ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.
by ayyasamy ram Today at 10:07 pm

» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm

» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm

» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm

» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm

» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm

» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm

» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm

» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm

» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm

» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm

» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm

» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm

» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm

» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm

» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am

» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am

» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am

» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm

» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm

» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am

» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am

» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am

» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm

» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm

Admins Online

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Go down

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! Empty திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Post by ayyasamy ram Tue Jan 19, 2021 5:55 pm

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! 623257
-

ஞானகுருவாக முருகப்பெருமான்;
உலகுக்கே தந்தையான சிவனார்;
குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என
அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு
வந்தாலே, தரிசித்தாலே மகா புண்ணியம்.

குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.
சனீஸ்வரரின் அருளைப் பெறலாம் என்கின்றனர்
ஆச்சார்யப் பெருமக்கள்.

குரு வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில்
ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து,
செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள்
கிடைக்கப் பெறலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர்
திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத
ஆலயம். சூரபத்மனை அழிப்பதற்காக, சிக்கலில்
வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார்
என்கிறது புராணம்.

சூரபத்மனை அழிப்பதற்காக, தேவர்களின்
படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் முருகப்பெருமான்.
வழியில் வந்துகொண்டிருந்தபோது, தாரகாசுரனை
அழித்தார்.

கிரெளஞ்ச மலையைப் பிளந்தழித்தார். அப்போது
செந்தூர் திருத்தலத்துக்கு வந்து, தன் படை
பரிவாரங்களுடன் தங்கினார். பத்மாசுரனை அழித்தார்.

அப்போது, அங்கே... தந்தையான, உலகுக்கே தந்தையான
சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்காக,
தேவதச்சனான மயனிடம் ஆலயம் ஒன்றை எழுப்பித்தரப்
பணித்தார்.

அதன்படி கடலோரத்தில், மயன் அமைத்த ஆலயமே
திருச்செந்தூர் திருத்தலம்.

வியாழ பகவானால் வணங்கி வழிபடப்பட்ட திருத்தலம்
எனும் பெருமை கொண்டது என விவரிக்கிறது ஸ்தல
புராணம். அதனால்தான் திருச்செந்தூர் குரு பகவான்
திருத்தலம் என்றும் வியாழ க்ஷேத்திரம் என்றும்
போற்றப்படுகிறது.

கடல் அலைகள் மோதிக்கொண்டே இருக்கும் தலம்
திருச்செந்தூர். அதனால், இந்தத் தலத்துக்கு
திருச்சீரலைவாய் எனும் பெயரும் உண்டு. சூரனை
சம்ஹரித்த தலம் என்பதால் ஜெயந்திபுரம் என்றும்
திருநாமம் அமைந்தது.

ராமாயண காலத்துக்கு முந்தைய திருத்தலம் எனும்
பெருமையும் திருச்செந்தூருக்கு உண்டு. இந்தத்
தலத்துக்கு, கபாடபுரம் என்றொரு பெயரும் உண்டு.

வால்மீகி ராமாயணத்தில், ‘கபாடபுரம்’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளதால், ராமாயணத்துக்கு முந்தைய
காலத்திலேயே திருச்செந்தூர் திருத்தலம்
அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

முதல் பிராகாரத்தில், தெற்கில் ஜயந்தி நாதர் சந்நிதி
அமைந்துள்ளது. குமாரவிடங்கப் பெருமான், ஸ்ரீவள்ளி
தெய்வானையுடன் திருக்காட்சி தருகிறார். மேலும்
தென்மேற்கில் ஸ்ரீவள்ளிக்கும் வடமேற்கில்
ஸ்ரீதெய்வானைக்கும் தனித்தனி சந்நிதிகள்
அமைந்திருக்கின்றன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 66017
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13064

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! Empty Re: திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Post by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm


இந்தத் தலத்தின் முக்கியச் சிறப்பு...
ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்ட
தலம் இது. வாஸ்து விஷயங்களுடன் கட்டமைக்கப்பட்ட
ஆலயம். அதனால்தானோ என்னவோ...
மிகுந்த சக்தியுடனும் சாந்நித்தியுடனும் திகழ்கிறது
திருச்செந்தூர் திருத்தலம் என்று போற்றுகின்றனர்
பக்தர்கள்.

திருச்செந்தூர் தலத்தை, வீரபாகு க்ஷேத்திரம் என்றும்
போற்றுகிறார்கள். ஆலய அர்த்தமண்டபத்தில்
வீரபாகுவும் வீர மகேந்திரரும் காவல் தெய்வங்களாக
அமைந்திருக்கின்றனர். இந்தத் தலத்தில் வீரபாகுவுக்கு
முதலில் பூஜை நடந்த பிறகுதான், முருகப் பெருமானுக்கு
பூஜை நடைபெறுகிறது.

அதேபோல், வீரபாகுவுக்கு ‘பிட்டு’ நைவேத்தியம்
செய்யப்படுவதும் சிறப்புக்கு உரிய ஒன்று.

சிவபெருமானை வணங்குவதற்காக முருகப்பெருமான்
எழுப்பிய திருச்செந்தூர் திருத்தலத்தில், குரு வியாழ
க்ஷேத்திரத்தில், சனீஸ்வர பகவானுக்கு தனிச்சந்நிதி
அமைந்துள்ளது.

ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான
சிவனார்; குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என
அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்தாலே,
தரிசித்தாலே மகா புண்ணியம்.

குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.
சனீஸ்வரரின் அருளைப் பெறலாம் என்கின்றனர்
ஆச்சார்யப் பெருமக்கள்.

கடலோரத்தில்... செந்தூர் திருத்தலத்தில்...
செந்திலாண்டவனாகக் குடிகொண்டிருக்கும் அற்புத
க்ஷேத்திரத்தில்... முருகப்பெருமானை வனங்குவோம்.
சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருளுவார்
செந்திலாண்டவர்.
-
வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 66017
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13064

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! Empty Re: திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Post by krishnaamma Thu Jan 21, 2021 2:59 pm

இதுவும் திருச்செந்தூரின் விசேஷம்....புன்னகை

பன்னீர் இலை விபூதி !

🌤 பன்னீர் இலையில் விபூதியை வைத்து எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

🌤 இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

🌤 திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

🌤 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

🐲 இலை விபூதியின் மகத்துவம் :🐲

🍄 அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவரால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார்.

🍄 அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசி உட் கொண்டார்.. சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது.

🍄 அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.

🦆 பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். 🦆

🌺 இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது. முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

🍄 இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924

Back to top Go down

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! Empty Re: திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Post by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

ராம் அண்ணா, தலைப்பில் 'பன்னீர் இலை விபூதி'யையும் சேர்த்துள்ளேன்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924

Back to top Go down

திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி ! Empty Re: திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum