புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_m10மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 1:37 pm

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! Ht445170292152973

நன்றி குங்குமம் டாக்டர்

இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக
இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக்
குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்
கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக
இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல்
ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களிடம் இந்த
ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்து வருகிறார்கள்.

இதில் மகிழ்ச்சி தரும் ஆய்வின் முடிவு ஒன்று
Jama network இதழில் வெளியாகியிருக்கிறது.
மகிழ்ச்சிக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது
என்பதைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சியில் இறங்கினார்
டாக்டர் ஆலன் ரோசான்ஸ்கி.

இவர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் செயின்ட் லூக்
மருத்துவமனையின் இதயநோய் நிபுணர்.

இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக நல்ல ஆரோக்கியத்தோடு
கூடிய நீண்ட ஆயுளுக்கும், நேர்மறை அணுகுமுறைக்கும்
உள்ள தொடர்பை கண்டறியும் முயற்சியில் ஆய்வுக்குழு
இறங்கியது.

ஒருவரின் மகிழ்ச்சியானது ஆரோக்கியத்தில் நேரடி
விளைவை ஏற்படுத்துமா என்று தேடியதற்கு, உயிரியல்
சான்றுகள் இந்த ஆய்வுகள் மூலம் வலுவாகவே
கிடைத்திருக்கின்றன.

இதன்படி உறுதியான நம்பிக்கை, மகிழ்ச்சி உள்ளவர்களுக்கு
மாரடைப்பு அல்லது பிற இதய நிகழ்வு ஏற்படுவதற்கான
வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்ததையும், ஆய்வுகளில்
அவநம்பிக்கையான பங்கேற்பாளர்களைக்காட்டிலும்
நம்பிக்கையானவர்களின் இறப்பு விகிதம் குறைவாக
இருந்ததையும் ரோசான்ஸ்கி மற்றும் அவரது ஆய்வுக்
குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் தன் சக
மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆய்வை நடத்தினார்.
இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட 15 முக்கிய பகுப்பாய்வுகளின்
முடிவுகளே, ஜாமா நெட்வொர்க் இதழில்
வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஆலன் ரோசான்ஸ்கியின்
கூற்றுப்படி, ‘இளம் வயதினராக இருந்தாலும் சரி…
90 வயது வயது முதிர்ந்தவராக இருந்தாலும் சரி… ஒ
ருவருக்கு நம்பிக்கையின்
அவசியம் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

இளம் வயதில் நம்பிக்கை என்பது இருக்கலாம்.
ஆனால், 90 வயதில் எங்கே இருக்கப்போகிறது என்ற
கேள்வி எழலாம். ஆனால், 90 வயது முதியவருக்கும்
நம்பிக்கையை வளர்ப்பதென்பது தாமதமான காலம்
கிடையாது.

பதின்ம வயதினர் முதல் 90 வயதிற்குட்பட்டவர்கள் வரை
அனைவருமே நம்பிக்கையுடன் இருந்தால் அவர்களுக்கும்
நம்பிக்கையின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்’
என்பதே இந்த ஆராய்ச்சியில் நாங்கள் கண்டோம்’
என்கிறார்.


-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 1:46 pm


இத்தகைய ஆய்வை மேற்கொள்ளும் விருப்பத்துக்கு
ஆலன் ரோசான்ஸ்கியின் ஆரம்ப கால மருத்துவ
வாழ்க்கையும் முக்கிய காரணம்.

மருத்துவத்தொழிலின் ஆரம்ப காலத்தில்
Cardiac rehabilitation Program-ல் பணி
புரிந்தார் ஆலன். ‘Cardiac rehabilitation
திட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள். நீண்ட
காலமாக எதுவும் செய்யாமல் வெறுமனே
உட்கார்ந்திருந்த பல மாரடைப்பு நோயாளிகள்,
‘என்னால் அதைச் செய்ய முடியாது, இதைச்
செய்ய முடியாது’ என்று சொல்வார்கள்.

ஆனால், நான் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து
டிரெட்மில்லில் வலுக்கட்டாயமாக ஏற வைப்பேன்.
மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அவர்களை
நடக்கவும் வைப்பேன்.

அதன் பிறகே அவர்களின் அணுகுமுறை மேம்பட்டது.
அவர்கள் அதிக நம்பிக்கையுடையவர்களாக
மாறினார்கள்.

அதில் 70 வயது உள்ள மாரடைப்பு ஏற்பட்ட ஒரு
பெண்மணி கூட, ‘தன்னால் முடியும்’ என்ற
நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்து, நடத்தியும்
காட்டினார்’ என்று தன் பழைய அனுபவங்களையும்
மேற்கோள் காட்டுகிறார்.

இந்த ஆய்வின் தரவுகள் மிகவும் சீரானது என்கிற
ரோசான்ஸ்கி இதுபற்றி இன்னும் கூறுகிறார்.

‘ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையுடனும்
நோய்க்கான குறைந்த ஆபத்துக்கும் இடையே ஒரு
வலுவான உறவு இருந்தது.

நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு
கவனித்துக்கொள்கிறார்கள். நம்பிக்கையுடன்
இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், நன்றாக
சாப்பிடுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

மேலும் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு
ஆளாவதற்கான வாய்ப்புகளும் குறைவு. ஆனால்,
அவநம்பிக்கையாளர்கள் Cortisol, Norepinephrine
போன்ற மன அழுத்த ஹார்மோன்களில் தங்களை
மூழ்கடிக்கிறார்கள்.
தீய பழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள். இதனால்
இவர்களின் உடலில் அழற்சி, நீரிழிவு போன்ற வளர்சிதை
மாற்ற எதிர்விளைவுகளை அதிகரிக்கிறது’ என்றும்
உறுதியாகச் சொல்கிறார்.

தொகுப்பு: உஷா நாராயணன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக