புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
56 Posts - 73%
heezulia
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
221 Posts - 75%
heezulia
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10பரிகாரம் - சிறுவர் கதை Poll_m10பரிகாரம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிகாரம் - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 13, 2021 6:23 pm

பரிகாரம் - சிறுவர் கதை E_1479964718
-
அவனியாபுரம் என்னும் ஊரில், தங்கமணி என்பவன்
வாழ்ந்து வந்தான். அவனுக்கு பலசரக்கு கடையும்,
நில புலன்களும் சொந்தமாக இருந்தன. போதுமான
வருமானம் கிடைத்தாலும், மிகவும் கஞ்சனாக இருந்தான்.

அவனுடைய பலசரக்கு கடையிலுள்ள அரிசி, பருப்பு
மூட்டைகளை, எலிகள் கடித்துக் குதறி ஓட்டை போட்டு தின்று
வந்தன.

தங்கமணிக்கு வயிறு எரிந்தது. 'வாயைக் கட்டி, வயிற்றை
கட்டி சேர்க்கும் சொத்துக்களை எல்லாம் எலிகளே தின்று
நாசமாக்கி விடுகிறதே...' என்று மிகவும் வருந்தினான்.

எலிகளைப் பார்க்கும் போதெல்லாம் அவற்றை அடிக்க,
ஒரு குச்சியை தூக்கியபடி ஓடுவான். அந்த எலிகளோ,
மூட்டைகளின் மேலும், கீழும் எகிறிக் குதித்து வளைகளுக்குள்
புகுந்து, வேடிக்கை காட்டி வந்தன.

நாளுக்கு நாள் எலிகளின் குடும்பம் பெருகி வளர்ந்தன.
கருமி தங்கமணிக்கோ எலிகளை ஒழிக்க, என்ன செய்வதென்றே
புரியவில்லை.

நண்பர்களிடம், ''எலித்தொல்லையில் இருந்து விடுபட ஏதாவது
வழி இருக்கிறதா?'' என்று கேட்டான்.

''எலிப்பொறி வாங்கி, அதில் ஒரு தேங்காய்த் துண்டை மாட்டி
வைத்தால், அதைத் தின்பதற்காக உள்ளே நுழையும் எலி மாட்டிக்
கொள்ளும்...'' என்று ஒரு நண்பன் கூறினான்.

''நல்லா இருக்குடா உன் யோசனை. காசு கொடுத்து எலிப்பொறி
வாங்கணும்; அப்புறம் தேங்காயை வேறு வாங்கி வைத்து
வீணாக்கணும்; எத்தனை தண்டச் செலவு. எலிகளால் வீணாவது
போதாதென்று, எலிகளை பிடிப்பதுக்கு வீண் செலவு செய்யணுமா,''
என்று சலித்துக் கொண்டான் தங்கமணி.

''அதானே! எலிகளைப் பிடிக்க, செலவே இல்லாத வழி இருக்கிற
போது, தண்டச் செலவு ஏன் செய்யணும்,'' என்றான் குணசேகர்.

''செலவில்லாத வழி இருக்கா... என்ன வழி சொல்லு,'' என்று
ஆர்வத்தோடு கேட்டான் தங்கமணி.

''உன் கடையில ஒரு பூனையை வளர்த்தால் போதுமே...
அது எலிகளைப் பிடிச்சுடுமே,'' என்றான்.

''பூனையை வளர்க்கிறதா... பூனைக்கு வேறு சாப்பாடு போடணுமே,''
என்று கவலையோடு சொன்னான் தங்கமணி.

''அதுதான் இல்லை... பூனைக்குப் பசிக்கும் போதெல்லாம்,
ஒவ்வொரு எலியாக பிடித்துத் தின்று கொள்ளும்,'' என்றான்
குணசேகர்.

மறுநாளே வீடு வீடாகப் போய், பூனையை தானம் கேட்டான்
தங்கமணி.

ஒரு வீட்டுக்காரர், போனால் போகிறது... என்று ஒரு பூனைக்
குட்டியை தங்கமணியிடம் கொடுத்தார்.

அதை வாங்கி வந்து, கடைக்குள் விட்டான் தங்கமணி. அந்த
பூனையும், எலிகளை விரட்டி பிடித்துத்தின்று வாழ்ந்து வந்தது.

ஒருநாள்-
தங்கமணி குடிப்பதற்காக, ஒரு செம்பில் பால் கொடுத்தாள்
மனைவி. அப்போது, கடையில் சிறிது கூட்டம் இருந்ததால்,
பக்கத்தில் வைத்து விட்டு வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான்
தங்கமணி.

கூட்டம் குறைந்ததும், பாலைக் குடிக்கலாம்... என்று திரும்பிப்
பார்த்த தங்கமணி அதிர்ச்சியடைந்தான்.
பாலை, குடித்துக் கொண்டிருந்தது பூனை.
'அட திருட்டுப் பூனையே! உன்னை எலிகளைப் பிடித்து வாழச்
சொன்னால், நீ எனக்கு வைத்த பாலையே குடிக்கிறாயா... உன்னை
என்ன செய்கிறேன் பார்...' என்று கூறி, எலிகளை அடிப்பதற்காக
வைத்திருந்த கம்பை எடுத்து, பூனையின் தலையில் ஒரே போடாகப்
போட்டான்.

அந்த அடி பூனையின் தலையில் பலமாக விழ, 'மியாவ்' என்ற
அலறலோடு அந்த இடத்திலேயே இறந்தது.

அதைப் பார்த்த ஒருவர், ''ஐயோ என்ன காரியம் செய்து விட்டாய்
தங்கமணி. பூனையைக் கொல்வது பெரிய பாவமாயிற்றே.
இதற்கு, உடனே பரிகாரம் செய்துவிடு. இல்லாவிட்டால், இந்தப் பாவம்,
உன்னை, உன் பரம்பரையையும் விட்டு வைக்காது,'' என்றார்.

அதைக் கேட்டுப் பயந்த தங்கமணி, உடனடியாக கடையைப்
பூட்டிவிட்டு, பரிகாரம் செய்பவரைத் தேடி சென்றான்.

உள்ளூர்காரனான பரிகாரி, அவனுடைய கஞ்சத்தனத்தை
நன்கு அறிந்தவர். அதனால், சாவகாசமாக தன்
வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வந்த காரியம் என்ன
என்று கருமியை விசாரித்தார்.

''சாமி! நான் ஒரு பூனையை அடித்துக் கொன்று விட்டேன்.
அது பெரிய பாவமாமே! அதற்கு நீங்கள் தான் வந்து ஏதாவது
பரிகாரம் செய்ய வேண்டும்!'' என்றான்.

தங்கமணிக்கு நன்றாகப் பாடம் புகட்ட விரும்பிய அவர்,
''அடேடே பூனையைக் கொன்றவனுக்கு நரகம் அல்லவா
கிடைக்கும். நீ பூனையை ஏன் கொன்றாய்... எப்படிக் கொன்றாய்?''
என்று கேட்டார்.

''ஒரு பெரிய கம்பால் அடித்துக் கொன்றேன் சாமி!'' என்றான்.

''அப்படியானால், அதே கம்பால் உன் தலையிலும் ஓங்கி அடி
கொடுப்பது தான் இதற்கு பரிகாரம். நீ போய் அந்தக் கம்பை
எடுத்து வா,'' என்று குறும்பாக கூறினார்.

''ஐயோ சாமி! நானும் செத்துப் போய் விடுவேனே...''
என்று அலறினான் தங்கமணி.

''அதனால் என்ன... உன் பாவம் போய்விடுமே. நீ நேராக
சொர்க்கத்திற்கே போய் விடலாம்,'' என்று மேலும் அவனைச்
சீண்டினார்.

''வேண்டாம் சாமி. நான் இப்போதே சொர்க்கத்திற்கு போக
விரும்பவில்லை. தயவு செய்து வேறு பரிகாரம் ஏதாவது
இருந்தால் பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான் தங்கமணி.

''சரி! இன்னொரு பரிகாரம் இருக்கிறது. சுத்தமான தங்கத்தில்
பூனை உருவத்தை செய்து எவருக்கேனும் தானமாகக்
கொடுத்தால், பூனையைக் கொன்ற பாவம் தீர்த்துவிடும்!''
என்றார்.

தங்கமணியும் மனம் வருந்தியபடியே, தன் கஞ்சத்தனத்துக்கு
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என்று எண்ணியபடி
தங்கத்தில் பூனை செய்து, அவருக்கே தானமாக கொடுத்தான்.

பட்டூஸ்... எப்பவுமே ரொம்ப கஞ்சத்தனம் கூடாது.
பெரிய செலவில் முடிஞ்சிடும்... சரியா
--
நன்றி-சிறுவர் மலர்




heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக