புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மனோவசிய ரகசியம் - Page 2 I_vote_lcapமனோவசிய ரகசியம் - Page 2 I_voting_barமனோவசிய ரகசியம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோவசிய ரகசியம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Jul 2021 - 2:11

First topic message reminder :

மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் என்னும் மனோவசிய ரகசியம்
ஆசிரியர்: k.வெங்கட்ராவ்

நினைப்பது கைகூட வேண்டும்

நமது நண்பர்கள் நமக்கு எல்லா நன்மைகளும் செய்ய வேண்டும். நமது காதலி நம்மையே நேசிக்க வேண்டும். நமது மனைவி நம்முடன் கருத்து வேற்றுமையில்லாமல் இல்லறம் நடத்த வேண்டும். நாம் நினைப்பது போலவே' கைகூட வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? எல்லோரும் நினைக்கிறோமல்லவா?

நமது மனதில் சிந்திப்பது நடக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யார் என்று கூற முடியாது. நாம் கோரிய காரியம் கைகூட வேண்டும். கடவுள் கூட நமது இச்சைக்கு இணங்க வேண்டும் என்று ஆசைப்படுவோரும் உண்டு. எல்லாம் நியாயமான ஆசைகள் தான், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் எண்ணுவது போல் பிறரும் எண்ண வேண்டும்; நாம் நல்லவர் என்று மற்றவர் சொல்ல வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? இது தான் கலைக்கு அஸ்திவாரமாகும்.

இந்த அஸ்திரவாரத்தைக் கொண்டே நாம் நமது திட்டங்களை உருவாக்க வேண்டும்.

'கெட்ட எண்ணங் கொண்டவன்; கெட்ட செய்கை செய்பவன்' என்று பிறரை நாம் பழிக்கிறோமல்லவா? பிறர் நம்மைப் பார்த்து இப்படி பேசாதிருக்க வேண்டுமல்லவா? அதாவது நம்மைப் பிறர், பொய்சொல்பவன், நன்றி கெட்டவன். ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன் என்று சொல்லாமலிருக்க வேண்டுமானால் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறர் செய்யும் உபகாரத்தை எப்போதும் மதித்து போற்ற வேண்டும். மனமார பிறரை வஞ்சிக்க எண்ணவே கூடாது. பிறர் எப்படி நல்லவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அந்த நல்ல குணங்களுடன் நல்ல எண்ணங்களுடன் நாம் வாழ வேண்டும்.

'மனம் அழுக்கில்லாமல் பரிசுத்தமாயிருக்க வேண்டும். இதுவே மனேவசியக் கலைக்கு அடிப்படையாகும். இக் கலையால் பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது மற்றவன் ஏமாந்திருக்கும் வேளையில் அவனது பொருளை அபகரிக்க வேண்டுமென நினைக்கக்கூடாது.

மற்றவன் மனைவியை வேறு எண்ணமே இல்லாத பதிவிரதையை ஏமாற்றி அவளது கற்பைப் பறிக்க வேண்டுமென்ற ஆசையை வைக்கக்கூடாது. கல்யாணமாகாத பெண்ணை வசியப் படுத்தி பலாத்காரத்தால் அவளைக் கெடுத்து பிறகு நடுத்தெருவில் அலைய விட்டுவிடலாம் என்று கற்பனை கூட செய்யக்கூடாது.

நமது மனம் பரிசுத்தமாக, நல்ல எண்ணங்களுடன் நல்ல குறிக்கோள்களாக இருந்தால்தான் மனோவசியக் கலை நல்லப் பலனைத் தரும். இல்லாவிடில் இது பலிக்காது.

மனோவசிய மின்சாரம்

மின்சார வசதி இருந்தால் தான் இரும்புத் தூள்களை இழுக்க முடியும். இந்த சக்தி இல்லாவிட்டால் ஒன்றுமே முடியாது. இதுபோலவே நமது மனம் நல்ல நிலைமையில் இருந்தால்தான், பிறர் மனதை இழுக்க முடியும். நமது மனதில் அன்பு இருந்தால்,

இதன் மூலம் பிறரை வசியப்படுத்தலாம். நாம் விசுவாசம் காட்டி பிறரை நம்மை விசுவாசிக்கும்படி செய்யலாம். வெறுப்பும், கடுமையும், கெட்ட எண்ணமும் இருந்தால் இவைகளின் பிரதிபலிப்பே பிறரிடம் நாம் காண நேரிடும். ஆகையால் மனோவசியக் கலைக்கு நாம் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களுடன் நமது மனம் துள்ளி விளையாட வேண்டும். நல்ல சக்தியுடன் நமது மனம் இருந்தால்தான் பிறர் மனதையும் நமக்கு ஆதரவாக இழுத்துக் கொள்ள முடியும் பிறருடைய சக்தி நமக்கு அடிமைப்பட வேண்டுமென்று நாம் கோரும்போது அதைவிட நமது சக்தி அதிகமாக இருக்க வேண்டுமென்று தெரிகிறதல்லவா?

ஒரு ஆசிரியரையும் மாணாக்கர்களையும் எடுத்துக் கொள்வோம். மாணாக்கர்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியருடைய அறிவுக்கு மாணாக்கர்கள் மதிப்புக் கொடுத்து அடங்குவார்கள். மாணாக்கர்களின் சந்தேகங்களைப் போக்க அறிவில்லாத ஆசிரியரை, மாணாக்கர்கள் மதிக்க மாட்டார்கள். அதுபோலவே மற்றவர்கள் நமது இஷ்டங்களுக்கு இணங்க வேண்டும்.

மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நாம் நினைக்கும் போது அவர்களுடைய மனோசக்திக்கு மீறிய சக்தி நம்மிடம் இருக்க வேண்டுமென்று பொருள் படுகிறதல்லவா? இந்த சக்தியை நாம் எப்படி அடையலாம்? இதற்கு வழிமுறைகள் என்னென்ன? கவனிப்போம்.

எதுவும் நினைத்தவுடன் நடந்து விடாது. சிறிதேனும் பயிற்சி வேண்டும் அல்லவா?



மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 0:53

அமானுஷ்ய சக்திகள்

பொதுவாக மனிதர்களிடையே இயற்கையாகவே ஒருவித அதீத சக்தி பொருந்தி இருக்கிறது எனலாம். ஆனால் அது இயல்பாக வெளிப்படும் என்று கூறுவதற்கில்லை. எனவே அதனைத் தக்க வழியில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பயிற்சிகளின் மூலம் அந்த சக்தியினைவளர்த்துக் கொண்டு, பின் ஏற்ற வழியில் அதனை வெளிப்படுத்துவோமானால் அதிசயத்தக்க செயல்களை நம்மால் நிகழ்த்த முடியும். இயற்கையாக பொருந்தியுள்ள இந்த சக்தியையே 'மின்சார சக்தி' என்றும், காந்த சக்தி' என்றும் 'நரம்புச் சக்தி' என்றும் குறிப்பிடுகின்றனர்.


நீறு பூத்த நெருப்பாக மனிதர்களிடையே உள்ளடங்கிக் கிடக்கும் அதீத சக்தியை அதிகரித்துக் கொண்டு, பின் அற்புத அமானுஷ்ய விளைவுகளை நிகழ்த்திக் காட்டுவதே 'ஹிப்நாடிசம் மெஸ்மரிஸ், கலைகளின் தாத்பரியமாகும்.

அவயங்களின் சக்தி

ஒவ்வொரு மனிதர்களின் கண்பார்வைக்கும் சக்தி உண்டு அதே போல் கைவிரல்களுக்கும் சக்தி உண்டு, ஏன்? வாக்குக்கும்கூட சக்தி உண்டு என்று உறுதியுடன் கூறலாம். ஆம்! இயல்பாக பார்வையிலே வெளிப்படும் சக்தியை பயிற்சி முறைகளால் மேலும் வளர்த்துக் கொண்டால் நாம் தேர்ந்த ஹிப்நாடிச மெஸ்மரிஸ நிபுணராகலாம். அதே போல் கை விரல்களிடை பொருந்தி நிற்கும் காந்த சக்தியை மேலும் அதிகரித்துக் கொண்டால் அளப்பரும் சக்திகளை விளைவிக்கக்கூடிய ஆற்றல் உடையதாக கைவிரல்கள் மாறும் அவ்வாறே நாம் உச்சரிக்கும் சொல்லுக்கும் சக்தி உண்டு.

எனவே வாய் மொழி உச்சரிப்புக்கு ஏற்ற வழியில் உருக் கொடுத்தால் அது மந்திரச் சொற்களாக உரு மாறிவிடும். அந்த நிலையில் நம் நாவிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் கட்டளைச் சொற்களாக நின்று, மற்றவரை அடக்கித் தன்வயப்படுத்தும். பார்வை, ஸ்பரிசம், கட்டளைச் சொல் இவைகளிடை காந்த சக்தி அதிகரிக்க வழி முறைபயிற்சிகளும், விளைவுகளும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஹிப்நாடிஸ மெஸ்மரிச கலைகளில் தேர்ச்சிப் பெற விரும்புவோர் அவ்வழி முறைகளை பல முறை படித்து மனதில் இருத்திக் கொண்டு பின் செயலில் இறங்க வேண்டும்.




மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 0:53


விளையும் பயன்கள்

ஹிப்நாடிச மெஸ்மரிஸ கலைகளில் ஒருவர் தேர்ச்சி பெறுவாரேயானால் அவரால் பல அற்புத செயல்களைச் செய்ய முடியும்,

ஒருவரை உறங்க வைக்கலாம், வியாதிகளைப் போக்கலாம். நிகழ்ந்த நிகழும் எதிர்காலம் உணரலாம். பிறர் கருத்துக்களை அறியலாம். மற்றவர்களை நமது எண்ணத்தால் இயங்கச் செய்யலாம்.

ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்ளலாம். இறந்தவர்களோடு பேசலாம். தொலை நோக்கு உணரலாம். மிருகங்களை வசியப்படுத்தலாம். மாயாஜாலங்களைச் செய்து மக்களை மகிழ்விக்கலாம்.

நம்பிக்கை தோன்ற

உங்களில் ஹப்நாடிச பயிற்சி முறைகளுக்கு உட்படுகின்றவர்களுக்கு உங்கள் திறமையில் சற்றும் அவநம்பிக்கை இருக்கக்கூடாது. நம்பிக்கைதான் மிக மிக அவசியன ஒன்று. அதேபோல் நமக்கும் நமது திறமையில் நல்ல நம்பிக்கை இருக்க வேண்டும். எனவே இரு சாரார் உள்ளத்திலும் பூரண நம்பிக்கையை முதற்கண் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கீழ்க் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளில் ஒன்றை முயற்சியில் இறங்குமுன் செய்து காட்டினால், செயலுக்கு உட்படுகிறவர் தம் உள்ளத்தில் உங்கள் பால் நம்பிக்கை பிறக்கும். உங்களுக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,

1. தன் கை விரல்களை ஒன்று சேர்த்து கோர்த்து பிரிக்க முடியாது செய்தல்,
2. தன் வாயிதழ்களை ஒன்று சேர்த்து அவற்றை பிளவு படுத்த முடியாது செய்தல்.
3. பிறர் வாயினை மூடமுடியாது பிளந்திருக்க செய்தல்.
4. ஒருவனை நம்மை பின்தொடர்ந்து ஓடிவரச் செய்தல்,
5. அவரது இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து ஒட்டிக்கொள்ளச் செய்தல்.
6. முழங்கை, முழங்கால்களை நீட்டி மடக்க முடியாது போகச் செய்தல்.
7. நடக்க முடியாத ஒரே இடத்தில் ஒருவனை அசையாது நிற்க வைத்தல்.
8. ஒருவனை முன்புறமாகவோ, பின்புறமாகவோ விழச்செய்தல்.




மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 1:08


தூக்கம் ஏன்?

நல்ல தூக்கம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை விளைவிக்கும். தூக்கத்தால் ஐம்புலன்களும் ஒடுங்கி ஒய்வு பெறுகிறது. மேலும் ஒருவன் நல்ல உறக்கத்திற்கு ஆட்பட்டுக் கிடக்கும் போதுதான் அவனிடம் அளவுகடந்த ஆத்ம சக்தி வெளிப்படுவதாக ஹிப்நாடிச மெஸ்மரிச சாஸ்த்திரம் கூறுகிறது.

அந்த ஆத்ம சக்தியை ஏற்ற வழியில் வெளிப்படுத்தினால் பல அமானுஷ்ய சக்திகளைத் தோற்றுவிக்க முடியும். அந்தக் காரணத்தால்தான் ஹிப்நாடிச மெஸ்மரிச பயிற்சி பெற்றோர், ஒருவருக்குத் தூக்கம் வருவிப்பதை முதன்மையாகக் கைக் கொள்கின்றனர்.

ஹப்நாடிச மெஸ்மரிஸ தூக்கம்

ஹிப்நாடிச மெஸ்மரிஸ முறையில் ஒருவருக்குத் தூக்கத்தை வரவழைக்கும் போது பயிற்சி பெற்றோர் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.

ஹிப்நாடிச தூக்கத்திற்கு உட்படுவோருக்கு உடனடியாக உறக்கம் வருமானாலும், அன்னாருடைய ஐம்புலன்களும் உடன் ஒரு சேர ஒடுங்கி விடுவதில்லை.

முதலில் கண் இமைகள் மூடும், பிறகு கண்களின் தீட்சண்ய சக்தி குறையும், பின்நாவில் ருசி குறையும். பின்னர் சுவாச உணர்ச்சி இலேசாகும். அதன்பின் செவியின் சக்தி ஒடுங்கும். தொடர்ந்து ஸ்பரிச உணர்ச்சி நீங்கும், முடிவாக மூளையின் சக்தி குறையும்,

எனவே இக்கலைகளை கற்றுக் கொள்வோர் ஒவ்வொரு புலனுக்கும் கிரமமாக கட்டளையிட்டு அதனை செயல் இழுக்க செய்ய வேண்டும். உதாரணமாக இப்படிக் கூறவேண்டும், "உன் கண்களின் இமைகள் மூடிவிட்டன. உனக்கு உறக்கம் வந்துவிட்டது, உனது நாவின் சுவை உணர்ச்சி அடங்கிவிட்டது. உன் சுவாசிப்பு தடைப்பட்டு விட்டது. உனக்கு காது கேட்கும் சக்தி இல்லை, உன் உடல் உணர்ச்சியற்றுவிட்டது. உள் மூளை சோர்ந்து விட்டது. இவ்வாறாக இப்பயிற்சி பெறுவோர் ஒவ்வொன்றையும் இரண்டொரு முறை திரும்பத் திரும்ப உரக்க உச்சரிக்க வேண்டும்.

எத்தகைய உறுதியான மனநிலையுடையவராக இருப்பினும் கூட ஹிப்நாடிஸ தூக்க வயப்பட்டவரை நோக்கி முறைபடி கட்டளையிடின் அவரால் மறுக்க முடியாது. ஏவியபடி இயங்குவர் என்பது திண்ணம்

பிறர் மனம் அறிதல்

உறக்கத்தில் இருப்பவர், தன்னை உறக்கத்திற்கு உள்ளாக்கியவருடைய மன நிலையைத் தெரிந்து கொள்ளுகிறார். அவருடைய எண்ணத்துடன் கலந்து விடுகிறார். ஹிப்நாடிச தூக்கத்தில் இருப்பவர். ஹிப்நாடிசம் செய்வோரது உடல் அசைவிலிருந்து அவருடைய உள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளுகிறார். செய்வோரது எண்ணம் எவ்வளவு அந்தரங்கமாக இருப்பினும் கூட அது உடல் செய்கைகளால் வெளிப்படுகிறது.

அது உறக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்துவிடுகிறது. ஒருவரது எண்ணம் மற்றவரது எண்ணத்தோடு கலப்பதால் பிறர் மனம் அறியும் சக்தி வெளிப்படுகிறது.

பிறர் மனம் அறியும் சக்தியை தூக்கத்தில் இருப்பவருக்கு உண்டாக்க பின்கண்ட முறைகளைப் படிப்படியாக பின்பற்றலாம்.

1. தூக்க வயப்பட்டவரைத் தீண்டியும், கைகளை அசைத்து சைகைகள் செய்தும் கட்டளை சொற்களை உச்சரித்தும் இச்சக்தியை உண்டாக்கலாம்.

2. உடலைத் தீண்டாமல் கண்களால் பார்த்துஉண்டாக்கலாம்.

3. நாளடைவில் உடலைத் தீண்டாமலும், சைகைகள் எதுவும் செய்யாமலும், கண்களால் நோக்காமலும் இச்சக்தியை வருவிக்கலாம்.




மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 1:09


தூங்க வைக்கும் முன்

உறங்கவைக்கும் முன் உங்கள் பார்வையிலும், கைவிரல்களிலும் காந்த சக்தியை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஹிப்நாடிஸ பயிற்சிக்கு ஒத்துழைப்பவனுடைய உள்ளங்கையை எடுத்து உங்கள் உள்ளங்கையின் மேல் பதித்து கவிழ்த்து வைத்துக் கொள்ள வேண்டும், பின் அவனை தனது கண்களால் உங்கள் கண்களைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.

அவன் உங்கள் கண்களைப் பார்த்திருக்க நீங்கள் அவன் புருவ மத்தியை உற்று நோக்கியவாறு, “நம்முடைய இரண்டுகைகளும் இப்போது ஒட்டிக் கொண்டதென்று" இரண்டு அல்லது மூன்று முறை கூற வேண்டும்.

உங்களுடைய சொல்லின் பார்வையின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு அவன் தன்வசம் இழந்து நிற்பான். கைகளை எடுக்கத் திராணியற்று விழிப்பு நிலையிலும் மயங்கியவன் போல் காணப்படுவான்.

உங்கள் கண்பார்வையின் சக்தியால் கைகள் ஒட்டிக்கொள்வதைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள். பின்பு

அவனைத் தங்கம் செய்யும் முயற்சியில் அடுத்து இறங்க வேண்டும். இச் சக்தியைப் பெற பல முறை பலரை கொண்டு நீங்கள் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்,

ஒருவரைத் தூங்கவைக்க

மனம், கண்கள் இரண்டு சக்திகள் ஒன்றுபடும் நேரத்தில் இந்த சக்தியானது உண்டாகிறது. இந்த சக்தியை நீங்கள் அடைந்து விட்டீர்களா என்பதை அறிய வேண்டுமானால் உங்கள் நண்பர்களில் யாரையாவது ஒருவரை இந்த வசிய முறைக்கும் படுத்திப் பார்க்க வேண்டும் தனி அறையில் எதிர் எதிராக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டோ அல்லது உங்கள் நண்பரை மட்டும் நாற்காலியில் உட்கார வைத்து நீங்கள் தூரத்தில் நின்று கொண்டோ இந்த சோதனையில் ஈடுபடலாம்.

உட்கார்ந்திருக்கும் உன் நண்பரை இப்போது தூங்க, வைக்கப்போவதாகவும் தன்னை மறந்த நிலையில் உங்களை ஒரு சில வினாடி பார்க்கும்படியும் சொல்லவும் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் உள்ள புருவத்தை சில வினாடிகள் உற்று நோக்கி உன் நண்பர் இப்போது தூங்க வேண்டும் என்று மனதில் ஒரே எண்ணத்தோடு செயல்பட வேண்டும். இந்த பழக்கத்தில் முதலில் தோல்வி கண்டாலும் பாதகமில்லை. உங்கள் நண்பர் உமது திறமையை மதிக்கிறவராக இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இந்தப் பழக்கத்தில் நீங்கள் தோல்வி கண்டாலும் தொடர்ச்சியாகப் பழகிவர வேண்டும், இந்தச் சோதனையிலும் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை இழக்கலாகாது, இந்தப் பழக்கத்தில் நீங்கள் வெற்றி அடைவீர்களேயானால், உங்கள் வசியத்திற்கு ஆளான நபர் சில வினாடிகள் தன்னிலை மறந்து தூங்குவார்.

விழிக்க வைக்க

பார்வை ஒளியாலோ அன்றி விரல்களின் காந்தசக்தியாலோ ஒருவரைத் தூங்கச் செய்தபின் அவரைத் தூக்கத்தினின்றும் எழுந்திருக்கச் செய்யவும் நீங்கள் பயிற்சி பெற வேண்டும்.

சாதரணமாக தூங்குகிறவரை நெருங்கி, அவரின் மூக்கிலிருந்து நெற்றியின் மேற்புறம்வரை உங்கள் கையில் நடுவிரலால் தொட்டு மெல்ல மெல்ல விரலை இறக்கிவர அவரின் உறக்கம் கலையும் முகத்தில் குளிர்ந்த காற்றை விசிறிட செய்தும், வாயால் ஊதியும், ஈரமான கைக்குட்டையை முகத்தில் ஒற்றியும் அவரின் உறக்கத்தைக் கலைக்கலாம்.

இம்முறைகளால் பயன் கிட்டாவிடில் அவரின் தோளில் தட்டி, 'விழித்துக்கொள்; விழித்துக் கொண்டாய்' என்று மூன்று முறை கூறின் அவரின் நித்திரை கலையும். ஹிப்நாடிச தூக்கத்தினின்று எழுப்பும் போது மிகவும் ஜாக்கிரதை தேவை. அவசரப்படாமல் நிதானமாக எழுப்ப வேண்டும்.




மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 1:21


சோதனை செய்யுங்கள்

ஒருவரை நீங்கள் ஹிப்நாடிஸ சக்தியால் தூங்கவைத்து விட்டீர்கள். ஆனால் அவர் உங்கள் சக்திக்கு ஆட்பட்டு நன்றாக உறக்க வயப்பட்டு விட்டாரா என்பதனை நீங்கள் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதனை அறிந்து கொள்ளவும் சில வழி முறை பயிற்சிகள் உண்டு.

பயிற்சி -1

தூங்குகிறவனை நெருங்கி அவனது வலது கையை நீங்கள் உங்களின் இடது கையால் தீண்டி, அவனது வலது தோளிலிருந்து விரல்கள் வரை கீழ்நோக்கி தடவி மெல்ல மெல்ல இறக்கிவர வேண்டும், அப்போது ' உனது வலது கையில் திமிரேறி விட்டது. அது விறைத்துக் கொண்டு விட்டது. அதனை உன்னால் மடக்க முடியாது; என திரும்பத் திரும்ப 10 முறைகளாவது உரக்க நீங்கள் கூற வேண்டும். பின் அவனது கையனை நங்கள், தொட்டுப்பாருங்கள். அது விறைத்துப் போய் உணர்ச்சியற்றதாகக் காணப்படும்.

அதனை எவராலும் மடக்க முடியாது. இதனைக்கொண்டு அவன் ஹிப்நாடிஸ தூக்கத்திலிருக்கிறான் என்று உணரலாம்.

பயிற்சி - 2

ஒருவன் உறங்குகின்ற நிலையில் அவனுடைய உடலில் ஏதேனும் ஒரு பகுதியை முற்பயிற்சியில் கூறியபடி உணர்ச்சியற்றதாகச் செய்துவிடுங்கள். பின்னர், இப்போது உனது உடலில் இந்த கூர்மையான ஊசியால் குத்தப் போகிறேன். நீ உறங்கி எழுந்தபின் இந்நிகழ்ச்சி உனக்குத் தெரியாது' என்று மூன்று முறை கூறியவாறு கூர்மையான ஊசியால் குத்தவும், அப்போது அவனது முகத்தில் எவ்வித வேதனை உணர்ச்சியும் தோன்றாது, பின்னர் ஊசியைப் பிடுங்கிவிட்டு அந்த இடத்தை கீழ் நோக்கித் தடவிக் கொடுப்பின் இரத்தமும் வராது.




மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Jul 2021 - 1:22


பிறரை வசப்படுத்த

உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் காணப்படுவார், அவருடைய உடலுக்கு எந்த வகையான தீங்கு செய்தாலும் அதை அவர் உணரமாட்டார், கத்தியின் மூலம் அவருடைய உடலில் சில காயத்தை ஏற்படுத்தினாலும் இரத்தம் வரக்கூடாது என்றோ வலியே ஏற்படக் கூடாதென்றோ, நீங்கள் நினைத்துச் செயல்பட்டால் அவ்விதமே நடக்கும் என்பதற்கு போதிய அத்தாட்சிகள் இருக்கின்றன. மெய் மறந்து காணப்படும் அந்த ஒரு சில விநாடிகள் உங்கள் வசமானவரை எதுவும் செய்ய முடியும்.

ஆச்சரியப்படும்படியான வகையில் செயல்படும் அதி அற்புத விஞ்ஞான அடிப்படையோடு கூடிய இந்த மெஸ்மரிஸக் கலையின் உதவியால் தீராத நோய்களைத் தீர்த்து வைக்க முடியும்! பிறரை தங்களுக்கு வசப்படுத்திக் கொண்டு இஷ்டம்போல் ஆட்டுவிக்க முடியும்.

செல்வந்தர்களின் செல்வங்களை அபகரிக்கவும். இந்த கலையைச் சிலர் தவறாகப் பயன்படுத்திய நிகழ்ச்சிகளும் நடைபெற்று இருக்கின்றன.

ஆட்டிய வழியில்

மனிதர் ஒவ்வொருவரிடையேயும் உள்மனம் புறமனம் என இரண்டு மனங்கள் பொருந்தியிருக்கின்றன. உள்மனத் திற்குக் காவல் போன்று புறமனம் செயல்படுகிறது. எனவே புறமனம் அறியாது உள்மனம் தனித்து செயல்பட வழியில்லை ஆனாலோ உள்மனம் அதிகமான செயல்களை விளைவிக்கும் ஆற்றலுடையது. அந்த உள்மனத்தை இயக்குவித்தால் அற்புத செயல்களை நிகழ்த்தலாம். அது எப்படி சாத்தியமாகும்?

புறமனமோ மனிதர் உறக்கத்திற்கு உட்பட்டு கிடக்கும் போது கூட உறங்காமல் விழிப்புடன் வீரனைப் போல் காவல் காத்து நிற்கிறதே! ஆனால் ஹிப்நாடிய பயிற்சியால் அந்த புறமனத்தை அடக்கி ஒடுக்கி உள்மனத்தை இயக்குவிக்கலாம்.

ஹிப்நாடிச உறக்கத்தில் இருப்பவரின் வெளிமனம் இயல்பாக ஹிப்நாடிச சக்திக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போகிறது. ஆனால் உள்மனமோ விழிப்புடன் இருகிகிறது. தடைவிலகிய நிலையில் வெளிப்படத் துடிக்கும் உள்மனதை வெளுப்படுத்தி பின் அதனை ஏற்ற வழியில் இயக்குவித்து அற்புத செயல்களை விளைவிக்கின்றனர் ஹிப்நாடிய வல்லுநர்கள்.

நீங்கள் ஆட்டுவித்த வழியில் எல்லாம் தூக்கத்திற்கு உட்பட்டவர் ஆடுவர், நீங்கள் ஏவிய ஏவல்களையெல்லாம் ஏற்ற வழியில் செய்து முடிப்பர். மயிலைக் காட்டி குயில் என்றால் 'ஆமாம்' என்பர், நீங்கள் கூறுவதுதான் அவருக்கு வேதம், எனவே இத்தகைய நிலையிலிருக்கும் அவரை தீய வழியில் ஈடுபடுத்தி தனது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம், என ஹிப்நாடிசக்காரர்கள் நினைத்து செயல்படின் விளைவு தீதாகவே முடியும். எல்லோருக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டல்லவா!

அது எத்தகைய நிலையிலும் விழிப்புடன் இருக்கும். எனவே ஹிப்நாடிசத்துக்கு உட்படுவர் நல்லவராக இருப்பின் தூக்க நிலையிலும் கூட ஹிப்நாடிசகாரர்கள் இடும் துன்மார்க்க கட்டளைக்கு உடன்படமாட்டார் என்பது திண்ணம், அத்தகையவரின் தூக்கம் திடுமென கலைந்துவிடும் என்பதனை இப்பயிற்சியில் இறங்குவோர் தமது மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்

தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பே மெஸ்மரிஸக் கலையை நன்கு பயின்ற மறைமலை அடிகளார் 'நான் எனது மாணவனை அழைத்து இந்தக்கலையை பரிசோதிக்கும்போது முறையாக என் கண்களை சில வினாடிகள், ஒரு மனதோடு அசையாமல் பார்க்கும்படி கூறினேன். அப்படிச் செய்தபின் அவனுடைய கைவிரல்களில் ஒரு குண்டூசியைக் குத்தி, அதனால் அவனுக்கு வலி ஏற்படக் கூடாது என்றும், ரத்தம் சிந்தக் கூடாதென்றும் மனதில் எண்ணினேன். அந்த மாணவன் தெளிவு பெற்ற பின் நான் செய்தது ஏதேனும் தெரியுமா? என்று கேட்டேன்.

என் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்ததால் தனக்கு ஒன்றுமே உணர்வு ஏற்படவில்லை என்று கூறினான்' என்று தான் அறிந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார். இது மறுக்க முடியாத அனுபவமாகும்.

சுயநலம் கூடாது

இந்த மெஸ்மரிஸ கலையை பெண்ணாசை பிடித்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்

நயவஞ்சகமாக பெண்களை வஞ்சிப்பதும், தங்கள் தவறான நோக்கத்திற்கு அவர்களை பயன்படுத்த நினைக்கும் போது அவசரத்தில் மனதை அலையவிட்டு அற்பத்தனமாக நடந்து அகப்பட்டுக் கொண்டு அவமதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆகவே மெஸ்மரிஸத்தை நீங்கள் திறம்படக் கற்றுக் கொண்ட பின்பு, உங்கள் மனதை ஆசாபாசங்களுக்கு இடையே அலையவிட்டு அவசரமும் ஆத்திரமும் அடைந்து பேராசை கொண்டு தீய காரியங்களில் ஈடுபடுத்தி தீயவன் என்ற பெயர் எடுக்காமல் நல்ல உபயோகமான காரியங்களுக்காக மக்களின் நனமைக்காக மெஸ்மரிஸத்தை உபயோகப்படுத்தினால் நாட்டுக்கும், அத்துடன் உங்களுக்கும் நல்லது.`



மனோவசிய ரகசியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக