ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by சிவா Today at 8:35 am

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Today at 8:31 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:37 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Today at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:32 am

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

Admins Online


தெய்வம் இருப்பது எங்கே? - - ரவீந்திரநாத் தாகூர்

தெய்வம் இருப்பது எங்கே? - - ரவீந்திரநாத் தாகூர் Empty தெய்வம் இருப்பது எங்கே? - - ரவீந்திரநாத் தாகூர்

Post by ayyasamy ram Sat Nov 07, 2020 7:37 am

தெய்வம் இருப்பது எங்கே?

“அந்தக் கோவிலில் கடவுள் இல்லை “, என்றார் துறவி.

கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா?
ஏ… துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்?

விலைமதிப்பற்ற இரத்தினங்களால் பதிக்கப்பட்ட
சிம்மாசனத்திலே தங்கச் சிலை ஒளிர்கிறதே, ஏனுரைத்தீர்
காலியாக இருப்பதென்று? ”

“அது காலியாக இல்லை அரசே, உங்கள் பகட்டுப்
பெருமையால்நிறைந்துள்ளது –
கோவிலில் உம்மை நிரப்பியிருக்கிறீரே அன்றி,
கடவுளை அல்ல”,என்றார் துறவி.

சினங்கொண்டார் கோமான்,

“விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கோவிலில்
கொட்டியுள்ளேன் இருபது லட்சம் பொன் நாணயங்களை!
சடங்கு அனைத்தும் செய்தபின்பே அர்ப்பணித்தேன்
ஆண்டவனுக்கு !

அத்தகைய பெரிய கோவிலில் ஆண்டவன் இல்லை என்று
எப்படி நீங்கள் கூறத் துணியலாம்?”

அமைதியாகப் பதிலுரைத்தார் ஆத்மஞானி:

“வறட்சிக் கொடுமையில் வாடிய உமது குடிகள்
இரு கோடிப் பேர் உணவின்றி உறங்க இடமின்றி
ஏமாந்த ஏழைகள் தட்டினர் உமது கதவை!

கண்ணீர் மல்க, பிச்சை கேட்ட பாமரனை விரட்டினீர்
வீதியில்!

கடவுளைக் குடி வைக்க இருபது இலட்சம் பொன்
செலவிட்ட நீர் உமது குடிமக்களை குகைகளில்,
வனங்களில் தெருக்களில் இடிந்த கோயிலில்
அகதிகளாய் அனுப்பிய பொழுதில் உரைத்தான் ஆண்டவன்:

“சாந்நித்தியமான எனது வீடு ஜொலிக்கிறது
நீல வான் நடுவே சுடர்விடும் அணையா விளக்கில்.
என் அகத்தின் அடிக்கல் உண்மை, அமைதி, இரக்கம், அன்பு.
வீடற்ற குடிகளுக்குப் புகலிடம் வழங்கா அற்பக் கஞ்சனோ
எனக்கில்லம் வழங்கிடக் கனாக் காண்கிறான்?”

இறைவன் உன் ஆலயம் விடுத்து வெளியேறிய நாள் அது
சாலைகளில் மரங்களினடியில் ஏழைகளுடன் இணைந்தார்.
விரிந்த கடலின் வெற்று நுரை போல் செல்வமும்
செருக்கினாலும் ஆன
வெறுங்குமிழி மட்டுமே உமது மண்ணுலக் கோவில்”.

கோபத்தில் அலறினான் மன்னன்,
“மோசடி முட்டாளே…இக்கணமே ஓடி விடு என் நாடு விட்டு.”

அமைதியாக பதிலளித்தார் துறவி,
“தெய்வீகத்தை நாடு கடத்திய அதே இடத்திற்கு தயவுசெய்து
பக்தனாகிய அடியேனையும் அனுப்பி விடுங்கள்”.

—- ரவீந்திரநாத் தாகூர்

(வங்காளி மொழி கவிதை. ஆங்கில வழியாகத் தமிழில்:
ஜெயராமன் )
(படித்ததில் பிடித்தது)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை