உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ஆன்மீக தகவல்கள்by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
3 posters
காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
ஒளி ஏற்றும் தீபம் காவல் தெய்வம்...
காவல் தெய்வம் குறும்படம் காவல்துறையில் நடக்கும் பிரச்சனைகளை மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கப்போகும்
எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளது. அக்கதையில் ஓபனிங் காட்சி ஒரு காவல்துறை பேருந்தைக் காட்டி அதற்குள் பகத்சிங் புத்தகத்தை ஒரு இளம் ஆண் காவலர் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் என்பதை காட்சிப்படுத்துகிறது. அவர்களுள் இரண்டு பெண் காவலர்கள் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
அப்படம் இரண்டு மையப் பிரச்சினைகளைப் பற்றி பேசப்படுகிறது. ஒன்று பெண்கள் பொதுவெளியில் அதிலும் குறிப்பாக காவலர்களாக இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள். மற்றொன்று உயிர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் வீடுகளில் காவலர்கள் ஆடலி முறையில் அனுபவிக்கும் துன்ப துயரங்களைப் பற்றி தெளிவான பதிவு.
இரண்டு பெண் காவலர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணைப்பார்த்து உங்களுக்கு ஏன் போதும் பொண்ணு என்று பெயர் வைத்தார்கள்? என்ற கேள்விக்கு, ஆண் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் தொடர்ந்து பெண்குழந்தைகள் பிறப்பதால் பெண் குழந்தை போதும் பொண்ணுஎன்று பெயரிட்ட வரலாறும், இன்னும் சில இடங்களில் பெண்ணாய் பிறப்பது பெண் குழந்தைக்கு 'வேண்டா', 'கசப்பு' என்ற பெயர் சூட்டியதையும் அறியலாம். தான் வளர்ந்து பெரியவள் ஆனதும் பொதுவளியில் தன் பெயரைச் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள் ஏராளம். அப்பொழுது அப்பெண் பிள்ளைகளின் மன நிலைமை என்னவாக இருக்கும்? பாவம் அவர்களும் அண்ணனைப் போல, தம்பியைப் போல, தந்தையைப் போல எல்லோரையும் போல தானும் ஒரு மனுஷி தானே என்ற எண்ணம் தோன்றாது?, அந்த உணர்வுகளை கொன்று புதைப்பதற்கும், பெண் குழந்தை பிறந்த போது சிசுக்கொலை செய்வதற்கும் யார் உரிமையை தந்தது? அல்லது அக்குழந்தைகள்தான், தாங்களே விருப்பப்பட்டு இந்தந்த பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று
வரம் கேட்டு வந்து பிறந்தவர்களா? என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழும்.
இரண்டாவது ஆடல் முறை டூட்டி பற்றி... ஐபிஎஸ் போன்ற பதவியில் இருக்கும் அதிகாரிகளின் வீடுகளில் ஆடல் முறையில் காவலர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு அவர்கள் செய்யும் அட்டூழியம் இக்கதையில் பேசப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் யார் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். எதுவும் தவறு இல்லை. தவறைத் தட்டிக் கேட்பதற்கு தன்னைவிட அதிகாரம் குன்றியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அல்லது அவர்களுக்கு உரிமையும் இல்லை. என்ற எண்ணம் மேலோங்கிய காரணத்தால், இன்றும் அவர்கள் வீடுகளில் உள்ள துணிமணிகளை துவைப்பது, நாயை வாக்கிங் கூட்டி செல்வது, அவருடைய பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் பார்க், பீச் என்று சுற்றி காட்டுவதற்கும் வலம் வருவதற்கும் அரசாங்கப் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இது போன்ற பணிகளில் உள்ள காவலர்களின் மன நிலமையும் அழுத்தப்பட்டு அவர்கள் தற்கொலை வரை சென்ற வரலாற்றையும் அறிய முடியும்.
இங்கு பெண் காவலர் ஒருவர் அரசியல்வாதியின் பாதுகாப்பு பணிக்காக காலை 9 மணிக்கு ஒரு கூட்டு ரோட்டில் இறக்கிவிட படுகிறாள். பெண் காவலரும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் பொதுவெளியில் கடுமையான வெயிலில் கால்கடுக்க நிற்கிறாள். நேரம் கடந்து கொண்டே செல்கிறது. அந்த அமைச்சரின் காரும் வரவில்லை. அந்நேரத்தில் அப்பெண்ணுக்கு இயற்கை உபாதை ஏற்படுகிறது. வயிறு முட்டி ஒன்னுக்கு வருகிறது. உடல் உபாதை வாட்டி வதைக்கிறது. இரண்டடி எடுத்து வைத்து உடனே வந்து விடலாம் என்று மறைவிடம் செல்லும் பெண், ஆம்புலன்ஸ் அலறல் சத்தம் கேட்டு திரும்பவும் வந்து விடுகிறாள். சில நொடிகளுக்குப் பிறகு இம்முறை தாங்கொண்ணா துயரம் என்பதால் ஒரு நிமிடத்தில் மறைந்து திரும்புகிறாள். உடனே ஒரே கூப்பாடு. அங்கு பெரிய வாகனம் பெரும் சத்தத்தில் பிரேக் போட்டு நிற்கிறது. அசம்பாவிதம் நடந்து விட்டதோ? அவசர கோலத்தில் பெண் காவலர் ஓடி வந்து நிற்கும்போது, கூச்சலும், குழப்பமாகவும் ஆண் காவலர்கள் வசைமாரி பொழிகிறார்கள். அதில் ஒருவர் ஓசியில் சம்பளம் வாங்கிக்கொண்டு போயிடலாம்னு பார்த்தியா?. அவ்விடத்திற்கு ஆய்வாளர் வருகிறார். அவர் பங்கிற்கு கேட்கக்கூடாத வசை சொற்கள் எல்லாம் கேட்கிறார். தன் மகள் போல் இருக்கும் அப்பெண் காவலரை எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்று கூட தெரியாமல் பேசிக்கொண்டே கோபத்தின் உச்சிக்கே சென்று கொண்டிருக்கும் போது, அப்பெண் காவலரின் சொற்கள் அவர் காதில் ஏறவில்லை. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கூட அவர் காது கொடுத்து கேட்காமல் ஆய்வாளர் உச்சத்திற்கே சென்று தே....யா என்று வசை மாறிய சொற்களால் அனல் கக்கும் சொற்களால் தீண்டியபோது, பொதுவெளியில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தியதால் அப்பெண் காவலர் ஆய்வாளரின் கன்னத்தில் ஒரே ஒரு அறை அறைந்து விடுகிறாள். அதன் பின்னர் அப் பெண் அனுபவிக்கும் துயரத்தை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
யாரிடமும் கைகட்டி பதில் சொல்வதைத் தாண்டி வேலையை விட்டொழிப்பது நல்லது என்பதால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்து, நடந்ததை மேலதிகாரியிடம் கொடுத்து விடலாம் என்று நினைத்த போது வீட்டிலிரந்து ஒரு போன் கால் அம்மா பேசுகிறார். முழுகாம இருக்கும் அக்காவின் பிரசவத்திற்கு கூடுதலாக செலவாகும். அதனால் இந்த மாதம் அனுப்பும் பணத்தில் கொஞ்சம் சேர்த்து அனுப்புமா... அந்த போன் காலுக்கு பிறகு அப்படியே ஒடிந்து விழுந்து விடுகிறாள். ராஜினாமா கடிதத்துடன் க்ஷுவை மாட்டிக் கொண்டிருக்கும் போது வந்த போன்களுக்கு பிறகு கடிதத்தால் க்ஷுவின் மேல்புறத்தின் அழுக்கைத் துடைத்து கசக்கி நுணுக்கி எரிகிறாள்.
வெறும் 14 நிமிட படம் தான் பார்ப்பவர்களின் கண்களில் நீர் சொரியும்
இதை வெறும் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று நினைத்தோ அல்லது இது ஒரு கருத்து படம் என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது.
ஆண்டாண்டு காலமாக நடந்த ஆயிரக்கணக்கான பதிவுகளின் சாரம் இது.
பெண் ஏன் அடிமையானாள் என்பதற்கு தந்தை பெரியார் சொல்வது இரண்டு காரணங்களைதான். ஒன்று பொருளாதார தன்னிறைவு. இரண்டு கருப்பை சுமக்கும் கடமை இவை இரண்டும் தான் பெண்கள் அடிமைப்படுத்தி பலவீனப் படுத்தப் படுகிறார்கள் என்கிறார்.
அதேபோன்று மார்க்சிய சித்தாந்தமும் பெண் விடுதலையைப் பற்றி பேசும்பொழுது பெண்கள் எப்பொழுதும் ஆண்களையே சார்ந்து எழுவதற்கு பொருளாதாரம் மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே அவர்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தையும் அதனால் அவர்கள் தங்கள் தேவைக்காவது பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வது அவசியம் என்ற காரணத்தையும் முன்வைக்கிறது.
இன்றும் எத்தனையோ கிராமங்களில் பெண்கள் வேலைக்கு செல்லும் பெரும்பாலான இடங்களில் நிலவுடைமையாளர்கள் பண்ணையாளர்கள் பிடியில் சிக்கிய வரலாறும் உண்டு. அதேபோல உயர்பதவிகளுள்ள அதிகாரிகளு பெண்கள் பணிந்து போக வேண்டியதாகவும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உயர் பதவியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதை எதிர்த்து அவரைவிட உயரதகாரி, மேலதிகாரி, முதலமைச்சர் வரை சென்றாலும்
புகார் கடிதத்தை வெறும் காகிதமாக மாற்றிய வரலாறு உண்டு. அதேபோல் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர், உஷா என்கின்ற பெண் காவலருக்கு கொடுக்கும் இன்னல்கள் எல்லாம் சொல்லி கண்ணீரும் கம்பலையுமாக சமூக வலைதளங்களில் அழும் காட்சிகள் வைரலாக இன்றுவரை பரவிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான வரலாறும் உண்டு.
கொரோனா பெரும் தொட்டு காரணத்தால் நாடு ஊரடங்கு உத்தரவு போட்டு கண்காணித்து வரும் வேலயில், வட இந்தியாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஜாலியாக ஊர் சுற்றி வரும்போது, பெண் காவலர் ஒருவர் அவரை எச்சரித்த போது, எதிர்த்து வாக்குவாதம் செய்து அப்பண் காவலரிடம் தான் யார் என்று தெரியுமா? நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் என்னுடைய அப்பா ஒரு சட்டமன்ற உறுப்பினர். வாய்க்கு வந்ததை எல்லாம் சரமாரியாக பேசி அப்பெண் காவலரை எச்சரிக்கிறார். ஆனாலும் யாருக்கும் அஞ்சாமல் பிரச்சினையை எதிர் கொண்ட காரணத்தால், இது ஒரு பெரிய மானப் பிரச்சனை ஆதனால் தன்னிடம் அந்த காவலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன்னுடைய அப்பாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார். பதவியில் உள்ள உயர் ஆண் அதிகாரிகளும் அவரை மன்னிப்பு கேட்க சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்பெண் காவலர் பனங்காட்டு நரி எந்த சலசலப்பும் அஞ்சாது என்பதை போன்று தன்னுடைய பதவியை ராஜினமா செய்துவிட்டு தான் ஒரு கடை நிலைக் காவலராக இருப்பதால்தானே மிரட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே இடத்தில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வந்து அமருவேன் அப்போது உங்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி கேட்கும் காணொளி காட்சியும் தொலைக்காட்சிகளிலும் செய்தியாக மாறியது வரலாற்றையும் அறியலாம். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் பாலியல் சீண்டல்களும் அவர்களை குறிவைத்து தாக்கப்படுகிறது.
மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் கூட பெண்கள் சுதந்திரமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காவல் தெய்வம் என்ற குறும்படம் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உணரமுடிகிறது. குறிப்பாக பெண் காவலர்களுக்கு ஏற்படும் சொல்லொணாத் துயரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இப்படத்தை பார்த்தாலோ என்னவோ தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிரக்கிறது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தல் டிஜிபி திரு. திரிபாதி அவர்கள் அமைச்சர்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளார்.
இது போன்ற ஆரோக்கியமான படங்களால் தான் சமூகத்தில் நல்ல மாற்றங்களும் ஏற்படுகிறது என்பதற்கு இப்படம் ஒரு சான்று.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் எடிட்டர் நடிகர்கள் என்று எல்லோரையும் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும்.
முன்பு சொன்னது போல வெறும் 14 நிமிடத்தில் இயக்குனர் அருமையான களத்தை திரைக்கதையாக மாற்றி ஒரே ஒரு நொடி கூட வீண் என்று வாதத்திற்கு கூட விமர்சனம் வைக்க முடியாத அளவிற்கு, அல்லது இப்படத்தை விமர்சனம் என்ற போர்வையில் குறைத்து மதிப்பிடுவது கூட இடம் தராமல் தன்னுடைய பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. ஓபனிங் காட்சி தொடங்கி இறுதியாக ராஜினாமா கடிதத்தை கசக்கி நுணுகி கால்களுக்கு கீழே போடும் ராஜினாமா கடிதம் வரை தன் பதிவை அழுத்தமாக செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் தம் பங்கிற்கு கேமரா வழியாகவும் இயல்பாக பார்வையாளர்களுக்கு கதையை கடத்துகிறார். தான் பார்ப்பது ஒரு படம் என்பதையும் மறந்து பார்வையாளரின் ஒவ்வொரு கண்களும் கேமரா சென்றதை படம் முடியும் போது தான் உணர முடிகிறது. அந்த அளவிற்கு ஒளிப்பதிவாளர் திரு கார்த்திக் பாஸ்கர் அவர்கள் அழுத்தமான ஒளிப்பதிவை செய்து படத்தை மிரட்டியுள்ளார்.
அடுத்து இசையமைப்பாளர் தொடக்கத்தில் மென்மையாக வரும் இசை, அப் பெண் காவலர் உணர்வுகளின் பிரதிபலிப்பு செய்வதைப்போல வெகுண்டெழுந்த வரலாறையும் இசையின் மூலம் பதிவு செய்துள்ளார். அந்த அளவிற்கு இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
உணர்ச்சித் தீப்பிழம்பாய் மாறுவதற்கு தன் உணர்வை அப்படியே ஒரு பார்வையாளனுக்கு கடத்துவது தான் நடிப்பு. நடிப்பில் கொஞ்சம் பிசகினாலும் ஒட்டு மொத்த படமும் வீண். அதனால்தான் இயக்குனர் தன்னுடைய கதைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நடிப்பிற்கும் கொடுப்பார். இப்படத்தில் பெண் காவலராக நடித்த நடிகை சரண்யா ரவி அவர்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம். அந்த அளவிற்கு ஒரு சின்ன பிசகு கூட இல்லாமல் பாத்திரமாக மாறியதை அறியலாம்.
இவை எல்லாவற்றையும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது தான் எடிட்டிங். தேவையானதை நம் கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திய அந்த பெருமை ஸ்ரீராம் நாகராஜுக்குண்டு.
ஒட்டுமொத்தமாக மிக சிறப்பு வாய்ந்த படமாக திகழ்கிறது அந்தவகையில் இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் காவல் தெய்வம் - தெய்வங்களுக்கும் காவல் தான் தெய்வம்.
நன்றி

DRPAVALAN- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 25/07/2021
மதிப்பீடுகள் : 10
சிவா and T.N.Balasubramanian like this post
Re: காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
காவல் தெய்வம் --அருமையான கதை அமைப்பு.
யதார்த்தமாக கொண்டு செல்லப்படுகிறது.
*****
யதார்த்தமாக கொண்டு செல்லப்படுகிறது.
*****
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
கதை நன்றாக உள்ளது. இந்த குறும்படத்தை எங்கு பார்க்கலாம்? யுடியூப் லிங்க் இருந்தால் பகிரவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|