உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நேரம் நிற்பதில்லை!- கவிதைby ayyasamy ram Today at 7:34
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 7:30
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 7:16
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 22:46
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 18:53
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 18:33
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 18:12
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:35
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:34
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 14:25
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 14:23
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 14:10
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 14:05
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 14:03
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 13:55
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:14
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 12:12
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 10:24
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:20
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 10:20
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 10:19
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 7:35
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 7:25
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:31
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:29
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:24
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat 2 Jul 2022 - 22:08
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:55
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:52
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:49
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:23
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:22
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:22
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 21:20
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:16
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:13
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:10
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat 2 Jul 2022 - 21:04
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat 2 Jul 2022 - 20:59
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:21
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:15
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:13
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:11
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:11
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 20:10
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 19:38
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat 2 Jul 2022 - 19:37
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat 2 Jul 2022 - 8:38
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுமன் பெற்ற பரிசு
2 posters
அனுமன் பெற்ற பரிசு
ஒரு முறை, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்து தென்திசை நோக்கி யாத்திரை வந்தார் நாரதர். இதே போல் அனுமன், தென்திசையில் இருந்து பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்றான்.
ஆகாச மார்க்கமாகச் செல்லும் போது இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். இரண்டு பேரும் பண்டிதர்கள்; அவர்களது பேச்சில் உயர்ந்த விஷயங்களே நிறைந்திருந்தன. ''பத்ரிகாஸ்ரமம் போகிறேன்; என்னுடன் வாருங்கள்'' என்றான் அனுமன். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல், நாரதரும் உடன் சென்றார்.
சமுத்திரத்துக்கு நடுவே ஓர் அழகான பட்டினத்தைக் கண்டனர். ''இதென்ன ஊர்?'' என்று கேட்டார் அனுமன். ''இதுதான் பலராமனின் ஊர்'' என்றார் நாரதர். உடனே கோபம் வந்தது மாருதிக்கு! கதாயுதத்தை ஓங்கியபடி, ''யார் பலராமன்? என் ராமனை விட பலமானவனா..? ஊருக்குள் சென்று 'பல' சப்தத்தை இழக்க வேண்டும். அவன் பெயரில் 'பல' இருக்கக் கூடாது. இல்லையென்றால், ஊரே சமுத்திரத்தில் உருளும் என்று சொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தார்.
நாரதருக்கு பயம். வேறு வழியின்றி
வாசுதேவனிடம் சென்றார். வாசுதேவனுடன், வைகுண்டத்தில் இருந்து வந்திருந்த கருடனும் இருந்தார். பரமாத்மாவிடம் நாரதர், ''தங்கள் அண்ணாவின் பெயரில் உள்ள 'பல' எனும் வார்த்தையை எடுத்து விட வேண்டுமாம்! இல்லையெனில், ஊரையே சமுத்திரத்தில் உருட்டப் போவதாகச் சொல்கிறான் மாருதி'' என்றார் நடுங்கியபடி.
இதைக் கேட்டு கோபம் அடைந்த பலராமன் கலப்பையைத் தூக்கினார். கருடனோ, 'ஒரு குரங்கா இப்படிப் பேசுகிறது?
உத்தரவிடுங்கள்... அவனைக் கட்டி இழுத்து வருகிறேன்'' என்றான். பரமாத்மாவும், சந்தோஷம் பொங்க உத்தரவு கொடுத்தார்.
ஆத்திரத்துடன் வந்த கருடனை, அப்படியே வாலால் சுழற்றி, கடல் நீரில் தோய்த்து எடுத்து வீசியெறிந்தார் அனுமன். இறக்கைகள் ஒடிந்த நிலையில், பகவானின் திருவடியில் வந்து விழுந்தான் கருடன். அவனிடம், ''என்ன கருடா... இறக்கைகள் ஒடிந்து விட்டனவா?! ஒரு குரங்கை உன்னால் கொண்டு வர முடியவில்லையே...'' என்றார் மாதவன். தலைகுனிந்து நின்றான் கருடன்.
அடுத்து, சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு ஆவேசத்துடன் சென்றார் பலராமர். அனுமன், தனது நீளமான வாலை நீட்ட, அதில் சிக்கித் தவித்தார் பலராமர்; அவரின் சைன்யம் சமுத்திரத்தில் தத்தளித்தது! ''வேறு வழியே இல்லை. அனுமனின் கோபத்தைத் தணிக்க ஒரே வழி... நான் ராமனாக மாறுகிறேன்; நீ லட்சுமணனாக மாறி விடு'' என்று பலராமனிடம் சொன்னார் பரமாத்மா.
''அப்படியே... சத்யபாமாவை சீதாவாக அழைத்து வாரும். ஸ்ரீராம பட்டாபிஷேக கோலத்தைக் காட்டினால், அனுமனின் கோபம் பறந்தோடி விடும்!'' என்று நாரதரிடம் சொன்னார் பகவான். அதன்படி பரமாத்மா, ஸ்ரீராமராக அமர்ந்திருக்க, பட்டாடை சலசலக்க ஆபரணங்கள் அணிந்தபடி சபைக்கு வந்தாள் சத்யபாமா.
தன் தர்மபத்தினியைக் கண்ட பரந்தாமன், ''எந்த ஊர் நாட்டியக்காரி இவள்? இங்கே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறாளோ?' என்று கேட்க, துக்கத்திலும் வெட்கத்திலும் உடைந்து போனாள் சத்யபாமா; உள்ளே ஓடிச் சென்று அழுதாள் நாரதரிடம் பரமாத்மா மெள்ள கண்ணசைக்க... புரிந்து கொண்ட நாரதரும் உள்ளே சென்று, ''சீதையாக வரச் சொன்னால் இப்படியா வருவது? திருமண தருணத்தில் இருந்த சீதையைப் பிடிக்காதாம் அனுமனுக்கு!
அசோகவனத்தில் சோகமாக இருந்த சீதையைத்தான் பிடிக்குமாம். ஆகவே, அந்தக் கோலத்தில் வா'' என்றார் நாரதர்.
இதைக் கேட்ட சத்யபாமா, ஆபரணங்களை கழற்றினாள்; தலையை விரித்துப் போட்டாள்; சேலைத் தலைப்பைக் கிழித்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு சபைக்கு வந்தாள். இப்போதும் பரமாத்மாவுக்கு திருப்தி இல்லை. ''சீதை அசோகவனத்திலும் நன்றாகத்தான் இருந்தாள். இப்படி, பத்ரகாளி போல் வருகிறாயே'' என்றார். இதையடுத்து ருக்மிணியே, சீதாதேவியாக வந்தாளாம்!
உடனே கருடனை அழைத்த பரமாத்மா, ''உன் முதுகில் அனுமனை ஏற்றி வா!'' என்றார். அனுமனும் அவனது வாலும் நினைவுக்கு வர... கருடன் மறுத்தான். ''நான் சொன்னதாகச் சொல்லி அழைத்து வா'' என்றார் பரமாத்மா. அதன்படி, அனுமனை சந்தித்து விவரம் சொன்னான் கருடன்.
அத்துடன் பகவான், பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள விவரத்தையும் தெரிவித்தான். இதையடுத்து கருடனின் மேல் ஏறி வந்தான் மாருதி!
ராமாவதாரத்தில் கிடைத்த பரிசு - முத்துமாலை! இப்போது, தனது வாகனத்தையே கொடுத்து... பெரிய திருவடி மீது சிறிய திருவடி பவனி வரும் அழகை துவாரகையில் இருந்தபடி ரசித்தார் பரமாத்மா! ஆனாலும் திருப்தியில்லை அவருக்கு! அனுமன் செய்த உபகாரத்துக்கு எல்லையே இல்லையே!
பிறகு... ஸ்ரீராமனாக, அடுத்து கிருஷ்ணனாக, இதையடுத்து சேஷ சயனத்தில் லட்சுமியுடன் நாராயணனாக... மாறி மாறி காட்சி கொடுத்தார் பரமாத்மா!
இதில் ஒரு விஷயம்... கிருஷ்ணனாகவும் நாராயணனாகவும் அவர் காட்சி தந்த போது, சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட மாருதி, ஸ்ரீராமராகக் காட்சி தரும் போது மட்டும் கண்களை அகல விரித்து ஆனந்தமாக ஸேவித்தான்!
அதாவது ராமரைத் தவிர அனுமனின் மனம் வேறு எங்கும், வேறு எவரிடமும் செல்லாது!
ஸ்ரீ ராம ஜெயம்.
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|