புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 1:28 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 Sriman-tam-20150324130253-659
-
தமிழில் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில்
காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து
அசத்தி வருபவர் நடிகர் ஸ்ரீமன்,
-
பிரபல தயாரிப்பாளரான பிரகாசு ரெட்டியின் மகன் இவர்.
---------------------


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 18, 2021 12:20 pm

18.02.2021

நடிகர் VS ராகவன் அவர்கள் பிறந்த நாள் [1925 - 2015]

நாடகங்கள்ல, TV சீரியல்கள்ல நடிச்சார். 1954ல வைரமாலை படத்ல நடிக்க ஆரம்பிச்சார். சில படங்களை டைரக்ட்டியிருக்கார். ஆரம்பத்தில இயக்குனர் திலகம் K பாலசந்தர் அவர்களின் மேடை நாடங்கள்ல நடிச்சார். 
சிவாஜி  கணேசன், MGR, ரஜினி, கமல் போன்றவங்க கூட மட்டுமில்லாம, இளைய தலைமுறை நடிகர்கள் கார்த்திக், விமல் கூடவும் நடிச்சார். 2013ல அலைவரிசை என்ற குறும்படத்தில நடிச்சார். 


நினைவில் நின்றவள் [1967] படத்ல ஒரு காமெடி ஸீன். 


பொருள் விளங்கா உருண்டை. இது என்னான்னு முழிக்காதீங்க. இந்த வீடியோவ பாருங்க புரியும். 
என்ன முதலாளி சௌக்கியமா [1972] படத்ல ஸீன். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 18, 2021 1:28 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 16-32-22-images
-
தி இந்து தமிழ் நாளிதழில் வி.எஸ்.ராகவன் அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தி ”சிறகு இரவிச்சந்திரன்” அவர்களால்
வெளியிடப்பட்டுள்ள கட்டுரை.
--
சமீபத்தில் மறைந்த நாடக ஆசான் வி.எஸ்.ராகவனைப் பற்றி நினைக்கும்போது ஒரு ரங்கோலி கோலமாய் நினைவுகள் பளீரிடுகின்றன.

நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு.வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க் ஆனது. அதனால் அவர் பேசும் வசனங்கள், சாகா வரம் பெற்றன!

மிமிக்ரி கலைஞர்கள் உண்மையாகவே ரசித்து லயித்து வி.எஸ்.ஆரின் குரலைப் பிரதிபலிப்பார்கள். எப்படி வாரியாருக்கு “ மகனேய்ய்ய்.. ‘ என்கிற கீச்சுக்குரல் இழுப்பு, முத்திரை ஆனதோ அதேபோல் வி.எஸ். ஆருக்கு “ ஷொல்லுங்க” அவருக்குச் ‘சா’வே வராது! ஷா தான் என்று நினைத்திருந்தோம். காலன் கணக்கு வேறு மாதிரியாக இருந்துவிட்டது. இறுதியில் அவருக்கு ‘சா’ வந்துவிட்டது!

எண்ணற்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த தலைமுறை எங்களுடையது. ஜாம்பவான்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி. ஆர்., ஜெமினி போன்றோரின் படங்களில் அவர் ஒரு இன்றியமையாத இணைப்பு. லேசான தலையாட்டலுடன் அவர் சொன்ன “பிள்ளைவாள் ” இன்னமும் சிதம்பரனாரை நம் கண் முன் நிறுத்துகிறது.

அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்ற கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களில், சரியான போட்டி இருந்தது. ஒரு பக்கம் எஸ்.வி. ரங்கா ராவ். இன்னொரு பக்கம் எஸ்.வி. சுப்பையா. அவர்களையும் சமாளித்து, தனக்கென ரசிகன் கவனத்தைத் திருப்பிய நடிகர்தான் எஸ்.வி.யைத் திருப்பிப் போட்ட வி.எஸ்.ராகவன்.

மத்தியதரக் குடும்பக் கதைகளை கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகுத் திறம்பட சொல்லிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் நடிகர் பட்டியலில் எப்போதும் வி.எஸ். ஆருக்கு ஒரு இடம் சாஸ்வதம்.

நாடகம் தந்த நல்முத்து

சதுரங்கம் என்கிற நாடகம் வி.எஸ். ஆரின் கலை வாழ்வில் முக்கியமானது. மேடை நாடகத்தில் முதன் முறையாகத் தமிழில் ஒரு செட் நாடகம் போட்டவர் அவர்தான். ஆனாலும் கதைப் பின்னலும் பாத்திரங்களின் குணாதிசயமும் ரசிகனைக் கட்டிப் போட்ட காலம் அது. ஒரே அறையின் பின்புலத்தில் ரசிகனை இருக்கையில் இருத்தி வைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. அதில் தைரியம் வந்துதான் பாலசந்தர் ‘எதிர்நீச்சலையே’ மேற்கொண்டார்.

தமிழில் அக்‌ஷர சுத்தமாகப் பேசும் வி.எஸ். ஆர். ஆங்கிலத்தில் அபாரப் புலமை பெற்றவர். கேம்பிரிட்ஜா/ ஆக்ஸ்போர்டா? என்பார்கள் அந்தக் காலத்தில் கிண்டலாக. அந்த மாதிரி ஒரு ஆங்கிலேயே உச்சரிப்புடன் அக்மார்க் சுத்தத்துடன் அவரது ஆங்கிலம் வெளிப்படும். வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமே அதன் உட்பொருளை விளக்கிவிடும்.

வி.எஸ். ஆர் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள வெண்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முடித்த பின்பு புரசைவாக்கத்தில் இருந்த அவரது சகோதரியின் வீட்டில் வசித்தபடி அவர் வேலை தேட ஆரம்பித்தபோது அவருக்கு 17 வயது.

பலருக்கும் தெரியாத தகவல் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது. எழுத்தாளர் துமிலன்( ந. ராமசாமி) நடத்தி வந்த ’ மாலதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அந்தப் பத்திரிகை மூடப்பட்டபிறகு அவரது எழுத்தாற்றல் அவரை நாடகத்துறைக்கு இழுத்துச் சென்றது.

1954-ல் ’ இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நாடகக் குழுவை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் ஒருவர்தான் கே. பாலசந்தர். அவரது தொடக்க கால நாடங்களில் பெரும்புகழ் பெற்றது ’ வைரமாலை’. அதன் வெற்றியால் பின்னர் அது திரைப்படமானபோது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்தார். அதுவே அவரது முதல் படம். அதன்பிறகு அவர் இல்லாத படமே இல்லை என்ற நிலை உருவானது.

நாகேஷின் நண்பர்

நாகேஷின் நெருக்கமான நண்பர் வி.எஸ்.ஆர். பொது இடங்களில், சுப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்கள். ஒரு கொடியில் இரு மலர்கள். நாகேஷ் சட்டென்று எல்லோரையும் சிநேகிப்பார். வி.எஸ்.ஆர். அப்படியல்ல. ஒரு நோட்டம் விடுவார். மெல்ல ஆளை பார்வையாலேயே எடை போடுவார். பிடித்திருந்தால் மட்டுமே கை நீட்டுவார். இதை நான் சிவாஜியிடமும் பார்த்திருக்கிறேன். இருவரையும் ஸ்பரிசித்த பெருமை என் கரங்களுக்கு உண்டு!

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நண்பன் எஸ்.வி.சேகரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் நாகேஷையும் வி.எஸ்.ஆரையும் சந்தித்தேன். அவர் பக்கத்தில் என்னை அமர வைத்தனர். தன் பெரிய கண்களை அகல விழித்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ சார் என் பேர் சிறகு இரவிச்சந்திரன்.. ஒரு இலக்கிய சிற்றிதழ் நடத்திக்கிட்டிருக்கேன்.” என்றேன். கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ எங்கே இருக்கேள்? நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். எனக்கு உங்க பத்திரிகையோட ஒரு பிரதி அனுப்புங்கோ! நான் இப்போ வீட்ல சும்மாத்தான் இருக்கேன்.. படிச்சுட்டு ஷொல்றேன்” என்றார்.மற்றொரு திருமண வைபவத்தில் சந்தித்தபோது மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டார்.

“ சிறகு வந்தது.. படிச்சேன். நன்னாருக்கு.. தொடர்ந்து பண்ணுங்கோ “

ஒரு சிற்றிதழ் ஆசிரியனுக்கு உற்சாக டானிக் பாராட்டுதானே!

கட்டுக்கோப்பை விரும்பிய கலைஞன்

அடிப்படையில் நானும் ஒரு மேடை நாடக நடிகன் / எழுத்தாளன் என்பதால் வி.எஸ். ஆர். குழுவின் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவரது நாடகக் குழுவில் மாற்று நடிகர்கள் என்ற ஏற்பாடே கிடையாது.

சாக்கு போக்கு சால்ஜாப்பு எல்லாம் வி.எஸ்.ஆரிடம் செல்லாது. அதேபோல் நடிகர்களுக்குத் தோதாகத் தேதிகளை மாற்றும் வேலையும் அவரிடம் பலிக்காது. அந்த நாடகம் பல காட்சிகள் போடப்பட்டு இனிமேல் காட்சிகள் இல்லை என்கிற நிலையில்தான், அவரது குழு கலைஞர்கள் வேறு நிகழ்வுகளுக்குச் செல்ல முடியும்.

ஒரு முறை அவரது நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகை, இனிமேல் அவர் நடித்துக் கொண்டிருந்த வி.எஸ்.ஆரின் நாடகம் போடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் புதிய நாடகக் குழுவுக்குத் தன் தேதிகளைக் கொடுத்து விட்டார். புதிய நாடகம் மியூசிக் அகாடமியில்.. மாலை ஆறு மணிக்கு வி.எஸ்.ஆர். அந்த புதிய குழுவின் ஒப்பனை அறைக்கு வெளியே நின்றுகொண்டு அதன் தயாரிப்பாளரை வெளியே வரச் சொல்கிறார்.

“ என் ட்ரூப் ஒரு குடும்பம் மாதிரி… நீ ஆசை காட்டி என் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து விட்டாய் “ என்கிற ரீதியில் சரமாரியாக ஆங்கிலத்தில் சதிராடுகிறார். கடைசியில் ஒரு தகப்பனின் சோகத்தோடு அவர் அகன்ற காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. “ இனிமே நான் நாடகம் போட மாட்டேன்! அந்தப் பாவம் உன்னைத்தான் சேரும்” சாபத்தோடு முடிகிறது சர்ச்சை! இவ்வளவு ரகளைக்கும் காரணமான அந்த நடிகை உள்ளேயிருந்து வெளியே வரவே இல்லை.

வார்த்தையை ஒரு ஒப்பந்த சாசனமாகவே எண்ணி வாழ்ந்தவர் வி.எஸ்.ஆர். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பவர் அவர். காலை படப்பிடிப்புக்கு வந்து விட்டால் எந்த வித சோர்வும் வெறுப்பும் இன்றித் தன் வேடம் வரும் காட்சிக்காகக் காத்திருப்பதில் அவருக்கு அலுப்பே இருந்ததில்லை. அதற்குக் காரணம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு!
--
--நன்றி- ”அன்று கண்ட முகம்”

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 19, 2021 11:53 am

19.02.2021

நடிகை சரண்யா மோகன் பிறந்த நாள் [1986]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா 


யாரடி நீ மோகினி 2008 / யுவன் சங்கர் ராஜா / கண்ணதாசன் 

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே 


வேலாயுதம் 2011 / விஜய் ஆண்டனி / அண்ணாமலை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2021 12:57 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 58340
-


தமிழில் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன்.
பின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு,
அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம் உட்பட பல படங்களில்
நடித்த இவர், தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு
மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த
பல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்
அரவிந்த் கிருஷ்ணனுக் கும் 2015 ஆம் ஆண்டு திருமணம்
நடந்தது. இவர்களுக்கு அனந்த பத்ம நாபன் என்ற ஆண்
குழந்தையும், ’அன்னப்பூர்ணா’ என்ற பெண் குழந்தையும்
உள்ளனர்
-
--------------------

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 20, 2021 12:06 pm

20.02.2021

நடிகை விஜய நிர்மலா அவர்கள் பிறந்த நாள் [1946 - 2019]

தெலுங்கு படங்கள்ல நடிகை, தயாரிப்பாளர், டைரக்ட்டர். நிறைய படங்களை டைரக்ட்டின பெண் டைரக்ட்டர்ன்னு 2002ல கின்னஸ் புத்தகத்தில இவர் பேரை சேத்திருக்காங்க. இவரும், நடிகையர் திலகம் சாவித்திரி மட்டும்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வச்சு படம் எடுத்த பெருமைக்குரியவர்கள். 

1950ல வந்த மச்ச ரேகை படத்தில குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு வந்தார். 1965ல எங்க வீட்டு பெண் படத்ல  நடிகையானார். 

ரகுபதி வெங்கையா விருது வாங்கியிருக்கார். 


இந்த பாட்ட மறக்க முடியுமா? 
எலந்த பயம் எலந்த பய எலந்த பயம் செக்க செவந்த பயம் 


பணமா பாசமா 1968 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

பணமா பாசமா 1968 படத்ல காமெடி முதலிரவு ஸீன். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2021 2:13 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 Vijaya-nirmala-biopic02-1587907315
-
சுமார் 250 படங்களில் நடித்துள்ள விஜய நிர்மலா,
44 படங்களையும் இயக்கியுள்ளார். இத்தனை படங்களை
இயக்கிய ஒரே பெண் இயக்குனர், இவர்தான்.

இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்
பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை கதையை, இவர் மகனும்
இயக்குனருமான நரேஷ் கிருஷ்ணா படமாக்க எடுக்க
இருக்கிறார்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 11:59 am

21.02.2021

நடிகர் கருணாஸ் பிறந்த நாள் [1970]

12 வயஸ்லேயே கானா பாட்டு பாட ஆரம்பிச்சுட்டார். 2001ல நந்தா படத்துல 'லொடுக்கு பாண்டி' என்ற கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சார். 2008ல திண்டுக்கல் சாரதி படத்ல ஹீரோவானார். ஹீரோவா நடிச்ச படங்களுக்கு வரவேற்பு கிடைக்காததால, ஹீரோவா நடிக்கிறத விட்டுட்டார். 
இவரோட மனைவி க்ரேஸ் சினிமால பாட்றவர்.  சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாடியிருக்கார். தயாரிச்சிருக்கார். நடிகர் சங்கத்தின் துணை தலைவரா இருந்திருக்கார். 


திண்டுக்கல்லு திண்டுக்கல்லு மதுரை ஜில்லா எனக்கு 


திண்டுக்கல் சாரதி 2008/ தினா / V இளங்கோ 

ஏ சூடாமணி 


ரகளபுரம் 2013 / ஸ்ரீகாந்த் தேவா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 12:11 pm

21.02.2021

பின்னணி பாடகர் விஜய் ப்ரகாஷ் பிறந்த நாள் [1976]

இசையமைப்பாளரும்கூட. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். உலகளவுல புகழ் பெற்ற "ஜெய் ஹோ" பாட்டு பாடியவங்கல்ல இவரும் ஒருத்தர். ப்ரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர். விளம்பரங்கள்ல பாடியிருக்கார். 
TV ம்யூஸிக் நிகச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.

2016ல இவருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கர்னாடக அரசு குடுத்துச்சு. ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, எடிசன் விருது, SIIMA விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகளும்  வாங்கியிருக்கார். 


பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் 


அன்பே சிவம் 2003 / வித்யாசாகர் 

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை 


எந்திரன் 2010 / AR ரஹ்மான் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 21, 2021 4:51 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 31 Karunas-family
-
தற்போது நடிகர் கருணாஸ் குடும்பம் புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவு
இட்டு வருகின்றன.

அதிலும்,நடிகர் கருணாஸ் மகன் கென்
கருணாஸ் மாதிரியும், மகள் டயானாவை பார்ப்பதற்கு
அப்படியே அவங்க அம்மா கிரேஸ் மாதிரியே
இருக்கிறார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து
வருகின்றனர்.
-
‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸ் அவர்களின் மகன் கென்
நடித்து உள்ளார்.
-------
-பிஹைன்ட் டாக்கீஸ்

Sponsored content

PostSponsored content



Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக