புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் கனகு மயம் by சுஶ்ரீ


   
   
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Mon Oct 18, 2021 5:41 pm

எல்லாம் கனகு மயம்
                                                சுஶ்ரீ

                      கதைன்னா இன்னா காலைலதான் ஆரம்பிக்குமா, நம்ம கதை இன்னா கதைனா சொன்னேன் நெசம் உன் மேல சத்யமா நெசம்ப்பா.
என் ஊட்ல இருந்து சொல்லட்டா.
                       நீ எங்க இருக்கிற , கோயம்பேடா சரி,ஊட்ட விட்டு புறப்பட்டயா, CMBT ல 27B புடிச்சயா, கஸ்மாலம் இன்னா பஸ்ல குந்திக்கின டீலக்ஸ் பஸ் புடிப்பா.      
                     சரி இந்த 4 மணி வெயிலுக்கு டிரைவர் சீட்கு பொறத்தாலே சீட் ஜன்னலாண்ட புட்சிக்கோ.குந்திக்கினயா ஒரு மணி நேரம் குண்டி காய உக்காரணும் நம்ம ஊட்டாண்ட வர.
                      வேடிக்க பாத்துனே வா.பஸ் புறத்தாலே வந்து லெப்டு எடுத்துக்குனானா,( நமக்கு அந்த ரூட் பிஸ்கோத்தாட்டம்). நேரா ஸ்பீடு புட்சா சத்திரம் ஸ்டாப்தான்.அதான் விஜயகாந்த் அண்ணாத்தை கச்சி ஆபிஸ்.    
                      அப்பறம் இன்னா பாலம் கட்டிக்கிறான்யா,சுத்தி சுத்தி ஜிலேபியாட்டம், ஏறி சுத்தி , கோடு  போட்ட மாதிரி நேர ரோட்டை பிடிச்சா அண்ணா வளவு, அமிஞ்சிகர, கீழ்பாக்கம் எழும்பூரு.
                      சொல்லக்காட்டி ஈஸி ஆனா இந்த பிஸாசு பஸ்ஸை டிராபிக்ல ஓட்ணும்னா இன்னா கஷ்டம்ற.4 மணிக்கு பொறப்ட்யா எழும்பூரே நாலே முக்கா.
                       பஸ்ல ஏறினா ஜன்னலுக்கு புறத்தாலதான் பாப்பயா,
பேபி ஹாஸ்பிடல்ல எறங்கின 3 பொம்பளங்கள பாத்தயா, சரியான கிராக்கிப்பா பிக்பாக்கட் கேசுங்க.
                       தினம் காலல சாயந்தரம் இதே ரூட்டு, குழந்தைய இட்னு
வைத்யம் பாக்க வர கிராமத்தாளங்க பணம் பூரா உருவிருங்க இதுக்கெல்லாம்
நல்ல சாவு வரும்ன்றே.
                        பாவம் பணத்தை போக்கிட்டு அழ்ற கிழவனை பாரு.உங்கிட்ட எச்சா காசு இருந்தாலும் தராதே. அதையும் தொலைக்கத்தான் தெரியும் கிழத்துக்கு.
                      அத்த விடு எழும்பூரண்ட வந்தாலே நம்ம வீட்டாண்ட வந்த மாதிரி.எழும்பூர்ல ரைட் எடுத்து கூவம் பிரிஜ்ல லெப்ட் அந்த ஸ்கூலாண்ட இறங்கிரு.
                      மீன் வாடை பிடிச்சுனே கொஞ்சம் மேயர் கபாலமூரத்தி ரோடலய நடந்தா,சட்னு சோத்தாங்கை பக்கம்,ஐயாசாமி தெருன்னு போர்டு தெரிதா.அதாம்பா ஐஸ்பெட்டி பண்றானுவளே மீன அடைச்சு பார்சல்
பண்ண அந்த ஒர்ஷாப் தெரிதா.அதுக்கு பக்கத்ல நம்ம வூடு.
                     எதுன்றயா நானே கட்னேம்பா கல்லு ,களி மண்ணு, கார் ,ஆட்டோ ரிச்சா உடைக்கறானுவளா அதெல்லாம் பொறுக்கியாந்து பங்களா, ஆக்கிட்டோமில்ல. மேல கூரை மட்டும் 900 ரூவா செலவு அஸபட்டா ரூபு ஸ்டிராங்கா.பொன்சாமி அண்ணன்தான் அட்வஸ்( என் மவன் 4 ப்பு இங்லீஸு அவன்ட்டதான் பட்சேன்)அட்வஸ் தெரிலயா முன் பணம்ப்பா.
                       அடியே இவளே என் மல்லிப்பூ ,என் கதை சொல்லிட்ருக்கேன் இல்ல, நீ தானேடி நம்ம ஹீரோயினி.
                        சாருக்கு நம்ம பேரெ தெர்யாது கந்சாமின்னா சிந்தாத்ரிபேட்டைக்கே தெர்மே.நமக்கென்ன கிளியாட்டம் நம்ம வய்ப்பு, முத்தா ஒரு பையன்,முதக்க சொல்லே அவன்தான்
                        4 ப்புப்பா பெருசு பெருசா புத்தகம்லாம் படிப்பான்.அப்பப்ப எனக்கும் டூஷன் கொடுப்பான்.
                       நானும் இப்ப இங்லீஸ்லாம் உடறேன்ல நம்ம பயபுள்ள கத்துக் கொடுத்ததுதான்.
                     அன்னிக்கி அப்டிதான் பொன்சாமி அண்ணன் கூப்டாரா,போனேன் இங்கதான் 6 வீடு தள்ளி போர்டு தெர்தா “பொன்னுசாமி பிஷ் எக்ஸ்போர்ட்ஸ்னு”
                    அண்ணன் பெரிய ஆளு. நம்ம மாதிரி 10 பேர் அவர்ட்ட வேல பாக்றோம். வேலை என்னா ,மீன் அடைச்ச ஐஸ் டப்பால்லாம் வண்டில அடுக்கி, எக்மோரு, சென்ட்ரலு இல்ல அண்ணன் சொல்ற லாரி ஆபிஸ்ல இறக்கி கச்சா ரிசீட்டு வாங்கியாரணும்.
                    என்னாண்ணே கூப்டிங்க,ஆமாடா நா ஒரு கல்யாணம் மதுரை போறேன், கம்பனிய பாத்துக்க. நம்பிக்கையான ஆள் வேணும் இல்ல.பாத்துக்குவே இல்ல?
                    எனக்கு உச்சி குளிந்தது. சரிண்ணே ஜமாய்ச்சிறலாம்.
                    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் லோடு ஓட்ட வேணாம் ரெண்டு நாளு. ஆபிஸ்ல உக்காந்துக்க , கணக்கு வரவு செலவெல்லாம் மாணிக்கம் பாத்துக்குவான். சாமி வந்து யாருக்கு என்ன அனுப்பணும் சொல்வாரு.
                   நீ சும்மா ரெண்டு நா முதலாளி.கல்லால கைய வச்சிறதே என்ன?    
                   ஐயோ என்னண்ணே பெரிய வார்த்தை .
                   சும்மா சொன்னேன்டா மண்டு கழுதை, நம்பிக்க இல்லாம சொந்த தம்பிய விட்டுட்டு உன்னை கூப்டுவேனா. சரி போ நாளக்கி பொழுதோட வந்று.
                   பொன்சாமி அண்ணன் கடவுள் மாதிரி நானு , என் வண்ணக்கிளி ,சின்னத் தங்கம் ,எல்லாம் தின்ற சோறு அண்ணன் தயவு.
                   அஸபட்டா ரூபுக்கு டக்னு சுளையா 900 ரூபா எவன் கொடுப்பான்.3 வருஷம் ஆச்சு ரூபு போட்டு ஒரு தபா கூடஅந்தபணம் வார்த்தை எடுக்கல.
                      நடு நடுவ நான்தான் சொல்லுவேன்,அண்ணே தட்டி தட்டி போதுண்ணே , கொடுத்திறரேண்ணேனு.
                      விடுறா சோமாரி ,வச்சுக்கினா வஞ்சகம் பண்ற.நமக்குள்ளார என்னடா பாரட்டி என்னவோ பய்யன்ட்டருந்து கேட்டு சொல்வியே.
                     அய்யோ அண்ணே அது பார்மட்டினு சிரிச்சுனே சொல்வேன்.எப்பதான் அண்ணன் ,தப்பில்லாம இங்லீசு பேசுமோ.
                    வழிலே லாலா கடைல அல்வா, முனியாண்டி விலாஸ்ல குஸ்கா , பாயா பார்ஸல்.ஜாம்ஜாம் பீடா ஸ்டால்ல ஒரு ஸ்வீட் பான்( நம்ம மல்லிப் பூக்கு),ஒரு ஜர்தா பான்.,பெரிய சிலுக்கு சாக்லேட்டு ,எல்லாம் கட்டினு வந்தேன்.
                     இப்பவே நம்ம சரோஜாதேவி கண்ல வெளிச்சம் பாத்தேன்.சிலுக்கு பாக்கட்ல பய்யன் குஷியாயிடும்.
                      நேரா ஸ்கூலாண்ட வள்ளியம்மா கடைல ஒரு முழம் குண்டு மல்லி. வள்ளிம்மா கேக்குது என்னடா காலைல வூட்ல சண்டையா, ராத்ரிக்கு பூரா காலை கைய புடி, மசிஞ்சுச்சுன்னா மஜா, இல்லாங்காட்டி குப்புறப் படுத்து தூங்கு கடகட ன்னு சிரிக்குது கஸ்மாலம்.
                       போக்கா வேற வேலையில்ல உனக்கு ,சாமி படத்துக்கு போட பூ வாங்கினா ஏதேதோ பேசறயே.
                     அப்ப மணக்குதே கைல பார்ஸலு அதுவும் சாமிக்குதானா சொல்லிட்டு திரும்ப சிரிக்குது அக்கா.
                     மேல பேசாம வூட்டுக்கு நடந்தேன்.தகரக் கதவு நல்லா மூடி கல்லு வய்யி திரும்ப சிரிப்பு அக்காவுக்கு.
                        வூட்டாண்டே வரும்போதே நம்ம பையன் அழுக சத்தம்.இன்னாடி செஞ்சே தங்கத்த கேட்னே பூந்தா , காளியாட்டாம் நிக்குது
நம்ம  பச்சை கிளி.
                       சும்மா சொல்லகூடாது நம்ம செலக்‌ஷன, சும்மா கிண்ணுனு
தெறிச்சிட்டு நிக்கிற அழகு , கோவத்தலயும் கிறங்க வக்கிது.
                      கேளு உம் பையன செய்றதே , வூட்டு கூரை மேல ஏறி பட்டம் விடுதாராம். கீழே விழுந்தா எலும்பு மிஞ்சும்?
                     சொன்னா அப்பா கூட கூரை மேல இருந்துதான் விடுவாருன்றான்.
என்னிக்காவது அப்பன் நல்லது சொல்லிக் குடுத்தாதானே. குரங்கு புத்தி,
உரிச்சு வச்சிருக்கு.
                    எனக்கு இப்ப சண்டை போடற மன்சு இல்ல, ரொமான்ஸ்
பண்லாம்னா காளி அவ்தாரம்.
                    டேய் சின்ன வாத்யாரே வாடா இங்கே, சிலுக்கு
சாக்லட்டை எடுத்து காட்டி பின்னால் மறைச்சேன்.
                    அரைச் சிரிப்புடன் பாத்த கனகா( அதுதான் நம்ம பச்சை கிளி பேரு) பிள்ளைய கெடு, பல்லெல்லாம் சொத்தை பெரிசு பெரிசா சாக்லேட்டு பட்டை.,
                    சிணிங்கிக்கினே பக்கத்தல வந்த முத்துவை கொஞ்சம் வெளாட்டு காட்டி சாக்லட்டை கைல திணிச்சேன்(பையன் பேரு முத்து குமாரு, என் அப்பன் பேரு)வாங்கிட்டு ஓடிப் போனான் தோஸ்துங்களுக்கு காட்ட.
                      அடியே கனகு , குழைவோட கூப்டா , ஹுக்கும் ,இது என்ன சிணுங்கல்.வாடி இங்கே பாரு என்ன கொண்டாந்திருக்கேன்னு.
                       நம்மாளுக்கா தெர்யாது வூட்ல நுழஞ்சவுடனே முனியாண்டி விலாஸ் மூக்கதுளைக்குமே.
                        என்னவாம் திரும்பாம கேட்டா.
                         பாருடி செல்லம் என்னானு.  
                         அவ திரும்ப தயாரில்ல.  கிட்ட போய் தோளப்பிடிச்சா வெடுக்னு உதற்ரா.
                        இன்னாடி இன்னாத்துக்கு இப்ப கோவம்,முன்யாண்டி விலாஸ் குஸ்கா உனக்கோஸ்ரம் இட்டாந்தேன், பாயாவும், ஸ்வீட் பான் கூட, சொல்லிட்டே மல்லிப்பூ பத்தைய தலைல கரிக்கிட்டா வச்சேன்.
                        முனியாண்டி செய்யாத்தை மல்லிப்பூ செஞ்சிரிச்சி.  சடக்னு திரும்பி என் மார்ல தலையால முட்றா.போய்யா அத்த,இத்த சொல்லி மயக்கிற்ரே.நம்ம பையனை பெரிய ஆப்ஸர் பண்ணணும்யா.
                       பண்லாம் பண்லாம் முதல்ல இப்ப பண்றதை பண்லாம்.      
                      அதென்னவாம் சிணுங்கினா என் கனகு.
                      முதல்ல குஸ்கா சாப்டு சொல்றேன் விளாவரியா.பய்யனையும் கூப்டு சாப்ட வச்சு சீக்கிரம் தூங்க வையி, இன்னிக்கி எக்கச்சக்கம் பாக்கி நிக்குது.
                       கனகு சிரிச்சா, எப்ப பாரு அதே நினப்புதான் மோசமான ஆளுய்யா நீ.
                     இன்னாடி முத்துப் பயலுக்கு தங்கச்சி வாணாமா பாவம் ஏங்கி போறான் எல்லா பசங்களுக்கும் தம்பி தங்கச்சி இருக்கு எனக்கேன் இல்லன்றான் இன்னா பதிலு சொல்ல.அம்மா கிட்ட போய் கேளுன்னு சொல்லிருக்கேன்.
                    கனகு, அதான் கேட்டானா மீன் வாடைதான் பிடிக்கும் உங்கப்பனுக்கு என் கிட்ட எங்கே வர்துனு சொன்னேன்.
                    அப்டியான்னு எழுந்த என் ,கைல சிக்காம ,ஏ முத்து னு ஓடிட்டா வாசலுக்கு.இருக்கட்டும் வச்சிக்கிறேன் ரவைக்கு.
                    கனகா பத்தி சொல்லணுமே.என் அக்கா மவதான்.எனக்காகவே பிறந்து வளந்தவ. 18 வயஸ்லயே கட்டி இட்டாந்துட்டேன்.அவ மதுரை பக்கம்,அதால நம்ம மாதிரி நல்ல தமிழ் வராது.
                   இப்ப கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கினா.பாக்க. அப்படியே அல்வாதான்.மதுரை கோவில்  போயிருக்கயா அங்கே தூண்ல எல்லாம்
ஷோக் ஷோக்கா பொண்ணுங்க இடுப்பை வளச்சிட்டு நிக்கும். ஒண்ணொண்ணும் கல்லு கல்லா.நம்மாளு மதுர பொண்ணா அப்படியே செதுக்கிட்டாக அக்காவும் மச்சானும்,டயத்தில கொத்தி கொண்டாத்திட்டேன்,இல்ல எவனாவது லவட்டினு போயிருப்பான்.
                    இன்னிக்கு பூரா உக்காந்து பாக்கலாம் நம்ம கனகை,கருப்புதான் ஆனா இன்னா பாலிஷ்ன்றே ,தோளை தொட்டா கை வழுக்கினு விரலுக்கு வந்ரும்.மத்த விஷயம்லாம் தூண்ல பாத்த இல்ல அதெல்லாம் வெக்கப் படணும்.  
                    8 கிளாஸ் படிச்சிக்கறா.இங்லீஸ்லாம் துரைசாணியாட்டம் பேசும். முத்து டீச்ராண்ட ஒரே இங்லீஸ்தான், நான் வாய புளந்துட்டு நிப்பேன்.
                   ஆனா ரொமாஞ்ச்தான் தெரில்ல புச்சா வரங்காட்டி. பீச்சாண்ட இட்னு போயி, லவர்ஸ் எல்லாம் இன்னா குஜால் பண்றாகனு காட்டி, தெலுங்கு படம் மலயாளம் படம் இட்னு போயி தேத்தி விட்டேன் முத்துகுமாரு பொறந்தான்.
                      இப்பல்லாம் ரொம்ப உஷாரு, புதுசா கண்ணாலம்
பண்ண நாலாவது வீடு கிருஷ்ணாக்கு( கிருஷ்ணவேணி) நம்மாளுதான் டுயூஷனு.
                       போதும் பொஞ்சாதிய புகழ்றதுன்றியா.அவ வரட்டும் அது வரை வந்துட்டா முத்துவை இடுப்புல தூக்கிகினு. முத்து நெளியுது, பெரிசாயிட்டாராம்,இடுப்பல உக்கார வெக்கம். மூணு பேருமா குந்தினு குஸ்கா பாயா காலி பண்ணோம்.கண்ணை காட்டி சாடை சொன்னேன் கனகா புள்ளைக்கு, பய்யனை சீக்கிரம் தூங்க வைக்க.

                                                      2
                                கனகு வந்தாச்சு பையனை தூங்க வச்சிட்டு.
என்னையா இன்னிக்கு ஒரே ஜிகர்தண்டா , லாட்டரி ஏதானும் கிடைச்சிச்சா?
                                ஐயா சாங்காலம் வந்ததில இருந்து, சுத்தி சுத்தி வரே, மல்லிப்பூ என்னா,அல்வா என்னா, குஸ்கா, பாயா பத்தாம மீடா பான் சொல்லிட்டே ஒரு துண்டு அல்வா நாசூக்கா வாயில் போட்டு மீதிய கய்ல கொடுத்தா.
                            என் அல்வா நீதாண்டி இது எதுக்குனு கீழே வச்சேன்.கை பிடிக்கும் முன் தள்ளி நின்ன கனகு ,ஏய்யா காணாத்த கண்ட மாதிரி பறக்குற .நா என்ன பதுசா இன்னிக்கி.
                            புச்சுதாண்டி தினம்தினம் புச்சா பூக்கற பூவு நீ.
                           ஐயோ கருமம் தண்ணி போட்டவன் கணக்கா போதை ஏறிச்சு உனக்கு, வா சீக்கிரம் இன்னிக்கு உன் கணக்கை முடிச்சிட்டு போ.
                          சொகுசா பாய்ல படுத்துக்கிட்டா.
                          ஏண்டி உனக்கு என்னை புடிக்கலயா,
                           ஐயே ஆளப்பாரு , பிடிக்காமதான் முத்து வந்தானா, “ஞான் நின்னே ஸ்நேகிக்கின்னு”சொல்லிட்டு கண்ணை மூடி சிரித்தாள்.
                        அது இன்னா மதுரை தமிலான்னு கேட்டனா அதுக்கு , நாளக்கி உன் பையன கேளுன்றா.
                      அடுத்து பேச விட்டாதானே அட லாலா கடை அல்வால இன்னிக்கு இனிப்பு எச்சா போட்டானுக.கழண்டது ,புரண்டது,  நீயா நானா இது இஷ்டமா கஷ்டமா மூச்சு வாங்க முடிஞ்சு போச்சு.
                     கனகு சிரிச்சிட்டே என் தலேல குட்டு வச்சா படே முரட்டு பையன்யா நீ ஆனாலும்  “ ஞான் நின்னே ஸ்நேகிக்கின்னு” கண்ணை மூடி திரும்பி படுத்துட்டா.
                      ஏதேதோ ரோஜனையோட எப்ப தூங்கினேன் தெரியாது. காலேல கண்ணு முளிச்சா பக்கத்லே கனகு இல்ல,முத்து ஸ்கூலுக்கு தயாரா நிக்கறாரு.
                    பட்னு எந்திருச்சேன் ஏ புள்ளே கனகாம்பரம் வெள்ன எழுப்ப தாவல,அண்ணன் வேற ஊர்ல இல்ல.
                    மடமடனு பல்லு விளக்கி ரெண்டு சொம்பு தலக்கி ஊத்தி வெளில வந்தா கனகு இட்லி தட்டோட ,சாம்பார் மணக்க நிக்குது.
                    ஏ கனகாம்பரம் எப்படி  நீ தூங்குவே இம்புட்டும் பண்ண நேரம் கிடைக்குதா.
                    என்னா மல்லிப்பூல இருந்து இன்னிக்கு கனகாம்பரம் சலிச்சிட்டனா?
                   அதில்லடி ராத்திரிக்கி நீ மணக்கற மதுரை மல்லி, விடிஞ்சா கண்ணை கூச வக்கிற கனகாம்பரம்.
                   ஐயே போதும் கவிஞர் கண்ணதாசனோட பேரப்பிள்ளை , வேலைக்கி புறப்படு.
                ஆமாம் கனகு ரவைக்கு ஏதோ சொன்னயே என்னாது. எப்பவா , அப்ப அதுதான் கசமுசா டயத்தில.
                 போய்யா கன்னம் சிவந்தா கனகு.
                 டே முத்து இங்க வா என்னப்பானு வந்தான் முத்து.
                அம்மா மதுர தமில்ல ஏதோ சொல்லிச்சு அர்த்தம் சொல்டா.    
               கனகு ,டேய் முத்து ஸ்கூலுக்கு போற வேலய பாரு உன் அப்பனுக்கு வேற வேல இல்லை.
               நான் முத்துவ கெட்டிமா பிடிச்சுக்கினேன்.சொல்றா இத முதல்ல ( கனகு உள்ளாற ஓடிட்டா) ஞாஆணு நிண்ண சினேகன் ன்னா இன்னாடா.    
                அப்படி இல்லப்பா TV பாக்க மாட்யா. காசு அனுப்பிட்டு  வந்ச்சானு கேட்டா அந்த அக்கா சொல்லுமில்ல. “ ஞான் நின்ன ஸ்நேகிக்கின்னு”.  
                ஆமா ஆமா அதேதாண்டா இன்னா அர்த்தம் மதுரலே.
                 ஐயோ அது மதுரை தமிழ் இல்லப்பா மலையாளம். நான். உன்னை  காதலிக்கிறேன்னு அர்த்தம்.
                அட என் ரப்பர் துண்டு இந்த வயசுல காதல் பேசறியா.
                நீதானப்பா கேட்டே TV ல தினைக்கும் வருதே.
                கனகு கண்லயே படல ஒளிஞ்சிக்கிட்டா.
                 மெல்ல நடந்து பொன்சாமி அண்ணன் ஆபிசுக்கு போனா அண்ணன் வீட்டோட புறப்பட தயாராய்ட்டாரு. வாடா சோம்பேறி ஏன் இம்புட்டு நேரம். நான் புறப்பட தாவலை.சரி நல்லா பாத்துக்க
                 ஆ மறந்துட்டனே, இன்னிக்கு 11 மணி புறப்டு, மாணிக்கம் பயல கூட வச்சுக்க.கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பக்கத்ல புச்சா ஒரு ஷாப்பிங் மால்  கீது “ஸகொயர் மால்னு”நேரா உள்ற போ, நம்ம ராவுத்தர் அதாண்டா பூக்கடை ராவுத்தரு “ரஷிதா கார்மண்ட்”  கடை துறந்திருக்காரு.
                 போய் பாரு. நான் சொல்லிட்டேன் நீ வருவன்னு.இந்தா கடை அட்ரஸ் கார்டு வச்சுக்க.ரெண்டு பேரும் போங்க.ராவுத்தர் பாக்கெட் குடுப்பாரு வாங்கினு பஸ் ஏறி வந்து சேரு.
                 பத்தாயிரம் ரூபா, பத்ரமா வந்து சேருங்க. மக்கா நா மாணிக்கம் நீ போயி நம்ம ஐ.ஓ.பி கணக்கில  போட்று.புரிதா .
                சரிண்ணே அண்ணியும் நீங்களும் பத்ரமா போய்ட்டாங்க அண்ணே. அண்ணன் பெரிய பொறுப்பெல்லாம் கொடுத்ததில மஸ்தாயிட்டேன்.
                  அண்ணன் போன பின்ன அண்ணனோட சுத்ற சேர்ல உக்காந்து ஒரு சுத்து, நானும் பணம் சேத்து ஆபீஸ் வச்சு நம்ம மல்லிப் பூவை சுத்ற சேர்ல சுத்த வக்கறன் பாரு.
                  என்னண்ணேனு கேட்டான் மாணிக்கம் ,ஒண்ணுமில்ல வேலய பாருடா ,கொஞ்சம் அண்ணன் குரல் கூட வந்ருச்சே.
                    பீச் போற பஸ்தான் நம்ம வீட்டு முகணைல நிக்கும். மேயர் கபாலமூர்தி ரோடு  ஒன்வே ரோடு ஒரு பக்கம் மட்டும் பஸ் போலாம்.
                    கோயம்பேடு போக மே தின பூங்காவண்ட போணும். கல்லா பொட்டியை  மூடி சாவிய ஸ்டைலா பாக்கட்ல போட்னு, மாணிக்கத்தை கூட்டினு பறப்டேன்.
                   வழிலே ஊட்டுக்கு போயி ஏ கனகு ஆபீஸ் வேலையா வெள்ல போறேன் சாப்ட வர மாட்டேன் , நின்ன ஸ்நேகிச்சுனு சொல்லி கண் சிமிட்னா மல்லிப்பூ உள்ற ஓடிப் போச்சு.
                      மறுக்கா 27b  பஸ், டீலக்ஸ் இல்ல சாதாக் கட்டண வெள்ளை போர்டு பஸ். உக்கார இடம் இல்லை.நின்னுக்கிணே போகணும்.
                     அமிஞ்சிகரைல சீட் கிடச்சா கிடைக்கும்.வேடிக்கை பாக்க கூட வழியில்ல. நமக்கு பஸ்ல ஜன்னல் பக்கம்  டிரைவர் பின்னால சீட்தான் புடிக்கும்.வேடிக்கை பாத்துக்கினே வர்லாம்.
                     எத்தினி சனம் சென்னை பட்ணத்திலே.இங்லீஸ்காரன் கட்ன சிவப்பு கட்டிடம்தான் எத்தனை. எக்மோரு ஸ்டேஷனு, மியூசியம், பரந்து விரியற கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி ,பசங்க காலி பஸ்ஸை கூட ஓடி ஓடி பிடிக்கற பச்சையப்பன் காலேஜு ஆச்சரியமான ஊரு, சொல்லிக்கினே போலாம்.    
                       ம்ஹூம் கடோசி ஸ்டாப் மட்டும் காலி சீட் இல்லை. வளஞ்சு திரும்பி பெருமூச்சு விட்டு  பஸ் ஸ்டாண்ட்ல நின்னுச்சு பஸ்.யோவ் இறங்க உடுய்யா அப்புறம் ஏறுவே பஸ் பூரா காலி, கீழ ஏழு பேரு ஏன் தள்ளிட்டு ஏற்ர.பெரியவரு கேட்டாதானே, அந்தாள ஒதுங்கி நின்னு ஏற விட்டு. சிரிச்சுனே இறங்கிக்கினோம் நானும் மாணிக்கமும்.
                           11 மணிக்கே உச்சி வெயிலு, மாணிக்கம் எதிர்ல
அம்மா குடிநீர்னு போர்டு பாத்து அண்ணே தண்ணி பாட்டில் வாங்கிர்லாம்ணே. 10 ரூபால தண்ணி பாட்லு ஆனா கூலிங் இல்ல.
                          வாடா விசாரிச்னு போகணும். பஸ்ஸடாண்டு உள்ளே பிளட்பாரம் எம்மா உசரம், காலை நல்லா தூக்கி ஏறணும்.உவ்வே மூத்ர நாத்தம் மூக்க மூடினு வேகமா நடந்தோம்.
                          வெளில வந்து லெப்டு எடுத்தா பத்து கடை தள்ளி ஸ்குயரு மாலுன்னு ஆட்டோ காரர்  சொல்ல மெல்ல நடந்தா சட்னு உசந்து நிக்குது அந்த மாலு.
                         பேருதான் மாலு உள்ளே நம்ம சரவண பவன் ஓட்டல் கடை, பக்கத்லே ஹாலுலேய டிஸ்கவுண்ட். சேலு பெஞ்சு பெஞ்சா போட்டு புத்தகம் பரப்பி வச்சிருந்தாக.
                         சேல் பண்ற பய கிட்ட  கார்டு காட்டி ரஷிதா காரமண்ட் எங்கே தம்பினு கேட்டா, மேல போண்ணே இருக்கும்ன்றான்.
                        அடி ஆத்தி மாடிப்படி தன்னால் ஏறுது.மாணிக்கம் அண்ணே இது எச்சலேட்டர்ணே நம்ம எக்மோரு டேஷன்ல கீதே.
                        நான் இப்பதான் இதை பாக்கறேன்.பயத்தோட காலை தூக்கி வச்சு சைடு பிடிய கெட்டிமா பிடிச்சிக்கினேன். நிமிட்ல மேல  வந்துட்டோம்.
                        எதுத்தாலேய ராவுத்தர் வந்துட்டாரு என்னலே கந்சாமி எப்படி இருக்கிற. இது மாணிக்கம் பயதானே மீசையெல்லாம் வளத்துட்டான் வீரப்பன் கணக்கா.
                        பேசிட்டே தன்னோட கடைல நுழஞ்சாரு, பின்னாலய நாங்களும் .போர்டெல்லாம் ஷோக்கா லைட்டெல்லாம் போட்டு பள பளத்துச்சு.சின்ன கடைதான் 20க்கு 15 இருக்கும்.
                         கார்மண்ட்டு கடை பேரு , ஆனா பாக்ஸ் பாக்ஸா அட்ட டப்பாதான் அடுக்கி இருந்திச்சு.வேல ஆளும் ரெண்டே பேரு , நேப்பாள பசங்க செக்க சிவப்பா பொண்ணுங்களாட்டம் அழகா இருந்தானுவ, மூக்குதான் சப்பை.
                        ராவுத்தர் என்னடா கந்சாமி உன் முதலாளி எப்படி இருக்கான்?  
                      அண்ணன் நல்லா இருக்காரு ராவுத்தரே, அண்ணன் சொன்ன பாக்கட்ட கொடுத்தா நாங்க ஓடிருவோம்.
                       இருங்கடா முத முத நம்ம புது கடைக்கு வந்துருக்கீக ஏதும் சாப்டாம எப்டி.
                         நேபாளி பையனை பாத்து “ ஏ சோட்டு இதர் ஆவ்” என்னடா சாப்ட்றீங்க இது எங்களை பாத்து.
                        நானும் மாணிக்கமும் ஒருவரை ஒருவர் பாத்தோம், நான் இல்ல ராவுத்தரே சாப்பாட்டு டயம் ஒண்ணும் வாணாம், புறப்டறோம்.ராவுத்தர் எழுந்து கொண்டார் அந்த சோட்டுவை பாத்து “ தோடா துக்கான் சமாலோ” . எங்களை பாத்து வாங்க போலாம்
                  நான் மெல்ல இழுத்தேன் அந்த பாக்கிட்டு. எல்லாம் வரும் வாங்க என்னோட சரவண பவன் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்ட்ருக்கீங்களா இன்னிக்கு சாப்ட்டு பார்.
                 மூணு பேருமா இப்ப இறங்கற எஸ்கேட்டர்ல கீழ வந்தோம், ( கனகுப் பிள்ளைய, முத்துவ இதுல ஏத்தி இறக்கணும் மதுரல எங்க பாத்ருப்பா) ராவுத்தர் பொனசாமி அண்ணன விட பெரிய ஆளு. சரவண பவன்ல எல்லாரும் ராவுத்தருக்கு சலாம் வக்கறானுவ.
                 சும்மா சொல்ல தாவல ஏஸி குளிர்ல சுடசுட சோறு.
அய்யரு ஊட்டு கல்யாண சோறு மாதி ஆனா கேக்காமயே தட்டு தட்டா வக்கிறானுவ. கிழங்கு,வறுவலு,காய் கூட்டு,தயிரு வெங்காயம், பெர்சா அப்ளம், சாம்பாரா இது கிளாசுல குடிக்கலாம்,ரசம்,வத்த குழம்பு ( கனகு மீன் குழம்பு வச்சா தெருவே மணக்குமில்ல) தயிரு,பாய்சம், சுவீட்டு. நிறய காசு பில்லு போட போறானுவ.கடசில ஒரு தட்ல வாயப்பலம், பீடா,பல்லு குத்த குச்சி ( கனகுக்கு இந்த பீடா போட்டா வாய் இன்னா சிவப்பு பாத்னே இருக்கலாம்).    
                          ராவுத்தரு என்னங்கடா சரியா சாப்டீகளா, இரு ஐஸ்கிரீம் கொண்ணாருவான்றாரு.வயித்ல இடமில்ல ராவுத்தரே.
                        ராவுத்தர் ஜிப்பா பாய்ட்ல இருந்து ஒரு பேப்பர் கவர் எடுத்து என்னாண்டகுடுத்தாரு இங்கேய பாத்துரு வெளில போயி பிரிக்காதன்னாரு.
                        திறந்தா புச்சா 100 ரூபா புது கட்டு முத தடவையா
கைல தொட்டேன்.கையி கொஞ்சம் நடுங்கற மாதி இர்ந்துச்சு.
                       அந்த சப்ள பண்ண ஆள் கிட்ட பில்லு 600 ரூவா பணம் தனியா 30 ரூவா. அந்தாளு வாயெல்லாம் பல்லு, சலாம் வக்கிறான் 3 பேருக்கும் .    
                   பணப் பாக்கட்டை பேன்ட்  பைல திணிச்சிட்டேன். ராவுத்தரு , ஜாக்ரதையா போங்க பஸ்ல அவ்ளோ கூட்டம் இருக்காதுன்னாரு.
                   பர்ஸை துறந்து ஏதோ தேடினாரு,ஒரு சேப்டி ஊக்கு கைல எடுத்து என் பேன்ட் பாக்கிட்ல துருத்தினு இருந்த ரூவா கட்டை நல்லா உள்ளற தள்ளி பேன்ட் பாக்கிட் நடுல அந்த ஊக்க மாட்டி விட்டாரு. இப்ப நானே பணத்தை எடுக்றதுன்னா கூட பேஜாரு.
                      ராவுத்தரு அவரோட கடைக்கு திரும்பிட்டாரு.நானும் மாணிக்கமும் வாபிஸ் பஸ்ஸ்டான்ட்.  மாணிக்கத்தண்டை சொல்லிட்டேன், வெள்ள போர்டு பஸ் வேண்டாம் , சிவப்பு டீலக்ஸ் பஸ் ஜன்னல் சீட் கடைச்சா போறது இல்லாங்காட்டி வெயிட்டிங்.
                     எங்க அதிஷ்டம் 27b டீலக்ஸ் பஸ் ரெண்டு ஒண்ணுக்கு பின்னால ஒண்ணு.என் பேவரிட் சீட்ல நானு,என் பின்னால ஜன்னல் சீட்ல மாணிக்கம் நாங்க முத பஸ்ல குந்திக்கினோம்.
                   5 நிமிசம்,10 நிமிசம், எல்லா பஸ்ஸுக்கும் டிரைவரு,கண்டட்டரு வரானுவ.பஸ் சொகுசா புறப்டு போது.இதோ நம்ம டிரைவரு ஐயே வேகமா வந்து பொறத்தால நின்ன பஸ்ஸ கிளப்பினு போயிட்டானுவ.
                  இன்னாடா பேஜாரா கீதுனு கால நீட்டி கண்ணை மூடினா க்ளக்குனு கிளம்பி அரை வட்டம் போட்டு களம்பிச்சு நம்ம ரதம்.
                 நிமிந்து குந்திக்கினேன், இன்னும் ஒரு மணி நேரம் குண்டி காய உக்காரணும், நம்ம வீட்டண்ட வர.
                 வெளியே வேடிக்க பாத்துக்கினே வந்தா பஸ்  புறத்தாலே வந்து லெப்டு எடுத்துக்கினானா ( நமக்கு இந்த ரூட்டு பிஸ்கோத்தாட்டம்) நேரா ஸ்பீடு புட்சா சத்திரம் ஸடாப்புதான் அதான் விஜயகாந்த் அண்ணாத்தை கச்சி ஆபீஸு. அப்றம் இன்னா பாலம் கட்டிருக்கான்யா சுத்தி சுத்தி ஜிலேபியாட்டம்
                  ஏறி  சுத்தி கோடு போட்ட மாதிரி நேரா ரோட்டை புடிச்சா அண்ணா வளவு, அமிஞ்சிகர, கீழ்பாக்கம்,எழும்பூரு சொல்லாக்காட்டி சுலபம்.ஆனா இந்த பிசாசு பஸ்ஸை டிராபிக்ல ஓட்டணும்னா,இன்னா கஷ்டம்ன்றே.12.30 க்கு புறப்பட்யா எழும்பூரே 1.20.
                   பஸ்ல ஏறினா ஜன்னலுக்கு புறத்தாலதான் பாப்பயா, பேபி ஹாஸ்பிடல்ல இதோ இறங்கறாளுகளே 3  பொம்பளைங்க பாத்தயா சரியான கிராக்கிங்க,பிக்பாக்கெட்டு கேசுங்க.
                  தினக்க காலைல சாந்திரம் இதே ரூட்டு. குழந்தைய இட்னு வைத்யம் பாக்க வர கிராமத்தாளுங்க பணம் பூரா உருவிருங்க. இதுக்கெல்லாம் நல்ல சாவு வரும்ன்றே?
                  நான் மாணிக்கத்தாண்டை சொன்னதை கட்சி பொம்பள கேட்ருச்சு, திரும்பி தூ கஸ்மாலம் நீ தான் சாவப்போறேனு சொல்லிட்டே நடக்குது.
                 அத்த விடு எழும்பூரண்ட வந்தாலே நம்ம வீட்டாண்ட வந்த மாதிரி.எழும்பூர்ல ரைட் எடுத்து கூவம் பிரிஞ்ல லெப்ட்.அந்த ஸ்கூலாண்ட இறங்கி மீன் வாடை பிடிச்சுக்கினே மேயர் கபால மூர்த்தி ரோட்ல நடந்து சட்னு
சோத்தாங்கை பக்கம் திரும்பி எதேச்சையா பான்ட் பாக்கிட்ல கை வச்சா காலி.
                        மாணிக்கம் காலிடா நானு,    ஏண்ணே.  பான்ட் பாக்கிட்டை பிரிச்சு காட்றேன் சேப்டி ஊக்கு கைய குத்துது.  “ தூ கஸ்மாலம் நீதான் சாகப் போறே”இதுதான் திரிக்கா திரிக்கா காதுல கேக்குது. 900 ரூப்பு, 10,000 ஆப்பு
                              கனகு கனவெல்லாம் போச்சே.
                                                 🙏

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Mon Oct 18, 2021 10:00 pm

எல்லாம் கனகு மயம் by சுஶ்ரீ 3838410834 வாழ்த்துக்கள் சார் !

Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Tue Oct 19, 2021 7:44 am

நன்றி சார்



சுஶ்ரீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக