புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
77 Posts - 36%
i6appar
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
2 Posts - 1%
prajai
பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_m10பாகனேரி புல்வநாயகி அம்மன். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகனேரி புல்வநாயகி அம்மன்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 12, 2021 10:33 am

தேவியின் திருத்தலங்கள்...பாகனேரி புல்வநாயகி அம்மன்.

"சது: ஷஷ்ட்யா தந்த்ரைஸ்: ஸகல - மதி ஸந்தாய புவநம்
ஸ்தி தஸ் - தத்தத் ஸித்தி ப்ரஸவ - பரதந்த்ரை: பசுபதி'

-செளந்தர்ய லஹரி

அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பூலோகத்தில் உள்ள மக்களுக்கு பல தொந்தரவுகள் கொடுத்து வந்தான். அவனால் துன்பத்தில் ஆழ்ந்த மக்கள் அதைப் பொறுக்க முடியாமல், அவனை அழிக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டினர்.

அதே சமயம், கயிலாயத்தில் அம்பிகை விளையாட்டாய் இறைவனின் கண்களைப் பொத்தினாள். ஈசன் கோபமுற்று, தேவியைப் பூலோகத்தில் பிறக்கச் சொல்லி உத்தரவிட்டார். ஈசனின் கோபத்தில் ஒரு நாடகம் ஒளிந்திருந்தது.


"அம்பிகையின் மூலமே அசுரன் அழிக்கப்பட வேண்டும்' என்பது அவரின் சித்தம். ஈசனின் உத்தரவை ஏற்று அம்பிகை பூலோகத்திற்கு வருகிறாள்.

அவளைக் கண்டு கோபமுற்ற அசுரன் அம்பிகையுடன் உக்கிரமாகப் போர் செய்கிறான். அசுரன் பல வடிவங்கள் எடுத்து தேவியை வெல்ல முயல்கிறான். ஆனால் அம்பிகையின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை.

இறுதியில், புல் வடிவம் எடுக்கிறான். அம்பிகை உடனே, மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து அவனை அழிக்கிறாள். தேவர்கள் பூமாரிப் பொழிகிறார்கள்.

தேவி, மான் வடிவில் அங்கேயே தங்கி விடுகிறாள். அப்பகுதியில் அழகிய மானைக் கண்ட மக்கள் அதைப் பிடிக்க முயல, தேவி ஓடிச் சென்று பூமிக்குள் மறைந்து விடுகிறாள்.

பல காலங்கள் கழித்து பாகனேரி பகுதி விவசாயிகள் நிலத்தை உழும்போது, அங்கு அம்பாளின் சிலை வடிவம் கிடைத்தது. "புல்வ நாயகி' என்றே பெயர் சூட்டி, அவளுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

அசுரனை அழித்த உக்கிர வடிவ அம்பிகைக்கு இங்கு பஞ்சலோகச் சிலை உள்ளது. ஆனி மாதத் திருவிழாவின் போது உற்சவர் அம்பிகை ஊர்வலம் வந்தாலும், இவளின் உக்கிரமான பார்வை மக்கள் மீது படக்கூடாது என்று கண்களை பூமியைப் பார்த்தபடி அமைப்பார்கள். உக்கிர அம்பிகையை "சாமுண்டீஸ்வரி' என்கிறார்கள். இவளை, கர்ப்பிணிகள், புதிதாகத் திருமணம் ஆனவர்கள் பார்க்கக்கூடாது என்று ஓர் ஐதீகம் நிலவுகிறது.

வஜ்ர தீர்த்தம்: இங்குள்ள வஜ்ர தீர்த்தம் மிகச் சிறப்பு வாய்ந்தது. "வஜ்ர கிரீடம்' என்கிற புழு காலப்போக்கில் இறுகி கடினத் தன்மையாக மாறும். அதுவே "சாளக்கிராமம்' எனப்படும் பூஜைப் பொருளாகவும் ஆகிறது. அத்தகைய புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் வசிக்கின்றன. எனவே, இந்த தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அநீதி இழைக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், பொருள் இழந்தவர்கள் இங்கு வந்து வஜ்ர தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அம்பிகை முன் உள்ள கொடிமரத்தைக் கட்டிக் கொண்டு தங்கள் குறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

அம்பிகை தங்கள் குறைகளைக் கட்டாயம் நீக்குவாள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருவிழாவின்போது இங்கு வந்து மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நூதனமான வழிபாட்டு முறை இங்குள்ளது.

இக்கோயிலில் நெய்கொட்டா மரம் தல விருட்சமாக இருக்கிறது. தல விருட்சத்தின் கீழ் அக்னியாம்பாள் பீடம் இருக்கிறது. இதற்கு மஞ்சள் பூசி, குங்கும அபிஷேகம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நடக்கும் என்பதும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

அம்பிகை நம் தாய். பூமியில் நாம் வாழும் காலம் வரை சூட்சும ரூபமாக நம்மைக் காப்பவள். எடுக்கும் பிறவிகள்தோறும் நம் அன்னையாக இருப்பவள். நமக்காக அவள் அசுரனை அழிக்கிறாள். நமக்கு வரும் கேடுகளை நீக்குகிறாள். அவளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வது அவளைக் குளிரச் செய்யவே..! அவள் மனம் குளிர்ந்தால் நம் வாழ்வு சிறக்கும்..!

ஆனித் திருவிழா, நவராத்திரி, ஆடிவெள்ளி, தை வெள்ளிக்கிழமைகள் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நகரத்தாரால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களின்போது அன்னதானம் அம்பிகையின் பெயரால் நடைபெறுகிறது.

அம்பிகையின் அனைத்துத் தலங்களுமே அவளின் பெருமைகளை உரத்துக் கூறும் சக்தி பீடங்களாகவே அமைந்திருக்கின்றன. அதனால்தான் "தாயே உன் பெருமைகளைக் கூற வார்த்தைகள் போதவில்லை'"என்கிறார் வியாசர். பதினெட்டு புராணங்களை இயற்றிய பிறகும் அவர் மனதில் பூரண திருப்தி இல்லை. அப்போது நாரதரிடம் உபதேசம் பெற்று, "தேவியின் புராணம்' எழுத ஆரம்பித்தார்.

பிரம்மாண்ட புராணத்தில் "லலிதோ பாக்யானம்' என்ற பகுதியில் அம்பிகையின் அவதாரப் பெருமைகளையும், அவளின் ஆயிரம் நாமங்களையும் எழுதிய பிறகுதான் மனத் திருப்தி அடைந்தார்.

தன்னை நம்பி வருபவர்களை அருள்மிகு புல்வநாயகி இருகரம் நீட்டி அணைத்துக் கொள்கிறாள். பசுமையான புல்வெளி நமக்கு மகிழ்ச்சியைத் தருவதைப் போல் அவளும் நமக்கு ஆனந்தத்தைத் தருகிறாள்.

கோயிலுக்கு வெளியே, "கைத்தவக்கால் கணபதி' சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் பைரவர், முனீஸ்வரர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

"தாயே! உன் பாதங்கள் தேவலோகத்து கற்பக மரம் போன்றவை. வளரும் இளங்குருத்துப் போல் சோபையுடன் உன் பாதங்கள் விளங்குகின்றன. பாதச் சலங்கைகளின் கணீரென்ற நாதம், தேனீக்களின் ரீங்காரம் போலிருக்கிறது' என்று போற்றுகிறது ஸ்ரீபாலா ஸ்துதி.

அமைவிடம்: சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் வட்டத்தில், பாகனேரி புல்வநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீபுல்வநாயகி அம்மனை சரணாகதி அடைந்தால் அவள் நமக்குத் தேவையான அனைத்தையும் அருள்வாள்..

*┈┉┅━❀•பகிர்வு•❀━┅┉┈​​​​​​​​​​*



பாகனேரி புல்வநாயகி அம்மன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 12, 2021 5:44 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 12, 2021 7:39 pm

பாகனேரி புல்வநாயகி அம்மன். 103459460 பாகனேரி புல்வநாயகி அம்மன். 3838410834
-
பாகனேரி புல்வநாயகி அம்மன். Paganeri

.பாகனேரி புல்வநாயகி அம்மன்.
படம்-தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக