ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am

Top posting users this week
ayyasamy ram
 உலகம் யாவையும்  காக்கும் தெய்வம்  Vote_lcap உலகம் யாவையும்  காக்கும் தெய்வம்  Voting_bar உலகம் யாவையும்  காக்கும் தெய்வம்  Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


உலகம் யாவையும் காக்கும் தெய்வம்

 உலகம் யாவையும்  காக்கும் தெய்வம்  Empty உலகம் யாவையும் காக்கும் தெய்வம்

Post by சிவா Thu Jul 15, 2021 10:46 pm


உலகம் முழுதும் இரவும் பகலுமாக, இருளும் ஒளியுமாக மாறி மாறித் தோன்றும் சக்தி சூரியன். சூரியனால் உலகம் ஒளி பெறுகிறது. மனிதனுக்கு உலகை அறிந்து கொள்ளும் திறன் வெளிப்படுகிறது. செடி, கொடிகள் எல்லாம் உணவுச்சத்துகளை உண்டாக்கி, உயிர்களுக்கு உதவுகின்றன. கடல் நீரை உறிஞ்சி ஆகாயத்தில் கருமேகமாய்த் திரண்டு மழை பெய்து பூமியை வளமாக்குகிறது. இதனால், மக்கள் பல நுாற்றாண்டுகளாக சூரியனை பரம்பொருளாக வாழ்த்தி வணங்கினர்.

இந்திய நாட்டில் சூரியனை பிரம்மம் என்று அழைப்பர். 'அசவ் ஆதித்ய பிரம்மம்' என்று சொல்கிறது வேதம். சூரியனுக்கு சவிதா என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் பொருள் ஒளித் தோற்றம். சவிதாவாகிய சூரியனை, இந்திய மக்கள் காயத்ரி என்ற மந்திரத்தால் வணங்குகின்றனர். 'எங்களுக்கு பகுத்துணரும் அறிவைக் கொடு' என்பதே காயத்ரி மந்திரத்தின் சாரம். இதை பாரதியார் தன் பாஞ்சாலி சபதத்தில், 'செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் துாண்டி நடத்துக' என்று குறிப்பிடுகிறார்.

சூரியனுக்கு 'மித்ரன்' என்ற பெயரும் உண்டு. மித்ரன் என்பது சத்தியத்தின் உருவகம். மித்ரனை வேத காலத்தில் இருந்து இந்தியர்கள் மிகச் சிறப்பாக வழிபட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் தொடங்கி, பலுசிஸ்தானம் கிரேக்க நாடுகள், அசீரியா, சுமேரியா, பாபிலோனியா, அலக்சான்டிரியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து வரை மித்ரன் வழிபாடு நிலவி இருந்தது.மித்ரனுடன் வருணனையும் இணைத்து, இருவரும் மானுடரின் சீரான வாழ்க்கைக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதற்கும், தவறு செய்வோரை தண்டிப்பதற்கும் உரிய தெய்வங்களாக இந்த நாடுகளில் வணங்கியுள்ளனர். கிறிஸ்து வழிபாடு தொடங்குவதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மித்ரன் வழிபாடு தான் இருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை சூரியனுக்கு தனியாக கோவில் கட்டி வணங்குவது ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது. சூரியன் தோற்றத்தை தை மாதம் தொடங்கும்போது சிறப்பாக வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில் சோழ நாட்டில் பூம்புகார் நகரத்தில் சூரியனுக்கு தனியாக ஒரு கோவில் இருந்தது என்று இளங்கோ அடிகள் கூறுகிறார்.

'பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்' என்று அதை குறிக்கிறார். சித்திரா பவுர்ணமி நாளில், இந்திர விழா கொண்டாடும்போது அந்த சூரியன் கோவிலுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதையும் இளங்கோ அடிகள் கூறுகிறார். இந்தியாவை பொறுத்தவரை சூரியனுக்கு ஒரு மாபெரும் கோவிலை காஷ்மீரில் லலிதாதித்ய முக்த பாதன் என்ற அரசன் கி.பி., 750ல் கட்டி வைத்தான். மார்த்தாண்டன் என்ற இடத்தில் இதை கட்டுவித்தான். அது முழுமையாக இருந்திருந்தால் தஞ்சை பெரியகோவில் போல இருந்திருக்கும். அதை மார்த்தாண்டன் கோவில் என்று அழைத்தனர். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருவது போன்ற உருவம் கருவறையில் இருந்தது. காஷ்மீரில் இந்த கோவிலை மையமாக கொண்டு தான், மக்களின் வாழ்க்கை சிறந்திருக்கிறது. 15ம் நுாற்றாண்டில் சிக்கந்தர் என்ற அரசன் இந்த கோவிலை இடித்து தள்ளினான். அந்த கோவில், பாறைகள் போன்ற பெருங்கற்களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் தான் கற்களை செதுக்கி செங்கல் அடுக்குவதுபோல அடுக்கி கோவில் கட்டும் வழக்கம் வந்தது. ஆனால், மார்த்தாண்டன் கோவில் கட்டப்பட்டபோது, பெரும்பெரும் பாறாங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கி, பின்னர் சிற்பங்களை செதுக்குவது மரபாக இருந்தது.

மிகப்பெரும் பாறைகள் என்பதால் கோவிலை முழுமையாக இடித்துத் தள்ள முடியவில்லை. கோவில் கருவறையின் முகடு வரை இன்றும் எஞ்சி உள்ளது. அதைச் சுற்றி, ஒரு மாபெரும் திருச்சுற்று இருந்தது. அதுவும் இடித்து தள்ளப்பட்டது. அந்த கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அந்த பாறையிலேயே அப்படியே இருக்கின்றன. தமிழக கோவில்களில் பயன்படுத்திய கருங்கல்போல இல்லாமல், பொற பொற என்று இருக்கும் ஒரு வகை பாறை என்பதால், சிற்பங்கள் உதிர்ந்து சிதைந்து காணப்படுகின்றன. ஆயினும், இந்த கோவிலில் மக்கள் தொடர்ந்து வழிபட்டு வந்திருக்கின்றனர். சூரியனை இழுத்துச் செல்லும் தேரில் கட்டப்பட்டவை ஏழு குதிரைகளும் வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும் என்று ஒருதரப்பினரும் 7 ஸ்வரங்களை (சப்த ஸ்வரங்களை) குறிக்கும் என்றும் வேறு தரப்பு வல்லுனர்களும் கூறுகின்றனர்.

அந்த கோவில் சூரியன் பற்றி பல தோத்திர பாடல்களை (வடமொழியில் இயற்றப்பட்டவை) இன்றும் காஷ்மீர் ஆண்களும், பெண்களும் பாடி வருகின்றனர். மொகலாய பேரரசன் அக்பர், காஷ்மீர் சென்றபோது, இந்த கோவிலின் புறத்தே நின்று, ஏராளமான தானங்களையும், பசுக்களையும் கொடுத்து சிறப்பித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அதேபோல, குஜராத் மாநிலத்தில் மோதேரா என்ற ஊரில் ஒரு மாபெரும் சூரியனார் கோவிலை சாளுக்கிய அரசன் முதலாம் பீமன் என்பவன் கி.பி., 1020 -25க்குள் கட்டினான். ஏராளமான அழகிய சிற்பங்களும் நிறைந்ததாக கட்டப்பட்ட இந்த கோவிலை முகமது கஜினி, படையெடுப்பின்போது அழிக்க முயற்சி செய்தான். அதன் மேற்பகுதி மட்டும் இடிக்கப்பட்டதே தவிர, மற்ற பகுதிகள் இன்றும் உள்ளன.

இந்த கோவிலில் உள்ள சிற்பங்களின் சிறப்பும் அமைப்பும் உலக மக்களை வியக்க வைக்கிறது. சாளுக்கிய மன்னன் மீண்டும் நகருக்கு திரும்பி கோவிலை சீரமைத்துள்ளான். மேலும், இந்த கோவிலுக்கு முன்பாக ஒரு மாபெரும் குளத்தை உருவாக்கி, அதில் இறங்குவதற்கு படிகள் அமைத்து, அதை ஒரு புண்ணிய தீர்த்தமாக உருவாக்கினான். பின்னர் அந்த படிகளில் சிறு சிறு கோவில்கள் கட்டப்பட்டன. இது, இந்திய நாட்டு குளங்களில் ஒப்பற்ற குளமாக விளங்குகிறது. அகமதாபாத் செல்பவர்கள் இந்த கோவிலை பார்க்காமல் திரும்புவது இல்லை. மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ என்ற இடத்தில் சந்தேளர் என்ற அரச வம்சத்தினர் உலகம் வியக்கும் வகையில் பல கோவில்களை ஒரே இடத்தில் கட்டி வைத்திருக்கின்றனர். அங்கு விஸ்வநாதர் கோவில் முதலில் கட்டப்பட்டது. அதன் பிறகு ஒரே மேடையில் கட்டியதுபோல, வரிசையாக நான்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

முதலில் லக்ஷ்மணேஸ்வர் என்ற கோவில் திருமாலுக்கு எடுக்கப்பட்டது. அடுத்து புகழ் வாய்ந்த சிவன் கோயிலான கண்டரீய மகாதேவர் கோவில் உள்ளது. மூன்றாவதாக மாதா ஜகதம்பா என்று தேவிக்கு ஒரு கோவில் உள்ளது. நான்காவதாக, சூரியனுக்கு ஒரு கோவில் எடுக்கப்பட்டுள்ளது. இதை இப்போது சித்ரகுப்தன் கோவில் என்கின்றனர். கருவறையில் ஒரு தேர் மீது சூரியன் நிற்கும் சிலை உள்ளது. இதன் முன் ஏழு குதிரைகள் ரதத்தை இழுத்துச் செல்வது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த கோயிலும் கி.பி., 1020-25க்குள் கட்டப்பட்டுள்ளது. சிற்பக் காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன. சூரிய வழிபாட்டுக்கு அந்த காலத்தில் எவ்வளவு சிறப்பு கொடுத்திருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

இங்கு மாபெரும் வராக உருவம் வழிபாட்டுக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் அத்தனை தெய்வங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இது மகா வராக உருவம். கோவில் அமைப்பில் ஒரு மண்டபமாக இது காணப்படுகிறது.

மூன்றாவதாக, கலிங்க தேசத்தில், ஒடிஷா மாநிலத்தில் கோணார்கா என்ற இடத்தில் ஈடு இணையற்ற ஒரு சூரியன் கோவில் கி.பி., 1220ல் கட்டப்பட்டுள்ளது. அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். கோவில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் கோண-அர்க்க, கோணார்க என்று அழைத்தனர். இதை முதலாம் நரசிம்ம தேவன் கட்டினான். 24 சக்கரங்கள் கொண்ட தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வதுபோல அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் மூன்று நான்கு பாகங்களாக தனித்தனியாக பிரித்து, முதலில் விமானம், அதற்குமுன் இரண்டு அழகான மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலின் மூல விமானத்தின் மேற்பகுதி இடிந்து விட்டது. விமானத்தின் ஒரு பகுதி மட்டும் இன்றும் இருக்கிறது. இந்த கோபுரம் தஞ்சை பெரியகோவிலை விட 7 அடி அதிக உயரம் கொண்டது. தஞ்சை கோவிலின் உயரம் 216 அடி. இந்த கோவிலின் உயரம் 223 அடி.
இந்த மண்டபங்களில் அப்சரஸ் பெண்கள், பாடும் கலைஞர்கள், இசைக் கருவி இயற்றுவோர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

கோவிலின் உள்ளே நின்ற நிலையில் இருந்த சூரியனின் அழகான உருவம், இப்போது டில்லி மாநகரில் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கடற்கரை ஓரம் அமைந்த காரணத்தால், அந்த காலத்தில் கலிங்கம் வரும் கப்பல் மாலுமிகள் எல்லாரும் இதை பார்த்து வியந்திருக்கின்றனர். சூரியன் உதிக்கும்போது அதன் கதிர்கள் நேராக இந்த கோவிலின் உள்ளே விழும் வகையில் கோவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கே காஷ்மீரிலும், மேற்கே குஜராத்திலும், மத்தியில் கஜுராஹோவிலும், கிழக்கில் கோணார்க்கிலும் சூரியன் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இதுபோலவே, தெற்கே தமிழகத்தில் கும்பகோணத்துக்கு அருகில் சூரியனார் கோவில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கி.பி., 1120க்கு முன்பு இதை முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான். அவனுக்கு சோழ மார்த்தாண்டன் என்று ஒரு பட்டப் பெயர் உண்டு.


இந்த கோவில் வடஇந்தியாவில் காணப்படும் மாபெரும் கோவில்கள்போல இல்லாமல், சிறு கோவிலாக எடுக்கப்பட்டுள்ளது. உள்ளே கருவறையில் சூரியன் உஷை, பிரத்யுஷை என்ற இரு தேவிகளுடன் காட்சியளிக்கிறார். இவற்றை சாயை என்றும், சம்யை என்றும் கூறுவர். சாயா சம்யா உடனுறை சூரிய நாராயணன் என்று கூறுவது மரபு. இந்தகோவில் உற்சவம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை குலோத்துங்கன் செய்துள்ளான். அவன் காலத்தில் சோழகுல சுந்தரி என்ற பெண், கலிங்கத்து அரசனை மணந்தாள். இதற்கு பிறகு கட்டப்பட்டது கோணார்க். அங்கே ஆண்ட மன்னர்களுக்கு கீழைகங்கர் என்று பெயர்.
இந்தியாவின் நான்கு திசைகளிலும் அதன் மத்தியிலும் சூரியனுக்கு கோவில் எழுப்பி, போற்றி வணங்குவது இந்தியர்களின் மரபாக இருந்து வந்துள்ளது.இவை தவிர, பல கோவில்களில் சூரிய குண்ட் (குண்டம்) காணப்படுகிறது. அங்கு தீர்த்தமாடி கோவிலை வணங்கினால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்று மக்கள் கருதுகின்றனர்.முதலில் கூறியபடி சூரிய வழிபாடு (மித்ரன்)- மேலை ஆசிய நாடுகளில், இடையில் சூரியன் உருவமும், அதைச் சுற்றி வரும் பிரபையில் பெருமாளின் 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டு சூரியன் நாராயணனின் உருவம் என்ற கருத்தும் காணப்படுகிறது. அங்கிருந்து பிராமணர்கள் இந்தியாவுக்கு இந்த வழிபாட்டு முறையை கொணர்ந்தனர் என்ற கருத்தும் நிலவுகிறது.

வட இந்தியாவில் சூரியனாரின் உருவம் மேற்கத்திய மரபின்படி காணப்படுகிறது. சூரியனுக்கு முழங்கால் வரை தோலால் செய்யப்பட்ட பூட்ஸ் உள்ளது. அத்துடன் அவர் மார்பில் வேலைப்பாடு உடைய கவசங்கள் காணப்படுகின்றன. இதைத்தான் மேலை நாட்டு மரபு என்பதற்கு சான்றாகச் சொல்கின்றனர்.கிறிஸ்துவுக்கு முன்னர் கி.மு., 2ம் நுாற்றாண்டில் கருங்கடல், காஸ்பியன் கடல்களை ஒட்டி கிரேக்க மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் பலர் சூரிய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள். இவர்களில் ஒரு மன்னன் வெளியிட்ட வெள்ளிக்காசில் சூரியன் உருவத்தையும், சூரியன் தேர்ப்பாகன் அருணன் உருவத்தையும் பொறித்துள்ளான். அருணன் இடுப்பு வரை மனித உருவிலும் ,இடுப்புக்கு கீழே கொடி போலவும் காட்டப்பட்டுள்ளான்.

சூரியன் குதிரை பூட்டிய தேரில் வருவது போலவும், அவனுடன் ஒரு பெண் இருப்பது போலவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசில் ஒருபக்கம் கிரேக்க எழுத்துகளிலும், மறுபக்கம் மகாராஜாதிராஜன் என கரோஸ்ட் எழுத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை, உலகளாவிய வழிபாட்டு முறைக்கு அடிப்படையாக திகழ்ந்த இந்த மரபு, சிலப்பதிகாரத்தில், 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று இளங்கோ அடிகளால் பாடப்பட்டுள்ளது.

பத்மபூஷன் இரா.நாகசாமி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை