by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்
ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.
பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.
பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்
அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர்: இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளதாவது:
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர். மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து உள்ளீர்கள். அது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். தலிபான்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமான நிலையத்தை மூடிய தலீபான்கள்; சிக்கிக் கொண்ட இந்தியர்கள்! – துப்பாக்கி சூட்டால் பரபரப்பு!
காபூல் விமான நிலையத்தில் மக்கள் அதிகமாக கூடுவதால் விமான நிலையத்தை மூடுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
காபூல் விமான நிலையத்தில் மக்கள் அதிகமாக கூடி வரும் நிலையில் விமான நிலையத்தை மூடியதுடன், மற்ற நாடுகளுடனான விமான சேவைகளையும் ரத்து செய்வதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். இன்று பகல் 12.30க்கு இந்திய விமானம் செல்ல இருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் யாரும் பலியானார்களா என்பது குறித்து தெரியவரவில்லை, தலீபான்களின் இந்த முடிவால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
சர்வதேச ஊடகங்களில் சில நாள்களாக அதிகளவு பேசப்பட்ட பெயர் தலிபான். ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
அமெரிக்கப்படைகள் பின்வாங்கப்பட்டதன் விளைவாக, ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள் தற்போது அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்க கட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிடியில் தற்போது நாடு சிக்கியுள்ளது மேலும் அவர்களை வாட்டி வதைக்கவே செய்யும் என்று அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பெண்கள் உள்பட அந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்த அச்சம் அண்டை நாட்டின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியன் நாடுகளுக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு சோவியத் யூனியன் ஆதரவு என இரண்டு பக்கங்களில் நின்றன.
அப்போது, சோவியத் யூனியனின் ஆதரவோடு 1978ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், ஓராண்டில் அவர்களது ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சோவியத் யூனியன் ஆப்கனுக்குள் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆதரவோடு சோவியத் படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை மேற்கொள்ள தொடங்கின.
சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேல் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சோவியத் யூனியன் படைகள் 1989ஆம் ஆண்டு பின் வாங்கின.
1992 முதல் முஜாகிதீனின் 7 இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே 1994ஆம் ஆண்டு முஜாகிதீனின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து முல்லா ஓமர் தலைமையில் தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்.
தலிபான்களின் தொடர் தாக்குதலால், 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 26இல் தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்டது. முல்லா ஓமர் தலைமையிலான தலிபான்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பையேற்றனர்.
முல்லாவின் ஆட்சியில், கடுமையான பிற்போக்குவாத செயல்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றை மீறினால் மரண தண்டனையும் விதித்தனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான்களின் பாதுகாப்பில் இருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை பொறுப்படுத்தாமல் இருந்த ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்க படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.
ஆனால், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பிற்கும், நாட்டு மக்களின் படிப்பறிவை மேம்படுத்தவும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை.
இதனால், தலிபான் அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேரத் தொடங்கியதன் விளைவு மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.
2018ஆம் ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அவ்வப்போது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினாலும், இறுதியில் தலிபான்களின் கைகளே ஓங்கின.
பிப். 29, 2020இல் அமெரிக்கா - தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ஊடகப் பிரிவுத் தலைவர் தாவா கான் மேனாபால், இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனியல் சித்திகி உள்ளிட்டோரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
ஆனால், ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதலில் மட்டும் ஈடுபட்டனா்.
கடந்த 10 நாள்களிலேயே பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. இந்த நிலையில், தலைநகா் காபூலின் புறநகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
இதனிடையே, தலைநகரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்த விரும்பாததால் ஆட்சிப்பொறுப்பை விட்டு செல்வதாக தெரிவித்த அதிபா் அஷ்ரஃப் கனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். மேலும், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
மேலும், இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தலிபான் அரசுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு அளித்திருப்பது, இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தலிபான்களால் பிற நாட்டினருக்கு ஒருபுறம் பிரச்னை இருந்தாலும், சொந்த நாட்டை மீண்டும் பிற்போக்குத்தன்மைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எங்கள் உறவினர்கள் பயத்துடன் இருக்கின்றனர்' - மீட்கக் கோரும் இந்திய வாழ் ஆப்கானியர்கள்
தற்போது ஆப்கனில் வாழும் தங்களது உறவினர்கள் பயத்தில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்தியா உடனடியாக விசா வழங்க வேண்டும் என இந்திய வாழ் ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பல்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து தில்லியில் வசிக்கும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஷாகேப் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
தற்போது ஆப்கானிஸ்தானில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு ஆப்கானியர்களுக்கு இங்கு வருவதற்கு விசா வழங்க வேண்டும் என்றார்.
கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல், 'நான் ஒரு கண் மருத்துவராக இருந்தேன். ஒருமுறை தலிபான்கள் தங்கள் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி என்னிடம் கேட்டார்கள் ஆனால் நான் அவர்களுக்கு உதவ மறுத்தேன். அஷ்ரப் கனி, ஆப்கன் மக்களுக்கு தவறிழைத்துவிட்டார் என்றார்.
ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தான் மக்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆபத்தின் விளிம்பில் உலக அமைதி!!
ஐ.நா விரைந்து செயலாற்றுமா?
நேற்றைய தினம் தலிபான்களிடம் காபூல் வீழ்ந்தவுடனேயே ஆப்கான் முழுமைக்கும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இது போன்ற மிகப்பெரிய ஆபத்து நிகழும் என்பதை நான் கடந்த ஜூலை 17 ஆம் தேதியே எனது 10 பக்க கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முழுமையாக ஆப்கானிலிருந்து விலக்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் தலிபான்கள் சிறிதும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் யாருக்கும் சிறிதும் கூட இரக்கம் காட்டவில்லை. காபூல், கந்தகார் போன்ற பகுதிகளில் குடிகொண்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளைக் கூட காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வர முடியாத பரிதாப நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு, புதிய எழுச்சியோடு காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல; அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் தலைகுனிவே!
கடந்த 20 வருடமாகப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஆப்கானிஸ்தானுக்கு செலவு செய்ததாக அமெரிக்கா கூறிக்கொண்டாலும் வரலாறு மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தை மிகவும் பழமைவாய்ந்த அமைப்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி மிக முக்கியமான தருணத்தில் கைவிட்டுச் சென்றது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் எதிர்காலத்தில் தலைகுனிவையும், அவமானத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
எவ்வளவோ நாடுகளில் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் புரட்சிகள் மூலமாக அந்நாட்டு மக்கள் ஏதாவது ஒரு வகையில் விடுதலை பெற்று இருப்பார்கள்; அடையாளங்களை மீட்டெடுத்து இருப்பார்கள். ஆனால், ‘தலிபான்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிக மிகப் பழமைவாத, ஜனநாயக நெறிமுறைகளுக்கு சிறிதும் பொருந்தாத, மனிதநேயத்திற்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள். அவர்களிடத்தில் ஆட்சி-அதிகாரம் செல்வது என்பது ஆப்கானிஸ்தான் தேசத்திற்கு மட்டுமல்ல, அதேபோன்ற பழமைவாத, பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட சக்திகளும் பிற பகுதிகளில் எளிதில் தலைதூக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் வழி வகுக்கும்.
கடந்த 50 ஆண்டு காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளையும், அதை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எதிர்கொண்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்டை நாடான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பூர்வீக தமிழர்கள் தங்களுடைய மொழியும், இனமும், பண்பாடும், கலாச்சாரமும் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தங்களுடைய வாழ்வுரிமை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்று மட்டுமே போராடினார்கள். ஆனால், அவர்களை உலகின் எந்த தேசமும் அங்கீகரிக்க முன் வரவில்லை. ஆனால், பெரும்பாலான நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு தலைபட்சமாக விடுதலைப் புலிகளை மட்டுமல்லாமல் சாதாரண அப்பாவி மக்களையும் லட்சக் கணக்கில் கொன்று குவித்தார்கள். ஆனால் இன்று அப்பட்டமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள்; ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தலிபான்களுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படும் அனைவரும் தாக்கப்படுவது; சாதாரண மக்களைக் கடத்திச் செல்வது, பிணைக்கைதிகளாக வைத்துக்கொள்வது; தற்கொலைப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்துவது மற்றும் அதிதீவிர, பயங்கரவாத நடவடிக்கைகள்; வாகனங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகித் துயருற்று வருகிறார்கள். இதில் மட்டும் ஏன் உலகம் இவ்வளவு மௌனம் காக்கிறது என்பது புதிராகவே உள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் முக்கியமான கேந்திரத்தில் அமைந்து உள்ளதால் ஆப்கானில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஐரோப்பியா, ஆசியா மற்றும் பல நாடுகளுக்கு எதிர்விளைவுகளையும், அதிர்வலைகளையும் உண்டாக்கும். 2001க்கு பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, நேட்டோ நாடுகளும்; இந்தியா உட்பட பல நாடுகளும் செய்த வளர்ச்சிப் பணிகளும், இந்தியா கட்டிக் கொடுத்த நல்லெண்ண அணையும் அழிக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வருகின்றன. அங்கு தலிபான்களின் ஆட்சி-அதிகாரம் வலுப்பெற்று விட்டால் அவர்களுடைய இந்தியாவுடனான உறவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் நன்கு எண்ணி பார்க்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அண்டை நாடான பாகிஸ்தானும், சீனாவும் அவர்களுக்கு நெருக்கம் காட்டலாம். அதன் விளைவாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் நீட்சியாகக் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாறலாம். ஆனால் இவற்றை இந்தியா ஒருபோதும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என நான் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறேன். அதையே இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
ஐரோப்பிய நாடுகளின் தாராள ஜனநாயக நடவடிக்கை காரணமாக துனிசியா, சிரியா, ஈராக், லிபியா, ஈரான், எகிப்து, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போது அந்நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் அந்நாடுகளில் ஏற்படுத்தும் பிரச்சினைகளை அந்நாட்டவர்கள் இப்போது தான் உணர்ந்து வருகிறார்கள். தற்போது ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றுவதால் ஏற்படும் முக்கியமான ஆபத்துக்கள். 1. தலிபான்களின் சட்ட ஒழுங்கிற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டு வரும் சூழல் ஏற்படும். 2. 20 ஆண்டுக் காலத்திற்கு பிறகான தலிபான்களின் எழுச்சி உலக அளவில் ஆங்காங்கே முளைத்தும், முளையாமலும் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும். 3. தலிபான்கள் தங்களுடைய எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் எந்த பகுதியிலும் நேரடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2019ஆம் ஆண்டு உருவாகிக் கடந்த ஒன்றரை வருடமாக உலகை ஆட்டிப்படைக்கும் கரோனாவை காட்டிலும் ஆப்கான் தலிபான் வசம் சென்றது உலக தரப்பு மக்கள் மத்தியில் ஒரு மனோ கிலேசத்தை உருவாக்கி இருக்கிறது; ஆபத்தின் விளிம்பில் உலக அமைதியும் சிக்கியுள்ளது.
அமெரிக்கா தனது 250 ஆண்டுக் கால வரலாற்றில் ஆசிய, ஐரோப்பியப் பிரச்சனைகளில் எவ்வளவோ அரசியல், இராணுவ பிழைகளைச் செய்திருக்கிறது. இப்போது தலிபான்களிடம் ஆப்கானை ஒப்படைத்துச் சென்றது பிழையிலும் பிழையாகும். ஏகாதிபத்தியங்கள் ஏழை-எளிய ஏமாளிகளாக இருந்தால் ஏறி மிதிப்பார்கள்; எதிர்த்துப் போராடினால் தலை தெறிக்க ஓடுவார்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி.
அமெரிக்கா, உலக போலீஸ்காரராக தன்னை அடையாளப்படுத்தவும்; ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தங்களுடைய தலையாய கடமை என உலகிற்கு வெளிக்காட்டவும் துடியாய் துடிக்கும் தேசம். ஆனால் ஜனநாயகத்தின் கூறுகளைக் கோடியில் ஒரு பங்கு கூடக் கொண்டிராத தலிபான்களிடம் நடத்திய இரகசிய பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன? பல நாடுகளும் சேர்ந்து பயிற்சி அளித்து உருவாக்கிய ஆப்கான் ராணுவத்திற்கு இன்னும் கொஞ்சக் காலத்திற்கு வான்வெளி ஆதரவு மற்றும் மனோரீதியான ஆதரவு தராமல் பாதியில் விட்டுச் சென்றது ஏன்? 2020 கத்தார் நகரில் நடைபெற்ற இரகசியப் பேச்சு வார்த்தைக்கு மாறாக வன்முறை மூலமாக ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்களே? இதற்கெல்லாம் அமெரிக்கா வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும்.
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியது ஒரு நாட்டு எல்லைக்குள் முடியும் பிரச்சனை அல்ல. அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசிய குண்டுகளை காட்டிலும் பாதிப்பைத் தரும் விஷயமாகும். எனவே ஆப்கானின் அமைதி நிலை நாட்டப்பட வேண்டும். தலிபான்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளும் இணைந்து வலுவான அமைதிப் படை ஒன்றை ஆப்கானில் நிலைநிறுத்தப் படுவதற்கான வாய்ப்பு குறித்து ஐ. நா பொதுச் சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உடனடியாக கூட்ட வேண்டும். இந்த அசாதாரண சூழலில் இந்திய நாடும், நாட்டு மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:
அமெரிக்கா மற்றும் நேச நாடுகளால் உருவாக்கப்பட்ட 3,00,000 லட்சம் ஆப்கான் அரசின் படைகள் சிறிதும் கூட எதிர்ப்பு காட்டாமல் சரணாகதி அடைந்ததன் மர்மங்கள் குறித்து நாளை விரிவான கட்டுரை வெளிவரும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறுவயது முதல், மனதில் தேங்கிவிட்ட ஒரு கேள்விக்கு,
விடை கிடைத்த நாள் இன்று !
கேள்வி: "கஜினி, தைமூர், பாபர், திப்பு, அவுரங்கசீப் உள்ளிட்ட
வெறிபிடித்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், வாள்முனையில் ஹிந்துக்களை மதம் மாறச் சொல்லி,.. கண்ணெதிரில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை அவ்விதம் வாளால் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்வதைக் கண்ட பிறகும், அந்நாளைய ஹிந்துக்கள், உயிருக்கு பயப்படாமல், தங்கள் தர்மத்தை காத்து நின்றிருக்க முடியுமா?"
இன்று கிடைத்த விடை :
--------------------
"பல ஹிந்து பக்தர்கள், என் உயிரை நான் காத்துக்கொள்ள, என்னை காபூலை விட்டு வெளியேறிவிட வற்புறுத்துகின்றனர். என்னுடைய பயணம், பிற வசதிகளுக்கு ஏற்பாடு செய்யவும் தயாராக உள்ளனர்.
ஆனால், நூற்றுக் கணக்கான வருஷங்களாக என் முன்னோர்கள் பூஜை செய்த கோயிலை,.. (இஸ்லாமிய அடிப்படைவாத) தாலிபான்கள் கையில் விட்டுவிட்டு நான் போக மாட்டேன்."
"இவ் விஷயத்தில் தாலிபான்கள் என்னைக் கொன்றாலும், அதுவும் என் (பக்தி) சேவையாகவே ஆகும்."
: பண்டிட் ராஜேஷ் குமார், பூஜாரி, ரத்தன் நாத் கோவில், காபூல், ஆப்கானிஸ்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாம் முன்பே சொன்னபடி அந்த குட்டிசாத்தானை வைத்து ஒரு காலத்தில் ஆடிய அமெரிக்கா இப்பொழுது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிவிட்டது
நாம் சொன்னதுதான் நடந்து கொண்டிருக்கின்றது
ஆம், தாலிபன்கள் ஆப்கனை பிடித்துவிட்ட வேளை உலக வல்லரசான அமெரிக்கா தன் நாடகத்தி அடுத்த காட்சியினை அரங்கேற்றுகின்றது
மிக தந்திரமாக தன் இலக்கான ரஷ்யா முந்தி அறிக்கைவிடும் வரை அமைதிகாத்த அமெரிக்கா, நேற்று ரஷ்யா சார்பில் "தாலிபன் அரசை ஏற்கமாட்டோம்" என அறிக்கை வரும் வரை காத்திருந்து வாய் திறக்கின்றது
அமெரிக்க தரப்பின் அறிக்கைதான் உலகில் இன்று அதிர்ச்சி
அவர்கல் அறிக்கை என்ன சொல்கின்றதென்றால் "தாலிபான்களை தாக்கும் அவசியம் எமக்கு இல்லை, அவர்கள் அரசை ஏற்பதா வேண்டாமா என சில காலத்துக்கு பின்புதான் சொல்ல முடியும்"
இதன் ராஜதந்த அர்த்தம் தாலிபன் அரசை ஏற்க எமக்கு தயக்கமில்லை என்பதே
அமெரிக்காவின் இந்த பல்டி ஒன்றும் ஆச்சரியமல்ல அவர்கள் 400 ஆண்டுகால அரசியலில் அவ்வப்போது எதிரியும் நண்பனும் மாறிகொண்டே இருப்பார்கள். யாரும் எதுவும் அவர்களுக்கு நிரந்தரம் அல்ல
இந்த நூற்றாண்டில் கூட ஹிட்லருக்கு ஆயுதம் விற்றார்கள், பின் அழித்தார்கள். சீனாவோடு நட்பு கொண்டாடி வளர்த்தார்கள் இப்பொழுது எதிர்க்கின்றார்கள். ஈரானோடு அவர்களுக்கு பெரிய உறவு இருந்ததுபின் கசந்தது, நாளை இனிக்கலாம்
இந்தியாவினை அன்று முறைத்தார்கள் இன்று அரவணக்கின்றார்கள்
அப்படிபட்ட அமெரிக்கா ராஜதந்திரத்தில் தேர்ந்த நாடு, 1980களில் இதே தாலிபன்களால் சோவியத்தை விரட்டினார்கள், பின் தாலிபன்களோடு மோதினார்கள்
ஆனால் தாலிபன்களை முழுவதும் அழிக்க வாய்பிருந்தும் அமெரிக்கா அழிக்கவில்லை பலமான மர்ம திட்டம் அவர்களுக்கு இருந்தது
இதனால் 2017ல் இருந்து 4 வருடம் பல சுற்று பேச்சுக்களை பேசினார்கள், அப்பொழுதே ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது
இதனால் சும்மா நழுவுவது போல் நழுவிவிட்டார்கள், தாலிபனும் இப்பொழுது காபூலில் தாக்குதல் செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது
அதாவது முன்பே தீர்மானிக்கபட்ட நாடகம் அரங்கேறுகின்றது
ஆப்கனில் தாலிபன்களை கொண்டு செய்யபடும் உலக அரசியல் இதுதான்
தாலிபன்கள் பலம் பெறுவதை அமெரிக்கா விரும்புகின்றது, அவர்களின் பலம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் தலைவலியாக மாறும் என திட்டமிடுகின்றது
ரஷ்யாவோடு ஆப்கனுக்கு நேரடி தொடர்பில்லை எனினும் ஆப்கனை சுற்றியிருக்கும் மூன்று நாடுகள் முன்னாள் சோவியத் நாடுகள் எனும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு ரஷ்யா கையில் இருகின்றது
இப்பக்கம் சீனா, இன்னும் மேற்குபக்கம் ஈரான் என மூன்று அமெரிக்க எதிரிகளை சிக்கவைக்க தாலிபன்களை மறுபடியும் உருவாக்குகின்றது அமெரிக்கா
தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்கா பக்கம் செல்லாமல் ரஷ்ய தஜிகிஸ்தானுக்கு அடைக்கலமாக சென்றிருப்பது ஆப்கன் அரசின் அமெரிக்கா மேலான அதிருப்தியினை காட்டுகின்றது
இப்பொழுது தாலிபன்களை ஏற்க தயங்கமாட்டோம் என அமெரிக்கா அறிவித்திருப்பதும், தாலிபன்களுக்கு மட்டும் ஆப்கன் ஆட்சி சொந்தமானது அல்ல என ரஷ்யா அறிவித்திருப்பதும் அங்கு இன்னொரு இன மோதல் அல்லது உள்நாட்டு மோதல் தொடரபோவதை உறுதி செய்கின்றது
அதாவது தாலிபன்கள் தனிபெரும் சக்தியாக உருவாகி அக்கம் பக்கம் தொல்லை கொடுப்பதை அமெரிக்கா விரும்புகின்றது
அதே நேரம் தாலிபன்களுக்கு எதிரான கோஷ்டியினை உருவாக்கி அவர்களை கட்டுபடுத்த ரஷ்யா விரும்புகின்றது இதற்கு சீன ஆதரவும் உண்டு
ஆக 1980 காட்சிகள் திரும்புகின்றன, அன்று அமெரிக்கா வென்றது இன்றைய நிலையில் யார் வெல்வார்கள் என்பது காலத்தின் கையில் இருக்கின்றது
காலம் எப்படி எல்லாம் மாறும் என்பதல்ல விஷயம், காலத்துக்கு ஏற்றபடி அமெரிக்கா எப்படி எல்லாம் மாறுகின்றது என்பதுதான் ஆச்சரியம்
முகநூல் பகிர்வு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
-
ஆப்கானிஸ்தானுக்கான தூதர் வாபஸ்-
120 தூதரக அதிகாரிகளுடன் 2வது விமானம் இந்தியா வந்தது
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா
கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.
மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை
மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து
இந்தியாவுக்கான விசாவில் மாற்றங்களை மத்திய உள்துறை
அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
மாலைமலர்
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்