புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
48 Posts - 43%
heezulia
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
414 Posts - 49%
heezulia
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_m10மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 10:02 pm

மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் FVb0G81

மூக்கிரட்டை



நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்களின் மூலம், அறிந்திருப்போம். அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும், காயகற்ப மூலிகையாக விளங்குகிறது என்பதை, அவர்களில் பலர் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு நகரங்களில் மூலிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பு, கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை, என்பது ஆச்சரியம் என்றால், அதை விட மற்றுமொரு ஆச்சர்யம், பெரும்பாலான கிராம மக்கள் சில மூலிகைகளின் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் கூட அறியாமல் இருப்பது தான்.

எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

மருத்துவ குணங்கள்



மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.

மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.

மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.

மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.

மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.

மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.

மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.

மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.

மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.

உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும். இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப் பொலிவு ஏற்படும்.

உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

சிறுநீரக பாதிப்புகளின் கடுமையான விளைவுகளால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரிப்பால், சிறுநீரகங்களின் இயக்கம் செயல் இழக்கும் அபாய நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர, மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும், சிறுநீர் அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.

இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.

மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.

ஒன்இந்தியா




மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 10:05 pm

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர்.

ஊரே அழுகிறது. அந்த ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்) ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...

"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து 1 வாரம் குடித்து வரச் சொன்னார் அந்த இளைஞர்.

உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள், பரிபூரண குணமாவீர்கள் என்றார்.

மூன்று நாளில், எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும், 2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.
கிளினிக்
கறம்பக்குடி



மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 10:09 pm

சிறுநீரகத்தை சீர்செய்யும் மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டையின் வேர் நீண்டு தடித்து கிழங்கு போன்று காணப்படும். காய்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் அடிப்படையாக இருக்கின்றன. கீரை களையும் மூலிகை என்றே சொல்லலாம். கீரை வகைகளில் ஒன்று #மூக்கிரட்டை. இதற்கு மூக்கரட்டை கீரை என்ற பெயரும் உண்டு. இது சாலையோரங்களிலும், வயல் வரப்புகளிலும் சாதாரண கொடி போன்று படர்ந்து வளரும்.

இந்த கீரையில் ஏராளமான மருத்துவ வேதியியல் பொருட்கள் உள்ளன. உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடல் கழிவுகளை வெளியேற்ற இது உதவுகின்றது.

இந்த கீரை இலைகளின் மேல் பகுதி பச்சையாகவும், கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்கும். இதில் இன்னொரு வகை வெள்ளை நிறத்தில் பூக்கும். இந்த இரண்டு வகையின் இலை, வேர் போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படு கிறது.

மூக்கிரட்டை கீரைக்கு ‘புணர்னவா’ என்ற பெயரும் உண்டு. ‘புணர்’ என்றால் மீண்டும் என்று பொருள். ‘நவா’ என்றால் புதிது என்று பொருள். நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தருவ தால் இந்த பெயர்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பணியில் குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்றி நீண்ட ஆயுளை இது தருகிறது.

மூக்கிரட்டை காரச் சத்து கொண்டது. கசப்பு சுவை உடையது. வெப்பத் தன்மையை பெற்றிருக்கிறது.

மூக்கிரட்டை இலையை உணவாகவோ, மருந்தாகவோ உட்கொண்டால் உடலில் உள்ள வாத நோய்கள் பெட்டியில் அடைபட்ட பாம்பை போல அடங்கி விடும்! இது உடலில் அதிகரிக்கும் வாதம், கபத்தை சீர்செய்யும் தன்மையும் கொண்டது.

ரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், பாத வீக்கம், மூச்சிறைப்பினை போக்க இதன் இலைகளை சமைத்து சாப்பிடவேண்டும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்துகாணப்படும். அதனை மூக்கிரட்டை குணப்படுத்தும்.

ஒவ்வாமை காரணமாக உடலில் நமைச்சல் உண்டாகும். அதற்கு மூக்கிரட்டையை பயன்படுத்தலாம். 10 கிராம் மூக்கிரட்டை வேரை நசுக்கி, 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, அதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து பருகவேண்டும். இருமுறை இதை பருகுவது நல்லது.

#ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களால் உடலில் நீர் தேங்கும். அதனால் மூச்சுத்திணறல் தோன்றும். சளித் தொல்லையும் அதிகரிக்கும்.

10 கிராம் வேரை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அரை தேக்கரண்டி மிளகு தூள் கலந்து குடித்தால் மூச்சுத் திணறல் நீங்கும்.

அனைத்து விதமான சிறுநீரக நோய்களுக்கும் மூக்கிரட்டை முக்கிய மருந்தாகின்றது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது. சிறுநீர் தடையை நீக்குவது இதன் முக்கியபண்பு.

சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் மூக்கிரட்டை வேரை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 100 மி.லி நீரில் கலந்து, அத்துடன் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து குடிநீராக பருகவேண்டும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பக்கவிளைவுகள் ஏற்படாது. வேருக்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால், வயிற்றுக் கழிச்சல் அதிகமாக இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் இது கரைக்கும்.

மூக்கிரட்டையின் வேர் நீண்டு தடித்து கிழங்கு போன்று காணப்படும். காய்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதில் இருந்து ரத்த சோகை, சிறுநீரக #நோய்கள், #கல்லீரல், #இதயம், சுவாச நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.



மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 10:11 pm

மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் PpSY9UC

பெருமூக்கிரட்டை

இதன் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருந்துவத்தில் பயன்படுகின்றன.

இவை, வாத நோய்களுக்குச் சிறப்பாக உபயோகமாகின்றன. மற்றபடி, மூக்கிரட்டையின் அனைத்து உபயோகங்களும் இதற்குப் பொருந்தும்.




மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக