புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
62 Posts - 34%
i6appar
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
1 Post - 1%
prajai
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
62 Posts - 34%
i6appar
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
1 Post - 1%
prajai
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 12:40 pm

இந்த படம் ஓவொரு ஆயுத பூஜைக்கும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதே படம் தான்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 2:18 pm

19.12.2017

என்ன படம், யார் யார் நடிச்சதுன்னு கேட்டிருந்தேனே.

இப்போ எந்த ஆயுத பூஜைக்கு இந்தப் படத்தை போடறாங்க. நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்க போல. இப்போ எல்லாமே சூப் ........................ பரா புதுப் படமா ..................  போடறாங்க.  நீங்க பாக்றதில்லியோ?  

நான் அனுப்பிய வசனங்கள் எந்த படத்தில வருது, அந்த வசனங்களை  பேசினவங்க யார் யார்னு கரீட்டா சொல்லுங்க.  கேள்வி கேட்டா ....................... முழுஸ் ..................... சா   விடை எழுதினாத்தான் முழு மார்க். சொல்லுங்க சொல்லுங்க.

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 2:34 pm

நீங்க கொடுக்கற மார்க்கை வச்சி ஒரு வடையாவது வாங்க முடியுமா



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 3:33 pm

19.12.2017 


இப்போல்ல தெரியுது, நீங்க படிக்கும்போது, டீச்சர் கேட்ட கேள்வீங்களுக்கெல்லாம் பதில் எழுதாம விட்டதுக்கான காரணம். அப் ................... பவே உங்களுக்கு தோணியிருக்கு பாருங்க, மார்க் வாங்கினா வடையை வாங்க முடியாதுன்னு. உங்க கவல உங்களுக்கு. 

பலே ஆளு SK நீங்க. 

இனிமே யார்ட்ட இருந்தும் பதில் எதிர்பார்த்து பிரயோஜனமில்ல. நானே சொல்லிர்றேன்.

படம் : சரஸ்வதி சபதம் 1966 
திரைக்கதை, வசனம், டைரக் ஷன் : AP நாகராஜன்
ம்யூசிக் : KV மகாதேவன் 

வசனங்கள் பேசினவங்க : 

அரசி : KR விஜயா 
புலவர் : சிவாஜி 
ப்ரதம தளபதி : ஜெமினி கணேசன் 

அம்புட்டுதான் 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 3:34 pm

அதை தான் நானும் சொன்னேன்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 10:03 pm

28 .12 .2017 

ஒரு போலீஸ் ஸ்டேஷன். அங்க ஒரு இன்ஸ்பெக்டரும், பட்டாபிராமன் என்கிற ஒருத்தரும்  பேசிட்டு இருக்காங்க. 

பட்டாபி : உங்களுக்கு தொர ரகுனாதன தெரியுமா ? யூ நோ தொர ரகுனாதன் ? அ .......... அ, அவர நான் எப்புடி தெரீமா கூப்டுவேன் ? டேய் ரகுநாதா, அப்படீன்னுவேன். போய்யா ...

இன்ஸ்பெக்டர் [ஒரு file ஐ பாத்துகிட்டே] : அதுல உங்களுக்கு பெருமையா இருந்தா அப்டீயே கூப்பிடுங்க

பட்டாபி : அது மாத்ரமில்ல சார், மடையா, முட்டாள், இடியட்னுவேன். யார, தொரய. 

இன்ஸ்பெக்டர் : அதெல்லாம் ஏன் இப்போ சொல்றீங்க? 


ன்னு சொல்லிட்டு இன்ஸ்பெக்டர் அந்த இடத்த விட்டு போயி, தன் சீட்ல உக்கார்றார். பட்டாபியும் அவர் பின்னாலேயே ஓடுறார்.

பட்டாபி : இப்போ சொல்லாம? அப்புறம் எப்போ சொல்றது? சார், தொர ரகுநாதன்ட்ட எனக்கிருக்கிற செல்வாக்க சொல்றேன். அ... ஹஹ ..... அ ..... சைக்கிள குடுத்துருங்க .

இன்ஸ்பெக்டர் : மிஸ்டர் பட்டாபிராமன், மொதல்ல கேஸ ரெஜிஸ்டர் பண்ணிக்றோம். 

பட்டாபி : சார், நான் என் வக்கீல கலந்து பேசுற வரைக்கும், நீங்க கேஸ ரெஜிஸ்டர் பண்ண விடமாட்டேன். என் சைக்கிள குடுங்க.

இன்ஸ்பெக்டர் : தரமாட்டேன். 

பட்டாபி : என்ன?

இன்ஸ்பெக்டர் : நீங்க ஒரு வக்கீல்கிட்ட கலந்து பேசிட்டு வாங்க. அதுவரைக்கும் சைக்கிள் இங்கேயே இருக்கட்டும்.

பட்டாபி : சார், நான் வக்கீல்கிட்ட போறதுக்கே சைக்கிள் வேணும். சார், சா ............ [வேற எடத்தைப் பாத்து] டேய் ரகுநாதா [கத்துறார்] 

அடுத்த சீன் ரகுநாதனின் வீடு. 

ரகுநாதன் தன் தம்பி முரளியோட செஸ் விளையாடிக்கிட்டிருக்கார். 

ரகுநாதன் [வாசல பாத்து] : பட்டாபியா? வாடா. 

பட்டாபிராமன் ரகுநாதன் பக்கத்தில போயி, ஒரு ச்சேர்ல உக்கார்றார். 

பட்டாபி : என்னடா, பாண்டவாஸ் சூதாட்டமா? அதுங்கூட பரவாயில்ல. கஸின் ப்ரதரோடதான் வெளையாடுனாங்க. நீ என்ன சொந்த ப்ரதரோடவே சூது வெளையாடுற? 

ரகுநாதன் : என்ன விஷயம்? 

பட்டாபி : ஒண்ணுமில்லடா, சைக்கிள்ல லைட் அவிஞ்சு போச்சுன்னு, இந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இல்ல? அவர் என் சைக்கிள வாங்கி வச்சுட்டு தரமாட்டேங்ரார்டா. 

ரகுநாதன் : பள்ளிக்கூடத்தில படிக்கும்போது வச்சிருந்தியே, அதே ... பழைய சைக்கிள் தானே. 

பட்டாபி : சின்ன வயசுல கல்யாணம் பண்ணிகிட்டியே, அதே.................... சம்சாரமான்னு கேக்குற மாதிரி இருக்குடா நீ சொல்றது. 

ரகுநாதனும், அவர் தம்பியும் செஸ் வெளையாடிகிட்டே சிரிக்கிறாங்க. 

பட்டாபி : ஏண்டா............. காரும், பங்க்ளாவும் வந்துருச்சுங்க்ற ஜோர்ல பேசுறியா? ஏ ரகுநாதா, பணக்காரனா இருக்றதும், ஏழையா இருக்றதும் மியர் அக்ஸிடெண்ட்ரா. ஏன்னா பிறப்பே ஒரு அக்ஸிடெண்ட் பாரு. 

ரகுநாதன் : நான் மட்டும் என்னடா, சட்டபையில பைசாகூட இல்லாமதானே நான் என் வாழ்க்கய ஆரம்பிச்சேன். 

பட்டாபி : சட்டைல பையே இல்லாம நான் என் வாழ்க்கைய ஆரம்பிச்சேன். [எழுந்த்ருந்து] என்னமோ உன்னோட குருட்டு அதிர்ஷ்டம் எஸ்டேட் ஓனர் ஆயிட்டே. என்னோட துரதிர்ஷ்டம் இன்னும் எட்க்ளார்க்காவே இருக்கேன். 

முரளி : ஏன் சார், மத்தவங்க வெற்றிக்கு வேற என்னதான் காரணம் காட்றது ? 

பட்டாபி [முரளியின் தலையில் அடிச்சு] : அத்த நகத்துடா[செஸ்ல ஒரு காயினை நகர்த்தி] ஒனக்கேதுரா வெற்றி? இத்த கொண்டுபோய் இப்டி வைடா. 

தம்பி : [கோபமாய்] சும்மா இருங்க சார் நீங்க. [காயினை சரியாக வைக்கிறார்] 

பட்டாபி : [ரகுநாதனின் மூஞ்சிக்கு நேரே கையை நீட்டி]டேய், சைக்கிளை வாங்கி தாடா.

ரகுநாதன் : பட்டாபி, fine அ வேணும்னா நான் கட்டிர்றேன். சைக்கிள நீ எடுத்துக்க. 

பட்டாபி [அதிர்ந்து] : fine அ நீ கட்றியா? எங்கிட்ட சில்ற இல்லியாடா? இது பிரிஸ்டிஜ் இஷ்யூ கௌரவ பிரச்ன. உட்ரலாமாடா? ஹைகோர்ட் என்ன, சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயி இத பாக்கணும்டா. [முரளிய பாத்து] வீர ஹிஸ்ட்ரிலேயே இது ஒரு turning பாய்ண்டா இருக்கப் போறது.

பட்டாபி [ரகுநாதன பாத்து] : போன் பண்றா. சைக்கிள குடுக்க சொல்றா. [ரகுநாதன்ட்ட கெஞ்சுறார்] 

ரகுநாதன் : முரளி, check & mate. 

ரகுநாதன் எழுந்து போறார்.

பட்டாபி [முரளிய பாத்து] : தோத்துட்ட போடா. 

[போற ரகுனாதன பாத்து] : என்னடா நீ பேசாம போற? 

ரகுநாதன் : இல்லப்பா, இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் தலையிடக்கூடாது, தப்பு. 

பட்டாபி : [சலிப்பா] தப்பு. சைக்கிள்ல மாட்டிக்கிறது சின்ன விஷயம் இவருக்கு. இவருக்கூ ........................ ன்னு நான் போயி மோட்ர் பைக்க வாங்கி அப்புறம் மாட்டிக்கணும். 

பட்டாபி முரளி தலையில பலமா அடிச்சு, செஸ் போர்டை கலச்சுடறார். 

ரகுநாதன் பின்னாலேயே பட்டாபி போறார். கொஞ்ச தூரம் போய் திரும்பி பாத்து, 

பட்டாபி : ஏண்டா முரளி, உங்க அண்ணனுக்கென்ன புதுசா கிரிடம் வந்துருச்சா? எனக்கொண்ணும் செய்ய மாட்டானா? 

முரளி : அத்ல்லாம் ஒண்ணுமில்ல சார். நாளைக்கி conference க்காக பேங்க்ளூர் போறாரு. அதுக்கு சில முக்கியமான file அ ல்லாம் பாக்கணும்னு சொன்னார். வேற ஒண்ணும் இல்ல. 

பட்டாபி : அ அ அ இங்கேயே அவருக்கு கண்ணு வேற தெரியல. பெங்களூ...ருக்கு போனா தெரிய போவுதா? போ.. டா?

முரளி : போலீஸ்ல மாட்டிட்டிருக்கீங்களா, இதுக்கு முந்தி? 

பட்டாபி [தலைய ஆட்டிக்கிட்டே] : என்னடா சந்தோஷமா? ப்ரேக் இல்லாம போனா புடிச்சுபுட்டான். நோட்புஸ்தகத்த கையில எடுத்துக்கிட்டான். பேரென்ன சார்னு கேட்டான். சொன்னேன். திருக்கோயிலூர் செல்வமங்கள கல்யாணபுரம் அனந்த பத்மநாப பட்டாபிராமன் அப்டீன்னேன். 

முரளி [பெருமூச்சுடன்] : அப்பா ..................

பட்டாபி : அதையேதான் சொன்னான் அவன். 

முரளி : ம்ம் 

பட்டாபி : மேல பாத்தான்

முரளி : ம்ம் 

பட்டாபி : கீழ பாத்தான் 

முரளி : ம்ம் 

பட்டாபி : கையில இருந்த பென்சில பையில போட்டுகிட்டான். 

முரளி : ம்ம் 

பட்டாபி : பேர எழுத முடீல போங்க சார்ன்னுட்டான். 

முரளி : ம்ம் 

பட்டாபி : இப் ... ப புடிச்சானே, 

முரளி : ம்ம் 

பட்டாபி : இவன் உடல [விடவில்லை]

முரளி : ம்ம்

பட்டாபி : நிறுத்தி, நிதானமா ......... 

முரளி : ம்ம் 

பட்டாபி : கே............ ட்டு பேர் எழுதிகிட்டான். 

முரளி : ம்ம் 

பட்டாபி : படிச்சவன் போலிருக்கு 

முரளி : ம்ம் 

பட்டாபி : கையோடயே கூட்டு போயிட்டான்.

முரளி : ம்ம்

பட்டாபி : [முரளியை அடிக்க கையை ஓங்குகிறார்]என்னடா ஊ ... ங்கொட்டுற, கதையா சொல்றேன் ஓங்கிட்ட. மாட்டிகிட்ட அவஸ்தய சொல்றேன். 



இப்...........ப சொல்லுங்க, என்ன படம், யார் யார் இந்த வசனங்களை பேசியிருக்காங்கன்னு.

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 10:23 am

தெரியாது



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 01, 2018 2:01 pm

01 .01 .2018 

முதல்ல எல்லாருக்கும் 2018 க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள். 


பிறந்த நாள், புத்தாண்டு போன்றவற்றுக்கு வாழ்த்துக்கள் அனுப்புறதுக்கு பகுதி இருக்கான்னு தெரியல. அதனால இங்க சொல்லிட்டேன். 

நான் 29.12.2017 லேயிருந்து 31.12.2017  க்கும் நான் லீவுன்னு சொல்லியிருந்தேன்ல? இன்னிக்கு காலேலதான் வந்தேன். 
 
OK SK, என்ன படம்னு உங்களுக்கு தெரியல, சரி. பாலு சாருக்கும், அய்யாசாமி சாருக்குமா தெரியல. அவங்க பெரியவங்களாச்சே. மற்ற பகுதிகளுக்கு சரி, கேள்வி கேட்டாக்கா பதில் சொல்ல வேணாமாக்கும். 

மற்றதையும் பார்த்தேன். 33லே இருந்து 186 வரை இருக்கு. [முதல் பக்கத்தில்] 

அது போவட்டும். 

SK உங்களுக்கு clue கொடுக்கிறேன். இந்தப் படம் 1965ல வந்த பாலசந்தரோட [கதை, திரைக்கதை, டைரக் ஷன்] படம். 

பட்டாபி - நாகேஷ் ; இன்ஸ்பெக்டர் - முத்துராமன்

இம்புட்டு போதும்னு நினைக்கிறேன். இப்ப ட்ரை பண்ணுங்க SK.

இங்க நான் எழுதுறத படிக்கிறவங்களை இந்த டைம் வரை பார்த்தேன். ரொம்............ப சந்தோஷமாவும், பெர்ர் ர் ர் ர் ர் ர் ர் ருமையாவும் இருக்கு. 

என்ன படம் யார் யார் நடிச்சது - 197 சந்தோஷம் 
யாரு இவரு கண்டு புடிங்க - 243 பரவாயில்லியே 
திரைக்கு பின்னால் நடந்தது என்ன - 461 இம்புட்டா
திரை பிரபலங்கள் - 510 நம்பவே முடியல  
தமிழ் படம் & பாட்டூஸ் -  807 அடேங்கப்பா
தெரிஞ்சதும் தெரியாததும் -  982  அடேங்கப்பப்பா

Heezulia  

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 6:05 pm

Heezulia wrote:முதல்ல எல்லாருக்கும் 2018 க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பிறந்த நாள், புத்தாண்டு போன்றவற்றுக்கு வாழ்த்துக்கள் அனுப்புறதுக்கு பகுதி இருக்கான்னு தெரியல. அதனால இங்க சொல்லிட்டேன்.

முகப்பை  திறந்து பாருங்கள்,சகோதரி.
எவ்வளவு பகுதிகள், எவ்வளவு பிரிவுகள், எவ்வளவு உட்பிரிவுகள்.
வாழ்த்தலாம் வாங்க --நட்பு பகுதியை பாருங்கள்.
முக்கியமான எல்லா பகுதிகளும் இருக்கின்றன.
இவைகளை தவிர இன்னும் புது பகுதிகள் வேண்டுமா? சொல்லுங்கள்.

ரமணியன்
@Heezulia
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக