புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_lcapநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_voting_barநிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 19, 2020 10:04 pm

First topic message reminder :

நிதர்சனம்!

டிவியைத் திருப்பிக் கொண்டே வந்தவள் இந்த சானலில் அப்படியே வைத்தாள். அதில் எழுத்தாளர் ஒருவர் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். என்ன தான் சொல்கிறார் கொஞ்சம் கேட்போமே என்று அப்படியே வைத்தாள் லலிதா.

“பெரும்பாலும் ஆணோ பெண்ணோ திருமணத்தை படிப்போ அல்லது வேலை விஷயத்திற்காக தள்ளிப் போடுவதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் அப்படியாரேனும் சொன்னால் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றவர்களே, என்று சிரிப்புடன் சொன்னார்.
தொடர்ந்து, ஏனென்றால் அவர்கள், சரியான வயதில் தனக்கான துணையை சேர்த்துக்கொண்டு இரண்டையும் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் வராமல் அனுபவிக்கலாம்; தனது வேலைக்கோ அல்லது படிப்புக்கோ இது சரிப்பட்டு வராது எனில் டாடா சொல்லி விடை பெறலாம்; அனாவசிய தடங்கல்கள் இல்லை; எங்கிற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடும். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் சொல்லும் இந்த வாழும் முறை கண்டிப்பாக பரவிக்கொண்டு இருக்கிறது…மேலும் பரவவும் செய்யும்.

இந்த கலாச்சாரம் பரவக்காரணம், திருமணத்தில் பிரிய நினைக்கும்போது அதற்கு தடை கற்களாக நிற்கும் சமுதாயமும், சட்டமும், விவாகரத்து ஆனவர் என்ற பட்டமும் தான். Living in இல் இத்தடைகள் எதுவும் இல்லை. பிரிய நினைத்தால் அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை, புது பெண் தான். பிடிக்காதவர் கூட வாழ யாரும் நிர்பந்திக்க முடியாது இதில். ஆனால் என்ன, ஆண் எப்பொழுதுமே ஆண் தான், ஆனால் பெண்ணுக்கு???? ஏற்கனவே  எத்தனை எத்தனை பெயர்கள் உண்டு???? அவர்கள் இந்தப் பெண்களுக்கு என்ன பெயர் வைப்பார்களோ?


இதில் நன்மை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை, தீமை என்று பார்த்தால், எந்த நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உண்மையான காதலோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. வெறும் கொடுத்தல் எடுத்தல் உறவு மட்டுமே. எந்த நேரத்திலும் தன் துணை தன்னிடம் இருந்து விடை பெறலாம் என்றால் பிறகு என்ன வாழ்க்கை. அங்கே கண்டிப்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு இடம் உள்ளது.

எது எப்படியோ, அவர் விருப்பத்திற்கு வாழ்வது அவர் உரிமை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் யாரிடமும் நிலையாக இல்லாமல் பல பேருடன் வாழ்ந்து விட்டு, கடைசியில எல்லா உண்மையும் மறைத்து ஒரு அப்பாவி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அவர் வாழ்கையில் விளையாடாமல் இருந்தால் சரி. என்றார்.

அவரின் பேச்சைக் கேட்டவர்கள் எல்லோருமே சிரித்தர்கள். அவர் தொடர்ந்தார்…

இந்த முறையால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டி வரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள்.

தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

வெளி நாட்டில் இது போல் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு தெரியுமோ?... ஒரு ஒழுங்கு உண்டு. அவற்றை அவை மீறுவது இல்லை பாருங்கள். பக்கத்துத் தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும். அது போல் அது அவர்கள் நாட்டுக் கலாசாரம், இது நம் நாட்டு கலாசாரம்.

அவர் பேச்சை மேலும் கேட்க முடியவில்லை அவளால், அதற்குள் ஒரு போன் வந்து விட்டது. டிவி இன் சத்தத்தைக் குறைத்துவிட்டு பேசினாள். ஏதோ விளம்பர கால். சே ! என்று சொல்லிவிட்டு டிவி பேச்சைக் கேட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சானலை மாற்றினாள். ஏதோ ஆர்வமாகக் கேட்கப் போய் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதட்டப்பட்டாள். அவளுக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, பின் பதட்டம் வராதா என்ன?

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 05, 2020 8:20 pm

lakshmi palani wrote:பறவைக்கு  சுதந்திரம் கிடைத்துவிட்டது.  இனி என்னாகுமோ. நல்ல முடிவாக தருக  கிருஷ்னாமா.  வனக்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1334325

@lakshmi palani மிக்க நன்றி லக்ஷ்மி, தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 05, 2020 8:21 pm

அவள் தோழிகளும் மேற்கொண்டு யார் சாந்தா என்றெல்லாம் கேட்கவில்லை சரி என்று விட்டு விட்டார்கள். இவளுடைய உடைகள் மற்றும் இவள் வாங்கி வந்த பொருட்களப் எல்லாம் பார்த்து மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இவள் அவர்களைப் பார்த்து நீங்கள் என்ன வாங்கினீர்கள் என்று கேட்ட பொழுது, ஒன்றும் வாங்கவில்லை என்று சொன்னார்கள். இவள் ஆச்சர்யமாய், என்ன எதுவும் வாங்க வில்லையா?... சம்பளம் வரவில்லையா? என்று கேட்டாள்.

சம்பளம் வந்தது, இங்கு எத்தனை தேவையோ அத்தனை வைத்துக் கொண்டு பாக்கியை ஊருக்கு அனுப்பிவிட்டோம் என்று சொன்னார்கள். அவர்கள் இவளைக் கேட்டார்கள், நீ அனுப்பவில்லையா? என்று. இவள் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், இது என் பணம் நான் ஏன் அவர்களுக்கு அனுப்பணும் என்று எதிர் கேள்வி கேட்டாள். குறைந்த பக்ஷம், எங்க அம்மா அப்பா தான் என்னையே வைத்துக் கொள்ளச் சொன்னர்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதைக் கூட அவள் கௌரவக் குறைவாக நினைத்தாள்.

அவர்கள் இருவரும் ‘ஆ’ வென்று பார்த்தார்கள். இவளை நீ ரொம்பத்தான் மாறிவிட்டாய். என்று சொன்னர்கள். மாறியது இவள் தான் என்றாலும் இவளுக்கு அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து பொறாமைப் படுவதாக பட்டது. இனி இவர்களிடம் எதுவும் காட்டக் கூடாது, சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தாள். அப்பொழுது வேறு ஒரு நிகழ்வும் அவள் மனதில் வந்து போனது. வந்த 2ம் நாளே, இவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட ஒரு பாம்பே பெண், இவள் தலைக்கு குளித்து தலையை ஆற வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவளைப் பார்த்து வாவ்!, எத்தனை அருமையான தலை முடி உங்களுக்கு, இதை ஏன் பின்னி பின்னி போடுகிறீர்கள், அப்படியே லூஸ் ஆக விட்டால் மிகவும் லுக் ஆக இருக்கும் என்றாள். அவள் தன் பெயர் ஷில்பா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

இவள், ஐயோ அப்படி விடக்கூடாது என்று எங்க அம்மா சொல்வார்கள் என்றாள். அவள் சிரித்தவாறே இங்கே உங்க அம்மா இல்லையே என்று சொல்லிக்கொண்டே அறை இன் உள்ளே சென்று, சீப்பு ஹேர் டிரையர் எடுத்து வந்து அவளே இவளின் தலை முடிக்கு போட்டு விட்டாள். மேலும், தன் மேக் அப் கிட் லிருந்து ரூஜ் மற்றும் லிப்ஸ்டிக் எடுத்து போட்டு விட்டாள். இப்பொழுது பார் என்று கண்ணாடியில் இவளைக் காட்டினாள். இவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை, அத்தனை அழகாக இருந்தாள் அவள்.

வாவ்! மிக்க நன்றி என்று சொன்னாள் மிகவும் சந்தோஷமாக. இந்த வீக் எண்ட் நாம் இருவரும் ஒரு பியூட்டி பார்லருக்கு போகலாம், அங்கு முடியை லெவலாகவொ யூ ஷெப்பிலோ வெட்டிக்கொள்ளலாம், இன்னும் அழகாக இருக்கும் என்று சொன்னாள். இவள் அவளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னாள்.அவள் அல்லவோ பெண், கொஞ்சம் கூட பொறாமை இல்லை அவளுக்கு…இவளுங்களைப்பார் என்று பொருமிக்கொண்டே தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

இப்படியாக மேலும் ஒரு மாதம் சென்றது. சாந்தகுமாருடனான நட்பு அதைத் தாண்டி தொடரும் போல இருந்தது. இவள் இந்த மாதம் முழுவதும் அவள் வெளியே போகும் போது அவனுடனேயே சென்றாள். அவன் அருகாமையை மிகவும் விரும்பினாள். அவனும் அதே போல இருப்பதாக அவளுக்குப் பட்டது.

கூடிய சீக்கிரம் அவனே அதை வாய்விட்டு சொல்வான் என்று நினைத்தாள், எதிர் பார்த்தாள். இல்லாவிட்டால் தானாவது இந்த டிரெய்னிங்க் முடிவுக்கு வருவதற்குள் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

இந்த நிலையில் எல்லோரும் ட்ரெய்னிங் முடித்தவுடன் அவர்கள் எந்த இடத்தில் போக விருப்பம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்போது இந்தப் பெண் அதாவது ரோஷனி தான் இங்கேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக சொல்லி விட்டாள். ஏனென்றால் ஊருக்குப் போனால் சம்பளம் முழுவதும் வீட்டுக்கு தர வேண்டும் இங்கே நன்றாக செலவழித்து பழகி ஒரு பொறுப்பில்லாமல் இருந்து பழகிவிட்ட அவளுக்கு மீண்டும் அந்த வீட்டுக்குப் போவது கடினம் என்று பட்டது. அதற்கு பதிலாக இங்கேயே தொடரலாம் என்று தோன்றியது.

ஒரு நாள் இவள் சாந்த குமாரிடம் இது பற்றி கேட்டபொழுது அவன் சொன்னான் இங்கேயே தொடர்ந்து இரு என்று சொல்லி, தான் அவளை விரும்புவதாகவும் சொல்லி விட்டான். இவளும் அதற்காகத்தானே காத்திருந்தாள், உடனேயே மிகவும் சந்தோஷமாக, மீ டூ என்று சொல்லி விட்டாள். அதனால் இங்கேயே போஸ்டிங் போட சொல்லி ரெகமண்ட் செய்ய அவனையே கேட்டுக்கொண்டாள்.

ஆனால் அதே நேரம், அவளுக்கு பிஜியில் தொடர்ந்து இருக்கவும் விருப்பமில்லை. அதை சூசகமாக அவனிடம் தெரிவித்தாள்.

தொடரும் ....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 05, 2020 8:23 pm

அவனும் முதலில் கொஞ்சம் யோசித்தான், இது சரிவருமா ரோஷனி, என்று கேட்டான். ம்ம்.. எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கு சாந்தா என்றாள். அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு ஒப்புக் கொண்டான்.


இப்படி சேர்ந்து வாழ்வது டெல்லியில் இது சகஜம் என்றாலும் இவர்கள் இருவருக்கும் இது பழக்கம் இல்லை அல்லவா?, அதனால் கொஞ்சம் யோசித்தார்கள். ஆனாலும் ஆசை யாரை விட்டது கடைசியில் இருவரும் ஒன்றாக இருப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள். எனவே இருவரும் அவரவர் பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு வீடு பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

ஆனால் தங்கள் தங்கள் வீட்டிற்கு இதுபற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதனால், அவளும், இங்கிருந்து போஸ்டிங் வேண்டாம், இங்கேயே தொடர விரும்புவதாக எழுத்திக் கொடுத்தது தான் தான் என்பதை தன் வீட்டுக்குச் சொல்லவில்லை. மூடி மறைக்கவே விரும்பினாள்.

அவளுடைய முடிவுகளில் அவன் எதுவும் தலையிடவில்லை அதேபோல அவனுடைய முடிவுகளில் அவள் தலையிடவில்லை. ஆனாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது என்பதை மட்டும் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

அங்கு போக வேண்டுமானால் என்னென்ன தேவை, என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டார்கள். இருவரும் எவ்வளவு பணம் போட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து எல்லாம் செய்வது, செலவை இருவரும் சரிபாதி பங்கு போட்டுக் கொள்வது, பிறகு அவை எல்லவற்றையும் அனுபவிப்பது என்று.

அதாவது வீட்டுக்கு அட்வான்ஸ் முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை என்னென்ன தேவை என்ற லிஸ்ட் போட்டார்கள். அதன் பிரகாரம் இருவரும் எத்தனை முன் பணம் போட வேண்டும் என்றும் பார்த்துக் கொண்டார்கள். அதற்குத் தகுந்தாற் போல் வீடு தேடத் துவங்கினார்கள்.

இப்படியாக, இவர்கள் வீடு தேடும் படலம் துவங்கியது அப்போது நண்பர்களிடம் சொல்லி வைத்தார்கள். அலுவலக நண்பர்களில் ஒருவன் இவர்களைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். மற்றவனிடம் சொன்னான், இவனுக்கு மட்டும் எங்கோ மச்சம் இருக்குடா என்று.

அப்பொழுது எதேற்சயாக ஒரு வீடு பற்றி சாந்த குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். ஆனால் அது கொஞ்சம் சிட்டியை விட்டுத் தள்ளி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு வசதியாக இருக்கும் போல தோன்றியது. அட்வான்ஸும், வாடகையும் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆபீஸ் cab பிக்கப் செய்து கொள்ள வரும். எனவே, இவர்களுக்கு ஆபீஸ் வந்து போவதில் சிரமம் இருக்காது என்று தோன்றியது.

அது ஒரு மூன்று பெட்ரூம் பிளாட் அதில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள். எனவே வீட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள ஆள் தேடினார்கள். அவர்கள் திரும்ப வரும் பொழுது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் திரும்பி வருவார்கள். அது வரை இவர்கள் அனுபவிக்கலாம் வாடகையும் மிகக்குறைவு அட்வான்சும் குறைவு ஆனால் வீட்டை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இடையில் காலி செய்து கொண்டு போகக் கூடாது என்பது மட்டுமே அவர்களுடைய கண்டிஷன்.

உடனேயே இதற்கு இவர்கள் இருவரும் உடன்பட்டார்கள் ஏனென்றால் இருவருக்கும் அட்வான்ஸ் மட்டுமே ஏற்பாடு செய்தால் போதும் மற்றபடி வீட்டிற்கு என்னென்ன தேவையான சாமான்களோ அத்தனையும் அவர்கள் விட்டு விட்டு போகிறார்கள் அத்தனையும் இவர்கள் அனுபவிக்கலாம் ஒரு பைசா கூட எக்ஸ்ட்ரா போடாமல் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனடியாக ஒப்புக் கொண்டார்கள்

இந்த பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு நல்ல நாளில் இவள் அங்கு சென்றாள். இவள் தன்னுடைய வீட்டில் சொல்லும் பொழுது தன்னுடைய ட்ரெய்னிங் சக்ஸஸ்புல் ஆக முடிந்ததாகவும் தான் ஸ்டார் பர்ஃபாமர் என்றும் சொன்னாள். இபொழுது வாங்கும் சம்பளத்தை விட சம்பளம் இனி 2.5 மடங்கு அதிகமாக ஆகும் என்றும் சொன்னாள். அவளின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.


எப்பொழுது ஊருக்கு வருவாய்? எங்கே போஸ்டிங்க் என்றெல்லாம் கேட்டார்கள். இவள் எல்லாம் விவரமாக சொன்னாள். ஆபிஸிலேயே இவளுடைய போஸ்டிங்க் தில்லி தான் என்று போட்டு விட்டதாக சொல்லி விட்டாள். இதில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் வருத்தம். ஆனால் தான் பிஜியில் இருக்க விருப்பம் இன்றி ஒரு வீடு பார்த்து தங்கப் போவதாகவும் அவளுடன் சாந்தா என்று ஒரு தோழியும் தங்கப்போவதாகச் சொன்னாள். அது அவளின் சொந்தக்காரரின் வீடு என்றும் சொன்னாள்.


சரி அட்லீஸ்ட் குறைந்தபட்சம் தீபாவளிக்கு வந்து விட்டுப் போ மூன்று மாதம் ஆகிவிட்டது உன்னை பார்த்து என்று சொன்னார்கள். அவளும் சரி என்று சொல்லி போனை கட் செய்து விட்டு வந்தாள்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால் சாந்தகுமார் ஊருக்கு போவதைப் பற்றி யோசித்தான்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:02 pm

ஆனால் இங்கு வந்து பார்த்தால் சாந்தகுமார் ஊருக்கு போவதைப் பற்றி யோசித்தான். பிறகு ஒப்புக் கொண்டான். இருவருமே அவரவர் ஊருக்கு போய்விட்டு வந்து, பிறகு சேர்ந்து வாழலாம் என்று யோசித்து விட்டு அவரவர்களின் பிஜியைக் காலி செய்துவிட்டு சாமான்களைக் கொண்டு வந்து இங்கு புதிய வீட்டில் போட்டு விட்டு கிளம்பினார்கள்.


மூன்று மாதங்கள் கழித்து வீட்டிற்கு போவதால் எல்லோருக்கும் அதுவும் தீபாவளி என்பதால் எல்லோருக்கும் பரிசு பொருள்கள் உடைகள் என்று தில்லி பாலிகா பஜாரில் வாங்கிக் கொண்டாள் அதேபோல சாந்தகுமாரும் வாங்கிக் கொண்டான்.

ரோஷினி முதல் நாளும் சாந்தகுமார் அடுத்த நாளும் கிளம்பினார்கள். இவள் பெங்களூரும் அவன் சென்னையும் சென்றார்கள். வீட்டுக்கு சென்றதும், எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்… ஒரே போல, நீ மிகவும் மாறிவிட்டாய் என்று சொன்னார்கள். உன்னுடைய ஹேர் ஸ்டைல் முதற்கொண்டு மாறி இருக்கிறது, இருந்தாலும் மிக அழகாக இருக்கிறது என்று சொன்னார்கள். டெல்லி பெண் போலவே இருக்கிறாய் என்று சொன்னாள் அக்கா. இவள் சிரித்தாள்.கலரும் கூடி இருக்கிறது ரோஷனி என்றாள் அவள்.

அம்மா எல்லோருக்கும் பிடித்தது என்று பார்த்து பார்த்து ஸ்வீட் செய்து வைத்திருந்தாள். பட்டாசு கொளுத்தினார்கள், ராக்கெட் விட்டார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு எல்லோரும் சேர்ந்து உணவு உண்டார்கள். தீபாவளி பண்டிகை இனிமையாக கழிந்தது. இப்படியாக ஒரு வாரம் போனதே தெரியவில்லை இவள் ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. போன தடவை போல் இல்லாமல் இந்த முறை, கிளம்புவதற்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது அவளுக்கு.

போனமுறை வேறு மாதிரி த்ரில். பிஜி எப்படி இருக்கும் என்ன ஏது என்று தெரியாது, ஆபீஸ் தெரியாது, என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாது. இப்படிப் பல தெரியாதுகள்..ஆனால் , இப்போது…. தனி வீடு ..தன் வீடு … நினைக்கும்போதே சிலிர்த்தது அவளுக்கு.

இப்போதும் அது எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாது இருந்தாலும் ஒரு புது அனுபவம். அதற்காக அவள் காத்திருந்தாள்; மிகவும் ஆர்வமாக அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தாள் .

அம்மா எடுத்துவைத்த பக்ஷணங்கள் எல்லவற்றையும் எடுத்துக் கொண்டாள். பொடிவகைகள், புளிக்காய்ச்சல் என்று அம்மா எதேதோ பாக் செய்து கொடுத்தாள். எதாவது தேவை என்றால் போனில் கேளு சொல்லித்தருகிறேன். சமையல் அறைப்பக்கம் வந்ததே இல்லை, இதில் தனியாக இருக்கப் போகிறேன் என்கிறாய், நான் வேண்டுமானால் வந்து கொஞ்ச நாள் உன்னுடன் இருக்கட்டுமா என்று கேட்டாள். இவள் மிக அவசரமாக.. ஐயையோ..வேண்டாம் மா.. நான் பார்த்துப்பேன். அதுவும் அந்தப் பெண் நன்றாக சமைப்பாளாம். நான் கற்றுக் கொள்வேன். நிறைய you tube லும் இருக்கு மா. நீ கவலை படாதே என்றாள்.

மிகவும் சந்தோஷமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ரோஷினி. ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து புதுக் குடித்தனத்திற்கு வந்து சேர்ந்தாள் அவளுக்கு முன்பே சாந்தகுமார் வந்து இருந்தான். அவனும் தன்னுடைய கிராமத்தில் இருந்து தீபாவளிப் பக்ஷணங்கள் கொண்டு வந்திருந்தான். அவை மிகவும் ருசியாகவும் வித்தியாசமானதாகவும் அவள் இதுவரை பார்த்தறியாததுமானவைகளாக இருந்தன.

ஒக்காரை, கம்பு உருண்டை, பொருள் விளங்கா உருண்டை, பயத்தம் உருண்டை என்று நிறைய கொண்டு வந்திருந்தான். இவள் அவற்றை மிகவும் விரும்பி உண்டாள். அதே போல அவன் இவள் கொண்டு வந்ததை சாப்பிட்டான்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:03 pm

இருவரும்குடித்தனம்செய்யவேண்டுமே, முதலில்மளிகைலிஸ்ட்போட்டுகொண்டார்கள். அவனிடம், சாந்தாஉன்னிடம்ஒன்றுசொல்லவேண்டும்என்றாள். என்னஎன்றுகேட்டான்அவன். அதற்குஅவள்கொஞ்சம்தயங்கியவாறே, எனக்குகொஞ்சம்கூடசமையல்தெரியாதுஎன்றுசொன்னாள். இதுசொல்வதற்குகொஞ்சம்கஷ்டம்தான்பட்டாள். வெட்கமும்பட்டாள். ஆனால்உண்மைஅதுதானே… இத்தனைநாட்கள்சொல்லாவிட்டால்பரவாயில்லை, இப்பொழுதுசொல்லியாகவேண்டியகட்டாயத்தில்உள்ளாளே. கொஞ்சநாளில்கற்றுக்கொண்டுவிடுகிறேன். அதுவரைவெளியில்சாப்பிட்டுசமாளிக்கலாம்என்றாள்.


ஆனால்அவன்கொஞ்சம்கூடகவலைப்படாமல், இட்ஸ்ஓகே , வெளியில்சாப்பிடவேண்டாம். நான்நன்றாகசமைப்பேன்என்றுசொன்னான். மேலும், சமையல்ஒன்றும்கஷ்டமோ , கடினமோஅல்லநீயும்சுலபமாககற்றுக்கொள்ளலாம்என்றுசொன்னான். இனிஇருவரும்ஒன்றாகத்தானேஇருக்கப்போகிறோம், நானேகற்றுக்கொடுக்கிறேன்என்றும்சொன்னான்.


அவனின்இந்தப்பதில், ஆச்சரியமாகஇருந்ததுஅவளுக்கு. அலுவலகத்தில்அவனுக்குநல்லபெயர்இருந்தது. எந்தவிதமானபிரச்சினையும்சுலபமாகதீர்த்துவிடுவான்மிகமிகக்கூர்மையானஅறிவுஎன்றுஅவனைப்புகழ்வார்கள்.

இப்போதுபார்த்தால்நன்றாகசமைக்கதெரியும்என்றுவேறுசொல்கிறான். இன்னும்என்னென்னதெரியும்அவனுக்கு? அவன்மீதுமதிப்புமிகுந்துகொண்டேபோனது. தான்மக்குஎன்றுஅவளுக்குதோன்றியது.


ஒருநொடிஅவள்தன்தந்தையைநினைத்துப்பார்த்துக்கொண்டாள். அவர்ஒருநாள்கூடஎதுவும்சமைத்ததுஇல்லை. அம்மாதான்எல்லாமேசெய்வாள். அக்காவாவதுஏதாவதுஅம்மாவிற்குஉதவுவாள்ஆனால்தான்உதவியதேஇல்லைஎன்பதைசௌகரியமாகமறந்தாள். அம்மாஉதவிக்குகூப்பிடும்பொழுதுதான்முக்கியமானஅசைன்மென்ட்இருக்கிறதுஎன்றுசொல்வாள்.


அப்பாவும், அவளைஏன்தொந்தரவுசெய்கிறாய்என்றுஉடனேஇவளின்சப்போர்ட்டுக்குவந்துவிடுவார். பிறகென்ன, இவள்அடுப்படிவேலைகளில்இருந்துதப்பித்துவிடுவாள். அப்படிஇருந்தவள்தான்இப்பொழுதுஇப்படிநினைக்கிறாள், சமைக்கத்தயாராகிவிட்டாள். தனக்குஎன்றுவரும்பொழுதுஎல்லோருக்கும்நேரம்பொழுதுஎல்லாமேஇருக்கும்என்றுநினைக்கிறேன்.அதைத்தான்மனம்இருந்தால்மார்கம்உண்டுஎன்றார்களோ?



லிஸ்ட்படிகடையில்மளிகைபொருட்கள்வாங்கிக்கொண்டார்கள். திங்கட்கிழமைதான்ஆபீஸ்என்பதால்இந்தசனிஞாயிறுவீட்டிலேயேகழித்தார்கள்வீட்டில்கிச்சனில், எல்லாவற்றையும்ரெடிசெய்துவைத்தார்கள்.


நாளைக்குஎன்னசமையல், அதற்குவேண்டியஎல்லாவற்றையும்எப்படிமுதல்நாளேஎடுத்துவைத்துக்கொள்வது, எப்படிஎதைமுன்னேசெய்யவேண்டும்எதைபிறகுசெய்யவேண்டும்என்றுசமையல்செய்முறைகளைஅவன்கற்றுக்கொடுத்தான்.


சமைக்கத்தான்தெரியாதேதவிரகாய்கறிகள்கட்பண்ணிதருகிறேன்; பாத்திரங்கள்அலம்பிதருகிறேன்என்றுசொன்னாள். அவன்சிரித்துக்கொண்டேசரிஎன்றுசொன்னான்இதுபோலஆளுக்குஒருவேலைசெய்தால்சிரமம்தெரியாதுஎன்றும்சொன்னான். வாஷிங்மெஷின்இருந்ததால்துவைக்கவும்பிரச்சினையாகஇருக்கவில்லை. அயன்பாக்ஸும்இருந்தது.



இருவரும்அவரவர்கள்வேலையைசரிவரசெய்தார்கள். அவன்அன்றேமிகவும்அருமையாகசப்பாத்திசப்ஜிசெய்தான். இவள், ஆவென்றுபார்த்துக்கொண்டேஇருந்தாள். அவன், ‘மெத்மெத்’ சப்பத்திக்கானமாவுஎப்படிகலப்பதுஎன்றுசொல்லிக்கொடுத்தான். வட்டவட்டமாகஅவன்இட்டசப்பாத்திகளைபார்த்துக்கொண்டிருந்தவள்எனக்கும்இப்படிவருமாஎன்றுகேட்டாள். கண்டிப்பாக, பழக்கம்தான்காரணம்என்றுசொன்னான். அவள்இதுநாள்வரைசாப்பிட்டபிஜிசப்பாத்தியைவிடஇதுமிகவும்மிருதுவாகநன்றாகஇருந்தது, சுவையாகவும்இருந்தது. அவனைமனதாரபாராட்டினாள்.



இப்படியாகஇவர்கள்குடித்தனம்செய்யஆரம்பித்தார்கள்ஆபீசுக்கும்திங்கள்கிழமைமுதல்ஒன்றாகபோய்வரஆரம்பித்தார்கள்ஆபீஸில்இருப்பவர்கள், இவர்களைகொஞ்சம்ஏறஏறஇறங்கப்பார்த்தார்கள்பிறகுஅவர்களேநமட்டுச்சிரிப்புசிரித்துக்கொண்டுபுரிந்துகொண்டார்கள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:04 pm

இதெல்லாம் இங்க சகஜமப்பா என்பது போல பேசாமல் இருந்தார்கள் எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. ரோஷனிக்கு முதலில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் பிறகு பழகிக் கொண்டு விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அம்மா கேட்கும் போது அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று அவளால் கொஞ்சம் சொல்ல முடிந்தது. அம்மாவிற்கு கொஞ்சம் குறைதான் ஒருமுறைகூட அவளுடன் கூட இருக்கும் சாந்தாவிடம் பேச முடியவில்லை என்று. எப்போது கேட்டாலும் ஏதாவது சொல்லி பேசவிடாமல் செய்துவிடுவாள்.

அது அம்மாவிற்கு ஏதோ சரி இல்லை எங்கிற ஒரு மனபிரமையைக் கொடுத்தது; எங்கோ இடித்தது. இருந்தாலும் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. தன் கணவனிடமும் சொல்ல முடியவில்லை. அந்த டிவி ப்ரோக்ராம் அவ்வப்போது அவள் நினைவுக்கு வந்துபோனது. அதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை கண்டிப்பாக தன் பெண் அப்படி இருக்க மாட்டாள் என்று அவளுக்கு தோன்றியது என்றாலும் அவளுடைய தோற்றமும் இப்போது தனியாக குடித்தனம் என்பதும் அந்த சாந்தாவுடன் பேச முடியாமல் இருப்பதும் கஷ்டமாக இருந்தது.


சில சமயங்களில் வீடியோ காலில் பேசும்போது கூட இவள் தனி யாகத்தான் பேசினாளே தவிர அவளைக் கண்ணில் காட்டவே இல்லை அதுதான் அவளுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தாள். என்றாவது ஒருநாள் திடுதிப்பென்று போய் அவள் வீட்டில் நிற்க வேண்டும் என்று மட்டும் மனதில் சங்கல்பம் செய்துகொண்டாள். அதற்கும் ஒரு நாள் வராமலா போகும் என்று எண்ணிக் கொண்டாள். இப்படியாகவே ஒரு வருடம் ஓடி விட்டது.


ரோஷனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது என்று வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் இரண்டு முறை வந்து போனாள்.

கொஞ்சம் பூசின மாதிரி இருந்தாள். தன் சமையலைத்தானே சாப்பிடுவதால் என்று அவளே அம்மாவிடம் சொன்னாள். சாந்தாவைப் பற்றி பேசினால் மட்டும் நழுவி விடுவாள். அவள் ரொம்ப மூடி டைப் மா என்றாள் ஒருமுறை.

இங்கு வரும்போதெல்லாம் ஏதாவது சமையலுக்காக எடுத்துக்கொண்டு சென்றாள்; அம்மா செய்து தரும் பக்ஷணங்கள் மற்றும் இனிப்புகள், சாதத்தில் போட்டு சாப்பிடும் பொடி வகைகள், பலகாரங்கள் என எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றாள்.

இவள் இப்படி இருக்க சாந்தகுமார் 2 மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு அல்லது லாங் வீக் எண்டு என்று சொல்வார்களே, அது கிடைக்கும் போதெல்லாம் தனது கிராமத்திற்கு சென்று வருவான். அப்பா அம்மாவை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிச் செல்வான்.

இவள் அதிலெல்லாம் தலையிடுவது கிடையாது இருவருமே அவரவர்கள் எல்லை தெரிந்து வைத்திருந்தனர். அனாவசியமாக மற்றவரின் குடும்பத்தைப் பற்றியோ அவர்கள் செய்கின்ற வேலையைப் பற்றியோ, எடுக்கும் முடிவுகளைப் பற்றியோ அடுத்தவர் தலை இடுவதே கிடையாது.

ஒரே கூரை இன் கீழ் சேர்ந்து வாழ்ந்தார்கள் அவ்வளவுதான். கணவன் மனைவி போல அந்த உரிமை மட்டும் உண்டு. மற்றபடி ஒருவருக்கு ஒருவர் என்ன ஏது என்று கேட்பதில்லை இது என்ன மாதிரியான சுதந்திரம் என்று தெரியவில்லை.
இந்த காலத்து பெண்கள் ஸ்பேஸ் ஸ்பேஸ் என்று சொல்கிறார்களே அது இதுதானா என்று எனக்கு புரியவில்லை என்ன இருக்கிறது இதில் ஒட்டுதல் இல்லாமல் ஒன்லி உடலின் தேவைக்காகவே சேர்ந்து இருப்பது போலல்லவா படுகிறது.

ஆனால் இது மிகவும் உத்தமம் என்று சொல்கிறார்கள் இது போல் உள்ளவர்கள். இது பரவும் என்று வேறு சொல்கிறார்கள் இதில் ஊடுருவிப் பார்த்தால் இருவருடைய சுயநலத்தை தவிர வேறு எதுவுமே இல்லை இதில் என்னுடைய எதிலும் நீ தலையிடாதே என் சம்பளம் நானே வைத்துக்கொள்வேன் நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன் என்னைக் கேள்வி கேட்க ஆளே இருக்க கூடாது என்று ஒரு ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவருடைய குறைகளை மற்றவர் அனுசரித்துப் போவது அல்லது அதைத் திருத்துவது; என்கிற அந்த மாதிரி எதுவும் இதில் கிடையாது.

வெளியில் ஒன்றாக சென்று வருபவர்கள் தாங்கள் கணவன் மனைவி என்று யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை பார்ட்னர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் கவுரவமாக ஆனால் அதைக்கூட அனைவரிடம் வெளிப்படையாக பேசுவதும் பிடிப்பதில்லை. வீடு பார்க்கும்போது மட்டும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி பார்த்து விடுகிறார்கள் மற்றபடி பார்க்கும்போது நண்பர்களிடம் உறவினர்களிடம் ஏன் பெற்றோரிடமே இதை செல்ல தயங்குகிறார்கள்.

அப்படித்தான் இருந்தது இவர்களின் நிலமையும். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமே இவர்களுக்கு இல்லையோ என்று எண்ணும்படி இருந்தது அவர்களின் நடவடிக்கை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல நடந்து கொண்டார்கள்.


ரோஷனியின் அம்மா நினைத்த அந்தத் திருநாள் வந்துவிட்டது. தானே திடுதிப்பென்று போய் மகள் முன்னே நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் அல்லவா அதற்கான சமயம் வந்தது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:55 pm

யாரோ தூரத்து சொந்தத்தில் கல்யாணம் அதைக் கருத்தில் கொண்டு அம்மா மட்டும் கிளம்பி வருவதாக இருந்தாள்.

அதனால் போன் செய்து மகளிடம் மகிழ்வுடன் சொன்னாள். தாய் வரும் செய்தியைக் கேட்டதும், முதலில் கொஞ்சம் தயங்கிய ரோஷினி ஒரு நொடியில் சுதாதரித்து கொண்டு வா வா வா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி, என்று வருகிறாய் எனச் சொன்னால் நானே வந்து உன்னை ஏர்போர்டில் பிக்கப் செய்து கொள்கிறேன் என்றும் சொன்னாள்.

உடனேயே அடுத்த காரியங்களில் இறங்கினாள்.
முதலில் சாந்தகுமாரிடம் விஷயத்தை சொன்னாள். அம்மா வருகிறார்கள் ஒரு வாரம் எங்காவது போய் நண்பருடன் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டாள். பிறகு தன்னுடைய தோழி ஒருத்தியை கூப்பிட்டு ஒரே ஒரு நாள் அம்மா வரும்பொழுது சாந்தாவாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டாள்.

அவள் முதலில் மறுத்தாள். உங்க அம்மா என்னிடம் எதாவது கேட்டால் நான் என்ன சொல்ல? அதனால், பிறகு ஏதாவது பிரச்சனை வந்தால் என்று இழுத்தாள்…அதற்கு இவள், நீ அதிக நேரம் இங்கு இருக்க வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு விசிட் போதும், நான் என் அம்மாவை சமாளித்துக் கொள்வேன் என்று சொன்னாள். அவள் அதிக நேரம் இங்கு இருந்து எதாவது உளறி விட்டால்?... எல்லோருக்கும் பிரச்சனைதானே…அதனால் ஜுஸ்ட் ஒரே நாள் அவள் தன் தலையைக் காட்டிவிட்டு பின் போய்விடவேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். சாந்தாவின் அறையை இவள் அறையாகக் காட்டிவிட்டு பூட்டு போட்டுவிடலாம் என்றும் முடிவெடுத்தாள்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு வர ஏர்போர்ட் கிளம்பி போனாள். அம்மாவும் வந்துவிட்டாள். அம்மா ஏர்போர்ட்டில் இருந்து வரும்போது அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் இவள் தான் சாந்தா என்று அறிமுகம் செய்து வைத்தாள் ரோஷனி.

அம்மாவிற்கு அவளும் ஒரு ஹலோ சொல்லி விட்டு சாயந்திரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு போய்விட்டாள் அவள். என்னடி இது என்றாள் அம்மா. நான் தான் சொன்னேனே அவள் ரொம்ப மூடி என்று; என சொல்லி அம்மாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அது த்ரீ பெட்ரூம் பிளாட் .

வந்ததுமே அம்மா கண்களை சுற்றி பார்த்தாள். எல்லாமே ரொம்ப அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூம் மட்டும் பூட்டி இருந்தது கேட்டால் அது சாந்தாவினுடையது என்று சொல்லிவிட்டாள் ரோஷனி.

அம்மாக்கு வீடு பிடித்து இருந்தது எல்லாமே ரொம்ப சுத்தமாக வைத்திருந்தாள் இவள். அதில் ரொம்ப பெருமை அந்த அம்மாவுக்கு. மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூங்கி எழுந்தாள். நல்லா சமைக்க ஆரம்பித்துவிட்டாயடி நீ என்று மகளுக்கு சர்டிபிகேட்டும் கொடுத்தாள். அதற்கு இவள் எல்லாம் சாந்தாவின் டிரெயினிங்க் என்று சொன்னாள் .சாயந்திரம் சீக்கிரமே அந்த பெண் வந்துவிட்டாள். வந்ததும் வராததுமாக தன் அறைக்கு சென்றாள்.

ஒரு இரண்டு நிமிடங்களுக்குள் மீண்டும் சிறிய பெட்டியுடன் வெளியே வந்தாள். ரோஷனி, எனக்கு ஊரில் இருந்து போன் வந்தது எங்க அக்காவிற்கு நிச்சயதார்த்தம் அதனால் நான் உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இவர்களிடம் ஒரு ஸ்வீட் பாக்ஸ்ஐ கொடுத்துவிட்டு. போய்வருகிறேன் ஆண்டி என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

காபி எதாவது சாப்பிட்டுவிட்டு போயேன்டி என்று இவள் சொன்னதும், இல்லடி கீழே வண்டி காத்துக் கொண்டிருக்கிறது, நான் சீக்கிரம் ஏர்போர்ட் போகணும். அங்கு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு , போய்விட்டாள்.
அம்மா என்னடி இது என்றார். அம்மா… அம்மா, அவ எப்பவுமே இப்படித்தான் கொஞ்சம் மூடி டைப். ஆனால் ரொம்ப நல்ல மாதிரி என்று சொன்னாள் இவள்.

இவளுடனா இத்தனை நாள் காலம் தள்ளுகிறாய் என்றதும் இல்லை மா, அவளால் கொஞ்சமும் தொந்தரவு இருக்காது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள் அவ்வளவுதான் என்றாள் இவள். என்ன பெண்களோ என்று அங்கலாய்த்தார் அந்த அம்மா. அவளும் அம்மாவும் இருவருமாக அந்த கல்யாணத்திற்கு போய் வந்தார்கள் பிறகு அம்மா ஒரு நாள் தங்கி ஊரை சுற்றிப் பார்த்தார். பிறகு மன நிம்மதியுடன் ஊர் திரும்பி விட்டார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Tue Nov 17, 2020 11:59 pm

ம்ம்ம் அம்மாவையும் ஏமாற்றி ஆகிவிட்டது. அடுத்து என்ன க்ரிஷ்னாம்மா. முருகர் அழகு க்ரிஷ்னாமா. நன்றி



krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 7:27 pm

lakshmi palani wrote:ம்ம்ம் அம்மாவையும் ஏமாற்றி ஆகிவிட்டது. அடுத்து என்ன க்ரிஷ்னாம்மா. முருகர் அழகு க்ரிஷ்னாமா. நன்றி

மேற்கோள் செய்த பதிவு: 1335275

இதோ தொடருகிறேன் லக்ஷ்மி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 7:31 pm

காலை ஃபிளைட்டில் ரோஷனியின் அம்மா கிளம்பிவிட்டர்கள் என்று தெரிந்தது தான் தாமதம் அரை நாள் லீவு போட்டு விட்டு உடனே வந்து விட்டான் சாந்தகுமார். என்னால் உன்னை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்று சொன்னான். கட்டியணைத்துக் கொண்டான் அவளை.

எனக்கும் அதே போல தான் இருந்தது என்று இவளும் சொன்னாள். திடீரென்று, சாந்தா நாம் உடனடியாகக் கல்யாணம் செய்து கொண்டு விடலாம் என்று சொன்னாள்.

தாராளமாக செய்து கொள்ளலாம் தான். ஆனால், உங்க அக்காவிற்கு கல்யாணம் ஆனதும் பண்ணிக் கொள்ளலாம் என்று சொன்னாயே இப்போது பரவாயில்லையா என்று கேட்டான். ஆமாம் என்று குறைந்து விட்டது அவள் குரல். ஆமாம் அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்று சொன்னாள்.

எதுக்கு கவலை, நாம் இப்போழுதே கணவன் மனைவி போலத்தானே இருக்கிறோம் என்று சொன்னான். ம்ம்.. அது என்னவோ சரிதான் என்று அவன் அணைப்பில் இருந்தபடியே அவள் சிரித்தாள்.


உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொன்னான். என்ன என்று இவள் கேட்டாள். நான் இன்று பேப்பர் போட்டு விட்டேன் ஆபீசில் என்று சொன்னான். என்ன பேப்பர் போட்டு விட்டீர்களா, ஏன் என்று கேட்டாள். ஆமாம் என்று சொன்னான்.

அப்போ வேலை என்று கேட்டாள்…. இல்லை நான் ஏற்கனவே இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியா போக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது குதிர்ந்து விட்டது அதனால் பேப்பர் போட்டு விட்டேன் இன்னும் இரண்டு மாதத்தில் நான் ஆஸ்திரேலியா பறக்க வேண்டும் என்றான்.

அப்போது அவளுக்கு அவனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது அவனைப் பிரிய வேண்டி வருகிறதே அதற்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை என்றாலும் கடைசியில் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

சூப்பர் என்று சொல்லிவிட்டு, அப்போது கண்டிப்பாக நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னாள். ஆமாம் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் ஆனால் அது நான் போய் அங்கு வேலையில் சேர்ந்து விடடுப் பிறகு உன்னை இங்கு வந்து கல்யாணம் செய்து கூட்டி போகிறேன் என்று சொன்னான். அதுவரை நம்மில் ஒருவராவது சம்பாதிக்க வேண்டாமா செல்லம் என்று கேட்டான்.

அவன் சொல்வது நியாயமாகப் பட்டது அவளுக்கு. மேலும், அங்கு செல்வதற்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக இரண்டு வருட காலமாகும் ஒவ்வொரு பரீட்சையாக எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்றான்.

அப்போ நான் மட்டும் எப்படி உடனே வர முடியும் என்று கேட்டாள் இவள்..ம்ம்…அதற்காக தான் சொல்கிறேன் எனக்கு வேலை கிடைத்ததும் மனைவி என்ற உரிமையில் உன்னை அழைத்துக் கொண்டு போய்விட முடியும் என்று சொன்னான் அவன். அந்த சொல்லே இனித்தது அவளுக்கு. எத்தனை யோசித்து வேலை செய்கிறான் அவன் என்று நினைத்தாள் அவள்.

அவள் ஒப்புக்கொண்டது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனவே, அன்று முதல் இருவருமாக ஆஸ்திரேலியா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவள் தனியாகவே ஆபீஸ் போய் வந்தாள்.

எல்லாமே சரியாக நடந்து வருவது போல இருந்தது அவளுக்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டாள்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக