புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
32 Posts - 74%
heezulia
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
10 Posts - 23%
mohamed nizamudeen
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
368 Posts - 78%
heezulia
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_lcap கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_voting_bar கண்களால் பேசிய அபூர்வ நடிகை  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களால் பேசிய அபூர்வ நடிகை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84883
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:39 am

 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  566152
-
24 Jul 2020
-
ஸ்ரீவித்யா பிறந்த நாள் ஸ்பெஷல்:
கண்களால் பேசிய அபூர்வ நடிகை
----------------------

இன்று நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாள். அவரைப் பற்றிய
சில நினைவுகளை அசைபோடுவோமா?

சில முகங்களை வெறுக்க நினைத்தாலும் வெறுக்க இயலாது
அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன்
ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது
வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத்
திறனே.

எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி
தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்து
விடும் நுட்பம் அவருக்குள் நிறைந்துகிடந்தது.

ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத்
தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள்.
நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில்
வெற்றிபெறுவது கடினம்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர்.
அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள்.
இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்
போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும்.

சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான,
இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த
இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண
வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே
அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற
பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84883
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:39 am



எல்லோரையும் கவரும் அந்தக் கண்களைப் பற்றி, மிகப் பெரிய
நடிகர் ஒருவர், ’ஸ்ரீவித்யாவா அவருக்கு ஹெட் லைட் போல் ரெண்டு
கண்ணுதானே உண்டு’ எனக் கூறி இவருடன் நடிக்க மறுத்திருக்கிறார்.

அதே நடிகர் ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் நூறாம் நாள் விழாவில்
வந்து ஸ்ரீவித்யாவின் கண்களின் மகத்துவத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நேருக்கு நேராக அவரிடமே ஸ்ரீவித்யா, என் கண்களைப் பற்றி இப்படிக்
கூறியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அந்த நடிகர் ஏதோதோ சொல்லி
சமாளித்து நழுவிவிட்டாராம்.

ஸ்ரீவித்யா தனது நேர்காணல் ஒன்றில் இதைக் கூறியிருக்கிறார்.

ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இசை ஞானத்துடன் இருந்தார்.
அதற்குக் காரணம் அவருடைய தாய் எம்.எல். வசந்த குமாரியும்
தாத்தா அய்யாசுவாமியும். இருவருமே இசைக் கலைஞர்கள்.

வசந்தகுமாரி மிக இளைய வயதில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்.
எனினும், ஸ்ரீவித்யா இசை கற்றுக்கொண்டது பி.கிருஷ்ணமூர்த்தியிடம்.
பதினோரு வயதிலேயே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இவருடைய தந்தையான விகடம் கிருஷ்ணமூர்த்தி திரைப்பட

நகைச்சுவை நடிகர். அரசியல் ஆர்வம் கொண்டவர். காங்கிரஸிலும்
பின்னர் சுதந்திரா கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

நேரு, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல்
தலைவர்கள் போல் மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்று தந்தையைப் பற்றி
ஸ்ரீவித்யா கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 800 படங்களிலும் 25 தொலைக்காட்சி தொடர்களிலும்
நடித்துள்ளார். என்றபோதும் அவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற
பேதம் பார்த்ததில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84883
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:40 am


ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்க’ளில் அவருக்கு மனைவியாக
நடித்த ஸ்ரீவித்யா 1991-ல் ‘தளபதி’ படத்தில் தன்னைவிட மூன்று வயது
அதிகமான ரஜினிக்குத் தாயாக நடிக்கத் தயங்கவே இல்லை.

அதே போல் சினிமா என்றோ தொலைக்காட்சி என்றோ வேறுபாடு
காட்டியதில்லை. இயக்குநர்கள் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே
நடித்துத் தருவது மட்டுமே தனது பணி என்று கருதி கருமமே கண்ணாக
இருந்திருக்கிறார். ‘பல நேரம் என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில்
இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்

. “புகழுக்காகவோ விருதுக்காகவோ பணத்துக்காகவோ இவ்வளவு
கஷ்டங்களைப் பட்டு நான் நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை
நான் யார் என்பதை நிரூபிக்க விரும்பினேன்.

அதனால் இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து நடித்தேன்”
என்று தனது நடிப்பார்வத்துக்கு அவர் காரணம் கூறுகிறார்.

இயக்குநர் ஒருவர் தனது படத்தில் நடிக்க அழைத்து இரண்டு நாட்கள்
ஷூட்டிங் நடத்தின் அதன் பின்னர் அவரைப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.
அதே இயக்குநர் பின்னர் ஸ்ரீவித்யாவிடம் வந்து, ’தான் செய்தது தவறு’ என்று
கூறி மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் அவர் பார்த்திருக்கிறார்.

அவருக்கு நடித்தும் கொடுத்திருக்கிறார். அநேகப் பிரச்சினைகள்
அவரைச் சூழந்தபோதும் பாறைபோல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு
கடவுள் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு காலம்
கடத்தியிருக்கிறார். ஒரு நிழல் போல் தன்னைக் கடவுள் பின் தொடர்வதான
நம்பிக்கையில் எல்லாத் துயரங்களையும் கடந்தவர் ஸ்ரீவித்யா.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84883
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:41 am

 கண்களால் பேசிய அபூர்வ நடிகை  15955680011138
------------------------------------------------------
கடவுள்மீது இவர் நம்பிக்கை வைத்திருந்தபோதும், கடவுள்
இவருக்குத் தனிப்பட்ட கருணை எதையும் காட்டியதாகத்
தெரியவில்லை. கமல்ஹாசனுடனான காதல் தோல்வியில்
முடிந்தது. அந்த ஏமாற்றத்தை மறக்க அடுத்த காதல் அவருக்குக்
கைகொடுக்கும் என நம்பினார்.

மலையாளப் படமான ‘தீக்கன’லில் நடிக்கும்போது ஏற்பட்ட
பரிச்சயத்தால் அதில் துணை இயக்குநராகப் பணியாற்றிய
ஜார்ஜ் தாமஸை மதம் மாறித் திருமணம் புரிந்துகொண்டார்.

எல்லோரும் தடுத்தும் தனக்கு அது நன்மை பயக்கும் எனக்
கருதினார். ஆனால், காதலனும் காலமும் அவரை ஏமாற்றியது.
அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் கடவுளும் கையை
விரித்துவிட்டார் அதுதான் பரிதாபகரமானது.

அதன் பின்னரும் காதலும் துயரமும் அவர்மீது பேரார்வம்
கொண்டு பின் தொடர்ந்தன. இயக்குநர் பரதனுக்கும் அவருக்கும்
காதல் அரும்பியது. மகிழ்ச்சி தர வேண்டிய காதல்கள் அவரது
மன நிம்மதியைப் பறித்தன.

ஆனாலும், அவர் எதுபற்றிய கவலையும் கொள்ளாமல் இயங்கி
வந்திருக்கிறார். தன் தாய் மறைந்த பத்து நாட்களில் அவர்
மலையாளப் படமொன்றில் நடித்தார். ஒரு நடிகருக்குத் தனிப்பட்ட
முறையில் எந்த சோகம், வருத்தம் இருந்தலும் கேமராவுக்கு முன்னே
வரும் போது அது மறந்துவிடும்.
அதுதான் கேமராவின் மகத்துவம் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீவித்யா.

தமிழில் எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் 115-ல் நடித்திருக்க
வேண்டியது. ஆனால், சிறு பெண்ணாகத் தெரிகிறார் என்று
அந்த வாய்ப்புத் தட்டிப்போனது.

1967-ல் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘திருவருட்செல்வர்’
படத்தில் உமையவளாக வந்து ஒரு நடனம் ஆடுவார். அதுதான் அவரது
அறிமுகப்படம்.

பின்னர், 'நூற்றுக்குநூறு', 'ஆறு புஷ்பங்கள்', 'இமயம்', 'அம்மன் கோவில்
கிழக்காலே', 'மைதிலி என்னைக் காதலி', 'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்',
'கற்பூர முல்லை', 'நம்மவர்', 'காதலுக்கு மரியாதை' எனப் பல படங்களில்
தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஆனாலும், தமிழ்ப் படங்களைவிட அவரது நடிப்புக்கு மலையாளப்
படங்களே பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தன. மலையாளத்தில்
முதலில் சத்யனுடன் ’சட்டாம்பிகா’ படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், ‘செண்டா’ படத்து சுமதி என்னும் கதாபாத்திரம் தனக்குப் பிடித்த
ஒன்று என்று ஸ்ரீவித்யா குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தொடர்ந்து பல்வேறு
மொழிகளில் நடித்திருக்கிறார். எல்லா மொழிகளிலும் சொந்தக்
குரலிலேயே பேசி நடித்துள்ளார். ’வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியோ
பெரிய மகிழ்ச்சியோ ஏற்பட்டதில்லை.

வாழ்க்கையில் ஆச்சரியமான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என்று
கூறும் ஸ்ரீவித்யா திரைப்படத் துறை ஆணாதிக்கம் மிகுந்தது என்பதை
உணர்ந்திருக்கிறார். ஆனால், அதற்காகக் குறைப்பட்டுக்கொள்ளவில்லை.
’எல்லோரையும் நேசியுங்கள், யாருக்கும் துரோகம் இழைக்காதீர்கள்
இயன்றவரை உண்மையைப் பேசுங்கள் முடியாதபோது அமைதி
காத்திடுங்கள்’ என்று அழகாகச் சொல்கிறார் ஸ்ரீவித்யா ஒரு நேர்காணலில்.

அப்படியே அவர் வாழ்ந்தும் மறைந்தார்.

புற்றுநோய் காரணமாக 2006 அக்டோபர் 19 அன்று அவர் உயிர் பிரிந்தது.
கேரளம் அவரை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது. அவரது
துயரங்களிலிருந்து மரணம் அவரை விடுவித்தது

ஆனால், தனது பண்பட்ட நடிப்பின் வழியே ரசிகர்கள் மனங்களில் அவர்
வாழ்ந்துகொண்டேயிருப்பார்.
--
-ரிஷி
நன்றி-இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக