புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_lcapநன்றி மலர்களைப் பரப்புவோம் I_voting_barநன்றி மலர்களைப் பரப்புவோம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மலர்களைப் பரப்புவோம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 6:45 pm

நன்றி மலர்களைப் பரப்புவோம் Tamil_News_large_2488147
-
உலகம் தோன்றிய நாள் முதல் அனைவரும் பயன்படுத்தும் உன்னத வார்த்தை நன்றி என்பது. உதவி செய்தவரின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, அவரை மேலும் உதவி செய்யத் துாண்டுகிறது.

இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் சேவைகளின் வளர்ச்சி. ஒற்றுமையின் உன்னதம், மானுடத்தின் அடையாளம்.நன்றி என்பது தோன்றி மறையும் நீர்க்குமிழி அல்ல. காலங்காலமாக பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவதொரு சூழலில், அவரவர்கள் செய்த உதவிக்கு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் உன்னதச் சொல் இது.கடைசி நேரத்தில் அவர் செய்த உதவி இருக்கு பாருங்க, அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்’ என நெகிழ்ச்சியோடு சொல்பவர்களும் உண்டு.நன்றி என்பது வெறும் வார்த்தையல்ல, அது வாழ்க்கை. அது வாயிலிருந்து வரக்கூடாது. இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டும்.


கண்ணதாசன் தரும் விளக்கம்


நிறைய பேர் தனக்கு உதவி செய்தவர்களைப் பார்த்து, என்னை வாழ வைத்த தெய்வம் என்பார்கள். அதைத்தான் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில்,“ஆசை களவு கோபம் கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம்” என்றார்.நன்றியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வள்ளுவர் கூட செய்ந்நன்றியறிதல் என ஒரு தனி அதிகாரத்தையே படைத்துள்ளார். செய்நன்றியை மறந்தவருக்கு வாழ்க்கையில் உயர்வே கிடையாது என்பதை,

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்கிறார்.

நன்றி மறப்பது நன்றன்று’நான் அவருக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறேன். ஆனால் பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை நன்றின்னு சொன்னதில்லை’ என சிலர் ஆதங்கப்படுவார்கள். இன்னும் சிலர் ‘நான் செய்த உதவிக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இன்னும் எவ்வளவோ உதவிகளைச் செய்திருப்பேன்’ என்பார்கள்.
கேட்கிற போதெல்லாம் பணத்தை துாக்கிக் கொடுத்தேன், கொஞ்சம் கூட நன்றியில்லை என சொல்பவர்களும் உண்டு. உதவிகள் கூடுவதும், குறைவதும் நன்றியைப் பொறுத்தது தான் அமைகிறது.ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவரும், நம் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் சில விஷயங்களுக்காக, காலமெல்லாம் நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறோம். அவற்றுள் முக்கியமாக,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 6:46 pm

எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு



நட்பு என்பது மனதில் உள்ள துயரங்களையும், இறுக்கங்களையும் இறக்கி வைக்கும் மறுவாழ்வு மையம். நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். துன்பத்தைப் பாதியாக்கும். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு என்றும் மாறாதது. உலகையே படைத்துக் காக்கின்ற கடவுளுக்கு கூட நட்பு என்னும் உறவு தேவைப்படுகிறது. நாட்டை ஆளும் மன்னனுக்கும் இந்த நட்பு அவசியமாகிறது. நல்ல நண்பர்கள் கிடைத்தால் அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. நண்பர்கள் சரியாக அமையவில்லையெனில், அவனிடம் இருப்பது ஒன்றுமில்லை.


எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்கு



நம் மனதில் உள்ள அக இருளை அகற்றி வெளிச்சத்தை தருவது எழுத்துக்களாகும். மானுட சமூகத்தை, கால ஓட்டத்திற்கேற்ப ஓர் அடி உயர்த்திக் கொண்டே இருப்பது எழுத்துக்கள். அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். எழுத்துக்கள் வாசிக்கும் போதெல்லாம் வெடிக்கும். சில எழுத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
எழுத்துக்காட்டாக


1. உலகினை வெல்ல இரு கைகள் போதும். ஒன்று முகத்தில் புன்னகை, இரண்டு தன்னம்பிக்கை.
2. மரணத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நாம் இருக்கும் வரை அது வரப் போவதில்லை. அது வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை.
3. கழுத்தில், காதில், விரலில் நகைகள் போட்டுக் கொள்ளுங்கள். அது பெரிதல்ல. ஆனால் இதயத்தில் அன்பை போட்டுக் கொள்ளுங்கள், வாயில் சிரிப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
4. வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்.
இது போன்ற மேலும் பல வடிவங்களில் கதைகளாக, கட்டுரைகளாக எழுத்துக்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இவற்றை படிக்கும் போது நம்மை நாமே செதுக்கிக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.அந்த உயர்வான எழுத்துக்களைத் தந்து நம் எண்ணங்களை மேம்படையச் செய்யும் எழுத்தாளர்களுக்கு நன்றி சொல்லுவோம்.


எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு



மலர்கள் இல்லாத தோட்டமும், மனையாள் இல்லாத வீடும் பாழ் என்பார்கள். பூமியில் தோன்றிய எல்லா மலர்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுகின்றன. மனிதன் மணமாகும் போதும், பிணமாகும் போதும் கூட வருவது மலர்கள் தான். காலையில் தோன்றி, மாலையில் மறைந்து ஒரு நாள் தானே வாழப் போகிறோம் என மலர் சலித்ததில்லை. கண்ணுக்கு விருந்தைத் தந்து, மூக்குக்கு வாசனை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும், மலர்களுக்கு காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 6:46 pm

எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு


இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் வலக்கை, இடக்கை இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் வாழவே முடியாது. கவிஞர் மேத்தா ஒரு கவிதையிலே, “நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால், உதிர்ந்த மலர்களும் ஒட்டிக் கொள்ளும், கழுத்தில் மாலையாக வந்து கட்டிக் கொள்ளும்” என்பார். நம்பிக்கை என்பது உள்ளத்தில் இருந்தால், எதை இழந்தாலும் பெற முடியும். எனவே, எல்லா இக்கட்டான காலத்திலும், நமக்கு கை கொடுத்து, நம் கூடவே வருகின்ற நம்பிக்கைக்கு நன்றி சொல்லுவோம்.


மரங்கள் நடுகின்ற கரங்களுக்கு


இயற்கை நமக்கு வழங்கிய செல்வங்களில் மிகவும் உயர்வான செல்வம் மரங்கள். மரங்கள் மனிதனுக்கு வரங்கள். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைத் தருவது மரங்கள் மட்டுமே. மறைந்த ஜனாதிபதி கலாம் கூட, ஒரு கவிதையில்,
“கிளி வளர்த்தேன், பறந்து விட்டது.
அணில் வளர்த்தேன், ஓடி விட்டது.
மரம் வளர்த்தேன். இரண்டும்
திரும்பி வந்து விட்டது” என்றார்.

மனிதனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு பயன்பாட்டிலும் கூடவே வரும் மரங்களை நட்டு வளர்க்கின்ற கரங்களுக்கு நன்றி சொல்லுவோம்!


ஆசிரியர்களுக்கு



குழந்தையின் எதிர்காலம், ஆரம்பக் காலத்தில் விதைக்கப்படும் வித்தைப் பொறுத்தது. அந்த சத்தான வித்தை விதைப்பவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு
கண்களைக் கொடுக்கின்றனர் பெற்றோர். அந்தக் கண்களுக்கு ஒளியைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அம்மா, அப்பா என பேசத்தெரிந்த குழந்தைகளை எழுத வைத்து பார்ப்பவர்கள் ஆசிரியர்கள். ‘ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாது’ என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கற்றுத் தரும் ஆரம்பக்கல்வி தான். பின்னாளில் ஒவ்வொருவரையும் சாதனையாளராக உருவாக்குகிறதென்றால், அதற்கு அடித்தளமிட்ட அவர்களுக்கு கோடான கோடி நன்றி சொல்லுவோம்.


கடவுளுக்கு



பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். இது கண்ணதாசனின் வைர வரிகள்.
தெய்வ நம்பிக்கையை மனதில் கொண்டவர்கள் எப்போதும் வெற்றி பெறுகிறார்கள். நாம் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களுக்கும் துணை நிற்கின்ற கடவுளுக்கு
எந்நாளும் நன்றி சொல்லுவோம்.

வாழ்வதற்கும் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும். நம்முடைய செயல்பாடுகள் பிறரை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் இருக்க வேண்டும். எல்லா செயல்களிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் போது நன்றி மலர்களைத் துாவ வேண்டும். அந்த மலர்கள் உறவை நெருக்கமாக்கும். நட்பை விரிவாக்கும்.
-ச.திருநாவுக்கரசு
பேச்சாளர்

நன்றி- தினமலர் (சிறப்பு கட்டுரை)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக