ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:35 pm

» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
by Dr.S.Soundarapandian Today at 9:39 am

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by Dr.S.Soundarapandian Today at 9:37 am

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஊரே கேக்குது!
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» நீ ஊட்டி பார்த்திருக்கியா (கடி ஜோக்ஸ்)
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐ பி எல் 2021
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» இதயத்தை இதமாக வைத்திருக்க டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» பப்லு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஹலோ எப் எம்-ல் நடிகர் சசிகுமாருடன் சந்திப்பு
by ayyasamy ram Yesterday at 7:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:44 pm

» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

» என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:15 pm

» சண்டி குதிரை நொண்டி குதிரை…
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:14 pm

» கீழடி -(கவிதை)
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:09 pm

» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 4:02 pm

» நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாம்…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:57 pm

» வாட்சப் சர்வர் டவுனாம் மாமா…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:54 pm

» இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ…அவ்வளவுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:51 pm

» சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 3:47 pm

» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 12:03 pm

» உலகிலேயே உயர்ந்த பெண்
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:06 am

» நாலடியார் பாடல் :123 (விளக்கம்)
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:03 am

» இணையத்தில் சுட்டவை
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:58 am

» கோபத்தைக் கொல்வோம்!
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:28 am

» கிரக தோஷத்தைப் தீர்க்கும் கோளறு பதிகம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:27 am

» சனி பிரதோஷம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:26 am

» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் ...
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» சுதர்சண ஹோமம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:23 am

» பஞ்ச புராணம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:22 am

» ஆயுத பூஜை மீம்ஸ்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:19 am

» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
by Dr.S.Soundarapandian Fri Oct 15, 2021 8:40 am

» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 10:08 pm

» அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
by ayyasamy ram Thu Oct 14, 2021 7:42 pm

» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:11 pm

» விநோதய சித்தம் - திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:06 pm

» கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 4:59 pm

» கோதுமை புல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:50 pm

» 100 சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:49 pm

» எண்ணம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:47 pm

» போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

2 posters

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை Empty சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

Post by ayyasamy ram Tue Dec 15, 2020 6:36 am

கே.பி.வித்யாதரன்
சனிப்பெயர்ச்சி பலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்

-
மேஷம்:

27.12.2020 முதல் ராசிக்கு 10-ல் வரும் சனி பகவான் இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார். எதிரும் புதிருமாக இருந்த கணவருடன் மனம்விட்டுப் பேசி ஒன்றுசேருவீர்கள். பிள்ளைகளின் கூடாபழக்கங்கள் விலகும். அவர்களின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொத்துகளைக் கவனமாகக் கையாள்வது நல்லது. வியாபாரத்தில் இனி கணிசமான லாபம் உண்டு. போட்டியாளர்கள் திகைக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும்கூட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். முக்கிய ஆவணங்களைக் கவனமாக கையாளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சி அரைகுறையாக நின்ற அனைத்து வேலைகளையும் முழுமையாக முடிக்கும் திறனையும், செல்வம் - செல்வாக்கையும் அள்ளித் தருவதாக அமையும்.


ரிஷபம்: அஷ்டமத்தில் நின்று உங்களை ஆட்டிப்படைத்த சனி பகவான் 27.12.2020 முதல் 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கை நிறைய சம்பாதிப்பீர்கள். எந்த வேலையிலும் நிரந்தரமாக நிற்காமல் சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் கணவரின் ஒத்துழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் ஆதாயம் கூடும். அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாகச் செய்து முடித்து எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியையும் செல்வவளத்தையும் தருவதாக அமையும்.


மிதுனம்:

உங்களின் ராசிக்கு 7-வது வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்கான தோல்விகளையும், நஷ்டங்களையும், தனிமையையும் தந்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் இனி நல்லதே நடக்கும். அனைத்துச் செயலையும் முழுமையாக முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார். உங்கள் வேலையையும் இழுத்துப் போட்டுச்செய்வார். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு நிச்சயம். புதிய வாய்ப்புகளால் பரபரப்புடன் காணப்படுவீர்கள். சம்பள பாக்கிகள் கைக்கு வரும். இந்த சனிப்பெயர்ச்சி சகிப்புத் தன்மையையும் பணப்புழக்கத்தையும் தருவதாக அமையும்.


கடகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் 7-வது வீட்டில் நுழைந்து என்ன பலன் தரப் போகிறார் என்று பதற்றப்படாதீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகளும் அலைச்சலும் வரும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பணத்தைத் தாராளமாகச் செலவு செய்யாமல் உங்களுக்காகவும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். தந்தை வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து போகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்கவைப்பதாக அமையும்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

Post by ayyasamy ram Tue Dec 15, 2020 6:37 am

சிம்மம்:

உங்களின் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை சிரமப் படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் அதிரடி யோகங்களைத் தருவார். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கரடுமுரடாகப் பேசிய கணவர் இனி பாசமாகப் பழகுவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர்களிடம் நிலவிய ஈகோ பிரச்னை நீங்கும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் மறைமுகமாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். இந்த சனி மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.


கன்னி: இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் 27.12.2020 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோபலம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் குறைநிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கில்விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலை மாறும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிக்கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.


துலாம்: உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்து தைரியத்தையும் விடாமுயற்சியையும் தந்த சனி பகவான் சுக வீடான 4-வது வீட்டில் 27.12.2020 முதல் அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனி பகவான் ஆட்சிபெற்று அமரப் போகிறார். அவர் 4-வது வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக்கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். என்றாலும் உறவினர்களுடன் கணவருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். இந்த சனிப் பெயர்ச்சி நல்லது கெட்டது என்று அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.


விருச்சிகம்:

இதுவரை பாதசனியாக அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் தொல்லைப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் ராஜயோகம் தரும் வீடான 3-ம் வீட்டில் அமர்ந்து, திடீர் யோகங்களை வாரி வழங்குவார். எதைத் தொட்டாலும் இழுபறியாகவே இருந்த நிலை இனி மாறும். ஏமாற்றங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக விடுபடுவீர்கள். கணவருடன் நீடித்த மௌனயுத்தம் மாறும். மனம்விட்டுப் பேசுவீர்கள். சொத்தை விற்றும் பணம் வராமல் தடைப்பட்ட நிலை நீங்கும். வருங்காலத்துக்காகச் சேமிப்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணியதலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவீர்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசாங்கத்தால் ஏற்பட்ட கெடுபிடிகள் விலகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி திணறிக்கொண்டிருந்த உங்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

Post by ayyasamy ram Tue Dec 15, 2020 6:38 am

தனுசு:

இதுவரை ஜென்ம சனியாக இருந்து உங்களை புயலைப்போல் புரட்டிப்போட்ட சனி பகவான், 27.12.2020 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அடிமனதில் இருந்த அச்சம் விலகும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு நீடிக்கும் என்றாலும் சனி பகவான் இப்போது 2-ம் வீட்டுக்கு வருவதால் கணவருடன் வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்பிருக்கிறது. உறவினர்களுடன் நிதானமாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். உங்களின் லாப வீட்டை சனி பகவான் பார்ப்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வியாபாரத்தில் முன்பு ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். நல்ல பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி பணிவாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிட்டும். சக ஊழியர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொண்டு நட்புறவாடுவார்கள். வீண் வதந்தி, விமர்சனங்களிலிருந்து விடுபடுவீர்கள். இந்த சனி மாற்றம் அசுர வளர்ச்சியையும், பணவரவையும், எங்கும் எதிலும் வெற்றியையும் தருவதாக அமையும்.


மகரம்: இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்துகொண்டு பலன்களைத் தடுத்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து நற்பலன்களைத் தரப்போகிறார். கட்டுக்கடங்காத செலவுகளும் அடுக்கடுக்காக ஏற்பட்ட பிரச்னைகளையும் சிரமமின்றி சந்திப்பீர்கள். தண்ணீரும் தாமரை இலையுமாக ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள், அல்லாதவர்கள் யாரென்பதை உடனே புரிந்துகொள்வீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவர்வழியில் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் உறவினர்களால் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். இந்த சனி மாற்றம் சங்கடங்கள், சவால்களில் வெற்றியையும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.


கும்பம்:

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களைத் தந்த சனி பகவான் 27.12.2020 முதல் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார். 12-ம் வீடான விரய வீட்டில் இப்போது நுழைந்தாலும் அங்கு ஆட்சி பெற்றிருப்பதால் உங்களுக்கு நல்லதையே செய்வார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாமல் திண்டாடிய நிலை ஓரளவு மாறும். எலியும் பூனையுமாக இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கணவர் உங்கள் பணிகளுக்கு உதவியாக இருப்பார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர்ப் பயணங்கள், அலைச்சல்கள் குறையும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வரவு உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்ந்து வேலைப்பளு அதிகரிக்க செய்யும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப்பார்க்க வேண்டிவரும். உங்களுக்கு எதிராகச் சிலர் சதித்திட்டம் தீட்டினாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பிரச்னைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவதாகவும் அமையும்.


மீனம்:

இதுவரை 10-ம் வீட்டில் நின்ற சனி பகவான் 27.12.2020 முதல் லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறும். குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். பாதியிலேயே நின்று போன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவர் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துகொள்வார். அந்நியோன்யம் அதிகரிக்கும். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் நீடித்த அவலநிலையெல்லாம் மாறும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டுப் புதியவர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள். உங்களை அலைக்கழித்த நிறுவனமே புது வாய்ப்பு கொடுக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். இந்த சனி மாற்றம் உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன், புதிய தொடர்புகளையும் வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும்
-
வாட்சப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

Post by krishnaamma Tue Dec 15, 2020 8:49 pm

நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை