புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_m10தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தகங்கள் ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF )


   
   
nahoor
nahoor
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 20/08/2019

Postnahoor Wed May 12, 2021 3:15 pm

தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) IMG_20210512_150023

உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது.

1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் மெகல்லன். முதலாம் பானிபட் போர் 1526-ம் ஆண்டு நடைபெற்றது. உலகில் ஏழாவதாகக் கண்டறியப்பட்ட கண்டம் அண்டார்டிகா... இவை மட்டும் வரலாறு அல்ல. இவை நம் பாடப்புத்தகத்தில் நிரம்பியுள்ள வரலாற்றுத் தகவல்கள். உண்மையில் வரலாறு என்பது அவ்வளவு சுவாரசியமானது, சுவையானது, சிலிர்ப்பூட்டுவது, அச்சமூட்டுவது, நெகிழச் செய்வது, மகிழச் செய்வது, கலகலவெனச் சிரிக்கவும் வைப்பது.

புன்னகை தரும் வரலாற்றுப் பக்கங்களை மட்டும், நாம் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம்.

டவுன்லோடு pdf


✅✅✅✅✅✅✅✅✅✅

இது இந்திய சமூகத்தின். புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கபடவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள். மறைகிறார்கள்.

- எஸ். ராமகிருஷ்ணன்

வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளையும் கல்லறைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த காலகட்டத்தின் ஆத்மாவின் பதிவுகள் என கலைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக்காணும்தோறும் நாம் அற்பமானவர்களாக சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னிநதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.

- ஜெயமோகன்


டவுன்லோடு ;- டவுன்லோடு


✅✅✅✅✅✅✅✅✅✅✅

இது இந்திய சமூகத்தின். புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கபடவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள். மறைகிறார்கள்.

- எஸ். ராமகிருஷ்ணன்

வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளையும் கல்லறைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த காலகட்டத்தின் ஆத்மாவின் பதிவுகள் என கலைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக்காணும்தோறும் நாம் அற்பமானவர்களாக சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னிநதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.

- ஜெயமோகன்


டவுன்லோடு ;- டவுன்லோடு

மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்துவரும் தேவதை கங்காதேவி. யமுனையில் படகோட்டிச் சேவைசெய்த மச்சர் குலப் பெண் சத்தியவதி.ஆணாதிக்கத்தால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவள் அம்பை.தன்னை செயற்கைக் குருடாக்கிக்கொண்டு இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைப்பிடித்தவள் காந்தாரி.இளம்பருவத்தில் முனிவனுக்கு அந்தரங்கத் தொண்டு செய்தது முதல் குருதேசத்தின் ராணியாக உயர்ந்தது வரை சகல அவலங்களுக்கிடையிலும் வைராக்கியமாக வாழ்ந்துமுடித்தவள் குந்தி. விலைக்கு வாங்கப்பட்ட சூதர் குலப் பெண் மாதுரி.இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ அபலைகள்.

மகாபாரதத்தில் சூத்திரதாரியாக இயங்கும் கிருஷ்ணனை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அவனது தீம்புகள் எனக்கு ரெம்ப ரெம்ப ருசிக்கும்.
மனிதனாக அவதரித்த கிருஷ்ணன் எனக்குச் சேக்காளி. உற்ற நண்பன். விளையாட்டுத் தோழன். அன்பான அண்ணன் வழிகாட்டி இன்னும் என்னென்னமோ...கிருஷ்ணனுடன் ஆடு, மாடு மேய்த்தேன். ஆற்று மணலில் ஆடிப் பாடினேன். ஆலமரத்தடியில் கிட்டிக்குச்சு விளையாடினேன். ஆயர்பாடியில் வெண்ணெய் திருடினேன். பச்சைக் குதிரை சுமந்தேன். பூவரச இலையில் புல்லாங்குழல் செய்து ஊதினேன். வில்லம்பினால் விலங்குகளை வேட்டையாடி வேகவைத்து உண்டு பசியாறினேன்.

டவுன்லோடு

உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப்

பேரரசர் செங்கிஸ்கான். மாவீரன் அலெக்சாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரியது செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு.

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான

காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.

ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு

கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும்

வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.

அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும்

கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச்

சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம்.

டவுன்லோடு

1930-களின் சென்னை. அங்கே, ராமோஜி என்ற தஞ்சாவூர் மராட்டா இளைஞன். அவன் கல்யாணம் செய்து-கொள்ளும் ரத்னா பாய் என்ற அதிரூப சுந்தரி. ரத்னாவின் மூக்குப்பொடி பழக்கம், பொடி டப்பாவைத் தேடிய முதலிரவு ...

ராமோஜியும், ரத்னாபாயும் காலங்கள் தோறும் பிறந்து, நிறை குறைகளோடு முழு வாழ்க்கை வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து எழுகிறார்கள்.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளிலும் ராமோஜியும் ரத்னாவும் அந்தந்தக் காலத்து ஆசாபாசங்களோடு ஜீவித்து இருக்கிறார்கள்... ராமோஜி இணையற்ற கடற்படைத் தலைவன் கனோஜி ஆங்கரேயின் கப்பல் படையில் சேர்ந்து மேற்குக் கடற்கரையில் சுவர்ணதுர்க்கத்தில் ராமோஜி ஆங்கரே ஆகிறான்.

அடுத்த நூற்றாண்டில் புதுச்சேரியில் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையின் பிரியத்துக்கு உரியவனாக, பிரஞ்சு கவர்னர் தியூப்ளேயை பரிச்சயம் செய்துகொள்வதும், ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற முனைகிறான்.

இருபதாம் நூற்றாண்டு மதறாஸோடு, இரண்டாவது உலக மகா யுத்த காலமும் இந்த வாழ்க்கை இழைகளில் கலந்து வருகின்றது. சென்னையோடு கும்பகோணமும் கதையில் அவ்வப்போது களனாகிறது. ஏன், தி.ஜாவின் மோகமுள் கதாபாத்திரங்களின் சாயலில் சிலவும் வந்து போகின்றன. எல்லாம் சேர்ந்ததுதான் இந்தக் கனவுக் காலம். ராமோஜியம் காலம்.

டவுன்லோடு

எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது.

உண்மையில் கிளியோபாட்ரா - ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.

பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.

கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே.

எழுத்தாளர் முகிலின் இந்தப் புத்தகம், கிளியா, கழுகா என எளிதில் கண்டறிய முடியாத ஒரு வினோதப் பெண்ணின் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.

பத்து வருடங்களாக விற்பனையில் சாதனை படைத்து வரும் புத்தகத்தின், மின்நூல் வடிவம் இது.

டவுன்லோடு

👆
நூல்: மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்
தமிழில்: சத்தியப்பிரியன்

இதுவரை இப்படியொரு நூலை நீங்கள் எந்த இந்திய மொழியிலும் வாசித்திருக்கமுடியாது. இப்படியொரு உலுக்கியெடுக்கும் அனுபவத்தை இதுவரை எந்த எழுத்திலும் நீங்கள் பெற்றிருக்கமுடியாது. வாசித்துமுடித்த பிறகும் நீண்டகாலம் நினைவுகளில் தங்கியிருக்கும் உணர்வுபூர்மான பல கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இது வாழ்நாள் முழுக்க உங்களைத் துரத்திக்கொண்டே இருக்கப்போகிறது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒரு புழுவைப் போல் உள்ளுக்குள் இருந்தபடி நெளிந்துகொண்டிருக்கப்போகிறது. மொத்தம் 21 கதைகள். இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கமலா தாஸ், அம்ரிதா ப்ரீத்தம், மண்ட்டோ, இஸ்மத் சுக்தாய், பிரேம்சந்த் என்று தொடங்கி புதுமைப்பித்தன் வரை பலருடைய சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும், வெவ்வேறு கலாசாரப் பின்னணியிலிருந்து உருவானவை என்றாலும் அனைத்தும் ஒன்றுபடும் ஒரு புள்ளி, இந்தக் கதைகள் அனைத்துமே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் துயர்மிகு வாழ்வைப் பதிவு செய்கின்றன என்பதுதான். கழுகுகள் குத்திக் கிழித்த பெண்ணுடலின் கதை இது. ஒரு பாலினம் இன்னொன்றை அடிமைப்படுத்தி ஆட்கொண்ட வன்முறையின் கதையும்கூட. ‘உலகின் புராதனத் தொழில்’ காலம் காலமாகப் பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்தி வரும் தொடர் வலியை நமக்கு அப்படியே கடத்திவிடுகின்றன இந்த எழுத்துகள். அந்த வலியிலிருந்து இரு வழிகளில் மட்டுமே அவர்களுக்கு மீட்சி சாத்தியமாகியிருக்கிறது. மரணத்தின்மூலம். அல்லது தீரமிக்கப் போராட்டங்களின்மூலம். முதலாவது விரக்தியையும் இரண்டாவது நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை என்பதே இந்த இரண்டுக்கும் இடையிலான ஊசலாட்டம்தான், இல்லையா? மனித வாழ்வின் இருள் நிறைந்த பக்கங்கள் இவை. கண்களில் நீர் கோக்காமல் இதயத்தில் கனத்தைச் சேர்க்காமல் இவற்றை உங்களால் வாசித்துமுடிக்கமுடியாது. ருசிரா குப்தா ஒரு பெண்ணியவாதி, நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்திச் செல்லப்படுவதை எதிர்த்துப் போராடும் அமைப்பொன்றை (Apne Aap Women Worldwide) நிறுவியிருக்கிறார். தனது புலனாய்வு எழுத்துகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 20,000 பெண்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபடுவதற்கு உதவியிருக்கிறார்.

டவுன்லோடு

சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தாண்டி செல்கிறது. சினிமா உலகம் என்றாலே மாய உலகம், உல்லாசமும் உற்சாகமும் நிறைந்த உலகம் என்பது பொதுவான எண்ணம். இதுவரை சினிமா உலகைப்பற்றி தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் சினிமா உலகையும் அதன் மாந்தர்களையும் வெகு அருகில் இருந்து காட்டியது .சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையும் ஒரு முக்கியமான ஆக்கம் .அராத்துவின் ஓப்பன் பண்ணா இந்த இரண்டு நாவல்களிலும் இருந்து முற்றிலும் விலகி வேறொரு தளத்தில் செயல்படுகிறது. தற்போதைய சினிமா உலகின் இயக்குநர்கள்,ஹீரோயின் , ஹீரோ , உதவி இயக்குநர் , தயாரிப்பாளர்கள் என தாவித்தாவிச் சுழல்ன்றாலும் , சினிமா உலகின் துறை சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் தராமல் அதில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளோடு இந்த நாவல் தானும் ஒரு கதாபாத்திரமாகப் பழகிப்பழகி வாசகர்கள் முன்னே படையல் போடுகிறது.உச்சகட்ட புகழில் இருக்கும் சினிமா கதாபாத்திரங்கள் எப்படி காதலை காமத்தை அணுகுகிறார்கள் ? அவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? திடீர் வீழ்ச்சிகளை எப்படிக் கடக்கிறார்கள் ? என்றெல்லாம் வெளிப்படைத் தன்மையோடு ஜாலியாக சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது. மது மாது மட்டுமே அதிகம் ஆக்கிரமித்து இருக்கும் சினிமா , ஃப்ரீ செக்ஸ் என்றெல்லாம் சினிமாவைப்பற்றி பொதுத்தளத்தில் பேசிக்கொண்டிருக்க , நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கேரக்டரே சினிமா உலகில் நுழைந்துப் பார்த்து வாசகர்களிடம் சொல்வது போலச் சொல்லிச் செல்வது இதன் சிறப்பு.

இதுவரை பயன்படுத்தி வந்த கதை சொல்லல் முறையை முற்றாக புறந்தள்ளி விட்டு , நவீன வாழ்க்கைக்கும் , நவீன சினிமாவிற்குமான புது விதமான கதை சொல்லும் பாணியில் பயணித்து வாசகர்கள் மூளைக்குப் புது ரத்தம் பாய்ச்சுகிறது. முற்றிலும் புதிதான , வெளிப்படைத்தனமை அதிகம் கொண்ட ஒரு அனுபவத்திற்குத் தயாராகலாம்.

டவுன்லோடு

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Wed May 12, 2021 4:32 pm

தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) 3838410834 தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) 103459460 தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) 1571444738

தலைப்பையும் தமிழில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பழிச்சென்று இருந்திருக்கும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 12, 2021 5:24 pm

உங்கள் விருப்பத்திற்கிணங்க ஆங்கில  தலைப்பை மாற்றிவிட்டேன்.
முதன்மை பதிவாளருக்கு இதில் சம்மதம் இருக்குமென எண்ணுகிறேன்.
நன்றி விக்கிப்பீடியா

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

nahoor இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 12, 2021 7:09 pm

தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) 103459460 தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) 3838410834
-
புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும்

nahoor இந்த பதிவை விரும்பியுள்ளார்

nahoor
nahoor
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 20/08/2019

Postnahoor Wed May 19, 2021 8:24 am

【தமிழ் புத்தகங்கள்】◆ 【2】(இதில் இருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் வேறு இணையதளத்தில் copy செய்தது. சொந்த கருத்து அல்ல)
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Gandr-1621372854184


பணிக்கர் பேத்தி - ஸர்மிளா ஸெய்யித்

நூல் குறிப்பு:

சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறாள்; அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள், செல்வத்தை திரட்டுகிறாள்.

ஆண்களிடையே சரிசமமாக நின்று போராடி தன்னை நிறுவுகிறாள். தாத்தா பணிக்கரின் யானை உயிருள்ள விலங்கு. பேத்தி சகர்வானின் யானை உருவமற்றது. அதற்குப் பல பெயர்கள். உழைப்பு, விடாமுயற்சி, பெண் நம்பிக்கை.

‘உம்மத்’ நாவல் மூலம் வாசகர்களை ஈர்த்த ஸர்மிளா ஸெய்யித் எழுதிய இரண்டாவது நாவல் பணிக்கர் பேத்தி.

டவுன்லோடு

படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்.

டவுன்லோடு

இந்த இவள் - கி. ராஜநாராயணன்

“கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள்.”
அப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் ‘இந்த இவள்’.
96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்குறுநாவல்.

டவுன்லோடு

ஆலவாயன் - அர்த்தநாரி, பெருமாள் முருகன்

’மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல். ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.


டவுன்லோடு

அறுபடும் விலங்கு - கரன் கார்க்கி

அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இருந்தது என்பதை நாம் அறிவதற்கு கரன் கார்க்கிக்காகக் காத்திருக்கவேண்டி நேர்ந்துள்ளது.
விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு? ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின் முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது, எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதிகளின் போலியான சமூக விழுமியங்களை இவ்வளவு வெளிப்படையாகத் தோலுரித்த நாவல் அண்மைக் காலத்தில் எழுதப்படவில்லை.

டவுன்லோடு

அன்புள்ள ஏவாளுக்கு - ஆலிஸ் வாக்கர், ஷஹிதா

352 பக்க நாவலை வாசித்து முடிக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வதே கூட சமீபமாகத்தான் எனக்கு நிகழ்கிறது. இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டிருந்தால் எனக்கு பெயர்க் குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது. ஒரு குடும்பத்தில் ஆண்களிடம் பெண்கள் வந்து வந்து புதிதாய் சேர்ந்து கொள்கிறார்கள். எல்லோரிடமும் தனித்த அம்சங்களும் வாழ்க்கையும் இருக்கிறது. ஒவ்வொரு பெண்களைப் பற்றியும் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர் பருவம் வரை சுருக்கமாகவேனும் நாம் வாசிக்கிறோம் இந்த நாவலின் வழியே.

1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார்.
“தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்.

டவுன்லோடு

1975 - இரா. முருகன்

இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது. எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.

டவுன்லோடு

யாசகம் - எம்.எம்.தீன்

பிச்சைக்காரர்களின் உலகில் ஒளிந்து கிடக்கும் கதைகள் அபூர்வமானவை. ஒரு யாசகனின் வாழ்வில் அடுத்தவனுக்கு அதிகமான இடம் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்தீவில் வாழ்பவர்கள். அப்படியான மகா மானுடர்களின் புற மற்றும் அக வாழ்வின் நுட்பமான சித்திரங்களை புனைவின் வழி சாத்தியமாக்கியிருக்கிறார் தீன்.
தமிழில் பிச்சைக்காரர்கள் குறித்து முழுவதுமாக வெளியான செவ்வியல் படைப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது.

டவுன்லோடு

நிலவே என்னிடம் நெருங்காதே இது இருவேறு துருவங்களுக்கு இடையில் நடக்கும் காதல் யாசகம். சூழ்நிலையால் நாயகனின் தந்தையைக் கொலை செய்த பழி நாயகியின் தந்தை மீது விழுகிறது. அதை நம்பி நாயகன் நாயகியை வெறுத்து ஒதுக்குகிறான். நாயகி தன் தந்தை மீது தவறில்லை என்பதில் நூறு வீதம் நம்பிக்கை வைக்கிறாள். அவனோ, இல்லை அவள் தந்தைதான் கொலைசெய்தார் என்பதிலேயே இருக்கிறான். இந்நிலையில் நாயகன் நாயகியை ஏற்றுக்கொள்கிறானா? இல்லை அவளை வெறுத்து ஏற்றுக்கொள்வானா? அதை படித்தே அறிந்துகொள்ளுங்கள்.

சகோதரர்களுக்காக வாழும் அவள். தனிக்காட்டு ராஜாவாக வாழ்பவன் அவன். மாறுபட்ட குண இயல்புகள் கொண்ட இருவர் சூழ்நிலையால் சேர்வதும், அதே சூழ்நிலையால் பிரிவதும், அதே சூழ்நிலை காலத்தின் பிடியில் சிக்கி, அவர்களை இணைக்கும் இக்கதை என்று நம்புகிறேன்.

இக்கதையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்பை அது பெற்றுக்கொடுக்கும். வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும். அதற்கு மேல் இந்த நாயக்க நாயகிகள் உங்கள் மனதில் நீங்க இடத்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இக்கதையில் பாசம், காதல், கோபம், வெறுப்பு என்று பல்வேறுபட்ட உணர்வுகள் படைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாரத திருப்பங்களுடன், நாயகன் நாயகியின் காதல் உங்கள் அனைவரையும் கவர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.

டவுன்லோடு


avatar
Guest
Guest

PostGuest Wed May 19, 2021 12:25 pm

【தமிழ் புத்தகங்கள்】◆ 【2】(இதில் இருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் வேறு இணையதளத்தில் copy செய்தது. சொந்த கருத்து அல்ல) wrote:

இப்படிச் சொல்பவர்கள் இணைய ஊடகத்தில் மிகவும் குறைவு.
நன்றி வாழ்த்துகள்.


nahoor
nahoor
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 20/08/2019

Postnahoor Wed May 19, 2021 8:08 pm

【தமிழ் புத்தகங்கள்】◆ 【3】
தமிழ் புத்தகங்கள்  ★ 1 ★ கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) Gandr-1621434668673
முற்றாத இரவொன்றில் - ம. காமுத்துரை

ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாயசமாக அச்சேற ஆரம்பித்து விட்டன. பிரச்சனையின் ஆதி தொட்டு, அகழ்வாராய்ச்சியில் இறங்கி அழகழகாக தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.
இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. எனது கால் நூற்றாண்டு கால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் எதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன.
சாதீயம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அணுவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டி இருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு ஜீவிக்கிறது. அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சனைகள் கூர்மைப்படும். ஆனால் அசாத்தியமான செல்வழியில்தான் வர்க்கங்கள் வாயினைப் பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன.
ஒருநாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிற போது வாழ்வின் மிச்சம், தாழம்புதராக மணத்துக் காட்டுகிறது.

டவுன்லோடு

வாராணசி: மயக்கநிலைத் தோற்றங்கள் - பா. வெங்கடேசன்

இரு பெண்கள் இரு வேறு காலங்கள் அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழர்கின்றன.

டவுன்லோடு

கேரளானாச்சாரம் - சுவாமி சிவானந்த பரமஹம்சர்

இந்த சூழ்நிலையில்தான் ஆத்மபிதாவின் அவதாரம். அவரது அவாதாரத்தின் ஒரு குறிக்கோள் கேரளானாச்சாரங்களை நிர்மூலம் செய்து கேரளத்தை நலமுறச் செய்தலே. இதற்காக ஆதிசங்கரரே ஆத்மபிதாவை கேரளத்திற்க்கு அனுப்பிவைத்ததாக பிதா அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் அறியப்படுகிறது. அச்சமயத்திலுள்ள கேரளநாட்டின் தார்மீகமற்ற நிலையை எல்லாம் புரிந்து, அவற்றை விட்டு, தார்மீக வழியில் வரவேண்டியே ''கேரளானாச்சாரம்' என்னும் இந்நூலை பிதா அவர்கள் முதன்முதலாக வெளியிட்டு பிரச்சாரம் செய்தது, கேரளத்தில் நிலவியிருந்த அனாச்சாரங்களை சுருக்கமாக ஆனால் அப்பட்டமாக நாடக வடிவில் மிகச்சிறப்பாக இந்நூல் வழி சித்தரிக்கப்படுவது ஆத்மபிதாவின் ஞானநிலைக்கொரு சான்றாகும், கேரளானாச்சாரம் என்றொரு நூலை வெளியிடாமலிருந்தால், அன்றைய கேரளத்தின் நிலையை புரிந்து கொள்ளவோ, அன்னார்தம் அவதார மகிமையின் உண்மை தெரிந்து கொள்ளவோ இயலாமல் போயிருக்கும். நூல் வெளியிட்டதோடு மட்டுமன்றி கேரளானாச்சாரங்களை நிர்மூலம் செய்து கேரளத்தை நலமாக்கவும் அன்னார் அயராது பாடுபட்டனர்.

டவுன்லோடு

கருக்கு - பாமா
தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக திருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கிறிவிட இருக்கு' தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகம்.

டவுன்லோடு

உடைந்த குடை - தாக் ஸுல்ஸ்தாத்

உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது. மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான 'The Unbearable Lightness of Being' இன் நார்வேஜிய வடிவம் என்று சொல்லக்கூடிய இந்நாவலில் எலியாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதையும், விரக்தியும் உறவுகளோடு பாராட்டும்யோலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸல்ஸ்தாத் சித்தரிக்கிறார்.பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வேஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது.

டவுன்லோடு

மோகனச்சிலை - சாண்டில்யன்

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதையோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒருகிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான பல்லவர்களையும், களப்பிரர் என்ற நாடோடி கூட்டத்தார் முறியடித்து மறைத்து தமிழகத்தை மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் அரசாண்டு தமிழக வரலாற்றையே இருள் மூளச் செய்து விட்டார்கள். ஆகவே அந்த ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறோம்.
டவுன்லோடு

நீலவல்லி - சாண்டில்யன்
மூத்த மகனான வரகுணவர்மன் தென்பாண்டி நாட்டில் முத்துக் களவு அதிகமாக ஏற்படுவதை விசாரிக்கவும், உக்கிரன் என்பான் கரகிரி அல்லது கரவந்தபுரம் என்ற ஊரை உக்கிரன் கோட்டை என்று பெயர் மாற்றி, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, புரிந்து வந்த மோசச் செயலை விசாரிக்கவும், பராந்தக பாண்டியன் என்ற தன் தம்பியை அனுப்பி வைக்கிறான். பராந்தக பாண்டியன் தான் இன்னானென்பதை அறிவிக் காமல், சாதாரணப் பயணியாகத் தென்பாண்டி நாட்டிற்குச் செல்கிறான்.
அங்கு நீலவல்லி என்ற அழகியைச் சந்திக்கிறான். அவள் சேரன் மகள் என்பதை அறிந்தும், அறியாதவன் போல் நடிக்கிறான்முத்துக் களவுக்கும், சேரன் மகளைத் துன்புறுத்திப் பலவந்தமாக அடைய முயன்ற குற்றத்துக்கும் காரண மெல்லாம் தனது உறவினனான ரகுநாத பாண்டியன் என்பதை அறிந்து அவனைத் தண்டிக்க ஏற்பாடுகள் செய்கிறான். அவனுக்கு உறுதுணையாக நீலவல்லியும் தென்பாண்டி நாட்டுப் பரதவரும் நிற்கிறார்கள்
வெகு திறமையாகப் புலன் விசாரித்து உக்கிரனையும் நீலவல்லியையும் காப்பாற்றி, ரகுநாத பாண்டியனைத் தண்டிக்கிறான் பராந்தகன். ரகுநாத பாண்டியன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான
டவுன்லோடு

கொலையுதிர் காலம் - சுஜாதா

கொலையுதிர் காலம் என்ற பெயரைக் கேட்டவட்டி ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் தொலைபேசியில் மேற்கொண்டு எதுவும் சொல்லாதீர்கள். இதுதான் தலைப்பு' என்று இணைப்பை நீக்கிவிட்டார். அந்த அளவுக்கு இந்தத் தலைப்பு அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. கணேஷ் - வசந்த் தோன்றும் நீண்ட நாவல்களில் இது முக்கியமானது. இதன் இறுதியில் நீங்கள் எதை நம்புகிறீர்கள் அறிவியலையா, பேய் பிசாசுகளையா என்ற கேள்வி விடையளிக்கப்படாமலேயே இருக்கிறது என்று சிலர் குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்தக் கேள்விக்கு அடுத்த நூற்றாண்டிலும் அறுதியாக பதில் கிடைக்காது என்பதே எனது கருத்து.

டவுன்லோடு

எனக்குள் பேசுகிறேன் - பாலகுமாரன்

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இருக்கிறது. இன்னும் தெளிவாக இருந்தது. ஜூனியர் விகடனை பம்பாயில் கூட பல பேர் கையில் வைத்துக் கொண்டு படிப்பதை பாரத்திருக்கிறேன். அது பரவலாய் பலராலும் படிக்கப்படுகிற பத்திரிகை. உங்கள் கட்டுரையைத் தாங்கிவந்து நிறைய இளைஞர்களுக்கு அது உதவி செய்கிறது.கட்டுரையில் இன்ன பகுதி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அனைத்துமே எளிமையாய், நேரடிப் பேச்சாய், புரிந்து கொள் என்கிற சிறு அதட்டலாய் இருந்தது. இதுதான் பாலகுமாரன் ஸ்பெஷாலிட்டி

டவுன்லோடு


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக