புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
181 Posts - 77%
heezulia
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
10 Posts - 4%
prajai
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_m10சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Fri Aug 28, 2020 6:10 pm

சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-1


1. இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்!

(இடப்பங்கீடு குறித்த முழுமையான புரிதல் இல்லாத
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பதிவு)

இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அதிகார நிலை படிக்கட்டுகளில் ஓரளவாவது முன்னேற முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இடப்பங்கீடு தான்.

தேசிய அளவில் பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.50% இடப்பங்கீடு வழங்கப்படுகிறது. உயர்வகுப்பினரில் ஏழைகள் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு 10% இடப்பங்கீடு 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது என்று கூறி, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அது எதிர்காலத்தில் தொடருமா, தொடராதா? என்ற வினா நீடிக்கிறது. சமூகநீதி வெல்லுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது.

சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர் 4S2qPPHaTaaYvlPyiZrv+78641986_1530344843796463_7449131165820125184_n








மாநில அளவில் எடுத்துக் கொண்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடப்பங்கீடு வழங்கப்படுகிறது. இவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடும், பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 விழுக்காடும் உள்பங்கீடாக வழங்கப் படுகின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இரு தரப்பினருக்கும், அவர்களைச் சார்ந்த சமூகப் பிரிவுகளுக்கும் இடப்பங்கீடு வழங்கப்படுகிறது என்றாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு கிடைத்த வரலாறு வலிகள் நிறைந்ததாகும்.

தமிழகத்தில் இடப்பங்கீடு வரலாறு

இந்தியாவில் தேசிய அளவில் பார்த்தால் சாஹு மகராஜா காலத்திலிருந்தே பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு இடப்பங்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதற்கு 62 ஆண்டுகள் முன்பாக 1840-ஆம் ஆண்டிலேயே விஸ்வகர்மா சமுதாயத்தினர் தங்களுக்கு இடப்பங்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

அதன்பின் 31 ஆண்டுகள் கழித்து 1871-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு வழங்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. அந்த ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத இந்துக்களும், இஸ்லாமியர்களும் அரசியலில் சாதிக்க முடியாத அளவுக்கு ஒதுக்கப்படுகின்றனர் என்ற உண்மை கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 1881-ஆம் ஆண்டில் சமூக அடிப்படையில் பின்தங்கிய மக்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1882-ஆம் ஆண்டில் ஒரு சமுதாயத்தின் பின்தங்கிய தன்மையை அளவிடுவதற்கு கல்வியை ஓர் அளவீடாகக் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து 1885-ஆம் ஆண்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் கல்விக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆனாலும், நீதிக்கட்சி ஆட்சியில் 1921-ஆம் ஆண்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான கம்யூனல் ஜி.ஓ. பிறப்பிக்கப்பட்டு, 1927-ஆம் ஆண்டு சுப்பராயன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இடப்பங்கீடு சாத்தியமானது. அதற்கான அரசாணை எண் 1071 பொதுத்துறை சார்பில் 04.11.1927 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை மாகாண அரசு பணிகளில் வழங்கப்பட்ட இடப்பங்கீடு வருமாறு:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 5/12 இடங்கள் 41.67%
2. பிராமணர்கள் - 2/12 இடங்கள் 16.67%
3. இஸ்லாமியர்கள் - 2/12 இடங்கள் 16.67%
4. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர் - 2/12 இடங்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 1/12 இடங்கள் 8.33%
மொத்தம் - 12/12 இடங்கள் 100%

சென்னை மாகாணத்தில் மத்திய அரசு
பணிகளில் 100% இடப்பங்கீடு

சென்னை மாகாணத்தில் வகுப்புவாரியாக 100% இடப்பங்கீடு வழங்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இடப்பங்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பொப்பிலி அரசரும், தந்தை பெரியாரும் தான் 1934-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் இடப்பங்கீடு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் நிற்காமல் இந்த இடப்பங்கீடு கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றும் பணி ஆற்காடு இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான ஆற்காடு இராமசாமி முதலியார் என்றழைக்கப்பட்ட ஏ.ஆர். முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் தந்தை பெரியார், பொப்பிலி அரசர் ஆகியோரின் பிரதிநிதியாக தில்லிக்கு சென்று சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 100 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய ஆட்சியாளர்களிடம் விளக்கி இடப்பங்கீடு வழங்க வைத்தார். இதற்காக ஆணை 1935-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

Government of India, Home department, Establishment special order No.F 14/06/34 dt. 15.03.1935 என்ற பெயரிலான மத்திய அரசு ஆணையின்படி சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடப்பங்கீடு வருமாறு:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 44%
2. பிராமணர்கள் - 16%
3. இஸ்லாமியர்கள் - 08%
4. ஆங்கிலோ இந்தியர்/ ஐரோப்பியர் - 08%
5. இதர சிறுபான்மையினர் - 08%
6.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 16%
மொத்தம் -100%

சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த இடப்பங்கீடு அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உதவியாக இருந்தது. 1935-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இடப்பங்கீடு 1947-ஆம் ஆண்டு வரை மட்டும் தான் நடைமுறையில் இருந்தது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த நிலையில், அடுத்த ஆறாவது நாள், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்பட்டது; 45&ஆவது நாளில், அதாவது செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த இடப்பங்கீடு ரத்து செய்யப்பட்டது. அந்த சமூக அநீதியை செய்தவர் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு. அதனால் சென்னை மாகாணத்தில் அனைத்துத் தரப்ப்பினரும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவர்கள் இடப்பங்கீட்டை இழந்தனர். அப்போது மட்டும் அந்த இடப்பங்கீடு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், பின்னாளில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நீட்டிக்கப் பட்டிருக்கும். சமூகநீதிக்காக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.

அதேநேரத்தில் விடுதலைக்கு முன்பே தேசிய அளவில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்தது.

ஆனால், Government of India, Home department, Establishment special order No.F 14/06/34 dt. 15.03.1935 என்ற ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டதால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய விடுதலைக்குப் பிறகு 1994 வரையிலான 47 ஆண்வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Fri Aug 28, 2020 6:30 pm

சுக்கா... மிளகா... சமூகநீதி?-அத்தியயம் -2. இடப்பங்கீடு: அம்பேத்கரின் ஒற்றை வார்த்தை நிகழ்த்திய அற்புதம்!


இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து 1947-ஆம் ஆண்டில் தான் விடுதலை பெற்றது என்றாலும், அதற்கு முன்பாகவே விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. விடுதலைக்குப் பிறகு இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் நிர்ணய அவை 1946-ஆம் ஆண்டு திசம்பர் 9-ஆம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைகள் இருந்த நிலையில், அவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்து தான் அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னாளில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜேந்திர பிரசாத் இந்த அவையின் தலைவராகவும் பதவி வகித்தார்.

அரசியல் நிர்ணய அவையின் முக்கியப் பணி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது ஆகும். அந்த பொறுப்பு அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட வரைவுக் குழுவின் தலைவராக அண்ணல் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்த குழுவுக்கு உதவுவதற்காக இந்திய குடிமைப் பணி அதிகாரியும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய பி.என்.ராவ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள அரசியலமைப்பு சட்டங்கள் எவ்வாறு உள்ளன? என்பதை ஆய்வு செய்ததுடன், அவற்றில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவில் சேர்த்து வந்தார். பி.என்.ராவ் உலகம் முழுவதும் சென்று சேகரிக்கும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்தவாறே தெரிந்து கொள்ளும் அளவுக்கும், தேவைப்பட்டால் பி.என்.ராவ் அளிக்கும் விவரங்களை இந்தியத் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யும் அளவுக்கும் அம்பேத்கர் அறிவும், திறமையும், வல்லமையும், அனுபவமும் பெற்றிருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் மிகவும் சவாலாக இருந்தவற்றில் குறிப்பிடத்தக்கது இடப்பங்கீடு குறித்த பிரிவுகளை உருவாக்குவது தான். இடப்பங்கீடு குறித்து அரசியல் நிர்ணய அவையில் பல்வேறு தருணங்களில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசு பணிகளில் இடப்பங்கீடு அளிப்பது தொடர்பாக 30.11.1948 அன்று அரசியல் நிர்ணய அவையில் விவாதம் நடைபெற்றது. அதற்காக அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் ஒரு வரைவை தயாரித்துக் கொடுத்திருந்தார். அதன் விவரம்:
‘‘Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State‘‘

‘‘அரசு பணி நியமனங்கள் அல்லது பதவிகளில், போதிய பிரதிநிதித்துவம் பெறாதவர்கள் என்று அரசால் கருதப்படும் எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு சாதகமாக இடப்பங்கீடு வழங்குவதற்கான புதிய பிரிவுகளை அரசு இயற்றுவதை இந்தப் பிரிவில் உள்ள எந்த அம்சமும் தடுக்காது’’ என்பது தான் அந்த வரைவுப் பிரிவின் பொருள் ஆகும்.

அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் தயாரித்துக் கொடுத்த வரைவை அம்பேத்கர் அப்படியே அவையின் விவாதத்திற்கு முன்வைக்கவில்லை. மாறாக அதில் ஒரே ஒரு சொல்லை கூடுதலாக சேர்த்து விவாதத்திற்கு வைத்தார். அதன் விவரம்:

‘‘Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any Backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State‘‘

‘‘அரசு பணி நியமனங்கள் அல்லது பதவிகளில், போதிய பிரதிநிதித்துவம் பெறாதவர்கள் என்று அரசால் கருதப்படும் எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு சாதகமாக இடப்பங்கீடு வழங்குவதற்கான புதிய பிரிவுகளை அரசு இயற்றுவதை இந்தப் பிரிவில் உள்ள எந்த அம்சமும் தடுக்காது’’

அதாவது பி.என்.ராவ் தயாரித்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த ‘‘எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு’’ என்ற சொற்றொடரில் குடிமக்களுக்கு என்ற சொல்லுக்கு முன்பாக பிற்படுத்தப்பட்ட என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சேர்த்து ‘‘எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு’’ என்று மாற்றுகிறார். அவ்வாறு திருத்தப்பட்ட வரைவு தான் வரைவு எண் 10(3) என்ற பெயரில் அவையின் ஆய்வுக்கு வைக்கப்படுகிறது.

வரைவு எண் 10(3) மீதான விவாதத்தில் மொத்தம் 17 பேர் பங்கேற்று பேசினார்கள். அவர்களில் நான்கு உறுப்பினர்கள் இந்த வரைவில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த 10(3) உட்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று இரு உறுப்பினர்கள் திருத்தம் கொண்டு வந்தனர். அம்பேத்கர் அவர்களால் சேர்க்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று ஒருவரும், இடப்பங்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு மட்டும் தான் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று இன்னொருவரும் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அந்த 3 திருத்தங்களும் விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தி தள்ளுபடி செய்யப்பட்டன.

விவாதத்தில் பங்கேற்று பேசிய 17 பேரில் சிலர் அம்பேத்கரின் திருத்தத்திற்கு எதிராகவும், பலர் அந்த திருத்தத்திற்கு ஆதரவாகவும் பேசினார்கள். பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லை நீக்கி விட்டு பட்டியலினம் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று இருவர் கருத்து தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத் தலைவரும், 1937-ஆம் ஆண்டில் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியவருமான வி.ஐ. முனியசாமி பிள்ளை 10(3) உட்பிரிவில் அம்பேத்கர் சேர்த்த பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கு முன்னோ, பின்னோ பட்டியலினம் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரினார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் அதே கோரிக்கையை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக சிறுபான்மை சமுதாயங்கள் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று முஸ்லீக் லீக் கட்சியைச் சேர்ந்த கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் கூறினார். இவர்கள் 6 பேர் கூறியதும் அம்பேத்கர் முன்வைத்த திருத்தப்பட்ட வரைவுக்கு எதிரான கருத்துகளாகும்.

சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் 1d2aEooVRUSgsLjIfh0r+101964310_1531288860368728_2237318253409992704_n


அம்பேத்கரின் வரைவுக்கு ஆதரவாக ஆறு பேர் கருத்து தெரிவித்திருந்தனர். 10(3) உட்பிரிவில் சேர்க்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட என்ற சொல் அப்படியே இருக்கலாம் என்று 5 பேர் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒருவர் இட ஒதுக்கீடு என்பது காலவரையின்றி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் சமத்துவம் ஏற்படும் வரை தொடர வேண்டும் என்றுகருத்து தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், முதலாவது மக்களவையின் தலைவராக பணியாற்றியவருமான சீக்கியத் தலைவர் சர்தார் ஹுக்கம் சிங், தமது வாழ்நாளில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டதை பார்க்கவில்லை என்று கூறினார். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ‘‘சீக்கியர்களின் கலாச்சார அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் தவறி விட்டது’’ என்று கூறி, அதில் கையெழுத்திட மறுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய அம்பேத்கர், 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லை தாம் சேர்த்தது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:
‘‘பி.என்.ராவ் தயாரித்து எங்களுக்கு அளிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அந்த முதலாவது வரைவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல் இல்லை. எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; அதேநேரத்தில் அரசு பணிகளில் காலங்காலமாக பிரதிநிதித்துவம் பெற்றிருக்காத சமூகங்களின் கோரிக்கை கவனிக்கப் பட வேண்டும் என்ற இரு செய்திகள் தான் இங்கு முதன்மையானவையாகும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டும்; பாதுகாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே வரைவுக்குழு தாமாகவே பொறுப்பேற்றுக் கொண்டு ‘‘பிற்படுத்தப்பட்ட’’ என்ற சொல்லை சேர்த்தது. பிற்படுத்தப்பட்ட என்னும் சொல் சேர்க்கப்படாவிட்டால் இந்தப் பிரிவில் உள்ள இடஒதுக்கீடு அடிபட்டு போகும். இதை உணர்ந்து இதைவிடச் ‘‘சிறந்ததொரு சொற்கோவையைக்’’ கொடுக்க முடியாது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை அந்தந்த அரசுகள் வரையறுக்கும்’’.

இவ்வாறு அம்பேத்கர் அளித்த விளக்கத்தை ஏற்று 10(3) உட்பிரிவு நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 10(3) உட்பிரிவு தான் இப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள 16(4) பிரிவு ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினாலும் கூட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையே என்ற எண்ணம் நம்மில் பலருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அது குறித்தும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குடிகள் என்று கூறியது இப்போதைய இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிக்காது. மாறாக, பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள மூன்று பிரிவுகளையும் குறிக்கும் என்பதை அம்பேத்கரின் பல உரைகளில் இருந்து அறியலாம். இவர்களில் பட்டியலினத்தவர்கள் யார்? என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341 ஆவது பிரிவின்படியும், பழங்குடிகள் யார்? என்பதை 342-ஆவது பிரிவின்படியும் அரசு ஏற்கனவே தீர்மானித்து இருந்தது.

பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள இந்த இரு பிரிவினரையும் கடந்து இந்தியாவில் இன்னும் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். அவர்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூறலாம். அவர்களை இப்போது வகைப்படுத்த முடியவில்லை. ஆனால், 340-ஆவது பிரிவின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதற்கான வரையரைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்பது தான் அம்பேத்கர் அவர்களின் நிலைப்பாடு ஆகும்.

அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் தயாரித்துக் கொடுத்த வரைவு அப்படியே நிறைவேற்றப்பட்டிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியின வகுப்பினருக்கு இடப்பங்கீடு இன்று வரை கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது இடப்பங்கீடு பெறுவதற்கு இன்னும் கூடுதலான போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டியிருந்திருக்கலாம். அத்தகைய நிலை ஏற்படாமல் பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள 3 பிரிவினருக்கும் இடப்பங்கீடு கிடைத்ததற்கான காரணங்களில் முக்கியமானது 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லை அம்பேத்கர் சேர்த்தது தான். அந்த ஒற்றை வார்த்தை தான் அதிசயத்தை நிகழ்த்தியது என்றால் அது மிகையில்லை.



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Fri Aug 28, 2020 6:41 pm

சுக்கா... மிளகா... சமூகநீதி?-அத்தியயம் -3. இடப்பங்கீடு மறுப்பும், முதலாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தமும்!


சமூகநீதியை வளர்த்தெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதற்கு ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வரும் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளும் முக்கியக் காரணம் ஆகும்.

1927&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆதரவுடன் நடைபெற்ற சுப்பராயன் தலைமையிலான ஆட்சியில் 1071 என்ற எண் கொண்ட கம்யூனல் ஜி.ஓ. 04.11.1927 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 100% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 5/12 இடங்கள் 41.67%
2. பிராமணர்கள் - 2/12 இடங்கள் 16.67%
3. இஸ்லாமியர்கள் - 2/12 இடங்கள் 16.67%
4. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர் - 2/12 இடங்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 1/12 இடங்கள் 8.33%
மொத்தம் - 12/12 இடங்கள் 100%

பிராமணர்கள் அல்லாத இந்துக்களுக்காக 41.67% இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் கூட, அது பிராமணர் அல்லாத அனைத்து இந்து சமூகப் பிரிவினரையும் சென்றடையவில்லை. இது தந்தை பெரியாரை வருத்தமடையச் செய்தது.‘‘வெள்ளையரிடமிருந்து பார்ப்பனர்கள் வாங்கிக் கொண்டது போல பார்ப்பனர்களிடமிருந்து வாங்கி உயர்பிரிவு மக்களிடமே போய்ச் சேர்ந்துவிட்டது. பார்ப்பனரல்லாதர் இடப்பங்கீடு என்கிற பெயரில் சில உயர்சாதியினரே அனைத்து இடங்களையும் கைப்பற்றிக் கொள்வது சரியல்ல. பிராமணர் அல்லாதோர் தொகுப்பில் உழைக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு தனிப்பங்கு கொடுக்கப்பட வேண்டும்’’ என்று 1934-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

ஆனால், அதன்பின் சில ஆண்டுகள் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதிலும் பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோடுக்கு தனி இடப்பங்கீடு என்ற தந்தை பெரியாரின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 1937&ஆம் ஆண்டு இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில், இனி பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடப்பங்கீடு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அதே நிலைமை நீடித்த நிலையில் 1947-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவியேற்றதற்கு அடுத்த நாளே, அதாவது 24.03.1947 அன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடப்பங்கீட்டை அவர் அறிவித்தார். உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 14.29% இட ஒதுக்கீட்டை அறிவித்து அவர் அரசாணை வெளியிட்டார். அதன்படி, 1927 முதல் நடைமுறையில் இருந்து வந்த 5 பிரிவுகளைக் கொண்ட இடப்பங்கீடு 6 பிரிவுகளைக் கொண்ட இடப்பங்கீடாக விரிவுபடுத்தப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட இடப்பங்கீட்டின் விவரம்:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் -6/14 இடங்கள் 42.86%
2.பிராமணர் அல்லாத இந்து
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 2/14 இடங்கள் 14.29%
3. பிராமணர்கள் - 2/14 இடங்கள் 14.29%
4. தாழ்த்தப்பட்டோர் - 2/14 இடங்கள் 14.29%
5. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர் - 1/14 இடங்கள் 7.14%
6. இஸ்லாமியர்கள் - 1/14 இடங்கள் 7.14%
மொத்தம் - 14/14 இடங்கள் 100%

பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கப்பட்டாலும் அது அவர்களுடைய மக்கள்தொகையை விட குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட இரு மடங்கு அளவுக்கும், பிராமணர்களுக்கு அவர்கள் மக்கள்தொகையை விட சுமார் 5 மடங்கும் இடப்பங்கீடு வழங்கப்பட்டது.

ஆனாலும் கூட பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கப்பட்டது அப்போது பெரும் திருப்பமாகவே பார்க்கப்பட்டது. ‘‘காங்கிரஸ் ஆள்கிறதா? தாடி இல்லாத ராமசாமி ஆள்கிறாரா?’’ என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதைப் பற்றி முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் கவலைப்படவில்லை. பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கியதன் மூலம் பிற்படுத்தப் பட்டோருக்கு முதன்முதலாக இடப்பங்கீடு வழங்கியவர் என்ற பெருமை ஓமந்தூராருக்கு கிடைத்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 16(4) ஆவது பிரிவின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இடம் அளிக்க வகை செய்யப்பட்டது. ஆனாலும், 340&ஆவது பிரிவின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதற்கான வரையரைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டால் மட்டும் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தாமதம் ஆனது. அதேநேரத்தில் 1927&ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு 1947&ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து இடப்பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், செண்பகம் துரைராஜன் என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கால் அந்த இடப்பங்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது. அது தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்.

ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் செண்பகம் துரைராஜன் வழக்கு இயல்பாக நடந்தது அல்ல.... திட்டமிட்டு திணிக்கப்பட்டது ஆகும் என்பதை புரிந்து கொள்ள முடியும். 1950&ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6&ஆம் தேதி செண்பகம் துரைராஜன் என்னும் மாணவி சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனவும், சி. ஆர். சீனிவாசன் என்ற மாணவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்க வில்லை எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும் UuCkVmP8Tl6IFGfRfFEE+78969431_1532244196939861_1349100689971740672_n

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆம்... வழக்குத் தொடர்ந்த செண்பகம் துரைராஜன் மனுவில் குறிப்பிட்டிருந்தவாறு அவர் மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக விண்ணப்பமே செய்யவில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணாராவ் இந்த வழக்கில் தாமாக முன்வந்து செண்பகம் துரைராஜன், சீனிவாசன் ஆகியோருக்காக வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது விதிகளுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை எதிராக இருப்பதால் தமிழகத்தில் இடப்பங்கீடு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஆணையிட்டது. இவ்வாறாக தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக்கு முடிவு கட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்களை தந்தை பெரியார் நடத்தினார். மற்றொரு பக்கம் அப்போது தான் புதிதாக திமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருந்த அறிஞர் அண்ணாவும் இடப்பங்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தினார்; அறிக்கைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பிரிவினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

14.08.1950 அன்று சென்னை மாகாணம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் கம்யூனல் ஜி.ஓ. காக்க களத்தில் இறங்கினர். ‘‘கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற பெரியாரின் தீர்மானத்தை மக்கள் முன்னிலையில் மாணவர்கள் நிறைவேற்றினார்கள். சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து நாடெங்கும் வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்! என தந்தை பெரியார் 14.09.1950 அன்று வேண்டுகோள் விடுத்தார். மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘‘அரசியல் சட்டம் ஒழிக!.... வகுப்புவாரி உரிமை வேண்டும்!’’ என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை செல்லாது என அறிவித்த மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி தங்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும் தமிழக மக்கள் உணர்த்தினர். மத்திய அரசுக்கு அது பெரும் தலைவலியாக மாறியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சென்னை மாகாணத்தில் வேலைவாய்ப்பில் மட்டுமே இடப்பங்கீடு வழங்க முடியும் என்பதை எதிர்த்து அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களின் ஆதரவையும் திரட்டி 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் கம்யூனல் ஜி.ஓ. மாநாட்டை தந்தை பெரியார் நடத்தினார். அதில் ‘‘ எங்காளுங்களுக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்’’ என்று அவர் மத்திய அரசிடம் வினா எழுப்பினார்.

தந்தை பெரியாரின் இந்த முழக்கம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியது. பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு கொடுத்தால் கூட அதனால் பெரிய அளவில் பயன் கிடைக்காது; கல்வியில் இடப்பங்கீடு கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

இடப்பங்கீட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பிரதமர் நேருவிடம் காமராஜர் எடுத்துக் கூறினார். அப்போராட்டங்களின் பின்னணியில் உள்ள நியாயங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். அதையேற்று 1951-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவில் 4 என்ற உட்பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் மாநில அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான போராட்டத்தை முன்னெடுத்ததில் தந்தை பெரியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு கொண்டு சென்ற காமராசர், போராட்டங்களை வலுப்படுத்திய அறிஞர் அண்ணா ஆகியோரின் பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும்



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 6:42 pm

மருத்துவர் ச இராமதாசு பா  ம க நிறுவனர்.
ஆரம்ப காலத்தில் மருத்துவ சேவை தைலாபுரம் பக்கம் 
அதிகம் செய்ததாக அறிந்தோம்.

ரமணியன் 

{4S2qPPHaTaaYvlPyiZrv+78641986_1530344843796463_7449131165820125184_n 
இது மாதிரி லிங்க் களை எடிட் செய்து நீக்கிவிடலாம்.}



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 6:49 pm

இதை தனித்தனி திரியாக போடுவதை தவிர்த்து ஒரே திரியில் பதிவிடவும்.

ஒன்றாக இணைக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக