித்தேன் என்பதையும், கொஞ்சம் கூட அவள் இறப்பதற்கு முயற்சி செய்யவில்லை. கற்பiயும் செய்யவில்லை என்பதாக இரண்டாவது மனைவி வருத்தப்படுகிறாள்.

               இதற்குப் பழிவாங்கும் உணர்வோடு அலையும் மாமனார், ’கொல்வது நியாயம் தான்’ என அலைகிறார். ஆனால், கடைசியில், இருவரையும் மன்னித்துத் தனியாக மயக்கமுற்று கீழே விழுந்தவளைக் காப்பாற்றி நல்ல முறையில் குழந்தை பிறக்க உதவுவார்.

               படத்தின் முடிவில், நீங்கள் நிம்மதியாக வாழுங்கள் என்று கூறிவிட்டு, அவர் தனிமைப்பட்டு எங்கோ சென்று விடுகிறார்.

இவரை இழக்கப்போகும் சோகம். மன்னித்த பெருந்தன்மை இவற்றை நினைத்து டோவினோ கதறி அழுகின்றான்.

படத்தின் சிறப்பு:

படம், மூன்று கதாபாத்திரங்களில் பயணிக்கிறது. இசை ஒரு பக்கம் கதை சொல்கிறது. சிறுசிறு நினைவலைகளை அவ்வப்பொழுது படத்தின் இடைஇடையே  செருகி, சிறந்த  எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

               நடிப்பின் உச்சங்களைத் தொட்டிருக்கின்றனர் டோவினோவும், சுராஜ்சும் ஐஸ்வர்யா லட்சுமியும், சிறிதுநேரமே வந்தாலும் மனதில் நிற்கும் ஸ்ருதி ராமச்சந்திரனும் உணர்வு நிலை வெளிப்பாட்டு உச்ச நடிப்பை இவர்களிடம் காண முடிகின்றது.

               மனு அசோகனின் மாறுபட்ட இயக்கம் இப்படம். மனவுணர்வுகளை வெளிப்படுத்தும் இப்படத்தைச் சவாலாகவே செய்திருக்கிறார். நுணுக்கமான கதையம்சம் கொண்ட கதையிது. அழகாய் வெளிப்படுத்தியுள்ளார்.

               மொத்தத்தில், திரைப்பட வரலாற்றின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும் எனும் தகுதியைப் பெற்றுள்ளது என்பது மிகச் சரியாகும்.

படக்குழு:

இசை  :ரஞ்சின் ராஜ்

ஒளிப்பதிவு :ஆல்பி ஆண்டனி

படத்தொகுப்பு  :அபிலாஷ் பாலச்சந்திரன்

கலை இயக்கம் :திலீப் நாத் ஆடை

வடிவமைப்பு  :ஸ்ரேயா அரவிந்த்

நடிகர்கள்:

சுராஜ் வெஞ்சாரமூடு .. பால் மத்தாய்

டோவினோ தாமஸ்... ஆலன்

ஐஸ்வர்யா லெக்ஷ்மி ... சினேகா ஜார்ஜ்

ஸ்ருதி ராமச்சந்திரன்... ஷெரின் பி. ஆலன்

நன்றி : இனிது - இணைய இதழ்,

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 30, 2021 4:20 pm

அருமையான கரு.
விமரிசனம் படிக்கையில் பார்க்க ஆர்வத்தை உண்டாக்குகிறது.
நன்றி.

பதிவை சினிமா பகுதிக்கு மாற்றுகிறேன்.

@bharathichandranssn






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Thu Dec 02, 2021 2:19 pm

நன்றி ஐயா, தங்கள் கருத்திற்கும், மாற்றத்திற்கும்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக