உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.by T.N.Balasubramanian Today at 9:00 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Today at 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Today at 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Today at 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Today at 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
sncivil57 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைத்துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 2 • 1, 2 

திரைத்துளிகள் - தொடர் பதிவு
பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-

-
வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
“நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி,” என்று பசுபதி கூறியுள்ளார்.
தமிழ்முரசு-sg

jairam likes this post
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு
-

-
பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் மறுபதிப்பாகும்.
பிரசாந்தும் சிம்ரனும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இதில் கண்பார்வையற்ற இசைக் கலைஞராக சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு
-

-
மதுரை;
நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து
வெளியிட்ட வீடியோவால் சைபர் கிரைம் போலீசார்
7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மீராமிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் ,
"திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
மலிவான விசயங்களை செய்கிறார்கள். அவர்களை
திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம்
இது". இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர்
பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த சில
அமைப்புகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில்
சைபர் கிரைம் போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம்,
அவதூறாக பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மீரா மிதுன்
மீது 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
-தினமலர்

மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
-

-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-
‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.
சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.’’
தினத்தந்தி

கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!
-

-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.
அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.
‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!

உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்
-

-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.
குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.
சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு
-

-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.
குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.
ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.
இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|