புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
3 Posts - 2%
jairam
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
1 Post - 1%
சிவா
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
16 Posts - 4%
prajai
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
7 Posts - 2%
jairam
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_m10தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 30, 2009 5:48 pm

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம் Thyroid01தைராய்டு
என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி
வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில்
உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.நம்
உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச்
சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும்
இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன
வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.

இந்த ஹார்மோன்களின் பணி என்ன?
இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும்,
செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும்
எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை
மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு
ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது
அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.
தைராய்டு உடலின் பல பணிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இந்தத்
தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? நம் மூளையில் உள்ள
பிட்யூட்டரி சுரப்பி. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டும் Thyroid
Stimulating Hormone (TSH) என்ற திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம்
தைராய்டு சுரப்பிக்கு மட்டுமேயானது. இது தைராய்டு திரவம் உருவாவதிலும்
சுரப்பதிலும் நேரடிப் பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு
எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவை என்பன போன்றவற்றையெல்லாம் இந்தத் திரவம்
கண்காணிக்கிறது.
தைராய்டு சரியான அளவில் இருப்பதற்கு அயோடின் மிகவும் அவசியம். ஏனெனில்,
தைராய்டு ஹார்மோன்கள் அயோடினை அடிப்படையாகக் கொண்டவை. உடலில் அயோடின்
குறையுமானால், தைராய்டு சுரப்பி ஏறுக்குமாறாகப் பணிசெய்யத் தொடங்கிவிடும்.
எனவே உணவில் அயோடின் தேவையான அளவு இருக்கவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட
புவியியல் பகுதியில் உள்ள நீர் மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்தது.
ஒருவேளை அப்பகுதியில் அயோடினின் அளவு குறையுமானால் அயோடின் கலந்த உப்பை
உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
தைராய்டுக் கோளாறுகளின் வகைகள்:
தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமையால் ஏற்படும் கோளாறுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று : முன் கழுத்துக்கழலை எனப்படும்
காய்டர்(Goiter). கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பெரிதாகி
(வீங்கி) பைகள் போல் தொங்கும். தைராய்டு சுரப்பி இரண்டு முதல் பத்து
மடங்கு வரை பெரிதாகக் கூடும். கழுத்துப்பகுதியில் சிறிய அளவு வீக்கம்
ஏற்பட்டால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரிவரக்
கவனிக்காவிடில், இது புற்றுநோய்க்கும் வழி கோலிவிடக்கூடும்.

இரண்டு:
தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்
படலாம். மிகவும் குறைந்த தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hypothyroidism)
அல்லது மிகவும் அதிகமான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hyperthyroidism)

இரண்டுமே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல விதமான குளறுபடிகளை
ஏற்படுத்தக் கூடியவை.இவ்வகைக்கோளாறுகளை மிக எளிமையான இரத்தப் பரிசோதனைகள்
மூலம் கண்டறிந்து விடமுடியும். சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் பழைய
இயல்பான நிலைமைக்கு வெகு விரைவில் கொண்டுவரவும் முடியும்.
தைராய்டுக்குறைவு நோய் (Hypothyroidism)
தைராய்டுக் கோளாறுகளில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது இந்த
Hypothyroidism என்ற கோளாறால்தான். அதிகச் சுரப்பால் பாதிக்கப் படுபவர்களை
விட குறைவான சுரப்பால் பாதிக்கப் படுபவர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு
அதிகமாவார்கள். தைராய்டு சுரப்பி T3 மற்றும் T4 எனும் இரண்டு வகை
திரவங்களைச் சுரக்கிறது என்று முன்பே கண்டோம். தைராய்டு சுரப்பி
இத்திரவங்களைத் தேவைக்கு மிகக் குறைவாகச் சுரக்கும்பொழுது பல விதமான
அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவர்களையே
குழப்பிவிடக்கூடியவை. தைராய்டுக்கான பரிசோதனை செய்யாதவரை, இவை வேறு பல
நோய்களுக்கான அறிகுறிகளாகக் கருதப் பட்டு மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை
மருத்துவர்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள்
தோன்றினால் தைராய்டுக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்துவிடுவது நன்மை பயக்கும்.
அடிக்கடி மயக்கம் அல்லது தளர்ச்சி உண்டாகுதல், கைகால்களில்
தசைப்பிடிப்பு, விரல்கள் நடுங்குதல், நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும்
தடுமாறுதல், தசைகள் வீக்கமடைதல், திடீரென அதிக அளவு எடை கூடுதல், தோல்
வறண்டு விடுதல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை,
முகம் உப்புதல், மனச்சோர்வு, தொண்டை அடைப்பு,இதயத்துடிப்பு இயல்பை விடக்
குறைதல், முடி கொத்துக்கொத்தாக உதிர்தல், தொண்டை வீக்கம், மலட்டுத்தன்மை
அல்லது கருச்சிதைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியன தைராய்டு குறைவினால்
தோன்றும் சில உடல் உபாதைகள்.
தைராய்டு அதிகம் சுரத்தல் (Hyperthyroidism)
தைராய்டு சுரப்பி அதிக அளவு தூண்டப்படும்பொழுது தேவைக்கு மிக அதிகமான
ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. இது Hyperthyroidism என்று அழைக்கப்
படுகிறது. இதற்கான அறிகுறிகள் உடல் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, சிறிதளவு
கூட வெப்பத்தைத் தாங்க இயலாமை, உடல் எரிச்சல், எப்பொழுது பார்த்தாலும்
பசித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுதல், தூக்கமின்மை, மூச்சு விட
இயலாமை, எடை கன்னாபின்னாவென்று குறைதல், பலவீனம், ஈரமான சருமம், அதிக அளவு
இதயத்துடிப்பு ஆகியவை.
தைராய்டுக்கோளாறுகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரக்கூடும்?
யார் வேண்டுமானாலும் தைராய்டுக்கோளாறினால் பாதிக்கப் படக்கூடும்
என்றாலும் கீழ்க்கண்ட பிரிவினர் அதிக எச்சரிக்கையாக இருப்பதும்
முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.
1. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
2. சமீபத்தில் பிரசவித்தவர்கள்
3. அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள்
4. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடை இழப்பு ஏற்பட்டவர்கள்.
5. அடிக்கடி உடல் தளர்ச்சி ஏற்படுபவர்கள்
6. குழந்தையின்மை மற்றும் மாதவிடாய்க்கோளாறுகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள்
7. ஏற்கனவே தைராய்டுக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

இத்தைராய்டுக்கோளாறுகள்
ஏன் உருவாகின்றன? இவற்றை எதிர் கொள்வது எப்படி? இவற்றுக்கான மருத்துவ
சிகிச்சைகள் என்னென்ன என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில்........


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 18, 2010 9:39 am

தெரிந்திருக்கவேண்டிய ஒரு விடயம் நன்றி மாமு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக