புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
1 Post - 4%
Guna.D
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
1 Post - 4%
mruthun
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
3 Posts - 2%
manikavi
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
2 Posts - 1%
mruthun
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
2 Posts - 1%
Guna.D
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
”மலர்க ஹக்கூ” Poll_c10”மலர்க ஹக்கூ” Poll_m10”மலர்க ஹக்கூ” Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”மலர்க ஹக்கூ”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய
“மலர்க ஐக்கூ”
மும்மொழி நூலை முன்வைத்து,
--நா.முத்துநிலவன்--

----------------------------------------------------

“நேற்றே செத்துப்போனான் /
தோட்டக்காரன் /
செடியில் இன்று புதிதாய்ப் பூ”

எனும் முதல் கவிதையே இழுத்துப் பிடித்துவைத்து,
பலவகைச் சிந்தனை அலைகளை நமக்குள் எழுப்புகிறது.

“விதைத்துக் கொண்டே இருப்போம், முளைத்தால் மரம்,
இல்லையேல் உரம்” என்ற நம்மாழ்வார், இருக்கும்போது
சொன்னதைப் பெரிதுபடுத்தாத தமிழ் உலகம்,
அவர் மறைவுக்குப் பிறகு அவர் காட்டிய
“இயற்கை வேளாண் முறை, மற்றும் இயற்கை உணவு”
உணர்வுபெறுவதை நினைவூட்டுகிறது.

“ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடித்துவிட்டால்
அது இயற்பியல் சக்தி பெற்றுத் தொடர்ந்து மாற்றங்களை
நிகழ்த்தும்” என்ற மார்க்சின் கருத்தும் இதுவே!

“காயம் படவே இல்லை
முள்காட்டிற்குள்
விறகுவெட்டியின் பாட்டு”

தாகமாய் ஒலிக்கிறது
வெள்ளரி விற்கும்
சிறுமியின் குரல்

–தான் விற்கும் வெள்ளரிக்காயே தாகம் தீர்க்கக்
கூடியதுதான் என்றறிந்தும் அதைத் தின்ன அவளது
குடும்ப வறுமை அனுமதிக்காத கொடுமையை
என்ன சொல்ல?

இளநீர் விற்கும் ஒருவன் வேகமாய் ஓடி, கலங்கிய நீரை
அள்ளிக் குடித்த கந்தர்வனின் “தனித்தனியாய் தாகம்”
கதை நினைவிற்கு வந்தால் தவறில்லை,
மார்க்சின் “மண்பாண்டம் செய்யும் தொழிலாளி வீட்டில்
நல்ல சட்டி பானை வைத்திருக்க முடியாது” எனும்
புகழ்பெற்ற பழமொழியும் இதன் ஆழத்தைப் புரிய
வைக்கும்!

கிழிந்த கூரையின்
மானம் காக்குமா?
படரும் சுரைக்கொடி


பசியோடு காத்திருக்கும்
/ குருவிக் குஞ்சுகள் /
வலையில் தாய்க்குருவி

– ஆக்காட்டிப் பாடலின் மொத்த சோகத்தையும்
“வலையில் தாய்க்குருவி” எனும் ஒற்றை வரியில்
தந்துவிட்டபின் நான் பாராட்ட என்ன இருக்கிறது?

கெட்டிமேளச் சத்தம்
/ சன்னலை அறைந்து சாத்தும்
/ இறுகிய அக்கா

-யுகயுகமாக நுகத்தடிகளைச் சுமந்து நடக்கும்
“மாட்டு”பெண்களின் சோகத்தை அறைந்து சொல்லும்
கவிதையிது. திருமணமாகாத அக்காவின் சோகமும் எ
ன்பதை உள்ளடக்கிய ஆழமும் உள்ளது!

மேலாண்மையின் ஒரு கதையில், வயிற்றுப் பாட்டுக்காக
சிறுமி ஒருத்தி புடவை கட்டிக்கொண்டு பட்டாசுத்
தொழிற்சாலைக்குப் போனதை மட்டுமல்ல, கல்யாணச்
சந்தை விலையேறிக் கிடக்க, மணமாகாத பெண்ணொருத்தி
“இராமர்களுக்கு ரத்தமில்லை, ராவணா..நீயாவது..” என
நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சும் வைரமுத்து கவிதையை
நினைவூட்டுகிறது

இந்தக் கவிதை சொற்களின் இறுக்கத்தாலும் சொக்க
வைக்கிறது. மங்கள ஓசையை “சத்தம்” என்பதும்,
சாத்தும் சன்னலை அறைந்து சாத்துவதன் அர்த்தமும்
மட்டுமின்றி, இறுகிய அக்கா எனும் முன்னொட்டு தரும்
கோபம் தனிக்கோபமாகத் தெரிந்தாலும்
அதன் சமூகப் பின்னணி வாசகரிடம் எழுப்பும் சமூகக்
கோபம் அர்த்தம் நிறைந்த ஆழமுள்ளது.

இதே பொருளுள்ள வேறொரு கவிதையும் வேறு
சொற்களில் வந்துள்ளது-

கல்யாணக் கூட்டம் /
முதிர்கன்னியின் தலையிலும் /
சில அட்சதைகள்

– “ஒரு பொருள் நுதலிய பலகவிதை” வேண்டாம் என்று
ஒதுக்கி விட்ட இவரது

“கறுத்த பெண்
புகுந்தகம் வந்தாள்
கலர் டீ.வி.யோடு“

எனும் கவிதையை நானும் பல அரங்குகளில்
சொல்லியிருக்கிறேன்!

வீடுகட்டும் கடன் /
எல்ஐசி கட்டடத்தில் /
கூடுகட்டும் குருவி – போல, சொல்லழகும் கிண்டலும்
கலந்து வந்த கவிதையும் நெஞ்சில் நிற்கிறது

அரசியல்வாதிகளால் கொச்சைப் பட்டுக் கிடக்கும்
தாய்க்குலம், உண்மையில் எப்படிப் பல்வேறு
நிலையுள்ளது என்பதையும் சொல்கிறார்-

“எப்படி அழைப்பது / தூங்கும் குழந்தையருகே /
காதுகேளாத தாய்”

“மகன் எட்டி உதைக்கையில் /
அனிச்சையாய்த் தாயின் கைவருடும் /
வயிற்றுத் தையலை” என்பன இருவேறு கோணத்தின்
இயல்பான வரிகள்

“காகிதத்தைக் கிழிக்கும்போது /
எங்கிருந்தோ கேட்கிறது /
வெட்டப்படும் மரத்தின் ஓசை” என்பதில் மரம்நடும்
விழாக்களில் இருக்கும் அரசியல், சூழலியல், தமிழர்களின்
திணைவாழ்வு எல்லாம் மேலெழுந்து வருகிறது!

சரி, திரைப்பட விமர்சகர் சிலர், மொத்தக் கதையையும்
சொல்வது போலன்றி, கவர்ந்த சில கவிதைகளை மட்டும்
சில சிந்தனைகளோடும் நினைவிற்கு வந்த தமிழ் ஐக்கூ
வரலாற்றுக் குறிப்புகளோடும் பகிர்ந்து கொள்ளத் தூண்டிய
நல்லநூல் என்பதில் பெருமகிழ்ச்சிதரும் நூல் இது!

எனக்கு இந்தி தெரியாது
எனவே இந்தி மொழியாக்கம் பற்றி எழுதமுடிய வில்லை,
ஆயினும் நல்ல தமிழ்க்கவிஞர் நாணற்காடன் மீது நம்பிக்கை
உள்ளது.

ஆங்கிலத்தில் தந்த அமரனின் வரிகள் தமிழைவிடவும்
சுருக்கம் என்பது வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.
மும்மொழியில் வந்துள்ள நூல் என்பதை தமிழுலகம்
உச்சிமேல் வைத்து வரவேற்க வேண்டும்

ஒற்றைத் தொகுப்பில் வறண்டு, தூர்ந்துவிடும் தமிழ்ச்
சூழலிலும், காரமான உலகிலும் ஈரம் காயாமல் எழுதிவரும்,
மு.முருகேஷ் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர,
இதயம் ததும்ப வாழ்த்துகிறேன்.
-
-------------------
(கட்டுரையின் ஒரு பகுதி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக