புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
43 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
43 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 06, 2021 1:14 pm

06.03.2021

காமெடி நடிகர் சார்லி பிறந்த நாள் [1960]

மனோகர். இங்க்லீஷ் காமெடி நடிகர்கள் சார்லி, சாப்ளின் நினைவாக சார்லினு பேர் வச்சுக்கிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். ரெண்டு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 

ஆரம்பத்தில பல படங்கள்ல காசு பணம் வாங்காமயே நடிச்சார். இதை பார்த்த K பாலசந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வரணும்னு, 1983ல பொய்க்கால் குதிரைல காமெடி நடிகனா அறிமுகப்படுத்தினார். அப்புறமா குணசித்திர ரோல்ல நடிச்சார். 

சினிமா சான்ஸ் இல்லாத சமயத்ல சும்மா இருக்காம, 'தமிழ் சினிமால நகைச்சுவை' னு ஒரு ஆய்வு செஞ்சார். அதனால தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழால சார்லிக்கு டாக்ட்டர் [Phd] பட்டம் கொடுத்தாங்க. தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு னு தலைப்புல ஆய்வு செஞ்சதுல அழகப்பா யூனிவர்ஸிட்டில MPhil வாங்கினார். 

சம்பளம் கொஞ்சமா இருந்தாலும் முடிஞ்சவரை மத்தவங்களுக்கு உதவி செய்வார். புத்தங்கள் நிறைய படிப்பார். உலக இலக்கியங்கள், உலக சினிமா பற்றியெல்லாம் இவருக்கு அத்துபடி. 

காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது, காலேஜ் நாடகங்கள்ல சிவாஜிகணேசன், முத்துராமன், நாகேஷ் போன்றவர்கள் போல நடிச்சு பாராட்டு வாங்கினார். 

தமிழ்நாடு சினிமா விருது, கலைமாமணி விருது, கலைசிகரம் விருது, சிறந்த காமெடி நடிகன் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 


டூயட் [1994] படத்ல ஸீன் 


உன்னை நினைத்து [2002] படத்ல ஸீன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 06, 2021 1:21 pm

06.03.2021

பழம்பெரும் நடிகை க்ருஷ்ணகுமாரி பிறந்த நாள் [1933 - 2018]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தெலுங்கில் முன்னணி நடிகை. ஒண்ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகியின் தங்கச்சி. 

முதல் தமிழ் படம் திரும்பிப் பார் [1953]. நடிகர் திலகம் ஹீரோ. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. 

நல்லவராம் ஒரு ஆணோடு பெண்ணும் நாடிடும் பொது நீதி 

திரும்பிப் பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 06, 2021 1:28 pm

06.03.2021

டைரக்ட்டர் கரு பழனியப்பன் பிறந்த நாள்

தமிழ் இலக்கியத்தின் தீவிர ரசிகர். புத்தகங்கள் நிறைய படிப்பார். மற்ற மொழிகளை கத்துகிறது, நடிப்பு, உரையாடல் இதுலயும் ஆர்வம் வந்துச்சு. இதுகூட நகைச்சுவை, சினிமா ஆர்வம் இருந்ததால சினிமா பக்கம் வந்தார்.

டைரக்ட்டர் பார்த்திபன் போன்ற சில டைரக்ட்டர்கள் கூட வேல செஞ்சிருக்கார். டைரக்ட்டின முதல் படம் பார்த்திபன் கனவு [2003]. 
நடிகரும்கூட. சிறந்த டைரக்டருக்கான தமிழ்நாடு விருது, சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு விருது வாங்கினார். 

விஜய் TVல தமிழா தமிழா னு ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டு இருக்கார். 


டைரக்ட்டி ஹீரோவா நடிச்சிருக்கார். 
தண்ணி போட வாப்பா நீ தள்ளி நிக்காதேப்பா 


மந்திர புன்னகை 2010 / வித்யாசாகர் / விவேகா 

இவரோட கதை, டைரக் ஷன் 
சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் 


சிவப்பதிகாரம் 2006 / வித்யாசாகர் / யுகபாரதி  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 07, 2021 11:42 am

07.03.2021

ராஜு சுந்தரம் பிறந்த நாள் [1968]

ராஜேந்திர சுந்தரம். 

நடிகர், டைரக்ட்டர், டான்ஸ் மாஸ்ட்டர். டான்ஸ் மாஸ்ட்டர் சுந்தரத்தின் மகன். ப்ரபுதேவா, நாகேந்திர ப்ரசாத்தின் அண்ணன். 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல டான்ஸ் மாஸ்ட்டரா வேல செஞ்சிருக்கார். நடிச்சிருக்கார், டான்ஸ் ஆடியிருக்கார். ஏகன் னு தமிழ் படத்த  தமிழ், ஹிந்தில டைரக்ட்டினார். 

சிறந்த டான்ஸ் மாஸ்ட்டருக்கான தமிழ்நாடு சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 


இந்த பாட்டுக்கு சுந்தரம் டான்ஸ் மாஸ்ட்டர் வீரபாண்டிய கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே 


திருடா திருடா 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து
 
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்ட்டரும், நடிகரும் 
வாராயென் தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி 


ஜீன்ஸ் 1998 / AR ரஹ்மான் / வைரமுத்து 

இந்த பாட்ல டான்ஸுக்கு மட்டும் வந்து போனார் ராஜு சுந்தரம் 
ஏ ஷாக்கடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட்டடிக்குது தானா 


ஆசை 1995 / தேவா / வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 07, 2021 11:51 am

07.03.2021

பழம்பெரும் நடிகர் MN நம்பியார் அய்யா பிறந்த நாள் [1919 - 2008] 

13 வயசிலேயே நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுல சேந்துட்டார். அங்க நம்பியார் செஞ்ச வேல சமையலுக்கு உதவி செய்றது. ஊர் ஊரா சுத்தினாலும் நாடகத்தில நடிக்க சான்ஸ் கெடைக்கல. இலவச சாப்பாடு, தங்க இடம். இந்த நாடக குழுல பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும்  கத்துக்கிட்டார். அப்புறமா ஸ்த்ரீ பார்ட் போட்டு நாடகங்கள்ல நடிச்சிருக்காராம். 

16 வயசாச்சு. ராம்தாஸ் னு ஒரு நாடகம். இந்த நாடகம் 1935ல பக்த ராம்தாசு னு படமாக எடுத்தாங்க. இந்த படத்த எடுக்க பாம்பே போனாங்க. நம்பியாரும் கூடவே போனார். இந்த படத்ல உள்ள ரெண்டு காமெடியன்கள்ல ஒருத்தர்  நம்பியார். முதல் படத்ல காமெடி பண்ணினார். அடுத்து அடுத்து எப்டி நடிச்சார்னுதான் தெரீமே. 

அதன் பிறகும் நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 1944ல நவாப் நாடக குழூல இருந்து விலகி TK கிருஷ்ணசாமியின் நாடக குழூல சேந்துட்டார். இந்த குழூல SV சுப்பையா இருந்தார். நம்பியாருக்கும், சுப்பையாவுக்கும்  நாடங்கள்ல நல்ல பேர். 

மெதுமெதுவா அப்டியே ஹீரோவா நடிக்க சான்ஸ் கெடச்சுது. 1947ல கஞ்சன் படத்ல. அப்புறம் வேகவேகமா வில்லனா நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிகர் திலகம், புரட்சி நடிகர் படங்கள்ல அதிகமா இவர்தான் வில்லன்னு தெரியும். நடிப்புல  மெரட்னாலும், நெஜத்துல அடக்க ஒடுக்கமான மனுஷர். காமெடி சென்ஸ்  உள்ளவர். 

புரட்சி நடிகருக்கு ரொம்ப ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்டு. சச்சு, நாகேஷுக்கும்  நல்ல ஃப்ரெண்டு. ஷூட்டிங் ப்ரேக்ல நாகேஷும், நம்பியாரும் ஆடு புலி ஆட்டம் விளையாடுவாங்களாம். 

அப்டி நடிச்சிட்டு இருந்தவர குணசித்திர ரோல்ல நடிக்க வச்சவர் யார் தெரீமோ? நம்ம பாக்யராஜுதான். தூறல் நின்னு போச்சு [1982].

மழையவே காணோம், தூறலானு கேக்காதீங்க. அது படம் பேரு. 

நம்பியார் நாடக மன்றம் வச்சிருந்தார். 1950ல திகம்பர சாமியார் னு படத்ல 12 வேஷத்ல  நடிச்சார். செவிட்டு மந்திரவாதி, வெத்தல விக்கிறவர், நாதஸ்வர வித்வான், இஸ்லாமியர், போஸ்ட்மேன் இப்டி வேஷங்கள்ல அந்தந்த ரோலுக்கு ஏத்தமாதிரி பாடி லாங்க்வேஜ், குரல் மாடுலேஷன், டயலாக் டெலிவரி குடுத்து சூப்பரா நடிச்சாராம். 

2019ல நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னைல நடந்துச்சு. இந்த விழாவுக்கு இளையராஜா சிறப்பு விருந்தினராக போனார். 

நம்பியார் டிவி சீரியல்கள்ல நடிச்சார். 


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா 


மக்களை பெற்ற மகராசி 1957 / KV மகாதேவன் / மருதகாசி 

ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன் 


தேன் நிலவு 1961 / AM ராஜா / கண்ணதாசன் 

ஏஞ்சோக கதைய கேளு தாய்குலமே ஆமா தாய்குலமே 


தூறல் நின்னு போச்சு 1982 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 07, 2021 11:57 am

07.03.2021

பின்னணி பாடகி சாதனா சர்கம் பிறந்த நாள் [1969]

குஜராத் பொண்ணு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி னு 25 மொழிகள்ல பாடியிருக்கார்.

தமிழ்ல பாடிய முதல் படம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை. அறிமுகப்படுத்தியவர் வித்யாசாகர்.  தான் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக பாடக்கூடியவர்னு 
AR ரஹ்மான் சொல்லியிருக்கார்.

வட இந்திய பாடகர்கள்ல தமிழ்ல அதிகமா பாட்டு பாடியவர், தென்னிந்திய மொழிக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியவர் னு சிறப்பு இவருக்கு உண்டு. 

ஒரு பேட்டீல இவர் சொன்னது. 
நாபயிற்சி ரொம்ப முக்கியம். தமிழ் மொழியின் உச்சரிப்பு பிழையை உன்னிப்பாக ம்யூஸிக் டைரக்ட்டர்கள் கவனிப்பாங்க. நா குஜராத் பொண்ணா இருக்கிறதால, அவங்க கூட்டு முயற்சியோடு பாடுறேன். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 


கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா 
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா 

கோயம்புத்தூர் மாப்பிள்ளை 1996 / வித்யாசாகர் / வாலி
 
மான்குட்டியே புள்ளிமான்குட்டியே
ஓமேனிதான் ஒரு பூந்தொட்டியே 

பிரியமான தோழி 2003 / SA ராஜ்குமார் / பா விஜய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82796
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 1:30 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 FB_IMG_1506009504193-683x1024
-
அழகி திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில்
வெளிவந்த, ‘பாட்டுச் சொல்லி எனும் பாடலுக்கு,
தேசிய விருது பெற்றவர் இந்தியத் திரைப்பட பாடகி
சாதனா சர்கம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82796
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 1:36 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 159955
-

ஐயப்ப பக்தியைத் தமிழகத்தில் பிரபலப்படுத்திய
மகா குருசாமியாக நம்பியார் அறியப்படுகிறார்.

66. தனது நாடக ஆசான் நவாப் ராஜமாணிக்கத்துடன்
1942-ல் முதல் தடவையாகச் சபரிமலைக்குச் சென்றார்.

அதன் பின்னர் 65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குப்
புனித யாத்திரை சென்று வந்த ஒரே குருசாமி இவர்
மட்டும் தான்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 09, 2021 11:40 am

09.03.2021

பின்னணி பாடகர் TL மகராஜன் பிறந்த நாள் [1954]

பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மூத்த மகன். 10 வயசிலேயே வள்ளலார் என்ற நாடகத்தில நடிச்சு பாடினார். 1967ல முதல் முதலா திருவருட்ச்செல்வர் படத்ல TMS உடன் பாட ஆரம்பிச்சார். பின்னணி பாடகர் தீபன் சக்கரவர்த்தி இவரோட தம்பி.
 
"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாட்டை பாடினவங்கள்ல இவரும் ஒருத்தர்.  

நான் காதல் மதுவை குடிச்சுட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் 

தாளம் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை 

ஒரு வீடு ஒரு உலகம் 1978 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82796
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 09, 2021 1:47 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Images?q=tbn:ANd9GcSYjE5mEffIlntx6h3Lzhw_R8POgNWGNJVclg&usqp=CAU
-
TL மகராஜன்

Sponsored content

PostSponsored content



Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக