புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
56 Posts - 73%
heezulia
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
221 Posts - 75%
heezulia
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
8 Posts - 3%
prajai
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_m10இரவு விருந்தாளி by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு விருந்தாளி by சுஶ்ரீ


   
   
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Mon Oct 18, 2021 4:17 pm

இரவு விருந்தாளி
சுஶ்ரீ

ராத்திரி 10 மணி தந்தி செய்திகள் பாத்து தன் ஜனநாயக கடமை அன்னைக்கு முடிஞ்சதா நினைச்ச பஞ்சாபகேசன், படுத்துக்க போனார்.
வயசாச்சு இப்பல்லாம் சீக்கிரம் தூக்கம் வரதில்லை, அமிர்தாஞ்சனம் காரமா தலைல தடவிக்கணும் அது பழக்கமாயிடுச்சு
வலி ஒண்ணும் இல்லைன்னாலும், அந்த சின்ன பாட்டிலை ஆசையா திறந்து ஆள் காட்டி விரலால கொஞ்சமா எடுத்து நெத்தில கொஞ்சம் மூக்குக்குள்ளே கொஞ்சமா தடவிண்டு அந்த ஸ்வாசத்தை ஆழமா உள்ளே இழுத்து கண்ணை மூடி அனுபவிப்பார்..
அவர் படுத்துக்கற அறையே அந்த மணத்தில் நிறையும், ஆசையா கடிக்க வர கொசு கூட அந்த வாசனைல மயங்கி அப்படியே உக்காந்துடும் எதுக்காக வந்தோம்கறதை மறந்து.
பார்வதி அவர் மனையாள் சமையலறையை ஏறக்கட்டிட்டு பக்கத்தில் உக்காந்தது கூட தெரியாமல் அமிர்தாஞ்சன போதையில் இருந்தார் பஞ்சாபகேசன்.
ஏன்னா உங்க தம்பி வரார்னு சொன்னேளே எப்ப வரார் ? ஏகாந்த ரசனையில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு முளித்தார்.”யாரு வரா?எப்ப? எதுக்கு? “
“அய்யே தூங்குங்க அந்த கண்றாவி வாசனை இந்த ரூமையே வியாதியஸ்தா ரூம் ஆக்கறது இதுல எப்படிதான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கறீங்களோ”பார்வதி அம்மாள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே ஒரு அதிர்வோட குறட்டை சத்தம் கிளம்பியது பஞ்சாபகேசனிடமிருந்து.
எத்தனையோ கண்டு பிடிக்கறா இந்த குறட்டைய நிப்பாட்ட சரியா ஒண்ணும் வரலையே யோசிச்சிட்டே பார்வதி அம்மா ஒரு அரை மணி நேரம் TV கிட்ட போனா அந்த மெகா சீரியல் பாக்க.ஆச்சு அன்னைய பொழுது முடிஞ்சது.
அந்த ஒரு ஃபிளாட்ல இவங்க ரெண்டு பேர்தான், குழந்தைகள் வெளி நாட்டில். இரவு பன்னண்டு மணி சுமாருக்கு டிங்டாங் காலிங் பெல் சத்தம்.
ஆழ்ந்த தூக்கம் வர நேரம் , ரெண்டு பேருக்குமே முழிப்பு வந்துட்டது.
12 மணிக்கு யாரு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் எக்மோர் வந்து அங்கே இருந்து இங்கே வர 20 நிமிஷம் சரிதான் என் தம்பிதான் அனுமானித்துக் கொண்ட பஞ்சாபகேசன் தடுமாறி கட்டிலிலிருந்து இறங்கினவர் வாசல் கதவை நோக்கி போறதுக்குள்ளே
விடாமல் ஏன் இப்படி மணி அடிக்கறான்?நிதானமாய் கதவை திறந்தார் ,
தம்பி என்ன இப்படி மாறு வேஷத்துல வந்திருக்கான்? வாடா என்னடா இது வேஷம் தனியாவா வந்தே லக்கேஜே இல்லையா?
வந்த மாரியப்பன் திகைத்துப் போனான், கருப்பு மரு சரியா ஒட்டலையா, ஒட்டு மீசை ஏதாவது சரியா வச்சிக்கலையா?
இந்தாளுக்கு திருடன்னா ஒரு மரியாதை இல்லையே
.”ஓய் பெரியவரே நான் பீகார்ல இருந்து வந்திருக்கற பயங்கர திருடன் கலகத்சிங் “ ,
“அப்படியா என் தம்பி வாஞ்சுன்னு நினைச்சேன், சரி சரி உள்ளே வா வெளிச்சத்துல பாக்கறேன் உன்னை ,
அடே நீ மாரியப்பன் இல்லையோ? தொளப்பன்குப்பத்துல இருந்தயே இது என்ன மச்சம், மீசை புதுசா?
மாரியப்பன் திகைத்துப் போனான் இந்த கிழவனுக்கு திருடன்கற பயமே இல்லையே,எப்படி என்னை கண்டு பிடிச்சான்.
இப்ப இந்த கிழவனை பாத்து மாரியப்பனுக்கு பயம் வந்தது.
அவர், “ ஏண்டா மறந்துட்டயா, நாங்க அண்ணா நகர் சாந்தி காலனில இருந்தப்ப இதே மாதிரிதான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தே, பால்காரனுக்காக வச்சிருந்த 218 ரூபாயை கொடுத்தேனே, சின்ன வயசுல என்னடா மறதி?
”சரி சரி எங்கே இந்தப் பக்கம்?
மாரியப்பனுக்கு என்ன பண்ணுவதுனு தெரியலை.
அதுக்குள்ளே பர்வதம் அம்மாளும் எழுந்து ஹாலுக்கு வந்துட்டா, என்ன மச்சினர் வந்தாச்சா என்ன வேற யாரோ ஃபிரண்டா? காபி போட்ட்டா உப்புமா கிளறிக் கொடுக்கட்டா?
மாரியப்பனுக்கு நிஜமாவே செயவதென்ன புரியலை. மரியாதையா பீரோ சாவி கொடுங்கனு உறுமினான்.
ஏண்டி பார்வதம் பீரோ சாவி எங்கேனு உனக்கு ஞாபகம் இருக்கான்னார் பஞ்சு, ஆமாம் அது எதுக்குடா மாரியப்பா சாவி வச்ச இடம் மறந்து தொலைச்சிட்டோமே, மெயின் டோர் சாவி ரெண்டு இருக்கு அதுல வேணா ஒண்ணு வாங்கிக்கறயா?
பார்வதம் மாரியப்பன் சார் ஞாபகம் இல்லையா சாந்திகாலனி வீட்டுக்கு வந்திருக்காரே.பால்காரன் காசை கொடுத்துட்டு திண்டாடினோமே மூணு நாள்.அவர்தான்.பாவம் கஷ்டப் பட்டு மலைக்கள்ளன் எம்.ஜி.ஆர் மாதிரி மாறுவேஷம் போட்டுண்டு வந்திருக்கார் இதுவும் ஒரு களையாதான் இருக்கு இல்லை?
யோவ் கிழவனாரே பீரோ சாவி கேட்டா கிண்டல் பண்றயா? மரியாதையா பீரோ சாவியை கொடு,
ஏண்டாப்பா ஞாபகம் இல்லைனா கேக்க மாட்டேன்றயே அந்த சாவில என்ன விசேஷம்?
மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியது மடில மறைச்சு வச்சிருந்த பட்டன் கத்தியை வெளியே எடுத்தான்.
பஞ்சு தாத்தா அதை ஆச்சரியமா பாத்தார் என்னடா புதுசா? விக்டரி நாக்ஸ் பிராண்டா? கொடு பாப்போம்.
இப்ப மாரியப்பன் கை நடுங்க ஆரம்பிச்சது. பெருசு நிஜமா புரியலையா பீரோல இருக்கற சாமானை கொள்ளை அடிக்க வந்திருக்கேன் அதான் சாவி கேட்டேன் புரிஞ்சதா?
பஞ்சு தாத்தா பகபகனு சிரிச்சார் அதுக்கு எதுக்குடா சாவி, பூட்டினதே இல்லையே, ஏன் பொஞ்சாதிக்கு புடவை வேணுமா? கேட்டா பர்வதமே தருவாளே, 25ம் தேதி வந்துஇருக்கே புத்தி வேண்டாமோ?யார் கிட்டயாவது காசு இருக்குமா? நகையெல்லாம் யாரு பீரோல வைக்கறா? புத்தியோட பிழைங்கடா, ஒரு 76 ரூபா என் ஷர்ட் பாக்கெட்ல இருக்கும் எடுத்துண்டு நடையைக் கட்டு.
மாரியப்பன் அவர் காலில் சாஷ்டாங்கமா விழுந்தான், “ சாமி உங்க மாதிரி பத்து ஆளு இருந்தா திருட்டே மறந்து போயிடும் எங்களுக்கு வரேன் நானு” மறந்துட்டேனே அந்த 76 ரூபா என் தரப்புல நீயே வச்சிக்கோ, அடுத்த தடவை அந்த பால் காசு 218 ரூபாயை கொடுத்துடறேன். போயிட்டான் அவன் அடுத்த 10வது நிமிஷத்துல இருந்து திரும்ப குறட்டை சத்தம் அதிர்ந்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:02 pm

பரவாயில்லையே -ஆனால் நம்புவதுதான் கஷ்டம். திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (அது அந்த காலம் -இப்போது நெல்லை எக்ஸ்பிரஸ்) 12 மணி சுமாருக்கு திருச்சி பக்கம்தான் வரும் --இரு திசையில் இருந்தும்.
நல்ல சஸ்பென்ஸ். தாராள மனசு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Wed Oct 20, 2021 9:13 am

இது கதை சார், ரெயில்வே டைம் டேபிள் பாக்கலை தப்புதான்
Anyhow thank you.



சுஶ்ரீ

Radha Srinivasan இந்த பதிவை விரும்பியுள்ளார்

Radha Srinivasan
Radha Srinivasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/10/2021

PostRadha Srinivasan Fri Oct 29, 2021 4:11 pm

சூப்பர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக