புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
63 Posts - 57%
heezulia
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
58 Posts - 56%
heezulia
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட விடுகதைகள் (81 - 88)

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 29, 2021 3:26 pm

கன்னட விடுகதைகள் (1 - 10)

1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)

2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)

3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)

4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)

5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)

6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)

7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)

8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)

9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)

10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 30, 2021 2:03 pm

கன்னட விடுகதைகள் (11 - 20)

1 .யாரும் ஏறாத மரத்தில் அவன் ஏறுகிறான் !
அது என்ன?
விடை : எறும்பு
( ‘ஹத்னார்த மரக்கே ஹத்துதனே கரியண்ண !’ )
( ‘உத்தரா : இருவே’)

2 . சாகும் வரை பூப் பூக்காது , ஆனால் பழம் மட்டும் உண்டாகும் !
அது என்ன?
விடை : அத்திப் பழம்
( ‘சாயோ வரெகூ ஹூவில்ல , ஹன்னு மாத்ர பித்ததே’ )
( ‘உத்தரா : ஹத்தி ஹன்னு ’)

3 . கிரீடம் உண்டு , ஆனால் ராஜா அல்ல ! தாடி உண்டு , ஆனால் முஸ்லிம் அல்ல !
அது என்ன?
விடை : சேவல்
( ‘ க்ரீட வுன்ட்டு ராஜவல்லா , கத்த வுன்ட்டு துருகனல்லா !’ )
( ‘உத்தரா : ஹுஞ்ஜா’)

4 . சுற்றிலும் புல்வெளி , நடுவே குடுக்கை !
அது என்ன?
விடை : கண்
( ‘சுத்த முத்தா ஹரிகே , நடுவே குடிகே !’ )
( ‘உத்தரா : கண்ணு ’)

5 . இரத்த மில்லாத மாமிசம், குடல் இல்லாத வயிறு !
அது என்ன?
விடை : இறால்
( ‘ரக்த வில்லத மாம்ஸ , கருளில்லத ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ஸீகடி ’)

6 . முள்ளு முள்ளு மரத்தில் முத்து முத்துக் காய் !
அது என்ன?
விடை : எலுமிச்சை
( ‘ முள்ளு முள்ளு மரதல்லி , முத்து முத்து காயி !’ )
( ‘உத்தரா : நிம்பி ஹன்னு ’)

7 . கறுப்புப் படுக்கை மேலே ஒரு மெத்தை போடப்படும், எடுக்கப்படும் !
அது என்ன?
விடை : தோசை
( ‘ ஹாகுவ ஹாஸிகே, தெகியுவ ஹாஸிகே !’ )
( ‘உத்தரா : காவலி தோசே ’)

8. ஐயா ஐயா மரம் பாரு , மரத்துக்குள்ளே இலை பாரு , இலைக்குள்ளே ஓட்டை பாரு , ஓட்டைக்குள்ளே சொற்களைப் பாரு !
அது என்ன?
விடை : புத்தகம்
( ‘அப்பெ அப்பெ மரா நோடு, மரதொளகே எலெ நோடு, எலெயொளகே தூத்து நோடு , தூத்தொளகே மாது நோடு !’ )
( ‘உத்தரா : புஸ்தகா ’)

9 . ஓட்டை இல்லாத ஆபரணம் !
அது என்ன?
விடை : குங்குமம்
( ‘தூத்தில்லத ஒடவே !’ )
(‘உத்தரா :குங்குமா ’)

10 . நிங்கக்கா , நீரக்கா போடுவார்கள் உண்டு , எடுப்பவர் யாருமில்லை ! அது ஏனக்கா?
விடை : பச்சை குத்துதல்
( ‘ நிங்கக்கா , நீரக்கா ஹாக்குவ ருன்ட்டு தெகியுவ ரில்லா , அதேனக்கா?’ )
(‘உத்தரா : ஹச்சி ’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 06, 2021 11:59 am

கன்னட விடுகதைகள் (21 - 30)

21 . கல்லு மேலே தூங்கும், கொடி மேலே ஆடும் !
அது என்ன?
விடை : ஈரத் துணிகள்
( ‘பண்டெயா மேலே மலகுத்தே , தெந்தி மேலே குனியத்தே !’ )
( ‘உத்தரா : ஒணகளு ஹாரித பட்டே’)

22 . பச்சைச் செடி மேலே தயிர் தெளிக்கப்பட்டுள்ளது !
அது என்ன?
விடை : மல்லிகை
( ‘ஹசிரு கிடித மேலே மொசரு சில்லிதே ’ )
( ‘உத்தரா : மல்லிகே ’)

23 . வெள்ளைக் கல் மேலே கறுப்புக் கல் ; கறுப்புக் கல் மேலே படம் !
அது என்ன?
விடை : கண்
( ‘ பிளீ கல் மேலே கரி கல்லு ; கரீ கல் மேலே ரங்கோலே !’ )
( ‘உத்தரா : கண்ணு ’)

24 . கிரி ராஜனின் மகளுடைய கணவனின் மூத்த மகனின் தம்பியுடைய வாகனத்திற்கு எதிரி !
அது என்ன?
விடை : நாய்
( ‘கிரிராஜன் மகளெ கண்டன ஹிரி மகனா தம்மன வாஹனத வைரி !’ )
( ‘உத்தரா : நாயி ’)

25 . அப்பாவின் துட்டை எண்ண முடியாது ; அம்மாவின் சேலையை மடிக்க முடியாது !
அது என்ன?
விடை : நட்சத்திரங்கள்; ஆகாயம்
( ‘ அப்பண துட்டு எனிசோ காகல்லா ; அம்மனெ சீரே மடியோ காகல்லா !’ )
( ‘உத்தரா : நக்ஷத்ர ; ஆகாஸ ’)

26 . பத்துத் தலையுண்டு , ராவணனல்ல; வால் உண்டு ஹனுமானல்ல ; கிரீடம் உண்டு ராஜா அல்ல; நான் யார்? !
விடை : பீர்க்கங்காய்
( ‘ ஹத்து தலெ யுண்டு , ராவணா வல்லா; பால வுண்டு ஹனுமந்த னல்லா; கிரீட வுண்டு ராஜ னல்லா; நானு யாரு ? ’ )
( ‘உத்தரா : ஹீரீகாயி ’)

27 . முப்பத்திரண்டு பேர்கள் மெல்லுகிறார்கள் ; ஒருவர் ருசி பார்க்கிறார் !
அது என்ன?
விடை : பற்களும் நாக்கும்
( ‘ மூவத் தெரடு ஜனா அகித்தாரெ, ஒப்ப ருச்சி நோட்தானே !’ )
( ‘உத்தரா : ஹல்லு, நாலிகே ’)

28 . மல்லிகைப் பூப்போல இருகும்; ஆனால் கையால் தொட்டுப் பிடிக்க முடியாது !
அது என்ன?
விடை : நட்சத்திரம்
( ‘நோடிதரே மல்லிகே ஹூ , கைலி தக்கொண்டு முட்டொக்கே ஆகோதில்லா !’ )
(‘உத்தரா :நக்ஷத்ரா ’)

29 . நான்கு காலுண்டு , மிருக மில்லை; பறப்பதுண்டு பறவை யில்லை; நான் குழந்தைகளை நேசிப்பது போல நேசிக்க வேறு ஆள் இல்லை ! நான் யார்?
விடை : தொட்டில்
( ‘ நால்கு காலுண்டு ம்ருகமல்லா , ஹாரோதுன்ட்டு பக்ஷியல்லா, நானு கூசுகளன்னு ப்ரீதிசுவ ஹாகே பேரே யாரு இல்லா !’ )
(‘உத்தரா : தொட்டிலு ’)

30 . பின்னாலிருந்து சாப்பிடுவது , வாயிலிருந்து துப்புவது, எதிரே உள்ளவரைக் கொல்லுவது , அப்படியானால் நான் யார் ?
விடை : தொட்டில்
( ‘ பின்னினிந்த தின்னுவுது , பாயிந்த உகுளுவுது, எதுராதவரன்னு கொல்லுவுது , ஹாகாதரே நானு யாரு ? ’ )
(‘உத்தரா : பந்தூக்’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 07, 2021 6:54 pm

கன்னட விடுகதைகள் (31 - 40)

31 . சின்னவீட்டுக்குத் தங்கப் பூட்டு !
அது என்ன?
விடை : மூக்குத்தி
( ‘கிரி மனெகெ சின்னத பீகா !’ )
( ‘உத்தரா : மூகுத்தி ’)

32 . எவ்வலவுதான் மழை வந்தாலும் நனைவதில்லை !
அது என்ன?
விடை : எருமையின் பால்மடி
( ‘எஷ்டே மளெ பந்தரூ நெனெயுவுதில்லா ’ )
( ‘உத்தரா : எம்மெ கெச்சலு ’)

33 . ஆறு காலு அப்பன்ணா, போரண்ணா ஆத்தங்கரையில் மீசையைச் சுழற்றுகிறது !
அது என்ன?
விடை : கரப்பான் பூச்சி
( ‘ ஆறு காலு அப்பண்ணா கெரே போரண்ணா கூதுதாவு மீசெ திருவண்ணா !’ )
( ‘உத்தரா : ஜிரலே ’)

34 . நீர் இருக்கும் கேணி அல்ல , குடுமி இருக்கும் பூசாரி அல்ல, மூன்று கண்ணிருக்கும் , சிவனல்ல !
அது என்ன?
விடை : தேங்காய்
( ‘நீருன்ட்டு பாவியல்லா, ஜுட்டுன்ட்டு பூஜாரி யல்லா, மூரு கண்ணுன்ட்டு , சிவனல்லா !’ )
( ‘உத்தரா : தெங்கின காயி ’)

35 . அக்கண்ணனுக்கு ஆறு கண் ; முக்கண்ணனுக்கு மூன்று கண் ; லிங்கப்பனுக்கு ஒரே கண் !
அது என்ன?
விடை : புல்லாங் குழல் , தேங்காய் , ஊசி
( ‘ அக்கண்ணனிகே ஆறு கண்ணு, முக்கண்ணங்கே மூரு கண்ணு , லிங்கப்பனிகே ஒந்தே கண்ணு !’ )
( ‘உத்தரா : கொளலு, தெங்கின காயி, சூஜி ’)

36 . ஒரு தம்பி கீழே வருகிறான், மற்றொருவன் மேலே போகிறான் !
விடை : ரொட்டி
( ‘ ஒப்பண்ணா இளிதானே , ஒப்பண்ணா ஹத்துத்தானே ! ’ )
( ‘உத்தரா : ரொட்டி ’)

37 . சாய்ந்த மரம் ; நீ கடித்தால் உன் வாயில் அதன் சிறுநீர் !
அது என்ன?
விடை : கரும்பு
( ‘ அங்குடோங்கின மரா , கச்சிதவர பாயிகே , உச்சி ஹுய்யுவவுரு !’ )
( ‘உத்தரா : கப்பு ’)

38 . அம்மாவைப் பார்த்தா குள்ளி, மகளைப் பார்த்தா மிக நீளம் !
அது என்ன?
விடை : ஊசி நூல்
( ‘ அவ்வா நோடுதரே குள்ளி , மகளெநோடுதரே மாருத்தா அங்ளே!’ )
(‘உத்தரா : சூஜி தாரா ’)

39 . தவளை தொடாத கைலாச நீர் !
விடை : இளநீர்
( ‘ கப்பெ முட்டாத கைலாசத நீரு !’ )
(‘உத்தரா : எளெய நீரு ’)

40 . ஒரு கையில் நூற்றுக் கணக்கான விரல்கள் !
விடை : வாழைக் குழை
( ‘ ஒந்து ஹஸ்தக்கே நூருன்ட்டு பெரலு ! ’ )
(‘உத்தரா : பாளெ கொனே’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 08, 2021 3:05 pm

கன்னட விடுகதைகள் (41 - 50)
41 . பதின்ம வயதில் பச்சை, முதிர்ச்சியில் சிவப்பு , மூப்பில் கறுப்பு !
அது என்ன?
விடை : நாவல் பழம்
( ‘கரயதல்லி ஹசிரு, துரதல்லி கெம்பு, முப்பினல்லி கப்பு !’ )
( ‘உத்தரா : நெரளி ஹன்னு ’)

42 . கூரை மேலே கயிறு பரந்துள்ளது; அதன் மேல் உட்கார்ந்துள்ளது பூதம் !
அது என்ன?
விடை : பூசனிக்காய்
( ‘அட்டத தும்பா ஹக்க ஹாசைது , அதர மேலே பூரா கூதவ்வே ’ )
( ‘உத்தரா : கும்பள காயி ’)

43 . கடையில் விற்பதில்லை, தராசில் எடை போடுவதில்லை , அதில்லாமல் குடும்ப விழாக்கள் தொடங்குவதில்லை !
அது என்ன?
விடை : சாணம்
( ‘ அங்கடியல்லி மாறுவதில்லா, தக்கடியல்லி தூகுவதில்லா, அதில்லதித்தரே நம்ம மனெயல்லி ஹப்பா ஆகுவுதே இல்லா !’ )
( ‘உத்தரா : சகனி’)

44 . மேல் வழியாய் உண்ணும், சுற்றிலும் சிதறிவிடுவது , தூக்கினால் இரண்டாகப் பிரியும் !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘ நெத்தியல்லி உண்ணுவுது, சுத்தலூ சுரிசுவுது,எத்திதரே எரடு ஹோளாகுவுது !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)

45 . தாத்தாவின் வயிற்றைப் பிடித்துக்கொண்டு , பேரன் கீழே தொங்குகிறான் !
அது என்ன?
விடை : முந்திரி
( ‘ அஜ்ஜன்னா ஹொட்டே ஹிடிகொண்டு , மொம்மக நேதாட்தா அவ்னே !’ )
( ‘உத்தரா : கீருபீஜா’)

46 . வெள்ளைச் சருகுத்தோல் கழறும், பாம்பல்ல! நான் வட்டம் , ஆனால் பந்தல்ல ! உடல் பானை போல , ஆனால் பூசனியல்ல !
விடை : வெள்ளைப் பூண்டு
( ‘பிளிய பொரே பிடுவா நாகவல்லா ! குண்டக்ருவே கோலிய குண்டல்லா ! தேஹவு மடிகெகளிந்த கொடிருவுது , கும்பள காயல்லா ’ )
( ‘உத்தரா : பெள்ளுள்ளி ’)

47 . அங்கண்ணா மங்கண்ணா சட்டையைக் கழற்று , கேணிக்குள் குதி !
அது என்ன?
விடை : வாழைப் பழம்
( ‘ அங்கண்ணா மங்கண்ணா அங்கி பிச்சண்ணா , பாவிகே ஹாகண்ணா !’ )
( ‘உத்தரா : பாளெ ஹன்னு ’)

48 . நாராயணன் கட்டிய நாலு மூலைக் கிணற்றில் தண்ணீரும் இல்லை, மீனும் இல்லை !
அது என்ன?
விடை : அச்சு வெல்லம்
( ‘ நாராயணா கட்டிசித நால்கு மூலை பாவி; நீரில்லா , மீனில்லா ! )
(‘உத்தரா : பெள்ளத அச்சு’)

49 . ஆடி ஓடித் திரியும் வானத்துக்கு ஆறடி நிலமே சொந்தம் !
விடை : மனித உடல் , மயானம்
( ‘ ஆடி ஓடாடோ காடிகே ஆறடி நெலவஷ்டே ஸ்வந்த்தா !’ )
(‘உத்தரா : தேஹ, ஸ்மசானா ’)

50 . சுவற்றின் மேலே கறுப்பு ரொட்டி !
விடை : வரட்டி
( ‘ கோடே மேலே கரீ ரொட்டி ! ’ )
(‘உத்தரா : பெரணி ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
»
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2021 4:32 pm

எவ்வலவுதான் மழை வந்தாலும் நனைவதில்லை !
அது என்ன?
விடை : எருமையின் பால்மடி

இதில் எருமையின் பால்மடி என்பது சரியா?

பசுவின் பால்மடியும் நனையாதே...

கன்னட விடுகதைகள்   (81 - 88) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 09, 2021 12:50 pm

கன்னட விடுகதைகள் (51 - 60)

51 .உச்சியில் முத்து , வாய்க்குள் விரல் !
அது என்ன?
விடை : மோதிரம்
( ‘தலெ மேலே ஹரளு, பாயல்லி பெரலு !’ )
( ‘உத்தரா : உங்குரா’)

52 . மொத்தக் கிராமத்துக்கும் ஒரே போர்வை !
அது என்ன?
விடை : ஆகாயம்
( ‘ஊரிகெல்லா ஒந்தே கம்பளி ’ )
( ‘உத்தரா : ஆகாய ’)

53 . மழை வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி , வாய் முழுதும் சிவப்பு , உடல் முழுதும் பச்சை !
அது என்ன?
விடை : கிளி
( ‘ மளெ ஹூய்லி , ஹூய்யதே இர்லி , பாயல்லா கிம்ப்பு , மையெல்லா ஹசிரு !’ )
( ‘உத்தரா : கிளி’)

54 . வெள்ளைப் பையனுக்குக் கறுப்புத் தொப்பி !
அது என்ன?
விடை : தீக்குச்சி
( ‘ பிளி ஹுடுகனிகே கரி டோபி !’ )
( ‘உத்தரா : பெங்கி கட்டி’)

55 . சின்னவன் , ஒருவருக்குக் கொடுப்பதற்கு முன், பெரியவன் பன்னிரண்டு பேருக்குக் கொடுத்துவிடுகிறான் !
அது என்ன?
விடை : கடிகாரம்
( ‘ சிக்கவனு ஒப்பனிகே படிசுவர ஷ்டரல்லி , தொட்டவனு ஹன்னெரடு முந்திகே படிசிர்தானே !’ )
( ‘உத்தரா : கடியாரா ’)

56 . மண்ணிலே பிறப்பது , மண்ணிலே வளர்வது , மண்ணிலே சாவது !
விடை : மண்பானை
( ‘மண்ணினல்லி ஹுட்டி, மண்ணினல்லி பெளது , மண்ணினல்லி சாயுவுது ! ’ )
( ‘உத்தரா : மடிகே ’)

57 . தண்ணீரில் போட்டால் முழுகாது ! நெருப்பில் போட்டால் எரியாது, கல்லுமல்ல! இது இல்லாதவர் யாரும் இல்லை !
அது என்ன?
விடை : நிழல்
( ‘ நீரினல்லி ஹாக்தரே முளுகுவுதில்லா ! பெங்கியல்லி சுடுவுதில்லா , கல்லல்லா ! இது இல்லதவரில்லா !’ )
( ‘உத்தரா : நெரளு ’)

58 . மலரும் ஆனால் பூவல்ல ! வெயிலுக்கு வாடாது !
அது என்ன?
விடை : குடை
( ‘ அரளுத்தே, ஹூவல்லா ! வெயிலிகே பாடுவதில்லா!’ )
(‘உத்தரா : சத்ரி ’)

59 . சந்திரனைப் போல வட்டமாகி , இலை போல மெல்லிதாகி , உண்ண ருசியாகி உள்ளது !
விடை : அப்பளம்
( ‘ சந்த்ரனந்தே குண்டாகி , எலெகிந்தலூ தெலுவாகி , திந்தரே பலு ருச்சி !’ )
(‘உத்தரா : ஹப்பளா ’)

60 . அது கறுப்பு , ஆனால் கஸ்தூரி அல்ல ! அது வெள்ளை, ஆனால் சுண்ணாம்பு அல்ல! அதில் தண்ணீர் இருக்கும் , கிணறு அல்ல ! அதற்கு இறக்கை இருக்கும் பறவை அல்ல !
அது என்ன?
விடை : கண்
( ‘ கப்புன்ட்டு கஸ்தூரியல்லா , பிள்புன்ட்டு சுண்ணவல்லா, நீருன்ட்டு பாவியல்லா! ’ )
(‘உத்தரா : கண்ணு ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com) »

PostDr.S.Soundarapandian Wed Aug 11, 2021 1:57 pm

கன்னட விடுகதைகள் (61 - 70)

61 .இருட்டு வீட்டில் ஒரு தூண் கீழே விழுந்தால் , என் அப்பனாலும் எடுக்க முடியாது, உன் அப்பனாலும் எடுக்க முடியாது !
அது என்ன?
விடை : ஊசி
( ‘கத்தலே மனெயல்லி கம்ப பித்தரே , நிம்மப்பனூ எத்தலாரா நம்மப்பனூ எத்தலாரா !’ )
( ‘உத்தரா : சூசி’)

62 . ஒரு வெள்ளைச் சுவர்! ஆனால் ஒரு கதவு கூட இல்லை !
அது என்ன?
விடை : கோழி முட்டை
( ‘ஒந்து சுண்ணத கோடகே, ஒந்தூ பாகிலில்லா ’ )
( ‘உத்தரா : கோளி மொட்டே ’)

63 . ஒரு தூணுக்கு நாலு காதுகள் ! அதன் மேல் ஒரு பந்து !
அது என்ன?
விடை : கிராம்பு
( ‘ ஒந்து கம்ப, ஆதக்கே நால்கு கிவிகளு , அதர மேலொந்து குண்டு !’ )
( ‘உத்தரா : லவங்கா’)

64 . கழுத்தைப் பிடித்துத் தூக்கினால் வரும் ; இல்லாவிட்டால் வராது !
அது என்ன?
விடை : நீர்க் குடம்
( ‘ குத்துகெகே ஹாக்கிதரே பருத்தே ; இல்லதித்தரே இல்லா !’ )
( ‘உத்தரா : பிந்திகே ’)

65 . கொண்டு வந்தவர் ஒருவர் ! பிடித்தவர் வேறொருவர் ! எடுத்துக் கொண்டவர் மற்றொருவர் !
அது என்ன?
விடை : வளையல்
( ‘ தந்தவ ரொப்பரு ! ஹிடிதவ ரொப்பரு ! ஹொத்தவ ரொப்பரு !’ )
( ‘உத்தரா : பளெ ’)

66 . நான் பகலில் தூங்குவேன் ; இரவில் விழித்துக்கொண் டிருப்பேன்! நான் யார்?
விடை : தெரு விளக்கு
( ‘ஹகலு நித்ரிசுவேனு , ராத்ரி கண்ணு தெரெயுவேனு , யாரு நானு ? ’ )
( ‘உத்தரா : ரஸ்தே தீபா’)

67 . நான்கு கால்கள் உண்டு , பிராணி அல்ல! மார்பு, முதுகு உண்டு, மனிதனல்ல !
அது என்ன?
விடை : நாற்காலி
( ‘ நாலு காலுகளுன்ட்டு ப்ராணி யல்லா ! பென்னு தோளுன்ட்டு , மனுஷனல்லா !’ )
( ‘உத்தரா : குர்சி’)

68 . நீரில் பிறந்தது , நீரில் வளர்ந்தது ! ஆனால் நீரைப் பார்த்தால், அது மறைந்துவிடும் ! அது என்ன?
விடை : உப்பு
( ‘ நீரல்லே ஹுட்டுத்தே , நீரல்லே பெளெயுத்தே! நீரு கண்ட கூடலே கரகி ஹோகுத்தே !’)
(‘உத்தரா : உப்பு ’)

69 . ஒரே குப்பியில் இரண்டு வகை நெய் !
விடை : முட்டை
( ‘ ஒந்தே குப்பிலி , எரடு தரா துப்பு !’ )
(‘உத்தரா : மொட்டே ’)

70 . அதில் ஆறு வரி இருக்கும் ; ஆனால் பீர்க்கங்காய் அல்ல ! புளிப்பாக இருக்கும் ; ஆனால் புளியல்ல ! மஞ்சள் நிறம் காணப்படும் ; ஆனால் எலுமிச்சை அல்ல !
அது என்ன?
விடை : நெல்லிக்காய்
( ‘ ஆரு கெரேவுன்ட்டு, ஈரெ காயல்லா ! ஹுளிவுன்ட்டு, ஹுணலே அல்லா ! ஹளதி வுன்ட்டு, நிம்பே ஹன்னல்லா ! ’ )
(‘உத்தரா : நெல்லி காயி ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 11, 2021 1:58 pm

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக