புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Aug 2021 - 12:13

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் 366188676016201
ஸ்ரீ நரேந்திர மோடி

பிறப்பு : 17 செப்டம்பர் 1950
ஊர் : வத்நகர், குஜராத்
பெற்றோர் : தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, ஹீராபென்
பணி : இந்திய பிரதமர், அரசியல்வாதி
கட்சி : பாரதிய ஜனதா கட்சி

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

பிறப்பும் இளமையும்

நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று பிறந்தார். குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் என்ற ஊர் தான் மோடியின் சொந்த ஊர். இவரது தந்தையின் பெயர் தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, தாயாரின் பெயர் ஹீராபென்.  மோடியின் முழுப்பெயர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்பதாகும். மோடிக்கு 6 உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.

டீக்கடை, ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடு

இளம் வயதில் மோடியும், அவரது சகோதரர்களும் வத்நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வியை வத்நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து முடித்தார் மோடி. பள்ளி மாணவனாக இருக்கும் போதே பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டு தனது பேச்சாற்றலை வளர்த்து சிறந்த பேச்சாளனாக விளங்கினார் அவர். மோடி தனது சகோதரர்களோடு இணைந்து நடத்திய டீக்கடைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பலர் அடிக்கடி வருவது வழக்கமாக இருந்தது.

இதனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகளின் மீது ஈர்ப்பும் மோடிக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டது. இதனால் 1958 ஆம் ஆண்டு  8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொண்டரானார் நரேந்திர மோடி.

திருமணம்

சிறுவயதிலேயே மோடியின் பெற்றோர் நிர்பந்தித்து யசோதா பென் மோடி என்பவருடன் நரேந்திர மோடிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் மோடிக்கு திருமண வாழ்க்கையில் கொஞ்சம்கூட நாட்டமில்லை. அவரது எண்ணமெல்லாம் தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதிலேயே  இருந்தது. இதனால் மோடி தனது வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு இமயமலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மோடி பயணித்தார்.

கல்லூரி படிப்பு

1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் நரேந்திர மோடி. கல்லூரிப்படிப்பை படித்து முடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார் மோடி.

அரசியல் வாழ்க்கை

பிறகு #சங்பரிவார் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சங்பரிவார் இயக்கத்தின் மாணவர் பிரிவான 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' -ன் குஜராத் மாநில பொருப்பாளராக பதவி வகித்தார் நரேந்திர மோடி. இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, அதனை எதிர்த்து மோடி பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் பல  முன்னணி தலைவர்களின் நெருங்கிய தொடர்பு மோடிக்கு கிடைத்தது.

பாரதிய ஜனதா கட்சி

1985 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. பாரதிய ஜனதாவில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார் மோடி. 1987ஆம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பல முக்கிய பொறுப்புகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் மோடி. இதனால் கட்சியின் பல முக்கியப் பதவிகள் மோடிக்கு வழங்கப்பட்டன. 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பான 'தேசிய செயலாளர்' பொறுப்பு நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத் முதல்வர்

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றார். பிப்ரவரி 7 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட கலவரங்களை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால் மோடி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் சட்டமன்றத்தையும் கலைத்து புதிய சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.

அந்தத் தேர்தலில் மோடி பெருவாரியான மக்களின் ஆதரவோடு மீண்டும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரானார். விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு என முதல்வராக சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மக்களின் பேராதரவோடு பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் முதல்வரானார் நரேந்திர மோடி.

அப்போதும் சிறப்பாக பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார் மோடி. இதனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆகினார் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி. பல்வேறு நலத்திட்டங்களை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசப்பட்டார் நரேந்திர மோடி. குறிப்பாக மின்சாரத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியில் மோடியின் சாதனைகள் நாடு முழுவதும் பேசப்பட்டன.

இந்தியாவின் பிரதமர்

நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்கிட்டியதை அங்கீகரிக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரதத் திருநாட்டின் பிரதமராக 2014 மே 26 அன்று பொறுப்பேற்றார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் மோடி. 5

 ஆண்டுகள் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பிரதமர் நரேந்திர மோடியை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறச் செய்து இந்திய மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆக்கினர். மக்களின் பேராதரவுடன் இந்தியாவின் வளர்ச்சிக்காக தற்போது செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

நம்பிக்கை நாயகர் மோடி

சாதாரண ஒரு டீக்கடை நடத்தி வந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற ஒருவர் இன்றைக்கு நம் பாரதத் திருநாட்டில் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது கடின உழைப்பும், தேசத்தின் மீது அவர் கொண்ட பக்தியும், மக்களுக்காக அவர் ஆற்றிய ஆகச்சிறந்த தன்னலமற்ற  தொண்டுகளும் தான் காரணம். பலதரப்பட்ட துறைகளை சார்ந்த பல இந்திய இளைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி நம்பிக்கைக்கும், கடின உழைப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த திரியில் பார் புகழும் எம் பாரத தேசப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் இடம்பெறும்.

2014 - ல் இதே தலைப்பில் ஒரு திரி துவங்கினேன். ஆனால் அது இப்பொழுது எனக்கு கிடைக்கவில்லை.

நான் மோடியின் பக்தன், அவரைப் புகழ்வது ஒன்றே என் மனதிற்கு இன்பமளிக்கும் செயலாக உள்ளது. மோடிஜியை பிடிக்காதவர்கள் இந்த திரியிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கலாம்.

என்னப்போல் அவரை நேசிப்பவர்கள் இங்கு பதிவுகள் எழுதலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Aug 2021 - 12:17

இரண்டு மாதம் முன் #பிரதமர் #மோடி / #குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ #ரவிசங்கர் அவர்கள் எல்லாம் #ஒலிம்பிக் வீரர்களுடன் காணொளியில் பேசுவதை இணையத்தில் பார்த்த போதே தோன்றியது , இந்த வருடம் சம்திங் ஸ்பெஷல் அவைட்டிங்னு…

இவர்கள் இருவரும் சத்தம் இல்லாமல் behind the Scene இணைந்து சாதிப்பவர்கள்.

உலகளவில் இந்தியாவை எந்த எந்த துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற (To do List ) ஒன்றை தெளிவாக வைத்து, ஒவ்வொன்றையும் நிறைவேற்றி டிக் அடித்துக் கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

லிஸ்டில் நம் நாட்டின் ஒலிம்பிக் வெற்றி கண்டிப்பாக டாப் 5 யில் இருக்கும்.

2016 ரியோ ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகள் என்றாலும், விளையாட்டுக்கு கொடுக்கப்படும் நிதி 300% உயர்த்தப்பட்டு குழுக்கள் அமைத்து பிள்ளையார் சுழி போடப்பட்டது.

2020 இல் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2726 கோடி!!

‘Khelo India’ திட்டத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி
890 கோடி!!

ரியோ முடிந்தவுடன் அடுத்த திட்ட்டம் என்ன?

முதல் மாஸ்டர் ஸ்ட்ரோக், வெளிநாட்டு கோச்களை பணியமர்த்தியது. உள்ளூர் கோச்சுகளுக்கு திறமை இல்லாமல் இல்லை. பர்சனல் பிரெபெரென்ஸ் செலக்ஷன் பாலிடிக்சை ஒழித்துக்கட்ட!

வீரர்கள் பிட்னெஸ்க்கு முக்கியத்துவம் / ஸ்ட்ரிக்ட் டயட் சார்ட்

(PV சிந்து / பிரதமர் மோடி காணொளியில் இதனை சொல்லியிருப்பார், நீங்கள் வெற்றி பெற்று வாருங்கள், சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவோம்னு வாக்கு கூட கொடுத்திருக்கிறார்)

வீரர்களுக்கு பயிற்சிக்கு தேவையான infrastructure எந்த நாட்டில் இருக்கிறதோ, அந்த நாட்டிற்கு அரசாங்க செலவில் கோச்சுடன் அனுப்பி வைத்தது.

தங்கம் வென்ற நீரஜ் ஜுலை 15 வரை ஐரோப்பாவில் தான் இருந்தார்.

தொற்று காலத்தில் எந்த வித விசா பிரச்சனைகள் இல்லாமல் தன்னை அங்கே அனுப்பி பயிற்சி பெற வைத்த மோடிஜிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

முக்கியமாக ஒலிம்பிக்ஸ் சென்ற 127 வீரர்களுடன் 1 to 1 டைரக்ட் காண்டக்ட்டில் ஒரு நாட்டின் பிரதமர் இருந்திருக்கிறார். இதை பல வீரர்களின் பெற்றோர்கள் சொல்லி உள்ளனர்.

அனைவரின் பெயரும் தெரியும். ஒவ்வொருவரையும் தனியாக மென்ஷன் செய்து தனி டீவீட்டாக போடுவார்.

இவை அனைத்தும் நாட்டில் ஏற்பட்ட தொற்று கொடுமையை எதிர்த்தவாறே இந்த பணியையும் மேற்கொண்டு உள்ளார் என்பது தான் ஆச்சிரியம். ஒரு தலைசிறந்த நிர்வாகியாக பிரதமர் மோடி இங்கே தான் ஜெயிக்கிறார்.

ரியோவில் 2 பதக்கம் 65 ஆவது இடம் ,
டோக்கியோவில் ஒரு தங்கம் சேர்த்து 7 பதக்கம் 48 ஆவது இடம்.

நிச்சயம் பாரிஸ் 2024 இல் 10 to 15 ரேங்க் கொண்டு வந்து விடுவார்

டோக்கியோவில் 10th ரேங்க் பிரான்ஸ்
(9G / 12S / 11B : 32 ) மெடல்கள் பெற்று உள்ளார்கள்.

இது நமக்கும் சாத்தியமே !

அவரிடம் 2028 Los Angels வரைக்கும் கூட தெளிவான ஸிஸ்டெமெடிக் பிளானிங் இருக்கும்.

ஒடிசாவில் 2023 இல் உலகக்கோப்பை ஹாக்கி நடக்க இருக்கிறது.

120 கோடி செலவில் இரண்டு சர்வேதேச ஹாக்கி ஸ்டேடியம் உருவாகி கொண்டு இருக்கிறது.

தற்போது 2032 ஒலிம்பிக்ஸ்- Brisbane (Australia) என்று முடிவு செய்து உள்ளார்கள்.

2036 க்கு London (Britain) குதிக்கிறது.

கொரொனா இருப்பதால் இப்போது வேண்டாம், ஆனால் யார் கண்டது? 2040 ஒலிம்பிக் நடத்த இந்தியா பிட் கூட செய்யலாம்.

பெரிதிலும் பெரிது கேட்போம்ஐ லவ் யூ

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Aug 2021 - 12:19

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

தற்காலிக பதவி என்றாலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலமை தாங்கிய முதல் பாரத‌ பிரதமர் மோடி என வரலாறு பதிந்து கொண்டது.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Aug 2021 - 12:27

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி, பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார் : செய்தி

கொரோனா பெரும் தொற்று காலத்தில் உலகமே முடங்கி கிடக்கும் நேரம், இந்திய விவசாயிகளை ஊக்கபடுத்த மோடி செய்திருக்கும் அறிவிப்பு மகா சிறப்பானது

இந்த விவசாயிகளில் தமிழக விவசாயிகளும் மிக பயன்பெறுவர், ஆனால் அவர்களே அதை அறியா வகையில் இங்கு மர்ம அரசியல் செய்யபடும் என்பதுதான் சோகம்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 21:40

UNSC கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் புடின்

பிரதமர் #நரேந்திர_மோடி நேற்று (ஆகஸ்ட் 9, 2021) கடல்சார் பாதுகாப்பு குறித்த UNSC உயர்மட்ட விவாதத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய #பிரதமர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தனது உரையில் #கடல்சார் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான 5 அடிப்படை கொள்கைகளையும் முன்வைத்தார். தடையற்ற கடல் வணிகம், பொறுப்புகளுடன் கூடிய கடல்வழி தொடர்பை ஊக்குவித்தல், கடல்சார் பிரச்சனைகளை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியாக பேசி தீர்ப்பது, கடல்சார் போக்குவரத்தில் உள்ள அச்சுறுத்தல்களை கூட்டாக முடிவுக்கு கொண்டு வருவது, கடல்சார் வளங்களை பாதுகாப்பது ஆகியவை கடல்சார் பாதுகாப்பிற்கான அடிப்படை கொள்கைகள் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தின் போது, ​​ரஷ்ய அதிபர் #புடின், பிரதமர் மோடியிடம், சர்வதேச அரங்கில் பாரம்பரியமாக #இந்தியா ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கிற்கு ஏற்ப, பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகள் உள்ளது என்று பாராட்டினார்.

"ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் ஒருவர் என்ற முறையில், இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான தலைப்பான, கடல்சார் பாதுகாப்பில் உள்ள நவீன சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த உங்களது விவாதத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். உங்களது முயற்சி, சர்வதேச அரங்கில் இந்தியா பாரம்பரியமாக ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கிற்கு ஏற்ப உள்ளது, இதனால் பன்முகத்தன்மையுடன், பரஸ்பர நலன் மற்றும் சமமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சிறந்த பங்கை ஆற்றியுள்ளீர்கள்" என்று புடின் கூறினார்.

ரஷ்ய கூட்டமைப்பு கடல் சார் குற்றங்களை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்கொள்ளும் பணியை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது என்பதையும், இந்த பகுதியில் சமமான சர்வதேச ஒத்துழைப்பின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க ரஷ்யா தயாராக இருப்பதையும் புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 21:42

ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த விரும்புகிறார்கள்: CII ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மீணடும் அதிகரித்து வருகிறது என சிஐஐ வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தில் #பிரதமர்_மோடி உரையாற்றி உள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியா சாதகமான அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களால் நமக்கு சாதகமான அன்னிய நேரடி முதலீட்டைப் இந்தியா பெறுகிறது.

இன்று, குடிமக்களின் உணர்வுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் உள்ளன. அது ஒரு இந்திய நிறுவனமாக இருப்பது அவசியமில்லை, ஆனால் ஒவ்வொரு இந்தியனும் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த விரும்புகிறார். தேசம் தனது மனதை உருவாக்கியுள்ளது.

மேலும், 'Aatmanirbhar Bharat Abhiyan' திட்டத்தின் கீழ் #தொழில்துறை மற்றும் அதன் கொள்கைகளுக்கு பயன் ஏற்ப செய்ய வேண்டும். இதனையடுத்து, புதிய யுக தொழில் முனைவோரைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பல வருடங்களாக #ஜிஎஸ்டி தடைபட்டது, ஏனெனில் அரசாங்கத்தில் முன்பு இருந்தவர்கள் அரசியல் அபாயங்களை எடுக்கும் தைரியத்தை திரட்ட முடியவில்லை. நாங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று நாங்கள் சாதனை ஜிஎஸ்டி வசூலை காண்கிறோம். மேலும், இந்திய வளர்ச்சி வரலாற்றில் தொழிற்சாலைகளின் பங்கு மிக முக்கியமானது எனவும், உலகத்தோடு சேர்ந்து இந்தியாவும் வளர்ச்சி பெறுவதில் முனைப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 3:44

இயற்கை வளங்களை பாதுகாப்பது முக்கியம்: பிரதமர் மோடி

‛‛நமது சுற்றுச்சூழல், நிலம், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் தொழில்முதலீட்டாளர் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். தற்போதில் இருந்து அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நமது பணி, தினசரி வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகத்தில் மாற்றங்கள் ஏற்பட போகிறது.

நமது வாழ்க்கை முறை அல்லது பொருளாதாரம் ஆகட்டும்,தொழில்நுட்பமானது மாறி வருகிறது. இந்த இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த சவால்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நிலம், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை அடிபபடையில் நாம் பணியாற்றலாம். ஆனால், பூமியில் இருந்து கிடைக்கும் இயற்கை வளங்களின் அளவு நமது கைகளில் இல்லை. சுற்றுச்சூழல் உகந்து வளர்ச்சி இருக்க வேண்டும். பருவநிலை மாற்ற சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். மக்களின் நலன்கருதி, இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 4:13

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் திட்டம் ஒரு முக்கிய மைல் கல்

பிரதமர் மோடி

பிரதமர் #நரேந்திர_மோடி இன்று (ஆகஸ்ட் 13, 2021) வீடியோ கான்பரன்சிங் மூலம் குஜராத்தில் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். தன்னார்வ அடிப்படையில் வாகனங்களை நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பழைய வாகனங்களை அப்புறப்ப்படுத்துவதற்கான கொள்கையின் கீழ் பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கான முதலீட்டை வரவேற்பதே உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாடு பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது என #பிரதமர்_மோடி நம்பிக்கை வெளியிட்டார்

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை நாட்டின் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கும். சாலைகளில் ஓட பிட் ஆக இல்லாத வாகனங்களை அகற்றுவதில் இது பெரும் பங்கு வகிக்கும். மேலும் #ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இது நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் "என்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.

நாங்கள் சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்திலிருந்து, அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை. இந்த 25 ஆண்டுகள், நமது வேலை செய்யும் விதத்திலும், நமது அன்றாட வாழ்க்கையிலும், எங்கள் தொழில்களிலும் மாற்றங்கள் நடக்கப் போகின்றன, ”என்று பிரதமர் மோடி கூறினார்.

"#தொழில்நுட்பம் மாறும் விதம், அது நம் வாழ்க்கை முறை அல்லது நமது #பொருளாதாரம் - இரண்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நமது நிலம், நமது வளங்கள், நமது மூலப்பொருட்களைப் பாதுகாப்பதும் முக்கியம், ”என்று பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறினார்.

நிலையான வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், தொழில்நுட்பமும் புதுமையும் எதிர்காலம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். "எதிர்காலத்தில் நாம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் பணி செய்யலாம். ஆனால் அன்னை பூமியிலிருந்து நாம் பெறும் இயற்கை வளங்களை நம்மால் தயாரிக்க முடியாது. எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு அரசு செயல்படுகிறது ”என்று பிரதமர் மோடி கூறினார்.

"நீடித்த வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நாம் மாற வேண்டும் என்பதற்கான முயற்சி இது. காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், குடிமக்களின் நலன் கருதி, #இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ”என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

வாகன ஸ்கிராப்பிங் கொள்கை, சாலையில் ஓட்டுவதற்கு பாதுகாப்பாக இல்லாத வகையிலும் சுற்றுசூழலை பாதிக்கும் வகையிலும் உள்ள பழைய வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் தானியங்கி சோதனை நிலையங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க விரும்புகிறது.

தன்னார்வ அடிப்படையில், வாகனங்களை நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பழைய வாகனங்களை அப்புறப்படுத்துன் கொள்கையின் கீழ் வாகன ஸ்கிராப்பிங் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான முதலீட்டை வரவேற்க முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்சிமாநாடு சாலை #போக்குவரத்து மற்றும் #நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் #குஜராத் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 15:20

பிரிவினையின் வலியை மறக்க முடியாது: பிரதமர் மோடி

‛‛ பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கடந்த 1947 ம் ஆண்டு ஆக.,14ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்ணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. லடசக்கணக்கான நமது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடம்பெயர்ந்தனர். மக்களை கவலைப்படாத வன்முறை மற்றம் வெறுப்பால் பலர் உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.

சமூக பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி ஒற்றமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித வலுவூட்டலின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசப்பிரிவினையின் நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Aug 2021 - 19:58

நாடு முழுவதும் இன்று (ஆக.15) சுதந்திரதின 75 வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் உரையாற்றிய இடத்திற்கும், பார்வையாளர்கள் அமர்ந்த இடத்திற்கும் இடையே பிரமாண்ட கன்டெய்னர்கள் தடுப்பு அரணாக முதன்முறையாக வைக்கப்பட்டன.

சுதந்திரதின விழாவில் வெளிநாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள். ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கொடியேற்றிய பின்னர் பிரதமர் நாட்டு மக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.

உரையை துவக்கிய பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் கோவிட் போராளிகள் , தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  செய்திகள் | தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக