ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:01 am

» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
by curesure4u Today at 7:31 am

» ஜோதிட மின்னூல்கள்
by சிவா Yesterday at 10:42 pm

» ஔவையே எது எது கெடும்?
by krishnaamma Yesterday at 10:33 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
by krishnaamma Yesterday at 10:31 pm

» பெகாசஸ் - செய்திகள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by krishnaamma Yesterday at 10:22 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by krishnaamma Yesterday at 10:14 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:19 pm

» கன்னடப் பழமொழிகள் ! (91 – 100 )
by Dr.S.Soundarapandian Yesterday at 7:44 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (566)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:36 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:00 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Yesterday at 6:36 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 4:07 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:05 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by T.N.Balasubramanian Yesterday at 3:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 6:39 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Fri Jul 23, 2021 11:52 pm

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

Admins Online


செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!

செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!   Empty செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!

Post by T.N.Balasubramanian Tue Jun 22, 2021 5:16 pm


திருச்சி: ஊரடங்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்து திருச்சி என்ஜினீயரிங் மாணவி விஸ்வாதிகா அசத்தி வருகிறார். ஆங்கிலப் புலமை மற்றும் கம்ப்யூட்டர் திறமையை பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரது ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து வருகிறார்கள்.

கொரோனா வைரசின் இரண்டாவது அலை உலகின் பல்வேறு நாடுகளின் அன்றாட வாழ்வியல் முறையையே புரட்டி போட்டுள்ளது. கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்குதலில் இருந்து அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா என உலகில் பல்வேறு நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது ஒருபுறம் எனில், மற்றொருபுறம் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட பல நாடுகளில் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே கல்வி கற்றுத் தரப்பட்டு வருகிறது.

செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!   Screenshot14703-1624355506

அசத்தும் மாணவி
இந்தநிலையில் திருச்சி உறையூரைச் சேர்ந்த விஸ்வாதிகா (வயது 20) என்ற மாணவி பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வரும் இவர், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தனது உறவினரின் மகளுக்கு ஆன்லைன் மூலம் வேதியியல், இயற்பியல் பாடங்களை நடத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இணையதளத்தில் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவிட்டார்.

சிங்கப்பூர் மாணவர்கள்
இதையடுத்து லண்டனை சேர்ந்த ஆலியா என்ற 4-ம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டர் புரோகிராம் கற்பதற்காக விஸ்வாதிகாவின் வகுப்பில் சேர்ந்தார். இவருடைய ஆங்கிலப் புலமை மற்றும் கம்ப்யூட்டர் திறமையை பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரிடம் கல்வி கற்று வருகிறார்கள். தற்போது இவர் இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 20 மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகிறார். இதன்மூலம் பல டாலர்களை சத்தமில்லாமல் சம்பாதித்து வருகிறார்.

ஆன்லைன் கற்பித்தல்
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வரும் நிலையில், இவரின் சாமர்த்தியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இவருக்கு இருக்கும் திறமையை ஆன்லைன் கற்பித்தல் கருவிகள் மூலம் எளிய முறையில் வகுப்புகள் எடுத்து மாணவர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மேலும் பலரும் விஸ்வாதிகாவிடம் கல்வி கற்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆன்லைன் கல்வி இதுபற்றி விஸ்வாதிகா கூறுகையில், சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் குறுகிய கால ஆங்கில பயிற்சி படித்து முடித்தேன். இது சர்வதேச மாணவர்களை தொடர்பு கொள்ள உதவிகரமாக இருந்தது.

மாலையில் பாடம்
பகலில் எனது கல்லூரி பாடங்களை ஆன்லைனில் கற்கிறேன். மாலை நேரங்களில் வெளிநாட்டில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துகிறேன். பலர், என்னிடம் ஆர்வமாக கல்வி பயில்கிறார்கள். சிறந்த ஆசிரியையாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இதன்மூலம் நிறைவேறியுள்ளது" என்று அவர் கூறினார்.

நன்றி தட்ஸ் தமிழ்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29466
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10522

Back to top Go down

செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!   Empty Re: செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!

Post by T.N.Balasubramanian Tue Jun 22, 2021 5:17 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முன்னேறு --முன்னேற்று-- .வாழ்த்துகள்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29466
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10522

Back to top Go down

செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!   Empty Re: செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!

Post by ayyasamy ram Tue Jun 22, 2021 5:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69397
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13128

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!   Empty Re: செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை