by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
75-வது சுதந்திர தினம்
Page 2 of 3 • 1, 2, 3
ஜனநாயகம் தழைக்கும் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா இளம் தேசம். 75-வது சுதந்திர தினத்துக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும் நம் இளம் தேசம் பல விஷயங்களில் மகத்தான சாதனைகள் செய்திருக்கிறது. நாம் நினைத்து நினைத்துப் பெருமிதப்பட வேண்டிய அந்த சாதனைகளின் ஒரு துளி இங்கே...
1. அமெரிக்கா சுதந்திரம் பெற்றபிறகு அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க 150 ஆண்டுகள் ஆனது. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலிலேயே எல்லோருக்கும் வாக்குரிமை வந்துவிட்டது.
2. பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் போனது. சீனாவோ ஒற்றைக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவசரநிலை கால கறுப்பு வரலாற்றைத் தாண்டி, உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக தழைத்து நிற்கிறது இந்தியா.
3. உலகின் மிக நீளமான அரசியல் சட்டம் இந்தியாவுடையது. தேவைப்படும் இறுக்கமும், அவசியமான நெகிழ்வுத்தன்மையும் கொண்டது இது.
4. உலகின் மிக உயரமான எல்லைப் பிரதேசம் எனக் கருதப்படும் சியாச்சின் மலையை இந்திய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
5. 1974-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை செய்து, உலகின் ஐந்து அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துவிட்டது.
6. கிழக்கு பாகிஸ்தானில் அரச வன்முறை நிகழ்ந்தபோது இந்தியா தலையிட்டு வங்க தேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது.
7. இந்தியா - பாகிஸ்தான் போரின்போது 80,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். உலகின் மிகப்பெரிய ராணுவ வெற்றி இது.
8. கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியபோது நம் ராணுவம் தீரத்துடன் போரிட்டு வெற்றி அடைந்தது. உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் நிகழ்ந்த போர் இது.
9. மியான்மர் காடுகளில் பதுங்கியிருந்து இந்தியா மீது தாக்குதல் தொடுத்த போராளிக் குழுக்களை அங்கே சென்று தாக்கி அழித்தது இந்திய ராணுவம். இதேபோன்ற சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை பாகிஸ்தானுக்குள் சென்றும் நடத்தியிருக்கிறது நம் ராணுவம்.
10. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக உருவாக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2009-ம் ஆண்டு இந்தியா உருவாக்கிய ஐ.என்.எஸ் அரிஹந்த் அப்படிப்பட்டது. 3,500 கி.மீ தூரம் வரை தாக்கும் ஏவுகணைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
11. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டனுடன், விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை உருவாக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது இந்தியா. ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் இந்த மாதம் பரிசோதனைப் பயணம் செய்கிறது.
12. அதே ஐந்து நாடுகளுடன், ஏவுகணை வல்லமை பெற்ற ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது இந்தியா. 2006-ம் ஆண்டில் நாம் உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, மணிக்கு 3,675 கி.மீ தூரம் பயணிக்கும் வல்லமை பெற்றது.
13. குறைந்த எடையுள்ள போர் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுவிட்டது. இந்த தேஜாஸ் விமானங்கள் 2019-ம் ஆண்டு விமானப்படையில் இணைக்க ஒப்புதல் பெற்றுவிட்டன.
14. விண்ணில் சுற்றி நம்மை உளவுபார்க்கும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் வல்லமையை நாம் பெற்றுவிட்டோம். `மிஷன் சக்தி' என்ற இந்தத் திட்டம் 2019-ல் வெற்றியடைந்தது.
15. ராணுவச் சேவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் நாம் இணைத்திருக்கிறோம். போர் விமானங்களையே பெண்கள் இயக்குகிறார்கள்.
16. கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் இந்தியா வென்றது. ஒட்டுமொத்த தேசத்திலும் விளையாட்டைத் தாண்டியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெற்றி இது. சாமானியர்களுக்கு நம்பிக்கையாய் விளங்கியது. சச்சின்களை, டிராவிட்களை பேட் பிடிக்க வைத்தது.
திறமைகளின் தேசம்! - 75
17. சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் வீரரானார். 80’ஸ் கிட்கள் முதல் 2k கிட்ஸ்வரை கிரிக்கெட் மீதான காதலைக் கடத்தி வந்த அந்த ஒற்றைப் புள்ளி - சச்சின் டெண்டுல்கர்.
18. விஸ்வநாதன் ஆனந்த் 2000-ம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றார். மாஸ்கோவில் குடிகொண்டிருந்த சதுரங்கக் கடவுள்களை மெட்ராஸுக்கு இடம்பெயரச் செய்தார் ஆனந்த். பல கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா உருவாக்க, ஆனந்த் விதையாக இருந்தார்.
19. பேட்மின்டனில் 1980-ம் ஆண்டு பிரகாஷ் படுகோன் `ஆல் இங்கிலாந்து' பதக்கம் வென்றார். சீன, இந்தோனேஷிய, டென்மார்க் வீரர்களின் ஆதிக்கத்தை உடைக்க முடியும் என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு அது கொடுத்தது. சிந்துவும் சாய்னாவும் பேட்மின்டனில் 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்ல அது காரணமானது.
20. ஒலிம்பிக்கில் வெண்கலமே கனவாக இருந்தபோது, அபினவ் பிந்த்ரா 2008-ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்று மொத்த தேசத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று பல இளம் வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் நிற்பதற்கு பிந்த்ராவின் தோட்டா முக்கிய காரணம்.
21. இந்தியா அரங்கேற்றிய மிகப்பெரிய விளையாட்டுத் தொடர், 2010 காமன்வெல்த் போட்டிகள். ஒரு மிகப்பெரிய தொடரில் சொந்த மண்ணில் நெருக்கடியை வென்று சாதித்தது, 2012 ஒலிம்பிக்கில் இந்தியர்கள் சிறப்பாகச் செயல்பட உதவியது.
22. ஃபிஃபா அண்டர் 17 கால்பந்து உலகக் கோப்பையை 2017-ம் ஆண்டு இந்தியா நடத்தியது. இது கால்பந்தின் அவசியத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது. ஜேடன் சான்சோ, ஃபில் ஃபோடன் போன்ற ஜாம்பவான்கள் இந்தியாவில்தான் தங்களை முதல்முறையாக நிரூபித்தார்கள்.
23. ரிலையன்ஸின் வருகை - தனியார்மயத்தால் இந்திய விளையாட்டின் முகம் மாறியுள்ளது. ஐ.எஸ்.எல், புரோ கபடி, புரோ வாலிபால் போன்ற தொடர்கள் இளம் வீரர்களை அடையாளம் காண உதவின. ரிலையன்ஸ் - ஐ.எம்.ஜி கூட்டணியின் `கேலோ இந்தியா' திட்டம், பள்ளி அளவிலேயே வீரர்களை அடையாளம் காணும் புதுமை முயற்சி.
24. இந்திய ஹாக்கி அணி டோக்கியோவில் வென்ற வெண்கலம், இந்திய ஹாக்கியின் அழிவைத் தடுக்கவும், அதன் பெருமையை மீட்கவும் உதவும்.
25. தடகளத்தில் இந்தியா வென்றிருக்கும் முதல் தங்கப்பதக்கம், நீரஜ் சோப்ராவின் ஈட்டி முனையால் கிடைத்தது. இன்னும் பல நம்பிக்கைகளுக்கு முதல் புள்ளி இது.
திறமைகளின் தேசம்! - 75
26. கல்வியறிவில் கடைசி வரிசையில் இருந்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பிறகு செய்தது அசுரப் பாய்ச்சல். 1989-ம் ஆண்டு கேரளாவின் கோட்டயம், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் ஆனது. இன்று உலகின் பெருநிறுவனங்களை நிர்வாகம் செய்கிறார்கள் இந்தியர்கள்.
27. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற மக்களுக்கு ஆண்டில் 100 நாள் வேலையை உறுதி செய்தது. வறுமையும் பசியும் நீங்குவதற்கான ஆதாரமாக இது இருந்தது.
28. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை எளியவர்களும் கேள்வி கேட்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
29. கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டாய இலவசக் கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கும் சாத்தியமாக்கிய நடைமுறை இது.
30. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ம் ஆண்டு அமலானது. மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் இந்தத் திட்டம், வறிய குடும்பங்களின் பசி நோயைப் போக்கி உணவு உரிமையை வழங்கியது.
31. இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று விண்ணில் ஏவப்பட்டது. இன்று விண்வெளியை வசப்படுத்திய டாப் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
32. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று நிலைநிறுத்தியது இந்தியா. 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட உலக சாதனை இது.
33. நிலவுக்கு சந்திரயான் 1 விண்கலத்தை 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக ஏவியது இந்தியா. நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் கண்டறிந்தது.
34. செவ்வாய் கிரகத்தை எட்ட மங்கள்யான் விண்கலத்தை 2013-ம் ஆண்டு இந்தியா ஏவியது. 2014 செப்டம்பரில் இது செவ்வாயை அடைந்தது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு அடுத்து செவ்வாயை எட்டிய நாடானது இந்தியா. முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தது இந்தியா மட்டுமே!
35. சந்திரயான் 2 விண்கலத்தின் ரோவர் நிலவில் இறங்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும், அந்த விண்கலம் இன்னமும் நிலவை ஆராய்ந்துகொண்டிருக்கிறது.
36. அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக NAVIC (Navigation with Indian Constellation) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஜி.பி.எஸ்-ஸைவிடத் துல்லியமானது.
37. அமைதிக்கான நோபல் பரிசை இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது. அன்னை தெரசாவும் கைலாஷ் சத்யார்த்தியும் அந்தப் பெருமைக்குரியவர்கள்.
38. அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி இருவரும் இந்தியப் பொருளாதார ஞானத்தின் அடையாளங்களாக நோபல் வென்றார்கள்.
திறமைகளின் தேசம்! - 75
39. இந்தியா 21 மொழிகளில் திரைப்படங்களை உருவாக்குகிறது. இவ்வளவு மொழிகளில் படங்கள் உருவாகும் நாடு இதுதான்.
40. உலகிலேயே அதிக திரைப்படங்கள் இந்தியாவில்தான் வெளியாகின்றன.
41. இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருதை வென்றவர் ஒரு பெண். `காந்தி' படத்தின் ஆடை வடிவமைப்புக்காக பானு அத்தையா வென்றார்.
42. தன் வாழ்நாள் முழுக்க ஏராளமான தேசிய விருதுகளை வென்ற சத்யஜித் ரே, சினிமா சாதனைகளுக்காக கௌரவ ஆஸ்கர் விருது பெற்றார்.
43. இந்தியாவின் ஆஸ்கர் ஏக்கத்தைத் தீர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரட்டை ஆஸ்கர் வென்றார். ஒலிக்கோப்புக்காக ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வென்றார்.
44. இலக்கியத்துக்காக புக்கர் பரிசை முதலில் வாங்கிப் பெருமை சேர்த்தவர்கள் இரண்டு பெண்கள். அருந்ததி ராய் தன் முதல் நாவலுக்காக 1997-ல் வாங்கினார். கிரண் தேசாய் 2006-ல் வாங்கினார். அதன்பின் அரவிந்த் அடிகா 2008-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வென்றார்.
45. பாலுக்காக ஏங்கிய இந்தியாவை, டாக்டர் வர்கீஸ் குரியன் ஏற்படுத்திய வெண்மைப் புரட்சி, உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியது.
46. அதிக விளைச்சல் தரும் பயிர்கள், உரங்கள், பாசன வசதிகள் எனப் பசுமைப் புரட்சியே இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றியது. சர்ச்சைகள் இருந்தாலும், இதுவே பட்டினிச் சாவுகளைத் தடுத்தது.
47. இந்தியாவிலேயே 100% இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக சிக்கிம் மாறியிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு இது ரோல்மாடல்.
48. சட்லெஜ் நதியில் கட்டப்பட்டிருக்கும் பக்ரா அணை, முழுவதும் கான்க்ரீட்டில் கட்டப்பட்ட உலகின் பெரிய அணைகளில் ஒன்று.
49. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் இருக்கும் நாடு இந்தியா. காஷ்மீரின் தால் ஏரியில் படகு ஒன்றில் மிதக்கும் தபால் நிலையமும் செயல்படுகிறது.
50. 1,19,630 கி.மீ நீளப்பாதை, 7,216 ரயில் நிலையங்கள் என உலகின் பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்திய ரயில்வேயும் ஒன்று.
51. இந்தியாவில் அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனம், இந்திய ரயில்வே. 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணி செய்கிறார்கள்.
52. ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமாக இருக்கும் செனாப் பாலம், உலகின் அதி உயர ரயில் பாலம். செனாப் நதிக்கு மேலே 1,178 அடி உயரத்தில் இது இருக்கிறது.
53. அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் சாலைகள் இருப்பது இந்தியாவில்தான். 19 லட்சம் மைல் நீளத்துக்குச் சாலைகள் உள்ளன.
54. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும் 5,846 நீள தங்க நாற்கரச் சாலைப் பணி 2012-ம் ஆண்டு முடிந்தது. நம் பயணத்தை இது எளிதாக்குகிறது.
55. லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் இருக்கும் சாலையே, உலகின் மிக உயரமான இடத்தில் வாகனங்கள் பயணிக்கும் சாலை.
56. இமயமலையில் டிராஸ் மற்றும் சுரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள பெய்லி பாலம், உலகின் மிக உயரமான பகுதியில் இருக்கும் பாலம். இந்திய ராணுவம் இதைக் கட்டியது.
57. மும்பையில் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளை இணைக்க கடல்மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளைப் பிணைத்தால், இந்த பூமியை ஒரு சுற்றுச் சுற்றிவிடலாம்.
58. குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த 1990-ம் ஆண்டில் 1,75,000 இந்தியர்களை அங்கிருந்து காப்பாற்றி விமானத்தில் அழைத்து வந்தது இந்தியா. உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை இது.
59. உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற விருதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் 2015-ம் ஆண்டு பெற்றது.
60. மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் ஆயுத சோதனைக்கும் உதவும் நியூக்ளியர் ரீயாக்டரை ஆசியாவிலேயே முதலாவதாக 1956-ம் ஆண்டில் இந்தியா உருவாக்கியது. அப்சரா என்ற பெயருள்ள அது இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.
61. 1953-ம் ஆண்டே சிறிய அனலாக் கம்ப்யூட்டர் ஒன்றை இந்தியா உருவாக்கிவிட்டது. 1955-ல் HEC 2M என்ற கம்ப்யூட்டர் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.
62. `பரம்' என்ற வரிசையில் அதிவேகமுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
63. உலகில் இணையத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். ஐ.டி தொழிலிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
64. 2004-ம் ஆண்டில் சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது, `அந்நிய உதவிகள் தேவையில்லை' என இந்தியா மறுத்தது. பேரிடர்க் காலங்களில் நிவாரணப் பணிகளைச் செய்ய மேற்கு உலகின் உதவி இப்போது நமக்குத் தேவைப்படுவதில்லை.
65. ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைந்து உலகெங்கும் கலவரப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது.
66. போலியோவை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் 2014-ம் ஆண்டு இந்தியா இணைந்தது.
67. பெரிய தனியார் வங்கிகளை 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கியது இந்தியா. கிராமங்களிலும் வங்கிகள் வருவதற்கு இந்த நடவடிக்கை காரணமானது.
68. பொருளாதார தாராளமயமாக்கலை 91-ம் ஆண்டு அனுமதித்தது இந்தியா. இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தி இந்தியா.
69. சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யாவுக்கு அடுத்து அமெரிக்க டாலரில் அதிக அந்நியச் செலாவணி வைத்திருக்கும் ஐந்தாவது நாடு இந்தியா.
70. உலகிலேயே மிக வேகமாக வர்த்தகம் நடைபெறுவது மும்பைப் பங்குச்சந்தையில்தான்.
71. பிரம்மபுத்திரா நதிப்பகுதியில் இருக்கும் மஜுலி தீவு, தனி மாவட்டம் ஆகியுள்ளது. இது உலகின் முதல் தீவு மாவட்டம்.
72. மேகாலயாவின் மேசின்ராம் பகுதி, உலகிலேயே அதிக மழைப்பொழிவு பெறும் பகுதி. ஆண்டுக்கு 11,873 மி.மீ மழை பெய்கிறது.
73. குடும்ப அமைப்பு பெருமைப்படுத்தப்படுவது இந்தியப் பண்பாட்டில்தான். 181 பேர் கொண்ட உலகின் பெரிய குடும்பம், மிசோரம் மாநிலத்தின் பக்தாங் கிராமத்தில் வசிக்கிறது.
74. புலிகளைக் காக்க `புராஜெக்ட் டைகர்' திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. தேசிய சரணாலயங்களை அமைத்து, புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
75. பொதுநல வழக்கு என்ற ஆயுதத்தை எளிய இந்தியர்களின் கையில் 1979-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்தது. நீதி தேவதையின் கரங்களை எந்தப் பிரச்னைக்கும் எவரும் இறுகப் பற்ற முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
75-வது சுதந்திர நினைவு தூணை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கியது.
முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் நினைவுத்தூணை திறந்து வைத்தார். நினைவுத்தூணில் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணில் அமைக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொடியேற்றும் நிகழ்ச்சி ரத்து; கோவா தீவில் பதற்றம்
பனாஜி-கோவாவின் சாவோ ஜசின்டோ தீவில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை அறிவித்துள்ளது. எனினும், நிகழ்ச்சியை நடத்த முதல்வர் சாவந்த் அறிவுறுத்தி உள்ளார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள தீவுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனினும், தெற்கு கோவாவில் உள்ள சாவோ ஜசின்டோ என்ற தீவில் மூவர்ணக் கொடியை ஏற்ற, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக, இந்திய கடற்படை நேற்று அறிவித்தது.எனினும் திட்டமிட்டப்படி தீவில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்த, முதல்வர் சாவந்த், கடற்படை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். மேலும், ''தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அப்பகுதி மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.இதையடுத்து, 'தீவில் கொடி ஏற்ற, தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேசிய கொடி குறியீடு மற்றும் நிறுவுவதற்கான சட்டங்கள்
நம் தேசிய கொடி பல காலகட்டங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. இன்று நாம் காணும் தேசிய கொடி 1947 ம் வருடம் ஜூலை 22ம் தேதி நடந்த அரசியல் அமைப்பு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
மூவண்ண கொடி
முதன் முதலில் தேசிய கொடியானது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டது. அது 1906ம் ஆண்டு ஆக., 7 ல் கோல்கட்டாவிலுள்ள பார்சி பாகன் சதுகத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் 1921 ம் ஆண்டு சுதந்திர போரட்ட வீரர் பிங்காலி வெங்கையா மகாத்மா காந்தியை சந்தித்து இரண்டு சிவப்பு பட்டைகள் மற்றும் ஒரு பச்சை பட்டையுடன் கூடிய கொடியாக மாற்றும் படி யோசனை கூறினார். அதன் பின்னரும் பல மாற்றங்களை சந்தித்த தேசிய கொடி 1931 ம் ஆண்டு கராச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கூட்டத்தில் தற்போதுள்ள மூவண்ண கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
தகுந்த மரியாதை
தேசிய கொடிக்கான சட்டம் 1950 மற்றும் 1970 ம் வருடங்களில் கொண்டு வரப்பட்டது. இதன் படி தேசிய கொடியை யார் பறக்க விடலாம் மற்றும் கொடிக்கான மரியாதை போன்றவை கண்காணிக்கப்பட்டு வந்தது. 1971ம் வருடம் கொண்டு வரப்பட்ட தேசிய மரியாதை சட்டத்தின் படி தேசிய சின்னங்கள் தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய வரைபடம் போன்றவற்றிற்கு பொது இடங்களில் தகுந்த மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மீறுவோர்க்கு மூன்று வருட சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தகுந்த காரணங்கள் இல்லாமல் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதும் குற்றமாக கருதப்பட்டது. மேலும் தேசிய கொடியினை கைக்குட்டைகள், நாப்கின்கள் மற்றும் மெத்தைகளில் அச்சிட்டுவதும் குற்றமாக கருதப்பட்டது. கொடியின தரையில் படும் படி வைத்தல், மற்றும் தலைகீழாக பறக்க விடுதலும் அதனை அவமதிப்பதாக கருதப்படுகிறது.
2002ம் ஆண்டின் தேசிய கொடி குறியீட்டில், மூவண்ணங்களுக்கான விளக்கம், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் , அரசு சாந்த நிறுவனங்கள் அவற்றை கையாள்வதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதன் படி பொது, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேசிய கொடியினை நிறுவுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், வணிக நோக்கத்திற்காகவும், தனிப்பட்ட மனிதனை கவுரவிக்கவும் அதை பயன்படுத்த முடியாது. அலங்காரப் பொருளாகவும் தேசிய கொடியினை பயன்படுத்த கூடாது.
வடிவமைப்பு
கொடி குறியீட்டின் படி ஒன்பது நிலையான அளவீடுகளில் தேசிய கொடி வடிவமைக்கப்பட வேண்டும். 6300x4200, 3600x2400, 2700x1800, 1800x1200, 1350x900, 900x600, 450x300, 225x150 மற்றும் 150x100 (மி.மீ) என்ற அளவீடுகளில் கொடி வடிவமைக்கப்பட வேண்டும். இதில் 450 x300 என்ற அளவில் உள்ள கொடி வி.வி.ஐ..பியின் விமானங்களிலும் 225x150 என்ற அளவில் உள்ள கொடி வி.வி.ஐ.பி.,கார்களிலும் மற்றும் 150x100 என்ற அளவில் உள்ள கொடி மேஜைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் கொடியின் நீளம் மற்றும் அகலம் 3;2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் தேசிய கொடி பெரும்பாலும் கையால் நெசவு செய்யப்பட்ட துணியால் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஊர்வலங்களில் தேசியக் கொடி எடுத்துச் செல்லப்படும் போதும், கொடி யேற்றப்படும் போதும் இறக்கப்படும் போது அதற்கு மரியாதை அளிக்க வேண்டும். மிக முக்கிய தலைவர்கள் இறப்பின் போது தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடலாம். ஆனாலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடக் கூடாது.
அவமதிப்பது குற்றம்
சமீப காலங்களில் பிரபலங்கள் சிலர் தேசிய கொடியினை அவமதித்த சம்பவங்கள் எதேச்சையாக நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மூவண்ணக் கொடி வடிவத்தில் உள்ள கேக்கினை வெட்டி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். மந்திரா பேடி மூவண்ணத்திலான சேலையை அணிந்தததால் அவர் மீது வழக்கு பதிவானது. அதே போல் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவும் இதே போன்ற தேசிய கொடி அவமதிப்பு சம்பவத்தில் சிக்கினார். அமிதாப்பச்சன் மற்றும் சாருக்கான் போன்றோரும் இதே போன்ற சர்ச்சயைில் சிக்கினர் என்பது குறிப்பிடதக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூகுள் நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய நடன வடிவங்களை விளக்கும் சிறப்பு டூடுலுடன் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி கெளரவித்தது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோதி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றி நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி கொண்டாடினார்கள். அதேபோல, கூகுள் நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய நடன வடிவங்களை விளக்கும் சிறப்பு டூடுலுடன் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி கெளரவித்தது.
பரதநாட்டியம், பாங்க்ரா, சாவ் நடனம் என, கூகுள் டூடுல் (Google Doodle) இந்தியாவின் பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியம் தொடர்பான டூடுலை வெளியிட்டு நாட்டின் பன்முக கலாச்சார உணர்வுக்கு மரியாதை செய்தது.
பல தசாப்த காலங்களாக தொடர்ந்த போராட்டம் மற்றும் அளப்பரிய தியாகங்களுக்குப் பிறகு இந்தியா, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் நாளன்று இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
"டூடுல் கலைப்படைப்பு இந்த மாறுபட்ட நடன வடிவங்களை விளக்குகிறது. இடதுபுறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடனம் பரதநாட்டியம். இது மிகவும் பழமையான இந்திய நடனம், தென் தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது" என்று கூகுள், அந்த டூடுலுக்கு விளக்கம் எழுதியுள்ளது.
"வலப்புறம் இருந்து மூன்றாக சித்தரிக்கப்பட்டது, சாவ் நடனம் என்று அழைக்கப்படும் இந்திய பாரம்பரிய நடனம். நாட்டின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் தோன்றியது. புருலியா சாவ் மற்றும் செரைகெல்லா சாவ் பகுதிகளில் இந்த நடனம் தோன்றியது" என அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவால் சேர்ந்த கலைஞர் சயான் முகர்ஜி இந்த டூடுலை உருவாக்கியுள்ளார். "நாட்டின் பன்முகத்தன்மையைக் காட்ட பல்வேறு இந்திய நடன வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைத்தான் நம் அனைவரையும் வலுவாக ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. டூடுலில் இருந்து மக்கள் அதை புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் சொல்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர இந்தியாவுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை அவர் நினைவு கூர்ந்தார். கொரோனா (COVID-19) வைரஸை எதிர்கொள்ள பணியாற்றும் முன்களப் பணியாளர்களையும் பிரதமர் மோடி கெளரவித்தார்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகளுக்கு நிறைய பேரை அழைக்கவில்லை. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற 32 வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நாட்டில் சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்படுவதை அடுத்து தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல் முறையாக இந்திய விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.
நாட்டில் சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்படுவதை அடுத்து தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ராஜ்காட் வந்த அவர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) காலை ட்வீட் செய்து சுதந்திர தினத்தன்று அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்து கூறினார்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகளுக்கு நிறைய பேரை அழைக்கவில்லை. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற 32 வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
#செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
புது டெல்லி: 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஏற்றுவார். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான வீரர்கள், நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் (CCTV cameras) மற்றும் #ட்ரோன்_கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ட்ரோன் ரேடார்கள் மூலம் கண்காணிப்பு:
செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு அமைப்பில் 5000 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
40 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்:
தேசிய தலைநகரம் டெல்லி முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். முன்னெச்சரிக்கையாக டெல்லியின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் ஒவ்வொரு பார்வையாளரும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்கள்:
இந்த பாதுகாப்பு ஏற்பாட்டில், காவல்துறை தவிர, துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள், எஸ்பிஜி பணியாளர்கள் மற்றும் உயர் கட்டிடங்களில் குறிசுடுநர்கள் (Sniper) நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டிடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை:
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டி வருகின்றன. இதில் முக்கியமாக காலிஸ்தானி பயங்கரவாதிகளின் (Khalistani terrorists) அச்சுறுத்தல் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன மற்றும் அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளும் எழுதப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
#காசி_விஸ்வநாதர் சுதந்திர தின சிறப்பு அலங்காரத்தில்...
ஓம் நமசிவாய போற்றி!
ஜெய் ஹிந்த்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிதம்பரம் அருள்மிகு நடராஜர்
கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி.
-
இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு.
அன்றைய தினம் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள்.
பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும்..
அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்"
என இன்று கொண்டாடும் சுதந்திரம் சும்மா வந்தது அல்ல
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?"
என கண்ணீரும் செந்நீருமாய் சுமார் ஆயிரம் ஆண்டுகள் போராடி மீட்ட சுதந்திரம் இது, இன்னொரு நாட்டுக்கு இந்த நீண்ட நெடிய போராட்டம் சாத்தியமே இல்லை
ஏறகுறைய 800 ஆண்டுகாலம் ஆப்கானியரோடு யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா
மாவீரர் பிரித்விராஜன் கோரியோடு தொடங்கிய யுத்தம் பின் வீரசிவாஜி, புலித்தேவன், மருது பாண்டியர், சாவர்க்கர், திலகர், வ.உ.சி என யாரெல்லாமோ தொடர்ந்து பின் 1947ல் சுதந்திரமாய் முடிந்தது
ஆனால் வளமான அந்த இந்தியாவினை சுரண்டியதோடு மட்டுமல்லாமல் வஞசகமாய் பிரித்து போட்டு ரத்த ஆற்றில் மிதந்து வந்த குழந்தையாக இந்திய சுதந்திரத்தை ஏளனம் செய்துவிட்டே கிளம்பினான்.
பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, இந்நாட்டின் வளத்தை தேடி வந்த பிரிட்டிஷ்காரன் ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான்.
அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம் என ரத்த்தில் பிரிந்தது தேசம்.
75 வருடமாக எதையெலாம் கடந்து வந்தோம்?
ஒன்றா? இரண்டா? இத்தேசம் கடந்த சோதனைகளும் தடைகளும், மெல்ல மெல்ல அவற்றையெல்லாம் தாண்டித்தான் உலகில் இன்று சிறந்து நிற்கின்றோம்
சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம், நிலைத்தோம்.
தேசம் நிலைத்தது, பட்டேல் அந்த அதிசயத்தை செய்தார் இந்த நாட்டை இரும்பு மனிதனாய் உறுதியான நாடாக்கினார்.
இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்.
பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என நம் முதுகில் குத்திற்று.
அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.
மீண்டும் போர், அதையும் தாண்டி அந்நிய சக்திகளின் கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.
ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா
குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.
சுதந்திரம் பெற்றபொழுது சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், கூடவே தீரா எதிரியும் உருவாக்கிவிட்டு சென்றான்
அந்த எதிரி பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.
இன்னொரு பக்கம் உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்
கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை
அதை இப்பொழுது இன்னும் கூர்மையாக்கி இருகின்றோம்
ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்
சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்.
செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது. செயற்கை கோள் என வானுக்கு தாவ முடிகின்றது, ஆழகடல் வரை இந்திய நீர்மூழ்கிகள் தொட முடிகின்றது.
ஒரு குண்டூசி கூட செய்ய தெரியா தேசம் என இந்தியாவினை எள்ளி நகையாடினான் சர்ச்சில், ஆனால் இன்று ஆடை முதல் ஆயுதம் வரை, ஏன் கொடிய நோய்காலத்தில் மருந்து வரை உலகுக்கு வழங்குகின்றது இந்தியா
இந்தியருக்கு நாகரீக உடை செய்ய தெரியாது என்ற வெள்ளையனின் பொய்யினை முறியடித்து எவ்வளவோ வகைகளை ஏற்றுமதி செய்கின்றது இந்தியா
சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்
இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை.
அதுவும் ஜனநாயக நாட்டுக்கு சாத்தியமே இலை அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.
இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.
சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.
ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?
இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.
எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.
ஆனானபட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்க தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியன்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்
இந்த மண்ணின் தர்மம் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன, எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைபட வேண்டும்
அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.
சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல
காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு யாரையும் கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது
இது எத்தனை நாடுகளில் சாத்தியம்? எந்த நாட்டில் சாத்தியம்
ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.
இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.
நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது,
காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??
இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.
1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.
இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.
1962ல் எந்த சீனாவிடம் பணிந்தோமோ அதே சீனாவினை 2020ல் ஓடவிட்டு அடிக்கின்றோம் அல்லவா அது வெற்றி
ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.
சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல்,இன்னும் பல உலகளாவிய மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை.
இன்றைய கொரோனா கால நெருக்கடி கூட இந்திய பொருளாதாரத்தை தொட்டு பார்க்க முடியவில்லை
காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.
விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்.
அதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கின்றார், உள்நாட்டிலே வெளிநாட்டு நுட்பத்துடன் தயாரிப்பு முதல் நவீன கல்வி, நவீன கண்டுபிடிப்புகள் என அவர் ஊக்குவித்து கொண்டிருக்கின்றார்
தேசத்தின் தொழிலதிபர்கள், ராணுவம், மாணவர்கள், விஞ்ஞானிகள், மக்கள் என எல்லோரிடமும் அவர் வலியுறுத்துவது இந்த வளர்ச்சியினைத்தான், தேசத்தின் உயர்வினைத்தான்
சிலர் அரசாங்கத்தை எதிர்ப்போம் என்ற பெயரில் நாட்டினை எதிர்ப்பது கண்டிக்கபட வேண்டிய விஷயம்
நாடு வேறு, அரசாங்கம் வேறு.
அந்த அற்புதமான நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றோம்
இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ போட்டியான காலத்தில் இந்திரா,சோவியத் வீழ்ந்த பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.
மோடி சிலருக்கு வேப்பங்காயாய் கசக்கலாம் ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.
அவர் காலத்தில் மிகபெரிய மாற்றங்களும் வளர்ச்சிகளும் வந்திருப்பதை மறுக்கவும் முடியாது
அவர் ஆட்சியில் தேசம் பல விஷயங்களை அசத்துகின்றது, பாகிஸ்தானை ஓடுக்கி வைத்திருப்பது, காஷ்மீரை இந்தியாவோடு இணைத்து நீண்டகால சிக்கலை முடித்திருப்பதெல்லாம் மிக மிக முக்கியமான திருப்பங்கள்..
அதைவிட முக்கியம் காஷ்மீரில் நிலவும் அமைதி
சீனாவினை விரட்டி அடித்து இன்று லடாக்கில் உலகமே அதிரும் வண்ணம் வந்தே மாதரம் என முழங்கி கொண்டிருக்கின்றது இந்தியா, உலகம் இந்தியாவின் தர்மத்தை புரிந்து கொண்டது.
இந்தியாவின் செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனையெல்லாம் மிகபெரிய சாதனைகள்
மோடி அரசின் கிடுக்கிபிடியாலே மோசடி தொழிலதிபர்களெல்லாம் ஓடி இந்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த பொருளாதார குற்றமெல்லாம் களையபட்டன, தேசவிரோத பணமெல்லாம் ஓடுக்கபட்டது
ஆயுத தளவாடம் முதல் கப்பல் வரை மேக் இன் இந்தியா என எல்லா நாடுகளையும் இங்கு அழைத்ததில் இந்திய பணம் இங்கேயே சுழன்று பொருளாதாரம் வளர்ந்திருக்கின்றது
உலகமே இன்று கொரோனாவில் சிக்கியிருக்கும் நேரம் சொந்தமாக மருந்து கண்டறிந்து அசத்தியது இந்தியா, அதை உலகுக்கும் வழங்கிற்று
120 கோடி பேரை கொண்ட இந்தியா இதுவரை 50 கோடி பேருக்கு மருந்து செலுத்தி, உலகில் அதிக மக்களுக்கு
மருந்து செலுத்திய ஜனநாயக நாடு என கம்பீரமாக எழுந்து நிற்கின்றது
ஐ.நா சபையில் இந்தியாவுக்கு இப்பொழுது தனி செல்வாக்கு ஏற்பட்டிருக்கின்றது. நண்பர்கள் எல்லா கண்டத்திலும் பெருகியுள்ளனர்
1947ல் பலவீனமாக ரத்த கறையோடு, பெரும் பஞ்சத்தோடு உருவான இத்தேசம் உலகின் பலம் வாய்ந்த நாடாக இன்று இந்தியா மாறி நிற்பது மாபெரும் ஆச்சரியம்
அண்டை நாடுகளுடன் பல சிக்கல்கள் தீர்ந்த நேரம் 500 ஆண்டுகால சிக்கலான ராமர்கோவிலும் தீர்ந்து ராமபிரானுக்கு ஆலயம் எழும்பிற்று என்பது மகா முக்கியமான காலகட்டம், இந்திய மண் சிலிர்த்து தன் அடையாளத்தை மீட்ட காலகட்டம்
பிரித்வி ராஜன் முதல் நேதாஜி வரை நாட்டுக்காய் உயிரை இழந்த தேசகண்மணிகளை இந்நேரம் நாம் நன்றியொடு நினைத்தல் வேண்டும், நினைத்து கொள்வோம் ஆம் அவர்களையும்.
சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற பட்டேல் போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்..
யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மானக்க்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.
வந்தே மாதரம், வாழ்க பாரதம்.
உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 75ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்.
இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.
இந்தியா அமைதியான நாடு, அருமையான நாடு அந்த அருமையை உணரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்
அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு
பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா, சிரியா,ஆப்கன், லிபியா, வெனிசுலா, ஏமன் போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.
எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள், அட்டகாசங்கள்.
அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.
அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.
எந்த காலமும் இத்தேசம் நம்மை அகதியாய் விரட்டியதில்லை, உணவுக்கு ஏங்க விட்டதில்லை, பாதுகாப்பாய் நிம்மதியாய் தூங்கி எழவும் வாழவும் கொண்டாடவும் வழி செய்திருக்கின்றது
"அகழ்வாரை தாங்கும் நிலம்போல" தன்னை எவ்வளவோ மோசமாக விமர்சித்தவனையும் வாழவைக்கும் தர்ம பூமி இது
இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.
ஜெய்ஹிந்த்....ஜெய் ஹிந்துஸ்தான்
"கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்.."
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்