ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

Admins Online

தான எண்ணத்தையும் தானம் செய்

தான எண்ணத்தையும் தானம் செய் Empty தான எண்ணத்தையும் தானம் செய்

Post by ayyasamy ram on Wed Jun 03, 2020 4:50 pm

தான எண்ணத்தையும் தானம் செய் Cropped-cropped-cropped-blog_banner_periyava_kamakshi

சொத்து, சுதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு
அநுபவிப்பதில் பெறுகிற சுகம் ரொம்பவும் தற்காலிகமானது.
இந்தத் தற்காலிகச் சுகம் நித்ய செளக்கியமான ஆத்மா
அபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது.

ஆனால், இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு
அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே
பரம ஆனந்தத்தைத் தருகிறது.

சாஸ்வத செளக்கியத்துக்கும் வழிகோலுகிறது.
இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான
‘ஈசாவாஸ்ய’த்தில் முதல் மந்திரத்திலேயே,
‘தியாகம் பண்ணி அநுபவி’ என்று சொல்லியிருக்கிறது.

காந்திகூட இதில்தான் தம்முடைய ‘ஃபிலாஸஃபி’
முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தைத்
தலைக்கு மேலே வைத்துக்கொண்டு சிலாகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான்
வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக்
கர்மாவும் செய்து முடிக்கும்போது,
“நான் தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம்
முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே. அப்படி என்
ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது”
என்ற பரமத் தியாக புத்தியில் “ந மம” –
“எனதில்லை; எனக்கில்லை” என்று அதன் பலனை
லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது.

மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு,
“நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும்
வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது
தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற
ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும்.

தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாகத்
தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம்
பண்ணிவிட வேண்டும்.


மஹாபலி எதைப் பலி கொடுக்கவில்லை?


மஹாபலி நிறையக் கொடுத்தான். வாரி வாரிக்
கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற
அகங்காரத்தை அவன் பகவானுக்குப் பலி
கொடுக்கவில்லை. இதனால்தான் பகவானே அவனிடம்
இந்த அகங்காரத்தை யாசகமாகப் பெற்று, அகங்கார
நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால்
வைத்தான்.

சமூக சேவை என்று சொல்லிக்கொண்டு வெளியில்
ஏதேதோ பண்ணிக்கொண்டு அகங்காரத்தைக்
கரைக்காமல் இருந்தால் இவனுக்கும்
பிரயோஜனமில்லை; இவனுடைய சர்வீசால்
லோகத்துக்கும் பிரயோஜனமிராது.

தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல்
படாடோபமாகத் தெரியலாம். ஆனால், அது நின்று
நிலைத்து விளங்காது.

“தன் கையே தனக்கு உதவி” தன் கை பிறருக்கும்
உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான்
வேண்டும். ஆனால், தன் கை தன் காரியத்துக்கு
உதவியாக இல்லாமல், தன் காரியத்துக்கு அகத்தின்
மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்
கொண்டு அவர்கள் கையில் நம் காரியப்
பொறுப்பைப் போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம்
பண்ணுவது என்பது தப்பு.

ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக்
கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய
வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார்
நம்மைக் கொண்டாட மாட்டார்கள்தான்.

வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக்
காரியத்தைப் பண்ணிக் கொள்ளாமல், ஊருக்கு
ஒருத்தன் பண்ணுகிறான். அதற்கு இடைஞ்சலாகச்
சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம்
எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால்
அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே
இல்லை,

பேர் வாங்குவதற்காகத்தான் சோஷியல் சர்வீஸ் எ
ன்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.

தொண்டு உள்ளத்துக்கு லட்சணம் அன்பும்
அடக்கமும்தான். “தொண்டர் தம் பெருமை”
என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக
மற்றவர்கள் கொண்டாடலாமேயொழிய, தொண்டு
செய்கிறவனுக்குத் ‘தான் பெரியவன்’ என்ற
எண்ணம் லவலேசங்கூட இருக்கக் கூடாது.
தொண்டு மனத்தின் தன்மை இதுவே.
----------------

நன்றி
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பின்னூட்டமொன்றை இடுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57885
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை