புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:23 pm

First topic message reminder :

* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்


ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!


#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.

பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்




ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.

நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்




வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.

பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா




சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்

அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.





ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:17 pm



ஆப்கானிஸ்தான், அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியின் கீழ் இருந்ததைவிட தாலிபான்களின் கட்டுப்பாட்டில் சீராகவும் சிறப்பாகவும் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தாலிபான்களுக்கும் கடந்த 20 ஆண்டுகளாக மோதல் நிலை உள்ளது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் இருந்ததால், தாலிபான்களால் ஆப்கானின் எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை.

ஆனால், அமெரிக்க ராணுவப்படைகள் அங்கிருந்து விலகிக்கொள்ளப்பட்டன. இதனால், தற்போது தாலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றி நாடாளுமன்றத்துக்குள் புகுந்ததும் அங்கிருக்கும் மக்களின் நிலை மிகவும் சோகமாக மாறியுள்ளது. எப்படியாவது அங்கிருந்து வெளியேற மக்கள் துடித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் வானொலி நேரடி ஒளிபரப்பில், “தாலிபான் பிரிவுகள் தலைநகருக்குள் நுழைந்து ஆப்கான் அரசையும் அமெரிக்க படைகளையும் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டன.

இதனால், அதிபர் அஷ்ரப் கனி தப்பித்து சென்றுவிட்டார். இது இழிவான செயல். அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியைவிட தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலைமை சிறப்பாக இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாலிபான்களின் கீழ் வந்த முதல் நாளிலேயே என்னாலும் இதைக் கூற முடியும். இனி காபூலில் நிலைமை அமைதியாகிவிடும்.

100க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட ரஷ்ய தூதரகம் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ரஷ்ய அதிகாரிகளை மீட்பது குறித்து தாலிபான்களுடன் விரிவான பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். முந்தைய ஒப்பந்தங்களின்படி ரஷ்ய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்” என கூறினார்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:22 pm


தங்கள் நாட்டின் நிலை கண்டு ஏன் இன்னும் சர்வதேச அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன என்று ஆப்கானிஸ்தானின் பெண் இயக்குனர் சாஹ்ரா கரிமி கேள்வியெழுப்பியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தாலிபான்களுக்கும் கடந்த 20 ஆண்டுகளாக மோதல் நிலை உள்ளது.

அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் இருந்ததால், தாலிபான்களால் ஆப்கானின் எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை.

ஆனால், அமெரிக்க ராணுவப்படைகள் அங்கிருந்து விலகிக்கொள்ளப்பட்டன. இதனால், தற்போது தாலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தலைநகரை கைப்பற்றினர்.

இதனால் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுக்குள் வந்துவிட்டது. இதன்காரணமாக அந்நாட்டு மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியும் தப்பித்து சென்றுவிட்டார்.

தாலிபான்களின் ஆட்சி அமைவதற்குள் அங்கிருந்து தப்ப வேண்டும் என அந்நாட்டு மக்கள் துடிக்கின்றனர்.

காரணம், தாலிபான்கள் தங்கள் படையை சேர்ந்தவர்களுக்கு பெண் குழந்தைகளை விற்பது, சரியான உடைகள் அணியாத பெண்களின் கண்களை பறிப்பது, அரசாங்கம், ஊடகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தை சேர்ந்தவர்களைக் கொல்வது, பல்லாயிரம் குடும்பங்கள் இருப்பிடங்கள் இழந்து தவிப்பது என பல்வேறு கொடூர செயல்களில் தாலிபான்கள் ஈடுபடுவது தான்.

இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் சாஹ்ரா கரிமி என்பவர் தங்கள் நாட்டின் நிலை கண்டு ஏன் இன்னும் சர்வதேச அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன என கேள்வியெழுப்பி பகிர்ந்துள்ள பதிவை இயக்குனர் அனுராக் கஷ்யப் பகிர்ந்துள்ளார்.

அதில் அனுராக் கஷ்யப், “இதை அதிகமாக பகிர்ந்து பலரிடம் கொண்டு செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து கூறுகையில் கரிமி, “எங்களுக்கு இந்த மவுனம் பழகிவிட்டது. ஆனால், இது நியாயமற்றது என எங்களுக்கு தெரியும். எங்கள் மக்களை கைவிட வேண்டும் என்று எடுத்த முடிவு தவறானது.

அவசர அவசரமாக படைகளை பின்வாங்கியது எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அமைதி பேச்சுவார்த்தை என்கிற பாவனை தாலிபான் தரப்பை இன்னும் ஊக்கப்படுத்தியிருக்கிறது.

முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்க மக்களை கொடுமைப்படுத்த தைரியம் தந்திருக்கிறது. இந்த சூழலால் கடந்த 20 வருடங்களாக எங்கள் இளம் தலைமுறை பெட்ரா ஆயுதம் அனைத்தும் தொலைந்து போகும். மீண்டும் ஆப்கானை தாலிபான் ஆண்ட இருண்ட காலத்திற்கு எங்கள் நாடு சென்றுவிடும்.

தாலிபான்கள் கலைகளைத் தடை செய்வார்கள். அவர்கள் கொள்ள வேண்டிய ஆட்கள் பட்டியலில் நானும் மற்ற இயக்குனர்களும் கூட அடுத்து இருக்கலாம்.

பெண்களின் உரிமைகளை மொத்தமாக பறிப்பார்கள். நாங்கள் இருளில் தள்ளப்படுவோம். வீட்டில் அடைக்கப்படுவோம். எங்கள் குரல் நெறிக்கப்படும். இந்த சில வாரங்களில் தாலிபான்கள் பல பள்ளிகளை நாசம் செய்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிக்கல்வியை இழந்துள்ளனர்.

எனக்கு இந்த அமைதி புரியவில்லை. இந்த உலகை புரியவில்லை. நான் இங்கேயே இருந்து என் நாட்டுக்காகப் போராடுவேன். ஆனால், அதை என்னால் தனியாக செய்ய முடியாது.

எனக்கு உங்களை போன்ற கூட்டாளிகள் வேண்டும். முக்கியமாக எங்கள் நாட்டுக்கு வெளியே இருக்கும் ஊடகங்கள் எங்கள் குரலாக இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

கரிமி, ஆப்கான் நாட்டின் திரைப்பட அமைப்பின் முதல் பெண் தலைவர் மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஆப்கான் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:26 pm



ஆப்கானிஸ்தான் பீதி மற்றும் குழப்பத்தில் மூழ்கியபோது, ​​தலிபான் போராளிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலில் கொல்கத்தாவில் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்தபோது, ​​50 வயதான யாஸ்மின் நிகர் கான் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்தார். நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர உலக சக்திகள் தலையிட வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

“நாங்கள் ஊடகங்களில் கேட்பது மற்றும் பார்ப்பது மிகவும் கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது முடிவுக்கு வர வேண்டும். உலக வல்லரசுகள், ஐக்கிய தேசிய கட்சிகள் தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நான் நம்புகிறேன், ”என்று கான் கூறினார்.

கானின் தந்தை, கான் லாலா ஜான் கான், 1996 ல் இறந்த, கான் அப்துல் கஃபர் கான், ‘எல்லைப்புற காந்தி’ என்று அழைக்கப்படுகிறார், இந்தியாவில் இருந்து பஷ்டுனிஸ்தானுக்கான போராட்டத்தைத் தொடர குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

கான் லாலா ஜான் கான் கொல்கத்தாவில் குடியேறி 1949 இல் அகில இந்திய பக்தூன் ஜர்கா-இ-ஹிந்த் (இந்தியாவில் பக்தூன்கள் அல்லது பதான்களின் அமைப்பு) ஒன்றை உருவாக்கினார்.

உலகெங்கிலும் உள்ள பழங்குடித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 1986 இல் முதல் முறையாக மற்றும் கடைசி முறையாக நான் எனது தந்தையுடன் காபூலுக்குச் சென்றேன். எனக்கு அந்த நாட்டைப் பற்றிய நல்ல நினைவுகள் உள்ளன. அப்போது, ​​பெண்கள் ஹிஜாப் அணிந்திருந்தாலும், ஜீன்ஸ் மற்றும் பாவாடை அணிந்திருந்ததைப் பார்த்தேன். ஆனால் இப்போது நாட்டைப் பாருங்கள். அது சிதைந்துவிட்டது. நான்கு தசாப்த கால யுத்தம் எல்லாவற்றையும் அழித்துவிட்டது ”என்று யாஸ்மின் கூறினார்.

அவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அகில இந்திய பக்தூன் ஜர்கா-இ-ஹிந்த் தலைவராக பொறுப்பேற்றார். தென்கிழக்கு கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் அருகிலுள்ள கரீம் ஹுசைன் லேனில் உள்ள அவரது அலுவலகத்தில் மேஜையில், எல்லைப்புற காந்தியின் லேமினேட்டட் படமும், மகாத்மா காந்தியுடன் அவரது உருவப்படமும் தெரியும்.

“எனக்கு ஆப்கானிஸ்தானில் உறவினர்கள் யாரும் இல்லை என்றாலும், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தில் பல பக்தூன்கள் இருக்கிறார்கள், அவர்கள் அந்த நாட்டில் தங்கள் அன்புக்குரியவர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தினமும் அழைப்புகள் வருகின்றன. ஊடகங்களில் நாம் பார்ப்பது ஒரு முனை மட்டுமே, ஏனெனில் சமூக ஊடகங்கள் தடுக்கப்பட்டுள்ளன மற்றும் மக்கள் வெளிப்படையாக எதையும் சொல்ல பயப்படுகிறார்கள், ”என்று அமைப்பின் செயலாளராக இருக்கும் அவரது சகோதரர் அர்ஷாத் அகமது டேனிஷ் கான் கூறினார்.

1892 ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் சின்னமான சிறுகதையான கபுலிவாலா எழுதினார் – கொல்கத்தாவில் வாழும் ஆப்கானிஸ்தான் குடிமகனின் கதை. 1957 ஆம் ஆண்டில், பிரபல இயக்குனர் தபன் சின்ஹா ​​ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்.

“என் தந்தையை எல்லைப்புற காந்தி இந்தியாவுக்கு அனுப்பினார், அவர் கொல்கத்தாவில் குடியேறினார். பக்தூன்கள் எப்பொழுதும் கொல்கத்தாவுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தனர், ”என்று அர்ஷாத் கூறினார், அவளுடைய சகோதரி யாஸ்மினுடன் சேர்ந்து கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார்.

பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களை விரும்ப மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல என்று குடும்பம் கூறுகிறது. அவர்கள் ‘வெளியாட்கள்’

ஆப்கானிஸ்தானில் உள்ள 90% குடிமக்கள் தலிபான்களை விரும்ப மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் ஆப்கானிஸ்தான் சென்றபோது அங்கு முஜாஹதீன்கள் இருந்தனர். அவர்கள் கூட தலிபான்களை விட சிறந்தவர்கள். தலிபான் போராளிகள் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட ஒரு பினாமி இராணுவம். மக்களின் உத்தரவு எடுக்கப்பட்டால், அவர்களுக்கு 10% வாக்குகள் கூட கிடைக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் அமைதியை விரும்புகிறோம், ”என்று யாஸ்மின் கூறினார்



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:29 pm



ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் நுழைந்தது இழுத்து அந்நாட்டை விட்டு அதிபர் அஷ்ரப் கனி வேறு நாட்டிற்கு தப்பி ஓடினார். மேலும், ஆப்கானிஸ்தான் தலிபான்களால் கைப்பற்றப் பட்டு விட்டதாகவும் அறிவித்தார். இதனையடுத்து நேற்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவது பற்றி டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:32 pm


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 C6rb1He

சட்டப்படி நான் தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபர் என அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லாஹ் சலோ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது என முடிவு செய்துள்ளதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதிபர் முகமது அஷ்ரப் கனி , நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லாஹ் சலோ டுவிட்டரில் கூறியது, தற்போதைய ஆப்கன் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்துவிட்டாலோ, அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலோ , சட்டப்படி துணை அதிபர் அதிபராக வர வேண்டும். அதன்படி அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், நான் தான் அடுத்த அதிபர், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒரு மித்த கருத்துடன் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் டுவிட் செய்துள்ளார்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:33 pm



ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு ஊடுருவியுள்ள மற்ற பயங்கரவாத அமைப்புகளால் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் தலிபான்கள் போல் வெள்ளைக் கொடியுடன், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,), ஜெய்ஷ் இ - முகமது (ஜே.எம்.,) மற்றும் லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களில் நுழைந்துள்ளனர்.

இவர்கள் தலிபான் தலைமையின் உத்தரவை மீறி தாங்களாகவே செயல்பட்டு வருகின்றனர். இது, நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு, காபூலின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் சவாலாக மாறக்கூடும். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களுக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படவும் வன்முறைகள் வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மற்ற பயங்கரவாதக் குழுக்களை காபூலை விட்டு வெளியேறுமாறு தலிபான்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆப்கானுக்குள் ஐ.எஸ்., உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளை தலிபான்களை தலையெடுக்க விடாமல் தடுப்பார்களா என, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:47 pm



ஆப்கன் மத்திய வங்கியின் ஆளுநர் அஜ்மல் அஹமதி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பண மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

அஹமதி தான் நாட்டைவிட்டு வெளியேறிய சூழல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.

அதில் அவர், "கடந்த ஞாயிறு காலை நான் வழக்கம்போல் பணியில் இருந்தேன். அன்று காலையில் இருந்தே தலிபான்கள் முன்னேற்றம் தொடர்பான செய்திகள் கவலை அளிப்பதாக இருந்தன. நான் வங்கியிலிருந்து வெளியேறினேன். அந்தத் தருணத்தில் எனது ஊழியர்களை மட்டும் அங்கேவிட்டுவிட்டு வெளியேறியவது கவலையை ஏற்படுத்தியது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆப்கன் ராணுவ விமானம் மூலம் அஹமதி சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார். அஹமதி உலக வங்கி, அமெரிக்கக் கருவூலம் போன்ற இடங்களில் பணிபுரிந்த அனுபவசாலி.

ஆப்கன் வீழ்ச்சி ஒரு புரியாத புதிர்:

அஹமதி மேலும் கூறுகையில், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏன் தலிபான்களிடம் இவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்பது இப்போதும் புதிராகவே இருக்கிறது.

தலிபான்கள் முன்னேற முன்னேற ஆப்கானிஸ்தானின் சந்தை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இதனால் ஆப்கனின் பணமான ஆஃப்கானியின் மதிப்பு சரிந்தது. முன்னதாக டாலருக்கு நிகரான ஆஃப்கானியின் மதிப்பு 86 ஆக இருந்த நிலையில், தலிபான்கள் ஆக்கிரமிப்பு தொடங்கிய பின் 100 ஆக சரிந்தது என அஹமதி குறிப்பிட்டிருக்கிறார்.

அதிபர் கனியின் திட்டமிடுதல் இன்மையும், அவரது ஆலோசகர்கள் அவரை சரியான பாதையில் வழிநடத்தாதும் அரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆட்சி மாற்ற திட்டம் எதையும் ஏற்படுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிய அதிபர் கனி மன்னிக்க முடியாதவர்.

இவ்வாறு அஹமதி பல்வேறு ஊடகங்களும் அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 9:48 pm



ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

''ஆப்கனில் நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை. அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இறங்கின. படைகளை எப்போது வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆப்கன் அரசும், படைகளும் தலிபான்களை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. அவர்களே எதிர்க்காதபோது அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது.

ஆப்கனில் நடக்கும் விஷயங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்''.

இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 6:52 pm



கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவசர அவசரமாக இந்தியர்கள் சிலருடன் முதல் விமானம் புறப்பட்டு இந்தியா வந்தது.

ஆனால், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 140 பேரை மீட்பதற்காக அடுத்த விமானத்தை அனுப்புவதற்குள் அங்கு நிலைமை மோசமானது. ஆப்கன் வான்வழி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள இந்தியர்களின் நிலை என்னவென்று கேள்விக்குறி எழுந்த நிலையில், திங்கள் நள்ளிரவு 140 இந்தியர்கள் பத்திரமாக விமானநிலையம் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு துணையாக ஆயுதமேந்திய தலிபான்களே வந்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தலிபான்களை ஆதரித்து வளர்த்தது பாகிஸ்தான். அதனாலேயே இந்தியா தலிபான்களை எதிர்த்து ஆப்கனுக்கு உதவிகளை செய்துவந்தது.

திங்கள் இரவு காபூலில் இந்தியத் தூதரகத்தின் வெளியே தலிபான்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்திருக்க உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.

காபூல் விமானநிலையத்தில் இந்திய ராணுவ விமானம் காத்திருக்கிறது. ஆனால், விமானநிலையத்தின் க்ரீன் ஜோன் வரை பாதுகாப்பாகச் செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் அவர்கள் இருந்தனர். ஒருவழியாக அனைவரும் 24 வாகனங்களில் இந்தியத் தூதரகத்தில் இருந்து புறப்பட்டனர். ஆயுதம் ஏந்திய தலிபான்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் நிலவியது. ஆனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்ப அங்கிருந்த தலிபான்கள் இந்தியர்கள் இருந்த வாகனத்தை நோக்கி வழியனுப்புவது போல் கையசைத்துள்ளனர். சிலர் வாகனங்களில் இருந்தவர்களைப் பார்த்து புன்னைகைத்துள்ளனர். இதனை ஒரு வாகனத்தில் இருந்த ஏஎஃப்பி செய்தியாளர் கூறியுள்ளார்.
அத்துடன் நில்லாமல், ஆயுதம் ஏந்திய ஒரு சிலர் இன்னொரு வாகனத்தில் ஏறிக்கொண்டு, இந்தியர்கள் இருந்த வாகனங்களுடனேயே விமானநிலையத்தின் க்ரீன்ஜோன் வரை வந்தார்.

அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்று வாகனங்களில் இருந்தவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை. ஆனால், தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் வரும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என இந்தியத் தூதரகத்தின் சார்பில் தலிபான்களிடம் வலியுறுத்தியதாகவும், அதனாலேயே இந்தியத் தூதரகத்தின் வாயிலில் இருந்த தலிபான்கள் வழிநெடுகிலும் மற்ற தலிபான் வீரர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்து பயணத்தை எளித்தாக்கும் வகையில் உடன் வந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தூதரகத்தில் இருந்து விமானநிலையத்துக்கு 5 கிலோமீட்டர் தூரம். இருள் சூழ்ந்த அந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியும் திக்திக்கென இருந்ததாக அந்தக் குழுவில் இருந்த சிலர் கூறுகின்றனர்.

நான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்..

இந்தப் பயணம் சாத்தியமானது குறித்து ஏர் இந்தியா ஊழியர் ஷிரினி பத்தாரே கூறுகையில், நாங்கள் வரும் வழியெல்லாம் அடிக்கொரு சோதனைச் சாவடி போல் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சில நேரங்களில் எங்கள் வாகனங்களுக்குத் துணையாக வந்த தலிபான் வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி அவ்வப்போது வானத்தை நோக்கிச் சுடுவார். அப்போதெல்லாம் உயிர் நின்றது போல் இருந்தது. விமானநிலையத்தை அடைந்ததும் எங்களுடன் வந்த தலிபான் வாகனம் திரும்பிச் சென்றது. அதன் பின்னர் விமானநிலையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தோம்.

பின்னர் சி17 இந்திய ராணுவ விமானத்தில் ஏறினோம். குஜராத்தில் விமானம் திரையிறங்கியது. இந்தியாவுக்குத் திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி. இந்தியா ஒரு சொர்க்கம் என்று கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த மற்றொருவர் கூறுகையில், நான் என் 2 வயது மகளுடன் என் அலுவலகத்தில் இருந்தேன். அங்கே சில தலிபான்கள் வந்தனர். அவர்கள் என்னை ஏதும் செய்யவில்லை. மென்மையாகவே விசாரித்தனர். நான் அச்சத்தில் இருந்தேன். பின்னர் சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்போது வாசலில் இருந்த இரண்டு வாகனங்களை எடுத்துச் சென்றனர். அந்தத் தருணம் நான் வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 6:56 pm



ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபானால் தங்களுக்கு உயிருக்கு நேரும் என அஞ்சிய 640 ஆப்கானியர்கள் அமெரிக்க ராணுவ சரக்கு விமானம் மூலம் வெளியேறிய காட்சி இது.

மேலும் பலர் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக பரிதவித்து வருகின்றனர்.

சர்வதேச மீட்பு குழுவின் சமீபத்திய கணக்குப்படி, சுமார் 5 லட்சத்துக்கு அதிகமான ஆப்கானியர்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 UndR9fd




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக