ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 12:13 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Today at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Today at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Today at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Today at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Today at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Today at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am

Admins Online

வணக்கம்

Go down

வணக்கம் Empty வணக்கம்

Post by kandansamy Fri Oct 23, 2020 7:12 pm


வணக்கம் !
யாருக்குன்னு பாக்குறீங்களா ? உங்களுக்குத்தான்!
என்ன திடீர்னு இப்ப வந்து புதுசா ஒரு வணக்கம்?
இதுதானே உங்க சந்தேகம்?
அந்த சந்தேகத்தை இப்போ தீர்த்து வச்சுடறேன் ஒண்ணுமில்லே ...
எனக்குத் தெரிஞ்ச சிலதை உங்க காதுலேயும் போட்டு வைக்கலாம் என்று ஒரு நினைப்பு.

மனுஷன் கேட்கிறது அதிகமா இருக்கணும்ங்கறதுக்குத்தான் ரெண்டு காது !பேசறது குறைச்சலா இருக்கணும்ங்கறதுக்காகத் தான்
ஒரு வாய்.

இப்படி இருக்கிறப்பவே நிலைமை இப்படி இருக்கு... அப்படி இருக்கிறப்போ ஒவ்வொரு மனுஷனுக்கும் ரெண்டு வாய், ஒரு காதுன்னு இருந்தா உலகம் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்களேன் அப்புறம் யாரும் தெருவுலே நடமாடவே முடியாது !

அது இருக்கட்டும் இப்ப விஷயத்துக்கு வருவோம் ... இன்னைக்கு முதல் தடவையா எந்த தகவலை உங்களுக்குச் சொல்றது? ம் ... சரி...
இந்த வணக்கம் என்கிற வார்த்தையையே எடுத்துக் கொள்வோமே ! நாம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறப்போ ' வணக்கம்'னு சொல்லிக்கிறோம்... சிலபேர் 'நமஸ்காரம்' னு சொல்லிக்குவாங்க ...என்ன சௌக்கியமா இருக்கியா?... ன்னு கேட்டுக்கறது சிலபேர் வழக்கம்..

இந்தப் பழக்கம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது... நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுது...

வங்காளத்துலே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டா என்ன சொல்லிக்குவாங்க தெரியுமா ?
ராம் ராம் இப்படித் தான் சொல்லுவாங்க !
இங்கிலீஷ் காரங்க காலை வந்தனம் உங்கள் உடல் எப்படி ?...ம்பாங்க.
அதாவது Good Morning, How do you do ?

எகிப்து நாட்டில் ஒரு வேடிக்கை...
அவங்க எப்படி ஒருத்தருக்கொருத்தர் விசாரிச்சுகிறது தெரியுமா?
"நீங்க எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்" ?" எப்படி இருக்கு இது ? பாட்டில் வச்சிகிட்டு அளந்தா சொல்ல முடியும் ? இருந்தாலும்
அவங்க பழக்கம் அது !

சீனாக்காரங்க வேறே விதம்..!
உங்க வயிறு எப்படி இருக்கு சாப்பிட்டீங்களா ? இதுதான் அவங்க விசாரிக்கிற முறை.

ரஷ்யா காரங்க கேக்கறது எப்படி எப்படி தெரியுமா ? நீங்க எப்படி உயிரோட இருக்கீங்க ?"
ஏதோ ஆச்சரியப்பட்டு கேட்கிறது மாதிரி இல்லே மாதிரி இல்லே இது ?

பெர்ஷியர்கள் ___ "உங்கள் நிழல் என்றும் குறையாமல் இருக்க வேண்டும்" அப்படின்னு சொல்லிக்கிறாங்க...
இது கொஞ்சம் பரவாயில்லே !

ஜெர்மனிகாரங்க உங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தோணுது ? அப்படின்னு கேக்கிறாங்க ...

பிரெஞ்சுக்காரங்க உங்களை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்க ?" அப்படின்னு கேக்குறாங்க...

நம்ம ஆள்லேயே சில பேரை பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல மாதிரி விசாரிக்கலாம் போல பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல தோன்றும் !
அவங்களை துணிச்சலாகவும் நாம கேட்டுடலாம் ... 'உங்க உடம்பை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்கன்னு !'
விரட்டினா நாம் ஓடியாந்துடலாம்... அவங்களாலே துரத்திக்கிட்டு வந்து நம்மை பிடிக்க முடியாது! இப்படி ஒருத்தரை ஒருத்தர் நலம் விசாரிக்கிறதுங்கறது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது. வார்த்தை மட்டும்னு இல்லே செய்கையும் அப்படித்தான்.

நாம ரெண்டு கையும் ஒண்ணா சேர்த்து கும்பிடறோம். சிலபேர் ஒரு கையை நெத்தியிலே வச்சுடறாங்க சுலபமா ! சில எடத்துலே மூக்கைத் தொட்டா வணக்கம் செலுத்தறதா அர்த்தம்...
அது சரி என்ன ஒரு மாதிரியா யோசிக்கறது மாதிரி தெரியுது... இருக்கிறது ஒரு வாய்! ஆனா அதிகமா பேசுறேனோ ! சரி...
முடிச்சிக்கறேன்...
ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு மறுபடியும் வணக்கம் சொல்லணும்னு ஆசைப்படறேன்...
சீனாக்காரங்க பாணியிலே.. நீங்க கோவிச்சுக்கபுடாது ...என்ன... சொல்லவா ?
" உங்க வயிறு எப்படி இருக்கு ? சாப்பிட்டீங்களா ?" வணக்கம் 1f600
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 86

ayyasamy ram likes this post

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by சக்தி18 Sat Oct 24, 2020 11:14 am

நன்றி.
சில நாடுகளில் இருந்திருக்கிறேன்,இப்போதும் இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அப்படி கேட்டதாக இல்லை.ஒருசமயம் தென்கச்சியிடம் மட்டும் கேட்டார்களா தெரியவில்லை.விசேட விருந்தினராக சென்றிருக்கும் போது கேட்டிருக்கலாம். பொதுவாக இருப்பதாக தெரியவில்லை.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by kandansamy Sun Oct 25, 2020 3:34 pm

தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இன்று ஒரு தகவல் புத்தகத்தில் எழுதியதை பதிவிட்டேன் நண்பரே ?

பின்னூட்டம் எழுதுங்க


Last edited by kandansamy on Sun Oct 25, 2020 3:39 pm; edited 1 time in total (Reason for editing : விடுபட்ட வார்த்தையை சேர்ப்பதற்காக)
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by சக்தி18 Sun Oct 25, 2020 3:49 pm

தெரியும்.உங்களை குற்றம் சாட்டவில்லை.அப்படி யாரும் ஜப்பான்,ஐரோப்பிய நாடுகளில் சொன்னதாக தெரியவில்லை.சொல்லி இருக்கலாம்,எனக்குத் தெரிந்தவரை இல்லை. அவ்வளவுதான்.

அதனால்தான் ஈகரை ஒரு விதியை உருவாக்கி இருக்கிறது.பதிவு வேறெங்காவது இருந்து வந்தால்,அந்தப் பதிவு எங்கிருந்து என்பதையும் அவர்களுக்கு நன்றியும் சொல்லச் சொல்கிறது ஈகரை.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by kandansamy Sun Oct 25, 2020 4:03 pm

சரி நண்பரே , தங்கள் கருத்துக்கு நன்றி !
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum