புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

First topic message reminder :

இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! புன்னகை...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து  இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை  வெளேர்  என்கிற மிக அழகிய உடையுடன்,  கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

என் கையில் எப்படி இது என்று நான் யோசிக்கும் முன் மீரா தொடர்ந்தாள். இது தான் இப்போதைக்கு உங்களின் அடையாளம். நான் முன் சொன்னது போல இங்கு எல்லோருக்கும் எண்கள் தான். நீங்கள் சேரவேண்டிய இடம் எது என்று இதன் மூலம் தான் அறிய முடியும். நீங்கள் அங்கு சென்றடைந்ததும் இது மறைந்து விடும். என்றாள். என் கையைப் பார்த்தேன் அது ஒரு 16 டிஜிட் எண்.
அவளே தொடர்ந்தாள்...'இதில் முதல் நான்கு எண்கள் உங்கள் நாட்டை குறிக்கும், அடுத்த 4 எண்கள் மாநிலத்தைக் குறிக்கும், அடுத்த 4 எண்கள் மாவட்டத்தைக் குறிக்கும், அடுத்த நான்கு எண்கள் நீங்கள் நுழைய வேண்டிய மாளிகை இன் எண். அங்கு போனதும் மேற்கொண்டு நடப்பதை பார்க்கலாம்' என்றாள். ஆஹா, எத்தனை எத்தனை ஏற்பாடு என்று நினைத்தது வியந்து போனேன்.

இது தான் உங்களின் 'பாஸ்'... ‘PASS’..அதாவது இது இருந்தால் தான் உங்களால் எங்கும் போகமுடியும். அதாவது உங்களின் சஞ்சாரத்திற்கு இது வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது, நான் இதை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதனால் எனக்கும் இதற்கும் தொடர்பு ஏற்பட்டு, நாம் செல்லவேண்டிய பாதை இல் ஒழுங்காக செல்ல முடியும். இன்னும் சில காலத்திற்கு நான் உங்களுடனே இருப்பேன் என்று சொன்னேன் அல்லவா, அப்படித்தான் அவர்களும். ஒருவரை விட்டு மற்றோருவர் எங்கும் தனியே செல்ல முடியாது. இது நம் இருவரையும் பிணைக்கும் தொடர்பு' என்று சொன்னாள்.

'அதேபோல நாம் எங்கிருக்கிறோம் என்று மேலிடம் அறிவதற்கும் இது உதவும் ' என்றாள். 'மேலிடம் என்றால்?' என்ற என் கேள்விக்கு அதெல்லாம் 'தேவரகசியம் என்னால் சொல்ல முடியாது' என்று அன்பாக மறுத்துவிட்டாள். நாங்கள் ஏறிய லிப்ட்... லிப்ட் என்று சொல்ல முடியாது ஒரு ட்ரான்ஸ்பேரண்ட் அறை போல் இருந்தது. அது அப்படியே மிதக்க ஆரம்பித்தது. வாவ் ... நாங்கள் இருவரும் வான் வெளி இல் பறக்க ஆரம்பித்தோம்.

சௌகர்யமாய் உட்கார்ந்து கொள்ள நல்ல வசதியான நாற்காலிகள் இருந்தன அங்கு. நன்றாக எல்லா திசைகளிலும் பார்வையை ஓட்ட முடியும். நான் 'ஜம்' என்று சப்பணமிட்டு உட்க்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கீழே குனிந்து நோக்கினால் ... அடர்த்தியான பச்சை இலை காடுகள்...அருவிகள் என கண்கொள்ளாக் காட்சிகள் தென்பட்டன... நான் ஒரே ஒருமுறை தான் பழனி இல் வின்ச் இல் போய் இருக்கிறேன். அப்பொழுது இப்படி பார்க்க முடியவில்லை. எழுந்து பார்க்கவோ படமெடுக்கவோ அனுமதிக்கவில்லை. மற்றபடி சினிமாக்களில் தான் இத்தனை அழகை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று , ரேவதி ஒருபடத்தில் சொல்வாங்களே ,’ நான் ஆடுவேன் பாடுவேன் என்ன வேணா பண்ணுவேன்' என்று அதைப்போல இருந்தது என் மனோ நிலைமை.

அப்படி ரசித்துக் கொண்டிருக்கும்போதே அது மிகவும் உயரமாக பறக்க ஆரம்பித்தது. இப்பொழுது உயரம் அதிகமாக அதிகமாக வெறும் நீல நிறம் மட்டும் தென்பட்டது. அப்படியே காற்றில் மிதந்து சென்ற அந்த லிப்ட் கொஞ்ச நேரத்தில் ஓரிடத்தில் ஒரு கட்டிடத்தில் போய் இணைந்து கொண்டது.

முன்பு போல நாங்கள் சாதாரண லிப்ட் இல் இருந்து வெளி வருவது போல வந்தோம். அதுவும் ஒரு ஏர்போர்ட் போலத்தான் இருந்தது. நாங்கள் மீண்டும் நடந்தோம். அந்த கட்டிடத்தைவிட இங்கு கொஞ்சம் மக்கள் குறைவாக இருந்தனர். இங்கும் அங்கும் போய்வந்தனர். ஆனால் நான் ஒன்று கவனித்தேன். எந்த இடத்திலும் கடைகள் இல்லை, சாப்பிட எதுவும் இல்லை. கடைகள் போல் இருந்த சின்ன சின்ன அறைகளில், ஏதோ ஒருவர் மட்டுமே இருந்தார்.

இந்த தேவதைகளில் சிலர் அங்கு சென்று திரும்பினார் , அவ்வளவுதான். எனக்கு மீராவின் பேச்சின் மூலம் புரிந்தது என்னவென்றால், என் போல் இங்கு வருபவர்களை அவரவர்களின் கர்ம பலனை அனுபவிக்க உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் தேவதைகள் இவர்கள். இவர்களுக்கும் அது என்ன ஏது என்று தெரியாது. மேலிடத்தில் இருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு வயதே ஆகாது. பசி தாகம் தூக்கம் உண்டா என்று இன்னும் தெரியவில்லை. எனக்கும் தூக்கம் வருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் இங்கு வந்து இதுவரை எத்தனை நேரம் ஆனதோ தெரியவில்லை ஆனால் களைப்பாகவே இல்லை.

என் கையிலிருந்த எண்களை மீரா காட்டும்பொழுது நான் பார்த்து நினைவில் வைத்துக் கொண்டேன்.அதைக்கொண்டு இப்பொழுது நாங்கள் மாநில வாரியாக இருக்கும் இடத்தையும் தாண்டி மாவட்டத்தையும் தாண்டிவிட்டோம் இனி கடைசி யாக உள்ள 4 எண்களின் படி நாங்கள் இனி நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு போக வேண்டியது தான் பாக்கி.

ம்ம்.. நான் யூகித்தது சரி. நாங்கள் அந்த ஏர்போர்ட் போல இருந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தோம். முன்பு போல பல கட்டிடங்கள் இருக்கும் ரோட்டில் நடந்தோம். பல கட்டிடங்களைக் கடந்ததும் ஒரு மிக அழகான ரோஜா பூ போன்ற நிறக் கட்டிடத்தின் முன் வந்ததும் மீரா இது தான் என்றாள்.

எனக்கு அந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. உள்ளே போகலாமா என்று கேட்டேன். ம்ம்.. என்று சொல்லி என்னை கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் நான் முன்பு போல ஹாலில் உட்காரவைக்கப்பட வில்லை. நேரே நாங்கள் இருவரும் தலைவி போல இருந்தவரிடம் சென்றோம். அவரிடம் மீரா எதோ காட்டினாள். தலையை ஆட்டி அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டாள். பிறகு என்னையும் அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

மிக அழகான அறை , விசாலமான அறை. அங்கு ஒரு கம்ப்யூட்டர் போல ஒன்று இருந்தது. நாங்கள் இருவரும் அதன் முன் அமர்ந்தோம். புன்னகையுடன் மீரா சொன்னாள், 'இப்பொழுது தான் தெரியும் உங்களின் வாழ்க்கை வரலாறு…உங்கள் பாவ புண்ணிய கணக்கின் பாலன்ஸ் ஷீட்' என்று. அவள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஆனால் சொன்னதை கேட்டதும் ஆஹா எத்தனை எத்தனை ஏற்பாடுஎத்தனை அழகாக கட்டமைத்துள்ளார்கள் என்று வியக்கத்தான் தோன்றியது.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 23, 2020 4:49 pm

ஏதோ இங்கிலீஸ் படத்தை பார்த்தது மாதிரி இருந்தது.
இப்போது நிறைய படங்களில் நீங்கள் எழுதிய மாதிரி
தான் இருக்கும்.
அருமை
அனைவரும் வெள்ளை சூட்டில் ரோபர்ட் மாதிரி
நடந்து கொள்ளவார்கள்.

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 8:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஏதோ இங்கிலீஸ் படத்தை பார்த்தது மாதிரி இருந்தது.
இப்போது நிறைய படங்களில் நீங்கள் எழுதிய மாதிரி
தான் இருக்கும்.
அருமை
அனைவரும் வெள்ளை சூட்டில் ரோபர்ட் மாதிரி
நடந்து கொள்ளவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1331874

மிக்க மகிழ்ச்சி ஐயா.... நடனம் நடனம் நடனம் தொடர்ந்து படியுங்கள் புன்னகை ... :வணக்கம்: அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 8:40 pm

என்னுடைய வாழ்க்கை கணக்கா....எனக்கு அதை பார்க்கும் ஆர்வம் உண்டானது..அவள் ஒரு பாலன்ஸ் ஷீட் போல என் கணக்கைத் திறந்து காட்டினாள். நான் பிறந்தது முதல் இறந்தது வரை எல்லாம் அதில் இருந்தது. ஒரு பாஸ் புக் போல. பல பக்கங்களாக இருந்தது. எனக்கு அதைப் பக்கம் பக்கமாக பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் முதலில் தி எண்ட் பாலன்ஸ் என்ன என்று தான் பார்க்க ஆவலாக இருந்தேன்.

மீராவும் ஒன்றும் பிரச்சனை இல்லை உங்களுக்கு எது வேண்டுமோ அதை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் என்ன என்ன செய்ய முடியும் என்று மட்டும் விளக்குகிறேன் என்று சொன்னாள்.

அந்த கூட்டுத்தொகையைப் பார்க்கும் முன்னே அவள் என்னிடம் சொன்ன விவரங்களை நான் தொகுத்து சொல்கிறேன். அதாவது அந்த பாஸ் புத்தகத்தில் ஒருபக்கம் பாவங்களும் மறு பக்கம் புண்ணியங்களும் இருந்தன. மொத்தமும் கூட்டி கீழே போட்டிருந்தார்கள். அதன் படி தான் என் அடுத்த ஜென்மம் இருக்குமாம்.

அந்த கூட்டுத்தொகைக்கு தகுந்த ஜென்மம் கிடைக்குமாம். அதே போல, நாம் செய்துள்ள தான தர்மங்களின் படி நமக்கு வேறு லோகங்களில் சென்று தங்கிவரும் பாக்கியமும் கிடைக்குமாம். என்னைப் பொறுத்த வரை அவை என்ன என்று  இனி பார்க்கவேண்டும். இதற்குள்  எனக்கு அடுத்த முறை ஒரு உணவு வந்தது. சீக்கிரமே வந்தது போல் இருந்தது எனக்கு.

அதாவது இது முதல் மாஸ்ய உணவு. ம்ம்.. இது போல வரும் உணவை வைத்தே நான் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்று நான் யூகித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன். இதுவரை நான் சாப்பிடும்போது யாரும் என்னுடன் இல்லை. இப்பொழுது மீரா இருந்தாள் , அதுவும் என்னுடனேயே அதே அறை  இல். அப்பொழுதே தனியாக உண்பதற்கு மனம் இல்லை.

என்றாலும் எல்லோரும் அப்படித்தான் செய்தார்கள். எனவே நானும் அப்படியே செய்யவேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, மீரா என்னுடன் இருந்தாள் . எனவே அவளை விட்டு விட்டு சாப்பிட எனக்கு மனம் இல்லை. ஆனால் அவள் இதை சாப்பிடலாமா என்றும் ஒரு கேள்வி என் மனத்தில் .

என்றாலும், இது என் உணவு, நான் இதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நினைப்பும் வந்தது. எனவே, நான் அவளைப்  பார்த்துக்  கேட்டேன், மீரா, 'நீயும் என்னுடன் சாப்பிடுகிறாயா' என்று.

அவள் மிக ஆச்சரியமாக என்னைப்  பார்த்தாள். 'என்ன' என்பது போல நானும் பார்த்தேன். அதற்கு அவள், 'இல்லை, இதுவரை என்னை யாரும் இப்படிக் கேட்டது இல்லை' என்றாள் . அவள் முகம் மிகவும் கனிவாக இருந்தது. பிறகு சொன்னாள் , இது உங்கள் உணவு, இது தான் உங்களின் ஆதாரம் இங்கிருக்க, இல்லாவிட்டால் நீங்கள் நடமாட முடியாது. எங்களுக்கு இங்கு உணவு கிடைக்கும் நான் அதை வரவழைத்துக்கொள்கிறேன். பிறகு இருவரும் உண்ணலாம்' என்றாள்.

நானும் சரி என்றேன். அவள் ஏதோ தன்  வாட்ச்சில்  பட்டனை அழுத்தினாள். அடுத்த நிமிடத்தில் அவளுக்கான உணவு வந்தது. பிறகு இருவரும் மகிழ்வுடன்  உணவு உண்டோம்.  

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 8:44 pm

இது போல் 12 ஆனதும் மீண்டும் ஒரு ஸ்ரார்த்த உணவு வரும் அத்துடன் நான் இங்கிருக்கும் நாள் முடிவுக்கு வரும்.அதற்கு முன் நான் என்ன செய்யப்போகிறேன் என்று முடிவெடுக்க வேண்டும். அதுவரை இங்குள்ள சிலவற்றை அனுபவிக்கலாம், சிலவற்றை பார்வை மட்டும் இடலாம் என்றாள். இங்கு என்னென்ன உண்டு எங்கெல்லாம் நான் போகலாம் என்றெல்லாம் மீரா காட்டித்தருவாளாம். எனக்கு முதலில் என் மூதாதையர்களை பார்க்க முடியுமா என்று தான் கேட்க ஆசை.

அதை நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள், 'ஆம் அதற்கு வழி உண்டு' என்றாள். எனக்கு மிகவும் திரில்லிங்காக இருந்தது. ஆனால், அன்று நிழலாக தெரிந்த பாட்டி தாத்தாக்களைத் தவிர இன்ன பிறரை இப்பொழுதே பார்க்கமுடியும் என்றும், அவர்களை எல்லாம் இந்த வருடம் பூர்த்தியானதும் பார்க்க முடியும் என்றும் சொன்னாள். 'ம்ம்.. எப்படிப் பார்ப்பது' என்று கேட்டேன்.

'சொல்கிறேன், முதலில் இங்கு என்னென்ன உண்டு நீங்கள் எங்கெல்லாம் போகலாம் என்று தெரிந்து கொள்ள இந்த இடத்தை முழுக்க சுற்றிக் காண்பிக்கிறேன். பிறகு நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்களோ அவர்களை சந்திக்க முடியுமா' என்று பார்க்கலாம் என்றாள்.

'முதலில் முடியும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முடியுமா பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம்..எனக்கு புரியவில்லை' என்றேன் அவளிடம். அதற்கு அவள், 'நீங்கள் யாரை பார்க்க விரும்புகிறீர்களோ, அவர்களும் உங்களை பார்க்க விரும்ப வேண்டும் அப்பொழுது தான் பார்க்க முடியும். பேச முடியும் என்று அவள் முடிக்கும் முன்னே, 'இல்லாவிட்டால் , அவர் மறுத்து விட்டால்' என்று கேட்டேன்.

'இல்லாவிட்டால், நீங்கள் மட்டும் அவரை பார்க்கலாம், ஆனால் பேச முடியாது' என்றாள். இங்கு ஒரு மாயக் கதவு உள்ளது. அந்த மாய கதவின் முன் போய் நாம் நிற்கலாம் அப்பொழுது உங்கள் மனதில் நீங்கள் யாரைப் பார்க்கவேண்டுமோ அவரை நினைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது அவருடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். அப்பொழுது அவரும் அதே போல் விரும்பினால் கதவு திறக்கும் நீங்கள் அவரை பார்க்கலாம், பேசலாம்.. இல்ல என்றால் அது ஒரு கண்ணாடி கதவாக மாறிவிடும் நீங்கள் மட்டும் அவரைப் பார்க்கலாம் என்றாள் .

உடனே நான், நான் கூப்பிட்டு வராமல் இருந்து விடுவானா அவன்... கண்டிப்பாக இல்லை.... எனக்காக வருவான்...என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டேன் போல் இருக்கிறது...மீரா, 'யார் அது, இத்தனை உரிமையாக சொல்கிறீர்கள்....பார்க்க இத்தனை துடிப்புடன் இருக்கிறீர்கள்' என்று கேட்டாள்.

'நான் என்னவென்று சொல்வேன், எனக்கு அவன் யார் என்று சொல்வதா, அவன் அவன்....என்னைப் போய்….. என்னை பார்க்க மாட்டேன் என்று சொல்வானா'....என்றல்லாம் நான் மாய்ந்து மாய்ந்து புலம்பினேன். இப்படிப் புலம்பும் என்னை மிகவும் ஆச்சர்யமாய் பார்த்தாள் மீரா.

ஆமாம் மீரா, என்னைவிட 10 வயது பெரியவன். என்றாலும் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கம். எத்தனை அன்பாக இருந்தோமோ அத்தனை சண்டையும் போடுவோம். எங்க அம்மாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். எதுவும் செய்வான் அம்மாவிற்காக. அதே போல எனக்காகவும் தான். என்னுடைய ப்ளெமேட் என்று கூட சொல்லலாம். வயது வித்தியாசத்தை நாங்கள் பார்த்தது இல்லை. அது போல அன்பாக நான் யாரிடமும் இருந்தது இல்லை.

அவனே எனக்கு பிலாஸபர், கைட் . அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. மிகுந்த பெருமாள் பக்தி கொண்டவன். அம்மா அப்பா தான் முதல் தெய்வம். அவனால் முடியாததே இல்லை என்று நான் எண்ணுவேன்.நான் பெரியவளான போது கூட முதல் பாவாடைஅவன் வாங்கினது தான். பாட்டி சொல்ல சொல்லக் கேட்காமல் எனக்கு கருப்பு பிடிக்கும் என்று கருப்பு பாவாடை நல்ல பெரிய பெரிய மஞ்சள் சூரியகாந்தி பூ போட்டது... இன்றும் என்னால் மறக்கவே முடியாது ... வாங்கித்தந்தான்.

அவனுடைய முதல் சம்பளத்தின் போது கூட எங்க அம்மாவிற்கு கருப்பு பிடிக்கும் என்று கருப்புப் புடவை தான் வாங்கினானாம். பாட்டிக்கு கூட அப்புறம் தான் வாங்கித்தந்தானாம். அம்மா பெருமையா சொல்வா. அப்படிப் பட்ட மாமா, திடீரென்று ஒருநாள் ஒரு ஆக்சிடெண்டில் போய்விட்டான். நான் மிகவும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானேன். அப்போதான் அம்மா சொன்னா, ,'கவலைப்படாதே கண்ணு, அவன் எங்கும் போகவில்லை, நம்முடனே தான் இருக்கிறான். கோவிந்தா தானே வந்து எல்லோருக்கும் செய்யமுடியாது என்று சொல்லி, சில பல தேவதைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவன் அது போல உனக்கான தேவதை. எப்பொழுதும் உன்னைச் சுற்றியே இருப்பான். உன்னை நல் வழி நடத்துவான். கெட்டவற்றில் இருந்து காப்பான். வருத்தப்படாத' என்று சொன்னார்கள். அதையே வாக்காக கொண்டு நான் இத்தனை காலம் வாழ்ந்தேன் மீரா. அந்த மாமாவைத்தான் நான் பார்க்கவேண்டும்.

எனக்கு, நான் எங்கே போவேன், என்னவாக பிறப்பேன், இங்கு எத்தனை நாள் இருப்பேன் என்னவெல்லாம் பார்ப்பேன் அனுபவிப்பேன் என்றெல்லாம் அறிந்து கொள்வதற்கு முன் நான் அவனை ஒருமுறையாவது பார்த்து பேசிவிடவேண்டும். எத்தனை எத்தனையோ முறை எனக்கு கனவில் வந்திருக்கிறான், என்னைக் காத்திருக்கிறான் கிட்ட தட்ட எங்கள் குடும்பத்துக்கு கோவிந்தாவிற்கு அடுத்தபடி அவன்தான். 'என் மாமன் ', அவனை நான் பார்க்கவேண்டும் மீரா. ஆவன செய் உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும். என்று சொன்ன வண்ணம் அவள் கைகளை பற்றிக்கொண்டேன்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 7:25 pm

பின்னூட்டம் எழுதுங்க தொடருகிறீர்களா.... இன்னும் போடட்டுமா????278 பேர் படித்ததாக உள்ளது... ஒரு பின்னூட்டம் இடுமாறு வேண்டிக்கொண்டிருந்தேன்... ஒரு ஸ்மைலி கூட போதும்.... புன்னகை ...பிடித்தது பிடிக்கவில்லை என்று தெரிந்தால் தானே மேற்கொண்டு நான் எழுத ஊக்கமாக அமையும் ????....ம்ம்.. சொல்லுங்கள் ???? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Sun Sep 27, 2020 7:24 pm

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 3838410834 மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 1571444738 krishnamma

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:55 pm

lakshmi palani wrote:மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 3838410834 மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 4 1571444738 krishnamma
மேற்கோள் செய்த பதிவு: 1332181

நன்றி லக்ஷ்மி, நான் தந்த லிங்க் ஐ பார்த்தீர்களா? .... உபயோகமாக உள்ளதா? புன்னகை

@lakshmi palani

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:57 pm

உடனே அவள் சிரித்தாள். இங்குள்ள நிலைமையை நான் விளக்கும் முன் இதை விளக்கவேண்டி வந்து விட்டது எனக்கு என்றாள் புன்னகையுடன். என்ன அது என்றேன். அதாவது, இப்பொழுது நீங்கள் மனமார, கருணையுடன் எனக்கு புண்ணியம் சேரட்டும் என்று சொன்னீர்கள் அல்லவா என்றாள் . அதன் மூலம் என்னுடைய கிரெடிட் ஏறும் என்றாள். நான் கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன். அவள் என் கைகளை பற்றிக்கொண்டு விளக்க ஆரம்பித்தாள் .

அதாவது, இது ஓரூ புது விதமான ஏற்பாடு. என்று அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே நான் , 'மீரா, பிளீஸ் அதெல்லாம் விளக்கமாக பிறகு சொல். இப்பொழுது நாம் என் மாமாவை எப்படி எங்கே போய் பார்க்கவேண்டும் என்று சொல்' என்று கேட்டேன்.

'ம்ம்..நீங்கள் இங்கு வந்துள்ளது, நான் உங்களுக்காக இங்கே இருப்பது எல்லாமே இங்குள்ள யாரோ ஒருவரின் முயற்சியால் தான்' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். புரியவில்லை என்றேன்.

'ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள் . நாங்கள் எல்லாம் இந்த பிறப்பு வேண்டும் என்று வரம் வாங்கி வந்தவர்கள். 2004 இல் மிகப்பெரிய அளவில் இங்கு ஆத்மாக்கள் வரும் என்று அறிந்து கொண்டு மிகப்பெரிய ப்ராஜெக்ட் போல எடுத்துக்கொண்டு, அவர்களை எல்லாம் எப்படி எங்கு தங்க வைப்பது, எத்தனை பேருக்கு பிறப்பு அளிப்பது என்றெல்லாம் யோசனை செய்தார்கள். உங்கள் ஊரில் அப்பொழுது தானே சுனாமி வந்தது. அதைத்தான் சொல்கிறேன். அடுத்த வருடமே வெள்ளம். எனவே இங்கு வரத்து அதிகம் ஆகும் என்று யூகித்து மிக அதிகமானஆத்மாக்கள் தங்க இடங்கள் வசதிகள் எல்லாம் உருவாக்கினார்கள். ஆனால் அதேநேரம் அவை மிக நூதனமான முறை இல் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள்.

ஏனென்றால், அப்பொழுது இறந்தவர்களில் நிறைய பேர் மீண்டும் உடனே பிறக்க விரும்ப மாட்டார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள் .எனவே அவர்களை அவர்கள் விரும்பும்பொழுது அடுத்த பிறவி எடுக்க வைக்கலாம் என்றால் அதுவரை அவர்கள் எங்கே இருப்பது... அவர்களுக்கான உணவு , இருப்பிடம் பொழுது போக்கு என்றெல்லாம் யோசித்து யோசித்து இப்பொழுது நாம் இருப்பது போல பல லோகங்களை உருவாக்கினார்கள்.

இங்கு பல வசதிகள் உண்டு. முதல் ஒருவருடம் இப்பொழுது உங்களுக்கு உள்ளது போல ட்ரான்சிட் பீரியட் . இந்த நேரத்தில் உங்களின் பாவ புண்ணியக் கணக்கை உங்களுக்கு காண்பித்து, உங்கள் விருப்பத்தை தெரிந்து கொண்டு வேண்டுமானால் அடுத்த பிறவியை உடனே எடுக்கலாம் அல்லது இன்னும் சிலநாட்கள் அதாவது எங்கள் நாட்களில் இங்கு தங்கி உங்கள் புண்ணியக் கணக்கை அதிகப்படுத்துக் கொண்டு பிறகு விருப்பப்பட்ட பிறவியை எடுக்கலாம். அல்லது இங்கேயே இருக்கலாம். என்று பலப்பல புது வழிமுறைகளை கொண்டுவந்தார்கள்.

தொடரும்......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:57 pm

அதில் மிக அருமை என்னவென்றால், இப்பொழுது உங்களுக்கு நேரத்திற்கு உணவு வருகிறது அல்லவா, இதுபோல எல்லோருக்கும் வராது. அதாவது தங்கள் தங்கள் தாய் தகப்பனுக்கு அல்லது வேண்டியவர்களுக்கு உரிய காரியங்களை செய்யத்தவறினார்கள் என்றால் இங்குள்ளவர்களுக்கு உணவு கிடைக்காது. அப்பொழுது என்ன செய்வது, அந்த ஆத்மாவுக்கும் ஏதாவது தேவைப் படுமே. முழு முக்தர்களுக்கு மட்டுமே ஆகாரம் வேண்டாம் , தூக்கம் வேண்டாம் நேரமே கிடையாது. அதுவரை உள்ள லோகங்களில் உள்ளவர்களுக்கு அவரவர் வாழும் லோகங்களுக்கு ஏற்ப ஏதாவது உணவு வேண்டுமே அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டுமே .

மேலும், கீழே பூலோகத்தில் காரியங்கள் நடக்கவிடடால் இங்குள்ளவர்களுக்கு உணவு கிடைக்காது என்று சொன்னேன் அல்லவா, அதற்கு பல காரணங்கள் உண்டு. மகன் இல்லாதது, மகள் இல்லாதது அல்லது குழந்தைகளே இல்லாதது அல்லது எல்லாம் இருந்தும் செய்ய முடியாமல் அசமர்த்தர்களாகப் போவது என்று . எதானாலும் தடை படுவது என்னவோ இங்குள்ளவர்கள் உணவு தான்.
வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை, மஹாளய பக்ஷம், மாதப்பிறப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. காசி, கயா, பத்ரிநாத், இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பிரம்மகுண்டத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்த கர்மங்களை செய்யும்பொழுதும் இங்கே அவரவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் , குழந்தைகளாக இறந்தவர்கள், வாலிபத்தில் இறந்தவர்கள் என நிறைய பேருக்கு உணவு தவிப்பு உண்டு. சிறிய வயதில் இறந்தவர்கள் பலர் மீண்டும் பிறக்க விரும்புவதே இல்லை. அப்பொழுது அவர்களின் ஜீவாதாரமான உணவுக்கு என்ன வழி செய்வது என்றெல்லாம் யோசித்தார்கள்.

மேலும், வர வர கலி முத்துகிறது, பித்ருக்களுக்கு செய்யும் ஸ்ரார்த்தம் போன்றவைகள் குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகள் இன்மை பெருகுகிறது. அப்போ அவர்கள் கதி / இவ்வாறெல்லாம் மிக மிக யோசித்து ஒரு புண்ணிய ஆத்மா, நிறைய வழி வகைகளை வகுத்தார். அவர்தான் எங்களின் அன்புத்தலைவர்.

அவள் இதை சொல்லும்பொழுது மிகவும் நெகிழ்ந்து இருந்தது அவள் குரல். என்னை போல் பலரும் இங்கேயே பிறப்பெடுக்க அவர்தான் காரணம். ஒரு நிமிடம் தான் உடனேயே தன்னைத்தானே சமாளித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

இங்கு உள்ள ஆத்மாக்களுக்கு அவர்களின் கிரெடிட் அதாவது புண்ணியக் கணக்கில் குறைந்த பக்ஷம் இத்தனை ..ம்ம்.. எப்படி சொல்வது... நீங்கள் உங்கள் ஊரில் ரூபாய் அமெரிக்காவில் டாலர் என்று சொல்வீர்கள் தானே ... அல்லது 'பக்ஸ்' என்று அதைப் போல இங்கு இருப்பதற்கும் இங்குள்ள கரன்சி தேவை. நாம் அதை பணம் என்று சொல்வதற்கு பதில் புண்ணியக் கணக்கில் உள்ள எண்கள் என்று சொல்கிறோம். எதானாலும் நாம் உயிர் வாழ உணவு ஏதாவது வாங்க கொள்ள ஏதாவது ஒன்று வேண்டும் இல்லையா அதைத்தான் சொல்கிறேன்.

அது ஒரு குறிப்பிடட அளவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம். அதுவும் நம்மிடம் எத்தனை பாவ புண்ணியங்கள் உள்ளனவோ அதற்கு தக்கன பிறப்பு முடிவாகும். எது எப்படியோ, உங்கள் அதாவது அந்த ஜீவனின் விருப்பம் இல்லாமல் முடிவாகாது. நிறைய ஆத்மாக்கள் மீண்டும் பிறக்க விரும்புவது இல்லை தே நீட் எ பிரேக். எனவே தான் இங்கேயே தங்கும் ஆத்மாக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு செய்தார் அவர்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக