புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
87 Posts - 67%
heezulia
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
423 Posts - 76%
heezulia
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
18 Posts - 3%
E KUMARAN
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பனை என்றோர் உயர்திணை! Poll_c10பனை என்றோர் உயர்திணை! Poll_m10பனை என்றோர் உயர்திணை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை என்றோர் உயர்திணை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 4:47 pm

பனை என்றோர் உயர்திணை!
பனை என்றோர் உயர்திணை! 712468

பழம்பெருமை மிக்க அறுபடாத ஒரு நெடிய மரபு கொண்ட தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான தாவரங்களில் ஒன்று பனைமரம். தமிழர்களின் இயற்கை அடையாளங் களுள் ஒன்றாகப் போற்றப்படும் பனைமரத்தைத் ‘தமிழர்களின் தாவரம்’ என்றே அழைக்கலாம்! ஏனென்றால், இது தமிழ்நாட்டின் மாநில மரமும்கூட.
பனை, புல்லினத்தைச் சேர்ந்த [Palmyra palm] ஒரு தாவரப் பேரினம்! பனையின் அறிவியல் பெயர் [Borassus flabellifer]. கற்பக விருட்சத்தின் அடியில் நின்று எதைக் கேட்டாலும்கிடைக்கும் என்பது நம்பிக்கை. பனைமரத்தின் பயன்பாடுகளை விளக்கும் வகையி லேயே அது கற்பகத் தரு என்று அழைக் கப்பட்டிருக்கிறது. வேர் முதல் உச்சிவரை பனையின் ஒவ்வொரு உறுப்பும் மனிதக் குலத்துக்குப் பயன்படும் பொருளே.
தொடருகிறது 
நன்றி தமிழ் ஹிந்து 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 4:49 pm

------2---

காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் எழுத பயன்படும் பொருளாகப் பனை ஓலைகளே பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளன. ஓலைகளில் எழுதும் முறை இல்லையெனில் இன்றைக்கு நம் தமிழ் இலக்கண, இலக்கியப் புதையல்கள் இருந்திருக் காது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. வீடு வீடாகச் சென்று, கெஞ்சிக் கூத்தாடி சேகரித்த பனை ஓலைச் சுவடிகளே கரையான் அரிப்புக்கும் நெருப் பின் நாவுகளுக்கும் இரையானவை போக எஞ்சிய இன்றைய தமிழ்ப் புதையல்கள்!
பனையின் இயல்புகள்

பனங்கொட்டைகளைச் சேகரித்துப் பதப்படுத்தி, ஊன்றி வளர்ப்பதில் தொடங்குகிறது ஒரு பனை மரத்தின் வாழ்வு. முதல் நான்கு மாதங்களில் கொட்டையில் உள்ள ‘தவண்’ என்கிற பகுதியை உணவாகக்கொண்டு பனை வளரத் தொடங்குகிறது. அடுத்து கிழங்கு முளைக்கத் தொடங்குகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு மேல் குருத்து போன்ற பனை ஓலைகள் தோன்றுகின்றன. இதைப் ‘பீலி’ என்கின்றனர். பீலிப்பருவப் பனை, வடலிக்கன்று என்றும் பனைக்குட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் வரை பனை உயரமாக வளர்கிறது. வடலிக் கன்று பருவத்தைக் கடந்த பனைக்கு, வடலிப்பனை என்று பெயர். பிறகு உட்பகுதியில் வலுவடையத் தொடங்கும். இதுதான் வைரம் பாய்தல். அதற்குப் பிறகுதான் பனை, வலுவான மரம் என்கிற தகுதியைப் பெறுகிறது. இப்படியாகச் சராசரியாக 90 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டது பனை. ஆயுள் முழுவதும் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கும் மரம் என்பதே பனையின் தனிச்சிறப்பு.
மனிதர்களைப் போன்றே பனையிலும் ஆண் பனை, பெண் பனை என்கிற பாகுபாடு உண்டு. அலகுப் பனை, கட்டுப்பனை போன்ற பெயர்களும் ஆண் பனைக்கு உண்டு. விடலிப் பருவத்தில் மட்டும் ஆண், பெண் பாகுபாடு கிடையாது.
பனை மரத்தின் தனித்துவமான சிறப்பாக அமைந்தது, அதன் பாளைகளிலிருந்து கிடைக்கும் இனிப்பும் புளிப்பும் கலந்த சாறு. இவை கள், பதநீர் எனப்படுகிறது. இரண்டுமே பனையிலிருந்து நேரடியாகக் கிடைப்பதில்லை. சில கருவிகளின் துணைகொண்டு பாளையை நசுக்கிப் பெறப்படுகிறது. பாளையிலிருந்து வடியும் இனிப்புச் சுவை மிகுந்த சாறு, கள் என்கிற பெயரில் மதுவாக மாறுவதைத் தடுத்து உருவாக்கப்படுவதே பதநீர். பனைமரக் கள் தமிழர்களின் பாரம்பரியமான மது. ‘தீம்பிழி’ என்னும் சொல்லால் சங்க இலக்கியங்கள் இந்த மதுவைக் குறிக்கின்றன.

புதிய பனைமரங்களை விளைவிக்கத் தேவையான பனங்கொட்டைகளுக்காகவும் பனங்கிழங்குகளை உருவாக்கவும் பனை நுங்கை வெட்டாமல் விட்டுவிடு வார்கள். அதன் வளர்ச்சி நிலையே பனம்பழமாக உருவாகிறது.
கம்பீரப் பனை
சில ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களைத் தாக்கி பெரும் தாவர அழிவை ஏற்படுத்திய கஜா புயலின்போது ஒரு காட்சியை எல்லோரும் வியந்து பார்த்தனர். அப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்த பல தென்னந்தோப்புகள் சாய்ந்திருந்தன. பெரிய பெரிய வலுவான மரங்கள் வீழ்ந்துகிடந்தன. ஆனால், புயலின் உக்கிரத் தாண்டவத்துக்கு அசைந்து கொடுக்காமல் கம்பீரமாக நின்றவை பனை மரங்கள் மட்டுமே!
-------3

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 4:50 pm

----3----
கற்பக விருட்சம் என்னும் பெயருக் கேற்ப பனைமரத்தின் ஒவ்வொரு அங்கமும் பயன்படு பொருளாகவே உள்ளது. பனை தரும் உணவில் முக்கியமானது பதநீர். கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனை மிட்டாய், பனங்கள், பனங்கூழ் ஆகியவை பதநீரிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள். இவற்றில் சில மருந்தாகவும் பயன்படுகின்றன.
பனை மரங்களின் ஆணிவேர், சல்லி வேர் போன்றவை மண் அரிப்பைத் தடுக்கும் காவலர்களாகவும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் கருவியாகவும் விளங்குகின்றன. யானை போன்ற பெரிய விலங்குகள்கூட நுழைய முடியாத உயிர்வேலிகளாக, வனம் சார்ந்த நிலப்பரப்புகளில் ஒரு காலத்தில் பனைப்படை அணி இருந்திருக்கிறது.
பனை மரங்களின் பயன் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். அதற்கு இணையாக வேறொரு தாவர இனம் இல்லை. நெருப்பில் எரித்துப் போட்டாலும் விதைக்கும் அதிசய விதை பனை மட்டுமே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றில் இடம்பெற்று வானளாவிய கம்பீரத்துடன் தமிழர்களின் தாவரமாக வீற்றிருந்த பனை மரங்களின் இன்றைய இன அழிப்பு, கவலை அளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது.
வைரம் பாய்ந்த பனைகள் என்றழைக்கப்பட்ட முற்றிய பனை மரங்களே, முன்பு தச்சு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டன. இன்று செங்கல் சூளைக்கு அடுப்பெரிக்கும் விறகாகவும் கட்டிடம் கட்டும் பணி களுக்காகவும் சாயப்பட்டறையில் எரியூட்டவும் பனை மரங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றன. தனியார் இடங்கள், பொது இடங்கள் என்று எந்தப் பாகுபாடுமின்றி பலி ஆடுகளைப் போல், பனை மரங்கள் பூமியில் வெட்டுப்பட்டு விழும் காட்சி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அபாயம் நேரப்போவதன் அறிகுறி என்பதை இப்போதாவது மக்கள் உணர வேண்டும்.
பனை வகைகள்

கூந்தப்பனை, தாழிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, நிலப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, சனம்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பனை வகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில வகைகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
விழிப்போம், பாதுகாப்போம்!
ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில், சாலையோர புளிய மரங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மரங்களுக்கு எண்கள் இடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதுபோல், எஞ்சியிருக்கும் பனை மரங்களைக் கணக்கெடுத்து எண்கள் இட வேண்டும். பனை விதை நடுவதை இயக்கமாக மாற்றும் விழிப்புணர்வை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். பனைமரங்களைப் பொதுப்பணித் துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். பொது இடங்கள், தனியார் இடங்கள் என எங்கிருப்பினும், பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க பனை பாதுகாப்புக்கெனத் தனிச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
இந்தியாவிலிருந்த மொத்த பனை மரங்களின் தொகை 9 கோடியில் சுமார் 5.5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டிலிருந்ததாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் குறிப்பொன்று தெரிவிக்கிறது. அவற்றில் இன்று எஞ்சியிருப்பவை 2.5 கோடி மரங்கள் மட்டுமே. இந்த எண்ணிக்கையும் வேகமாகச் சரிந்துகொண்டே வருகிறது என அச்சம் தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும்.

பனை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும், பனை விதை நடும் பணியிலும், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பல சிறு அமைப்புகள் ஈடுபட்டிருப்பது நல்ல முன்னெடுப்பு! மணல் கொள்ளையால் பாதிக்கப்படும் நதிகளைப் போல், செங்கல் சூளையில் எரிக்கப்படும் விறகுக்காக அனுமதியின்றிக் கொள்ளையடிக்கப்படும் பனை மரங்கள் இயற்கையின் கொடை. நம் இனத்தின் பெருமைமிகு அடையாளம். அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்!

=========

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 4:59 pm

 பனை மரங்கள் இயற்கையின் கொடை. நம் இனத்தின் பெருமைமிகு அடையாளம். அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்!

கடற்கரை பகுதியில் இதை நடுவதால் கடல் அரிப்பை தடுக்கலாம் என்றும் கூறுவார்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 04, 2021 9:22 pm

பனை என்றோர் உயர்திணை! 368466365054201

பனைமரத்தில் பயன்படாத பகுதிகளே இல்லை. தமிழர்களின் வாழ்வுடன் இணைந்த மரம். வயலில் வேலை செய்பவர்கள் முன்பெல்லாம் இதன் ஓலையை மிக லாவகமாக மடித்து (பட்டை) அதில் தான் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடும் பொழுது பனை ஓலையுடன் சோறு சேர்ந்து ஒருவித அற்புத வாசனையை உருவாக்கி சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

பனை என்றோர் உயர்திணை! JD2I3zN

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி ஐயா!

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

பனை என்றோர் உயர்திணை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 04, 2021 9:42 pm

பனைமரத்துடன் இணைந்த வாழ்வியல் அனுபவங்கள்:

* ஆண் பனை மரத்து பாளையை எடுத்து வந்து இரவில் ஈர மணலில் புதைத்து வைத்து காலையில் எடுத்து பார்த்தால் அதில் கரையான்கள் நிறைந்திருக்கும். அவற்றை எடுத்து கோழிக்குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுப்பேன்.

* கீழே விழும் பனம்பழம் எடுப்பதற்காக அதிகாலையில் 5 மணிக்கெல்லாம் நண்பர்களுடன் பனங்காட்டுக்குள் செல்வோம். நண்பன் உருவில் பேய் வந்து பனம்பழம் எடுக்க கூட்டிச் செல்வது போல் சுடுகாட்டுக்கு கூட்டிச் சென்றுவிடும் என்ற கதைகளைக் கேட்டு வளர்ந்ததால், உடன் வருபவன் நண்பனா அல்லது பேயா என்ற அச்சத்திலேயே அவனுடன் தினமும் ஒரு த்ரில் பயணம் செய்த அனுபவங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாதது.

* பனம்பழத்தை அவித்து அந்த பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பார்கள், ஆனால் அவ்வாறு அவித்த நீர் இன்னும் சுவையாக இருக்கும். வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கும் நீரையெல்லாம் சிறிது சிறிதாக குடித்துவிட்டு வயிற்றுவலியால் அவதியுறும் பொழுது, ஏண்டா அவ்வளவு சொல்லியும் அந்த தண்ணிய குடிச்சிட்டியா என தாயாரிடம் அடிவாங்கி அவதியுற்ற காலம் என் இளமைக் காலம்.

* பனங்கிழங்கை அவித்து, அதை இரவு பனியில் கூரைமேல் வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

* பனங்கிழங்கு தோண்டி எடுத்ததும், அதிலுள்ள முட்டுக்கொட்டையை வெட்டி சாப்பிட்டால் தித்திக்கும்.

பனை என்றோர் உயர்திணை! NlsRBnQ
பனைமரத்து பாளை

பனை என்றோர் உயர்திணை! TmnLzTG
பனக்கிழங்கு + முட்டுக்கொட்டை

பனை என்றோர் உயர்திணை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:57 pm

அருமை ! அருமை!
நன்றி இரமணியன் அவர்களே!
நன்றி சிவா அவர்களே!
பனை என்றோர் உயர்திணை! 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 10:08 pm

சிவா wrote:பனைமரத்துடன் இணைந்த வாழ்வியல் அனுபவங்கள்:

சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி என்பதும் நீர்தானோ???????

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக