ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோவில் நகைகளை உருக்குவது
by T.N.Balasubramanian Today at 7:27 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by ஜாஹீதாபானு Today at 4:24 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» உங்கள் குழந்தை சூப்பர் ஹீரோவாக இதுவே முதல் படி
by curesure4u Today at 8:35 am

» ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
by mohamed nizamudeen Yesterday at 8:52 pm

» டில்லி கேரட் அல்வா
by T.N.Balasubramanian Yesterday at 6:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» அச்சுறுத்தும் புது வகை கொரோனா - தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:35 pm

» பாகிஸ்தான் அணி வென்று விட்டதால்…
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:16 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:07 pm

» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
by curesure4u Tue Oct 26, 2021 8:31 am

» பாப்கார்ன்
by ayyasamy ram Tue Oct 26, 2021 6:03 am

» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Oct 25, 2021 10:22 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:53 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Mon Oct 25, 2021 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:27 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by Guest Sun Oct 24, 2021 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:46 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Sun Oct 24, 2021 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன?

2 posters

மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? Empty மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன?

Post by சிவா Wed Jul 28, 2021 6:21 pm

ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்வதை 'மேகவெடிப்பு’ என வரையறுக்கலாம்.

100 மிமீ மழைப்பொழிவு என்றாலே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,00,000 மெட்ரிக் டன் மழைக்கு சமம்!

#மேகவெடிப்பு (Cloud Burst), மலைகளை ஒட்டியுள்ள, குறிப்பாக தொடர்ச்சியான மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் நிகழக் கூடிய மழை விபத்து.

மிக குறுகிய காலத்தில், மிகத் திடீரென, மிக அதிக மழை பெய்யும் நிகழ்வு. இவை பெரும்பாலும் இடிமழையுடன் (thunderstorms) சேர்ந்தே தோன்றும்.

மழைமேகம் திரள்கையில் அதன் மழைத்துளிகள் தரையில் விழாமல் சில மணித்துளிகள் தடுக்கப்படுவதுதான் இதன் தொடக்கப்புள்ளி.

விளைவாக அந்த மேகங்களில் பேரளவில் நீர் தேக்கப்படுகிறது.

நம் தலைக்குமேல் ஒரு பேரணை அதன் முழு கொள்ளளவை அடைந்தால்? திடீரென அந்த 'அணை' உடைந்தால்?

அது தேக்கி வைத்த நீர் முழுவதும் நிலத்தின் மேல் ஒரே நேரத்தில் விழுந்தால்? மேகவெடிப்பில் இப்படித்தான் நடக்கிறது.எப்படி ஆரம்பிக்கிறது?

முதலில் மலைகளையொட்டிய பிரதேசங்களில், மேல்நோக்கிய காற்றில் வன்முறையான எழுச்சிகள் ஏற்படும். மழைத்துளிகள் கீழே விழாமல் அணைபோல் தடுக்கும். இதனால் மேகத்திலேயே அதிக அளவு நீர் குவிந்துவிடும்.

திடீரென்று இந்த மேல்நோக்கிய காற்றோட்டம் பலவீனமடையும். தேக்கிவைத்த நீர், ஒரே நேரத்தில் நீர்வீழ்ச்சி போல விழும்.

ஒரு மேக வெடிப்புக்கு விருப்பமான சூழல் காரணிகள் (Ideal Conditions)
மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? O0q9sFM

ஏன் மலை பிரதேசங்களை அதிகம் பாதிக்கிறது?

இடியுடன் கூடிய சூடான காற்று, இப்படியான கனத்த நீரோட்டங்கள் 'மேலேறுவதற்கு' ஒரு மலையின் சரிவு மிகவும் உதவுகிறது.

அதே போல மேகவெடிப்பினால் பெய்யும் பலத்த மழையின் விளைவுகள் மலை சரிவுகளில் பெரும் சேதம் விளைவிக்கக்கூடியவை. இந்த நீர் மலை முகட்டிலும், பள்ளத்தாக்குகளிலும் குவிந்து சமவெளியை நோக்கி பாய்கின்றன.

மேகவெடிப்பு ஒரு பேரிடரா?

அதனளவில் மேகவெடிப்பு (Cloud Burst) ஒரு பேரிடர் அல்ல. கடல் மீது வெடித்தால் அது செய்திகூட இல்லை.

மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் மேகவெடிப்புதான், பெருவெள்ளம், மண்சரிவு என்று பேரிடரை நோக்கி மக்கள் வாழ்வை அடித்துச்செல்கிறது.

இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பனிபடர் மாநிலம் உத்தரகாண்ட். அடிக்கடி மேகவெடிப்புகளின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது.

2013ல் டேராடூன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 24 மணி நேரங்களுக்குள்ளாக 370 மி.மீ. மழை பதிவாகியது. 5700க்கும் மேல் மனிதர்கள், பல்லாயிரம் உயிரினங்கள் மரித்தனர்.

கங்கை ஆற்றின் மேல்புறத்தில் கட்டப்பட்ட அணைகளும், அதன் துணை நதிகள் மந்தாகினி, பாகீரதி, அலக்நந்தா ஆறுகளில் கட்டப்பட்ட அணைகளும் பேரழிவை தீவிரப்படுத்தின என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு மலைத்தொடர், ஒரு தொடர் மழை.

மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறம், இயற்கைக்கு ஒரு அந்தப்புரம்.

அந்த எழில் கேரளத்திலும் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்படுவதுண்டு.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெட்டிமுடியில் 100 பேருக்கு மேல் இறந்த நிலச்சரிவு சம்பவம் மேகவெடிப்பால் தோன்றிய மழையினால் என்று செய்திகள் வந்தன.

ஆகஸ்ட் 5ல் 310 மி.மீ மழை, ஆகஸ்ட் 6ல் 620 மி.மீ மழை.

நான்கு நாட்களில் மொத்தம் 1840 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்தியாவின் ஆண்டுச் சராசரி மழையளவே 1120 மில்லிமீட்டர்தான். இந்த மேகவெடிப்பைக் கற்பனை செய்வதே கடினம்.

1924 கேரள மகாபிரளயத்துக்கு அடுத்து இதுவே அதிகபட்ச மழை. அந்த கேரள பிரளய காலத்தில் பெய்த மழை 3,368 மி.மீ.

மூணாறு உண்மையிலேயே மூழ்கி விட்டது. சம்பவம் முல்லைப்பெரியார் அணை கட்டி 29 வருடங்களுக்கு பிறகு நடந்தது.

தடுக்க முடியுமா?

வழக்கமாக மேக வெடிப்பு நடைபெறும் பகுதிகளில் மிகவும் கடுமையான மேகமூட்டங்கள் தெரிந்தால் மேகவெடிப்பை ஓரளவு ஊகிக்க முடியும். மற்றபடி பெரும்பாலும் இது ஒரு திடீர் விபத்துதான்.

சமீபத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

'வானிலை அறிவியலார்கள் மேகவெடிப்பை கண்டுபிடித்து எங்களிடம் சொன்னால் போதும். நாங்கள் அந்த மேகங்களை உடனே ஒரு குண்டு வைத்து வெடித்து, அதை சிதைத்து, சேதத்தை தவிர்த்துவிடுவோம்' என்று வெடிகுண்டு அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

இன்னொரு விதமாகக் கூற வேண்டும் என்றால் 100 மி.மீ மழை ஒரு மணி நேரத்தில் பெய்வது.

இதை எதிர் கொள்வது கடினம். மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லாமல் வெள்ளம் ஏற்படும்.

உத்தரகாண்ட்டில் 15 ஜுன் 2013-ல் கேதர்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. பலத்த சேதம்.

மும்பையிலும் இதுமாதிரி சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீரிலும் நடந்துள்ளது. ஹரித்துவாரிலிலும் நடந்துள்ளது.

2017 ஜூலை மாதம் சென்னையில் ஒரு மணி நேரத்தில் 40 மி.மீ மழை பெய்தது. ஊரே வெள்ளக்காடாகியது. மக்கள் மேகவெடிப்பா என சந்தேகப்பட்டனர்.

அதிகமாக மலை பிரதேசங்களிலிலும் கடலிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆலங்கட்டிகளும் விடுவதுண்டு.

உயிர்ச் சேதங்களும் ஏற்படும். தவிர்க்க இயலாது.

quora.com


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

T.N.Balasubramanian, ayyasamy ram and aanmeegam like this post

Back to top Go down

மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? Empty Re: மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Jul 28, 2021 10:06 pm

மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? 103459460 மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? 3838410834 மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன? 1571444738


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10864

சிவா likes this post

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை