ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by ayyasamy ram Today at 7:37 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by ayyasamy ram Today at 7:35 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

» சமையல் பாத்திரத்தில் பயணித்த திருமண ஜோடி
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:07 pm

» சரக்கு அடிச்சிருக்கியா.. அந்த மதுப்பிரியர் கூண்டுல போடுங்க! – நூதன தண்டனை தரும் கிராமம்!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:03 pm

» 500 ரூவா குடுத்தா அரைமணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்! – சென்னையில் மோசடி ஆசாமி கைது!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்

2 posters

கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் Empty கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்

Post by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் 1632206654-9988

அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும்.

ஆல்ஃபபெட் எக்ஸின் (முன்பு கூகுள் எக்ஸ் என்று அழைக்கப்பட்டது) திட்டங்களில் ஒன்று தான் தாரா.

முன்பு ப்ராஜெக்ட் லூன் என்கிற பெயரில், பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஸ்ட்ராடோஸ்ஃபியர் அடுக்கில் பலூன்களை நிலைநிறுத்தி அகன்ற அலைவரிசை இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. அத்திட்டத்திலிருந்து தான் ஒளிக் கதிர்கள் வழி இணைய சேவை வழங்கும் திட்டம் உருவானது.

இந்த புதிய சோதனை முயற்சியின் காரணமாக காங்கோ குடியரசு நாட்டின் ப்ரசாவில்லே நகரத்துக்கும், காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டைச் சேர்ந்த கின்ஷாசா நகரத்துக்கும் இடையில் ஏற்பட்டு வந்த இணைய சேவைப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருப்பதாக, அவ்வணியினர் தங்கள் வலைப்பக்கத்தில் கூறியுள்ளனர்.

இரு நகரங்களுக்கும் இடையில் மூன்று கிலோமீட்டர் தொலைவு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த இருநகரங்களை இணைய வழியாக இணைப்பதில் சிக்கல் இருந்தது. கேபிள் வழியாக இரு நகரங்களை இணைக்க வேண்டுமானால் நதியைச் சுற்றித் தான் கேபிள்களை பதிக்க வேண்டி இருக்கும். இதனால் அகன்ற அலைவரிசையின் விலை ஐந்து மடங்கு அதிகமாகிவிடும்.

வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் (WOC) என்றழைக்கப்படும் அமைப்பு கடந்த 20 நாட்களில் 700 டெராபைட் தரவுகளை 99.9% வழங்கியுள்ளது என ஆல்ஃபபெட் எக்ஸ் அணியினர் கூறியுள்ளனர்.

"எல்லா காலநிலைகள் மற்றும் எதிர்கால சூழல்களிலும் கண கச்சிதமாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தாராவின் இணைப்பு சிறப்பாக செயல்படும், அதிவேகம் மற்றும் மலிவு விலை இணையத்தை இரு நகரங்களில் வாழும் 17 மில்லியன் (1.7 கோடி) பேருக்கு வழங்க உதவும்" என ஆல்ஃபபெட் எக்ஸ் தரப்பினர் அவ்வலைப்பதிவில் கூறியுள்ளனர்.

இது தாரா திட்டத்தின் புதிய பதிப்பு. இது கடந்த மூன்று ஆண்டுகளாக மேம்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிவேக இணைய சேவையைக் கொண்டு வர எக்ஸ் நிறுவனம் எகோனெட் குழுமம் மற்றும் லிக்விட் டெலிகாம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்து வருகிறது. கென்யாவில் வணிக ரீதியிலான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அதிவேக இணைய சேவையை வழங்க இவ்வமைப்பு, மிக குறுகிய கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துகிறது. தரையில் இருக்கும் பழைய ஃபைபர் முறையில் தரவுகளைக் கடத்த ஒளியைப் பயன்படுத்தியது போலத் தான் இதிலும் தரவுகள் கடத்தப்படுகின்றன. ஆனால் இந்த முறையில் கேபிள்கள் இல்லை.

இந்த தொழில்நுட்பத்தை ஃப்ரீ ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் என்றழைக்கிறார்கள். ப்ராஜெக்ட் லூனில் பலூன்களுக்கு மத்தியில் லேசர் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய சோதனை முயற்சிகளிலிருந்து இது மேம்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ப்ராஜெக் லூன் வணிக ரீதியாக சாத்தியப்படாது என அத்திட்டத்தை கைவிட்டது ஆல்ஃபபெட்.

தாரா திட்டம் கச்சிதமாக செயல்படக் கூடியதல்ல என்பதை எக்ஸ் தரப்பினர் ஏற்றுக் கொள்கிறார்கள். பனிமூட்டம், புகை மூட்டம், பறவைகள் சிக்னலுக்கு குறுக்கே பறப்பது போன்ற சமயங்களில் இது கச்சிதமாக செயல்படாது என்கிறார்கள்.

ஆனால் கடத்தப்படும் லேசரின் சக்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஒரு தொலைநோக்கியைப் (டெலெஸ்கோப்) போல கண்ணாடிகள், ஒளி, மென்பொருள், எங்கு ஒளிக்கதிர்களை செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்த உதவும். பறவைகள் சிக்னலுக்கு முன் பறக்கும் போது ஏற்படும் தடைகளைக் குறைக்கக் கூட எக்ஸ் தரப்பினர் சில வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

"மூடுபனி நிறைந்த சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்கள் வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் சேவையைப் பயன்படுத்த ஒரு சிறந்த இடமாக இருக்காது என்றாலும், தாரா திட்டத்துக்கு உகந்த வானிலை கொண்ட பல இடங்கள் உலகெங்கிலும் உள்ளன" என்று அவ்வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் கென்யா, இந்தியா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி வெப் துனியா 


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

jairam and Dr.S.Soundarapandian like this post

Back to top Go down

கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் Empty Re: கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்

Post by Dr.S.Soundarapandian Sun Oct 03, 2021 9:57 pm

கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை